Monday, February 28, 2011

திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்?திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்?



சென்னை: திமுகவிடமிருந்து கேட்ட தொகுதிகள் கிடைப்பது கடினம் என்ற நிலை ஏற்பட்டிருப்பதால் அதிமுக அணிக்குத் தாவ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திட்டமிட்டு வருவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது சட்டசபைத் தேர்தல் காலம். கொள்கைள், குறிக்கோள்கள், லட்சியங்கள் உள்ளிட்டவற்றை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு எங்கு ஆதாயம் கிடைக்கும், யாரிடம் அதிக சீட் கிடைக்கும் என்று கட்சிகள் கணக்கு போடும் காலம்.

தனித்து மட்டுமே போட்டியிடுவோம், யாரிடமும் சேரமாட்டோம் என்று வீராவேசமாக வசனம் பேசி வந்த விஜயகாந்த்தே அதிமுகவிடம் போய் மண்டி போட்டு விட்டார்.

அதேபோல ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணிக்குத் தாவுவது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கும் பாமகவும் திமுக பக்கம் போய் விட்டது.

இந்த வரிசையில் விடுதலைச் சிறுத்தைகளும் அணி மாறப் போவதாக பரபரப்பு எழுந்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணியில் இணைந்து போட்டியிட்டது விடுதலைச் சிறுத்தைகள். அப்போது 9 தொகுதிகளைக் கொடுத்தார் ஜெயலலிதா. அதில் 2 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பின்னர் திமுக பக்கம் போய் விட்டது. பின்னர் லோக்சபா தேர்தலில் அக்கட்சி திமுக கூட்டணியில் இருந்து போட்டியிட்டது. 2 தொகுதிகள் கிடைத்தன. அதில் தொல். திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்றார்.

தற்போதைய சட்டசபைத் தேர்தலிலும் திமுக அணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளையும் முடித்து விட்டது. பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே தொகுதிப் பங்கீட்டை முடித்து, 31 தொகுதிகளையும் கொடுத்து மற்ற கூட்டணிக் கட்சிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளார் கருணாநிதி என்று பரவலான பேச்சு நிலவுகிறது.

பாமகவுக்கு நிகரான பலம் தங்களுக்கும் வட மாவட்டங்ளில் உள்ளது என்பது விடுதலைச் சிறுத்தைகளின் ஆணித்தரமான வாதம். இதை வலியுறுத்தி 15 தொகுதிகளாவது தர வேண்டும் என்று அவர்கள் திமுகவை கேட்டு வருகின்றனர். ஆனால் அந்த அளவுக்கு தர முடியாது என்பதை சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த பிச்சாண்டி மற்றும் எ.வ.வேலு இல்லத் திருமணங்களின்போது முதல்வர் கருணாநிதி மறைமுகமாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய திருமாவளவன், தமிழகம் முழுவதும் தலித் மக்கள் வசிக்கின்றனர். அவர்களிடையே செல்வாக்கு பெற்ற ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான். பாமகவைப் போல நாமும் அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் அணி திரள வேண்டும் என்று பேசினார்.

தற்போது திமுகவிடமிருந்து எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காது என்ற வருத்தம் விடுதலைச் சிறுத்தைகளிடம் இருந்தாலும், திமுக மீது அதற்கு மேலும் பல வருத்தங்களும், ஏமாற்றங்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இலங்கை அரசு தன்னை கொழும்பு விமான நிலையத்தோடு நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்து அவமானப்படுத்தியது குறித்து திமுகவோ அல்லது முதல்வர் கருணாநிதியோ கடும் கண்டனம் தெரிவிக்காததும் திருமாவளவனை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது.

இதை விட முக்கியமாக பாமகவை விட தங்களை கீழாக மதிப்பதாக திமுக மீது விடுதலைச் சிறுத்தைகளுக்கு அதிக அளவில் அதிருப்தி உள்ளது. எனவே இந்த முறை பாமகவுடன் இணைந்து திமுக கூட்டணியில் சேர அவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் அதி்முக அணிக்குப் போகலாம் என்ற எண்ணம் கட்சியினர் மத்தியில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக தரப்பும் இப்போது எந்த முக்கிய கட்சி வந்தாலும் வரவேற்கத் தயாராக உள்ளது. மேலும், புதிய தமிழகம் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட சீட்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளது. இந்த நிலையில் அதை விட வலுவான விடுதலைச் சிறுத்தைகள் வருவதை நிச்சயம் அதிமுக ஏற்கும் என்று தெரிகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கிய பிறகு விடுதலைச் சிறுத்தைகளுக்கான இடத்தை திமுக ஒதுக்கலாம் என்று தெரிகிறது. அதைப் பொறுத்து விடுதலைச் சிறுத்தைகளின் நடவடிக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tnks http://thatstamil.oneindia.in/news/2011/02/27/vck-plans-switch-over-admk-aid0091.html

