Saturday, December 31, 2011

ஏப்ரல் 1ம் தேதி முதல் எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரியான காசோலை


    ரும் 2012 ஏப்ரல் 1ம் தேதி முதல், புதிய விதிமுறைப்படி காசோலைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க  வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ள சுற்றறிக்கை: மோசடியை தடுக்கவும், கால விரயத்தை தடுக்கவும் வங்கி காசோலைகளுக்கான Ôசிடிஎஸ் 2010Õ என்ற புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதாவது, நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியான வடிவமைப்புடன் காசோலைகளை அச்சடித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். 2012 ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த காசோலைகளை வழங்க வங்கிகள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இப்போது, ஒரு நபர் தனக்கு வழங்கப்பட்ட காசோலை யை தனது வங்கிக் கணக்கில் செலுத்தினால் அது பணமாக மாறுவதற்கு உள்ளூர் காசோலையாக இருந்தால், 2 நாட்களும் வெளியூராக இருந்தால் 1 வாரமும் ஆகின்றன. அதாவது, அந்த காசோலையை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பி பணமாக மாற்றப்படுகிறது.

சிடிஎஸ் என்ற புதிய விதிமுறையின் கீழ், சம்பந்தப்பட்ட வங்கிக்கு காசோலையை அனுப்ப தேவையில்லை. காசோலையை அப்படியே ஸ்கேன் செய்து ரிசர்வ் வங்கி சாப்ட்வேரின் உதவியுடன் உடனடியாக பணத்தை வரவு வைக்கலாம். இதனால், வாடிக்கையாளர்களுக்கு காசோலையை செலுத்திய அதே நாளில் பணமாக கிடைக்கும்.
__._,_.___