சட்டசபைத் தேர்தல்-சுவர் விளம்பரம் எழுத தடை-மீறினால் 6 மாத சிறை

சட்டசபைத் தேர்தல்-சுவர் விளம்பரம் எழுத தடை-மீறினால் 6 மாத சிறை

சென்னை: தேர்தல் பிரசாரம் தொடர்பான சுவர் விளம்பரங்கள் எழுத தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் நாள் முதல் சுவர் விளம்பரங்களை எழுதக் கூடாது. மீறினால் 6 மாத சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முழு அளவில் தயாராகி விட்டன. தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாராகி விட்டது. மார்ச் 1ம் தேதி தமிழக தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், 234 தொகுதிகளிலும் எந்த விதமான அசம்பாவிதம் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோருடன் கடந்த 3 நாட்களாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் அமுதா, ராஜேந்திரன், இணை தலைமை தேர்தல் அதிகாரி பூஜா குல்கர்னி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

நேற்று இறுதிகட்ட பயிற்சி அரங்கம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் பங்கு பெற்றனர். அவர்களுக்கு, வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்களை எவ்வாறு பெறுவது, அதை ஏற்பது, நிராகரிப்பது, மின்னணு எந்திரங்களை பயன்படுத்துவது உள்பட பல்வேறு விதமான சந்தேகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பிரவீன் குமார் பேசுகையில்,

தேர்தல் தேதியை இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. தேர்தல் தேதியை பிப்ரவரி 28-ந் தேதி அறிவிப்பதா? அல்லது மார்ச் 1-ந் தேதி அறிவிப்பதா? அல்லது வேறு தேதியில் அறிவிப்பதா? என்று முடிவு செய்யவில்லை.

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய தொழிற்படை, துணை ராணுவத்தை கேட்டு இருக்கிறோம். நட்சத்திர அந்தஸ்து உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல ஹெலிகாப்டரில் செல்வதற்கு உண்டான செலவு தேர்தல் கணக்கில் சேராது. ஆனால் தலைவர்களுடன் வேட்பாளர்களும் பயணம் செய்தால் கட்டணத்தில் 50 சதவீதம் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே போல் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் போதும் அந்த செலவு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பொது மக்கள் புகார் அளித்தால் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் தேர்தல் வரவு செலவு கணக்கை காட்டியிருக்கிறார்கள். காட்டாதவர்கள் மீண்டும் போட்டியிட்டால் அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு பொது சுவர்கள், அனுமதி இல்லாத சுவர்களில் அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்தால் 6 மாத சிறை தண்டணை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தற்போது சென்னையில் காணப்படும் விளம்பரங்களை அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் அவர்.

Tnks http://thatstamil.oneindia.in/news/2011/02/27/ec-bans-wall-advertisements-assembly-polls-aid0091.html

முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும்


முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும்

  ல ஆலயங்களில் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது

பெரிய பணக்காரர்களுக்கும் பதவியில் இருப்பவர்களுக்கும் முன்வரிசை தரப்படுகிறது

ஏழைகள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள்

ஆண்டவனின் சன்நிதானத்தில் ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படலாமா? இது சரிதானா? என்ற கொதிப்பு பலருக்கு உண்டு

இந்த மாதிரியான செயல்களை சுட்டிக்காட்டியே பலர் இந்து மதம் என்பதே மனிதர்களை தரம்பிரித்து உயர்வு தாழ்வு கற்பித்து கீழே தள்ளுகிறது என விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள்

இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள வேற்றுமைகள் ஏற்றத் தாழ்வுகள் ஆத்மாவின் தன்மையை பொறுத்ததே தவிர உடலை பொறுத்தது அல்ல.

உடல் நிலையில்லாதது அழியக் கூடியது என்றே நமது மதம் கூறுகிறது.

உடலை சார்ந்த நிறம், சாதி, குடும்ப பாரம்பரியம், செல்வ நிலை ஆகியவைகளுக்கு மதிப்பளிப்பதை நமது மத சாஸ்திரங்கள் ஏற்றுக் கொள்வதே கிடையாது.

 ஒருவனது திறமைக்கு பாராட்டும் பதக்கமும் கிடைக்கும் போது அவன் எந்த சாதியை சேர்ந்தவன் எத்தகைய செல்வாக்கு உடையவன் என்ற யாரும் பார்ப்பது கிடையாது.


அவனது தனிதிறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இது சமூக வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆன்மீகத்திற்கும் பொருந்தும்.

அரசியல் தலைவர்களுக்கு முதலிடம் கொடுப்பதும் நிறைய பணம் கிட்டியவனுக்கு சிறப்பு தரிசனம் வழங்குவதும் ஆண்டவன் சந்நிதானத்தை அவமானம் படுத்துவதாகும்.

கடவுள் முன்னால் கோவணம் கட்டியவனும் கோமகனும ஒன்று தான்.

சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா முஸ்லிம்களுக்கு புனித ஷேத்திரம் என்பது நமக்கு தெரியும்.

மெக்காவிலுள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நேரத்தில் சவுதி அரேபிய மன்னரே தாமதமாக வந்தால் கூட அவருக்கு கடைசி இடம் தான் கொடுக்கப்படும்

ஒரு சாதாரண குடிமகன் முன் வரிசையிலும் அரசன் பின் வரிசையிலும் கடவுள் முன்னால் நிற்க வேண்டும் என்ற கொள்கை யாரால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அதை எந்த மக்கள் பின்பற்றினாலும் அவர்கள் பாராட்டுக்குரியவர்களே ஆவார்கள்.

இஸ்லாம் மதத்திலுள்ள இந்த சிறப்பு தன்மை நமது வழிபாட்டு இடங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.

பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் நந்தனார் கதையை பாடியுள்ளதை கோபால கிருஷ்ண பாரதியார் சற்று மாற்றி பாடியுள்ளார்.

மூலக்கதையில் நந்தனார் தீ குளிப்பதற்கு முன்னால் அவரை அந்தணர்கள் போற்றி புகழ்ந்ததாகவும் மிகுந்த மரியாதையுடன் சந்நிதிக்கு அழைத்து சென்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

பல வடமொழி சங்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஆலையத்திற்குள்ளும் இலக்கிய மன்றங்களிலும் மக்களும் மன்னரும் ஒரே தரமானவர்களாகவே மதிக்கப்பட்டுள்ளதாக பல ஆதாரக் குறிப்புக்கள் உள்ளன

இதை வைத்து பார்க்கும் பொழுது பண்டைய கால இந்து மதத்தில் அனைவரையும் சமம் என பார்க்கும் மனோபாவம் இருந்ததாக தெரிகிறது.

தற்போது தான் மனங்கள் செல்லரித்து போய் வக்கிரமாக மாறிவிட்டது






 

 

ஆதரவாளர்களுக்கு ஆயுதம் வழங்கும் கத்தாஃபி

ஆதரவாளர்களுக்கு ஆயுதம் வழங்கும் கத்தாஃபி

திரிபோலி,பிப்.27:உள்நாட்டில் எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்து சர்வதேச அளவில் எதிர்ப்பு அதிகரித்த நிலையில் தனது ஆதரவாளர்களுக்கு ஆயுதங்களை வழங்குகிறார் அந்நாட்டு சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபி.

ஆயுதக் கிடங்குகளை எனது ஆதரவாளர்களுக்கு திறந்துக் கொடுத்துள்ளேன் என கத்தாஃபி தெரிவித்துள்ளார்.

திரிபோலியில் போலீஸ் நிலையங்கள் ஆயுதம் ஏந்திய கத்தாஃபியின் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டிலிருப்பதாக AP நியூஸ் கூறுகிறது. இவர்களின் ட்ரக்குகள் தெருக்களில் ரோந்து வந்துக் கொண்டிருக்கின்றன. லிபியாவின் பல பகுதிகளிலும் ராணுவம் மக்களுடன் சேர்ந்ததால் இந்த நடவடிக்கையை கத்தாஃபி மேற்கொண்டுள்ளார்.

கத்தாஃபி ஆதரவாளர்களின் தாக்குதலில் நேற்றும் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். லிபியாவுக்கு எதிரான தடையை பிரகடனப்படுத்திய உத்தரவில் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் இரவு கையெழுத்திட்டார்.

திரிபோலியில் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. ராணுவத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. பிரிட்டனும் கத்தாஃபியின் சொத்துக்களை முடக்க தீர்மானித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும், ஐரோப்பிய யூனியனும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கின்றன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சிறப்புக்கூட்டம் ஒன்றை கூட்டுகிறது. மக்களை கொல்லும் கத்தாஃபிக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் வலியுறுத்தியுள்ளார்.

லிபியாவை கவுனிசிலிருந்து வெளியேற்ற ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஒருமுகமாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. கத்தாஃபி அரசு நடத்தும் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே,"நான் மக்கள் மத்தியில்தான் உள்ளேன் கடைசி வரை போராடுவேன் வெளிநாடுகள் அத்துமீறி நுழைவதை என்ன விலைக் கொடுத்தும் தடுப்பேன்" என கத்தாஃபி கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Sunday, February 27, 2011

லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரிப்பு​ - சாலையெங்கு​ம் உடல்கள் கிடக்கின்ற​ன - மீண்டு வந்த இந்தியர்கள்

லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரிப்பு​ - சாலையெங்கு​ம் உடல்கள் கிடக்கின்ற​ன - மீண்டு வந்த இந்தியர்கள்

டெல்லி,பிப்.27:லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரித்துள்ளது. அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. சாலையெங்கும் உடல்களாக கிடக்கின்றன. அவற்றை புல்டோசர்கள் மூலம் அகற்றி குப்பைகளில் வீசுகிறார்கள் என்று அங்கிருந்து மீண்டு வந்த இந்தியர்கள் கூறியுள்ளனர்.

லிபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்குகிறது. இந்த விமானங்கள் நேற்று லிபியா சென்று இரண்டு கட்டமாக 528 இந்தியர்களை மீட்டு கொண்டு வந்துள்ளன.

முதல் விமானம் 291 பேருடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது விமானம் வந்து சேர்ந்தது. இரு விமானங்களிலும் ஏராளமான தமிழர்களும் வந்துள்ளனர்.

விமான நிலையத்தில் முகம்மது சாலி என்ற என்ஜீனியர் கூறுகையில், லிபியாவில் நிலைமை மோசமடைந்துள்ளது. மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் உயிரைக் கையில் பிடித்தபடி வீடுகளுக்குள் அடைந்து கிடந்தோம்.

தண்ணீர், உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். போலீஸாரை எங்குமே காண முடியவில்லை. காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு பலர் வீடுகளை சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். இறந்தவர்களின் உடல்கள் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன என்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், மக்கள் போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது. நாங்கள் விமான நிலையத்திற்கு வரும் வழியெங்கும் உடல்களைப் பார்த்தோம். அவற்றை புல்டோசர் மூலம் அள்ளி குப்பைகளில் வீசுகின்றனர். பாதுகாப்பு சுத்தமாக இல்லை என்றார்.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியத் தூதரகம் இன்னும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

லிபியாவிலிருந்து மீண்டு வந்த இந்தியர்களை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோர் வரவேற்றனர்.

நேற்று வந்த விமானங்களில் தமிழகம், உ.பி., கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்ளைச் சேர்ந்தவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

thatstamil

எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம் 1964ல் 250 ரூபாய்; 2011ல் 50 ஆயிரம் ரூபாய்

எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம் 1964ல் 250 ரூபாய்; 2011ல் 50 ஆயிரம் ரூபாய்

கடந்த 2006ம் ஆண்டு வரை, 16 ஆயிரம் ரூபாயாக இருந்து வந்த எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம், இந்த ஆட்சியில் மூன்று மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டு, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.,க்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், "மக்கள் சேவை' புரிய தங்களுக்கு இது போதுமானதாக இல்லை, என்று சட்டசபையில் அவர்கள் குரல் கொடுப்பதுண்டு. இதனால், அவ்வப்போது எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் மற்றும் இதர படிகள் உயர்த்தப்பட்டு வந்துள்ளது. கடந்த 1964ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை, எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் 250 ரூபாயாக மட்டுமே இருந்து வந்தது. இடையில், 1971ல் ஈட்டுப்படியாக 100 ரூபாயும், 1974ல் ஈட்டுப்படி 200 ரூபாயாகவும், 1978ல் இது 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதே போல, தொலைபேசி படி என்று 150 ரூபாய் 1978 முதல் வழங்கப்பட்டது. இந்த தொலைபேசி படி, 1980ல் 200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால், 1980ம் ஆண்டு, மொத்தமாக 800 ரூபாய் எம்.எல்.ஏ.,க்கள் பெற்று வந்தனர். கடந்த 1981ல், ஈட்டுப்படி 400 ரூபாயாகவும், தொலைபேசி படி 300 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1982ல், சம்பளம் 300 ரூபாயாவும், தொலைபேசி படி 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1984ல் சம்பளம் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 1985ம் ஆண்டில், சம்பளம் 600 ரூபாயாவும், ஈட்டுப்படி 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. கடந்த 1987ல், தொலைபேசி படி 450 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்பின், 1989ல், ஈட்டுப்படி 700 ரூபாயாக உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 1,750 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில், 1990ல் சம்பளம் 1,000 ரூபாயாகவும், ஈட்டுப்படி 800 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 700 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1991ல், புதிதாக தொகுதிப்படி என்று உருவாக்கப்பட்டு, 250 ரூபாய் சேர்த்து வழங்கப்பட்டது. கடந்த 1992ல், தொலைபேசி படி 800 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 1993ல், சம்பளம் 1,250 ரூபாயாக உயர்த்தப்பட்டு, புதிதாக தபால் படி என்று 250 ரூபாய் சேர்த்து வழங்கப்பட்டது. இதன்பின், 1994ல், சம்பளம் 1,500 ரூபாயாகவும், ஈட்டுப்படி 1,000 ரூபாயாகவும், தொகுதிப்படி 300 ரூபாயாகவும், தபால் படி 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 3,950 ஆக உயர்ந்தது. பின்னர், 1995ல் சம்பளம், 1,700 ரூபாயாகவும், தொகுதிப்படி 400 ரூபாயாகவும், தபால் படி 450 ரூபாயாகவும், தொலைபேசி படி 900 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதன்பின், 1996ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சம்பளம் 2000 ரூபாயாகவும், ஈட்டுப்படி 1,500 ரூபாயாகவும், தொகுதிப்படி 525 ரூபாயாகவும், தபால் படி 625 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 1,250 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 6,000 ரூபாயை தொட்டது. இதன்பின், 1997ல் ஈட்டுப்படி, 3,500 ரூபாயாகவும், தொகுதிப்படி 625 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, 1998ல் தொகுதிப்படி 875 ரூபாயாகவும், தபால் படி 875 ரூபாயாகவும், தொலைபேசிப்படி 1,750 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதுவே, 1999ல் தொலைபேசிப்படி மட்டும் 2,750 ரூபாயாக உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 10 ஆயிரம் ரூபாயானது.

கடந்த 2000ம் ஆண்டில், புதிதாக தொகுப்புப்படி என்று உருவாக்கப்பட்டு, 2,000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. பின்னர், 2001ல், ஈட்டுப்படி 4,000 ரூபாயாகவும், தொகுதிப்படி 2,000 ரூபாயாகவும், தபால் படி 1,500 ரூபாயாகவும், தொலைபேசிப்படி 4,000 ரூபாயாகவும், தொகுப்புப்படி 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 16 ஆயிரம் ரூபாயானது. அதன்பின், அ.தி.மு.க., ஆட்சி முடியும் வரை, எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், 2006ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பின், செப்டம்பர் முதல் தேதியன்று, ஈட்டுப்படி 6,000 ரூபாயாகவும், தொகுதிப்படி 4,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 20 ஆயிரம் ரூபாயானது. கடந்த 2007 ஏப்ரலில் புதிதாக வாகனப்படி என்று ஒன்று உருவாக்கப்பட்டு, 5,000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2008ல், 12 ஆண்டுகளுக்குப் பின், சம்பளம் 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அத்துடன், ஈட்டுப்படி 7,000 ரூபாயாகவும், தொகுதிப்படி 5,000 ரூபாயாகவும், தபால் படி 2,500 ரூபாயாகவும், தொலைபேசிப்படி 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு மொத்த சம்பளம் 30 ஆயிரம் ரூபாயானது. இதன்பின், வாகனப்படி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு முதல், எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சம்பளம் 50 ஆயிரம் ரூபாயானது. அதாவது, 2006ல் ஆட்சி அமைந்த போது, மொத்த சம்பளமாக 16 ஆயிரம் ரூபாய் பெற்று வந்த எம்.எல்.ஏ.,க்கள், ஆட்சி முடியும் நிலையில், மூன்று மடங்குக்கு மேல் சம்பள உயர்வு பெற்று 50 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர்.

இதுமட்டுமன்றி, எம்.எல்.ஏ.,க்களின் தினப்படியாக 500 ரூபாய், பயணப் படியாக ஏ.சி., இரண்டடுக்கு ரயில் பயணம், அதுவும் ஆண்டுக்கு இரண்டு தவணைகளாக 20 ஆயிரம் ரூபாய்க்கு ரயில் பயணம், ஒரு உதவியாளர் உட்பட இருவருக்கு இலவச பஸ் பாஸ், விடுதியில் ஒரு தொலைபேசி இணைப்பு, வீட்டுக்கு ஒரு தொலைபேசி இணைப்பு ஆகியவற்றுக்கான பில் கட்டணம், இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு ஆகும் செலவை ஈடு கட்டுதல், போன்ற பல்வேறு சலுகைகளும் எம்.எல்.ஏ.,க்களுக்கு உண்டு.

எம்.எல்.ஏ.,க்களின் நிறைவேறாத ஆசை: தமிழகத்தின் 13வது சட்டசபை அமைந்தது முதல், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், குறிப்பாக ஞானசேகரன், எம்.எல்.ஏ.,க்களுக்கு சென்னை ஐ.டி., காரிடர் சாலையில் வீடு கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என்பது தான். இதற்கு முதல்வர் தரப்பில் பதில் இல்லாமல் இருந்தது. கம்யூனிஸ்ட்கள் மட்டும் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு முதல்வர் பேசும் போது, பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்தால், அதுபற்றி பரிசீலிக்கப்படும் என்றார். இதையடுத்து, ஞானசேகரன் எம்.எல்.ஏ., மற்ற காங்கிரஸ், பா.ம.க., மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களிடம், நிலம் பெறுவதற்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை நடத்தினார். பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்தை பெற்று முதல்வரிடம் ஒப்படைத்தார். இதன்பின், "எம்.எல்.ஏ.,க்களுக்கு சோழிங்கநல்லூரில் நிலம் ஒதுக்கப்படும்' என்று முதல்வர் அறிவித்தார். ஆனால், ஆட்சி முடியும் வரை, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. மிகவும் வறுமை நிலையில், சொந்த வீடு கூட இல்லாமல் இருக்கும் எம்.எல்.ஏ.,க்களின், இந்த ஆசை கடைசிவரை நிறைவேறாமலேயே போனது

முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு?

முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு?


பிப்.27:முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள். அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக உட்காராமல் இருப்பது போன்றவைதான்.

முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும். வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும். மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.

அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால்குடைச்சல், கால் மரத்துவிடுதல், முதுகுவலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும். இதை சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டுவிடுவார்கள். இது தவறு.

வலி, பிடிப்பு இருந்தால் `ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.

ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் `இரண்டாவது நிலை'

இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களை கதி கலங்க வைத்துவிடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.

மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள `டிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.

கால் குடைச்சல், மரத்துப்போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.

ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.

இதற்கு பிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என்கிறீர்களா?
முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச்சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து டைட்டாகிப்போன மசில்ஸை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.

இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.

மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இருவகை உண்டு

சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்

அதோடு கார்போஹைட்ரேட், ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தை திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனை பெற முடியாது.

மேலும் டூவீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்துபோன டயர், ஷாக் அப்சர்ப்-ல் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட்பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது. ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும். உட்காரக்கூடிய சேர் முதுகுப்பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.

லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங்+உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.


பஹ்ரைன்:புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு

பஹ்ரைன்:புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு

மனாமா,பிப்.24:பஹ்ரைனில் மன்னருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாக மன்னர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள வளமான பஹ்ரைனில் மன்னருக்கு எதிரான போராட்டத்தைக் குறைக்கும் முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் படி நேற்று 50 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் கடந்தாண்டு அக்டோபரில் சட்ட விரோத அமைப்பு ஒன்றை நிறுவி அதன் மூலம் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்து தவறான தகவலை பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 25 ஷியா பிரிவினரும் அடங்குவர்.

தொடர்ந்து "அல் ஹக்" என்ற எதிர்க்கட்சியின் தலைவர்களான ஹசன் முஷைமா மற்றும் ஷியா முஸ்லிம் அறிஞர் முகமது அல் மொக்தாத் இருவருக்கும் மன்னர் மன்னிப்பு அளித்துள்ளார். இவர்களில் முஷைமா தற்போது லண்டனில் உள்ளார். நேற்று முன்தினம் இவர் நாடு திரும்பி விட்டதாக செய்திகள் வெளியாயின. எனினும் அவர் இன்னும் லண்டனில் இருந்து பஹ்ரைனுக்கு வரவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.

பஹ்ரைனின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி, "பஹ்ரைனில் பேச்சு வார்த்தைக்கான அழைப்பு, அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய நடவடிக்கைகள் அந்நாட்டு மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு சாதகமானவை" என்று கூறியுள்ளார்.

எனினும் அல் வெபாக் கட்சியைச் சேர்ந்த இப்ராஹிம் மட்டார் இது பற்றி கூறுகையில், "இது ஒரு நல்ல நடவடிக்கை தான். எனினும் இன்னும் பலர் சிறையில் உள்ளனர். அவர்களையும் விடுவிக்க வேண்டும். மக்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும். முக்கியமாக உண்மையான அரசியல் சீர்திருத்தமான மன்னர் தலைமையிலான அரசியல் சாசன ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அதன் பின் தான் பேச்சுவார்த்தை சாத்தியம்" என்று தெரிவித்துள்ளார்.


tnks http://paalaivanathoothu.blogspot.com/2011/02/blog-post_924.html

ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்ட வழக்கு ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்ட வழக்கு ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஷார்ஜா,பிப்.25:ஷார்ஜா கீழ் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்த 17 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்க கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தயார் என அறிவித்ததைத் தொடர்ந்து வழக்கில் சமரசம் ஏற்படுத்த விசாரணை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த மஸ்ரிஹ் கானின் உறவினர்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியான ரம்ஸான் அப்துல் ஸத்தாரிடம் நீதிபதி அப்துல்லாஹ் யூசுஃப் அல் ஷம்ஸி எதிர் தரப்பில் இழப்பீட்டிற்காக எவரேனும் தொடர்புக் கொண்டார்களா? என்று கேட்டதற்கு இல்லை என பதிலளித்திருந்தார்.

தொடர்ந்து வழக்கை சமரசத்திற்கு மேலும் கால அவகாசம் அளித்து வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். இம்மாதம் 17-ஆம் தேதி வழக்கின் விசாரணை நடைபெறவேண்டியதாகும். அன்று பொது விடுமுறை
அறிவிக்கப்பட்டிருந்ததால் விசாரணை நேற்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்தியாவைச்சார்ந்த 16 பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கும், ஹரியானாவைச் சார்ந்த ஒருவருக்கும் ஷார்ஜா நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்திருந்தது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி இரவு ஷார்ஜா தொழிற்பேட்டையான ஸஜாவில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது. சட்டவிரோதமாக மதுபானம் விற்றதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிவடைந்தது.

பிரபல வழக்கறிஞரான அப்துல்லாஹ் ஸல்மான் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களுக்காக வழக்கில் ஆஜராகி வருகிறார். ஷார்ஜா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமில்லையெனில் குற்றஞ்சாட்டப்பட்டோர் அபுதாபியில் அமைந்துள்ள யு.ஏ.இயின் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

போராட்டத்தில் ஈடுபடுபடும் மக்களுக்கு பாதுகாப்பளிக்க யெமன் அதிபர் ஸாலிஹ் உத்தரவு

போராட்டத்தில் ஈடுபடுபடும் மக்களுக்கு பாதுகாப்பளிக்க யெமன் அதிபர் ஸாலிஹ் உத்தரவு

ஸன்ஆ,பிப்.25:ஜனநாயக ரீதியிலான போராட்டம் நடத்தும் மக்களுக்கு
பாதுகாப்பளிக்குமாறு ராணுவத்திற்கு அந்நாட்டு ஏகாதிபத்திய அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் உத்தரவிட்டுள்ளார்.

32 வருடங்களாக ஆட்சியில் தொடரும் ஸாலிஹ் ராஜினாமாச் செய்யக்கோரி மூன்று வாரங்களாக தொடரும் போராட்டத்தில் 15பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிபரின் கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து நெருக்கடியில் சிக்கியுள்ள ஸாலிஹ் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரசு ஆதரவாளர்களும், எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களும் மோதலில் ஈடுபடுவதை தவிர்க்கவும் ராணுவத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மீது தாக்குதல் நடத்த முயல்பவர்கள் மக்கள் நடத்தும் பேரணிகளில் நுழைவதற்கு வாய்ப்புள்ளதுக் குறித்து போராட்டத்தில் ஈடுபடுவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும், கருத்து சுதந்திரத்தை வெளியிட அமைதியான முறையில் குடிமக்கள் ஒன்று கூடுவதற்கு அரசு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தும் எனவும் ஸாலிஹ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஸாலிஹ் உடனடியாக தேர்தலை அறிவிக்க வேண்டுமென சுற்றுலாத்துறை அமைச்சர் நபீல் அல் ஃபாகி வலியுறுத்தியுள்ளார்.

துனீசியாவிலும், எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு நிகழ்ந்தது யெமனில் நிகழாமலிருக்க இந்த ஆண்டே தேர்தலை நடத்தவேண்டுமென அவர் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

லிபியா எழுச்சி:கொல்லப்பட்ட நிலையில் 130 ராணுவ வீரர்கள்

லிபியா எழுச்சி:கொல்லப்பட்ட நிலையில் 130 ராணுவ வீரர்கள்

திரிபோலி,பிப்.25:லிபியாவில் மக்களை நோக்கி சுடத் தயங்கிய ராணுவ வீரர்கள் 130 பேர் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதனை சர்வதேச மனித உரிமை அமைப்பான ஐ.எஃப்.ஹெச்.ஆர் தெரிவித்துள்ளது.
கைகளை கட்டிய பிறகு ராணுவம் இவர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

கிழக்கு லிபியாவில் பெங்காஸி நகரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்த அந்நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபியின் உத்தரவுக்கு எதிராக ராணுவத்தில் ஒருபிரிவினர் கட்டுப்பட மறுக்கின்றனர்.

இதற்கிடையேத்தான் கத்தாஃபியின் ராணுவ நடவடிக்கைக்கான உத்தரவுக்கு கட்டுப்படாத 130 ராணுவத்தினரை கொன்ற தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தைக் குறித்து சர்வதேச நீதிமன்றம் வழக்குப் பதிவுச்செய்ய வேண்டுமென ஐ.எஃப்.ஹெச்.ஆர் வலியுறுத்தியுள்ளது.

பெங்காசியில் மருத்துவமனைகள் இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்தோர்களால் நிரம்பி வழிகின்றன. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்பட சர்வதேச தலைவர்கள், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆகியன லிபியாவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு எதிராக லிபிய ராணுவம் நவீன தொழில்நுட்பம் வாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்துகிறது. ஆனால், லிபியாவின் பெரும்பாலான நகரங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டை இழந்துக் கொண்டிருக்கின்றன.
செய்தி:மாத்யமம்

10 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் ஓட்டியவர் தற்பொழுது ஹெலிகாப்டரில் பறக்கிறார் - சர்ச்சையில் சிக்கும் யோகா சாமியார் ராம்தேவ்

10 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் ஓட்டியவர் தற்பொழுது ஹெலிகாப்டரில் பறக்கிறார் - சர்ச்சையில் சிக்கும் யோகா சாமியார் ராம்தேவ்

புதுடெல்லி,பிப்.24:யோகா என்றாலே பலருக்கு அலாதி பிரியம் உருவாகிவிட்டது. 'வாழுங்கலை' இன்னும் பல்வேறு பெயர்களில் சில மெஸ்மரிஸ கலைகளையும் கற்றுவிட்டு கோடி கோடியாக சம்பாதிக்கின்றார்கள் பல சாமியார்கள்.

'கதவைத்திற காற்று உள்ளே வரட்டும்' என கட்டுரை எழுதிய ஒரு சாமியார் 'கதவை மூடமறந்ததால்' சர்ச்சையில் சிக்கி சீரழிந்தார். இந்நிலையில் பல்வேறு சாமியார்களின் கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த பொழுதிலும் பலருக்கு யோகா மற்றும் சுவாமிகள் மீதான பற்று விட்டப்பாடில்லை.

இப்பொழுது புதியதொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அவர்தாம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற யோகா சாமியார் ராம்தேவ். கடந்த 10 ஆண்டுகளில் அவர் சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த சொத்துக்களைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல இடங்களிலும் சொத்துக்களை குவித்துள்ள சுவாமிஜிக்கு கோயில்கள் நிறைந்த ஹரித்துவாரில் மட்டும் 1000 கோடிக்கான சொத்துக்கள் உள்ளனவாம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் சஞ்சரித்த சுவாமி ராம்தேவ் இன்று ஹெலிகாப்டருக்கு சொந்தக்காரர். தனக்கு சொந்தமான சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வக்கில்லாத ராம்தேவின் நம்பமுடியாத வளர்ச்சியின் பின்னணியைக் குறித்து சி.பி.ஐ விசாரித்து உண்மையை வெளிக்கொணர கோரியது நாத்திகர்கள் அல்லர். மாறாக அகில பாரதீய அகாரா பரிஷத்தின் செய்தித்தொடர்பாளர் பாபா
ஹட்யோகிதான். இதேக் கோரிக்கையை முன்வைத்து பலரும் முன்வந்துள்ளனர்.

வட இந்தியர்களுக்கு மத்தியில் ஆஷ்தா தொலைக்காட்சி சேனல் மற்றும் இதர சேனல்கள் வாயிலாக அதிகாலைகளில் யோகா பயிற்சியை துவங்கிய ராம்தேவின் வளர்ச்சி திடீரென உருவானதாகும்.

ராம்தேவால் உருவாக்கப்பட்டதுதான் உடல் நலனுக்கான பயிற்சியான யோகா கலை என பல மக்களும் தவறாகவே விளங்கி தொலைக்காட்சிக்கு முன்பாக உட்கார்ந்து பயிற்சி எடுத்துவருகின்றனர்.

சுவாமி என்ற நிலையில் கட்சி பேதமற்ற அனைவரும் பாபா ராம்தேவின் ஆதரவை பெறுவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இதற்கிடையில் ராம்தேவின் பதஞ்சலி யோகா பீட அறக்கட்டளையின் வருமானம் குவியத் துவங்கியது. திவ்யயோக மந்திர், திவ்ய யோகா ஆசிரமம், திவ்யா ஃபார்மஸி, பதஞ்சலி ஹெர்பல், பதஞ்சலி யோகாபீடம், பதஞ்சலி யோகா பல்கலைக்கழகம், பதஞ்சலி மெகா ஃபுட் பார்க், நிவாரண தியானம், ஆயுர்வேதா சிகிட்சை மையம் என அறக்கட்டளையின் கீழ் நிறுவனங்களின் பட்டியல் நீளுகிறது.

பெருமளவிலான நிலங்களும், ஆஷ்த தொலைக்காட்சியின் பெரும் பங்குத் தொகையும் ராம்தேவுக்கு சொந்தமாகும். ஹரித்துவாருக்கு வெளியே வந்தால் ராம்தேவின் சொத்துக்களை கண்டுபிடிக்க தனியாக சர்வே நடத்தவேண்டிவரும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சங்கர்தேவ் என்ற சன்னியாசி சந்தேகமான நிலையில் காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து ராம்தேவின் ஆசிரமத்தின் செயல்பாடுகளில் மர்மம் நீடிக்கிறது என ஹட்யோகி கூறுகிறார்.

ராம்தேவின் ஆசிரமத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளில் மோசடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில மருந்துகளில் அஸ்திகள் இருப்பதாக சுட்டிக்காட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.எம் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரட் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். ஆனால், பல்வேறு கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் சுவாமிஜிக்கு ஆதரவாக களமிறங்கியதால் பிருந்தா கப்சிப்பானார்.

மக்கள் ஆதரவு அதிகரித்தைத் தொடர்ந்து சுவாமிஜியின் கண்கள் அரசியலை நோட்டமிடத் துவங்கின. அதற்கான முயற்சியிலும் இறங்கினார் அவர். ஜூன் மாதம் கட்சியை அறிவிப்பேன் என அவர் கூறியதும் அவரை ஆதரித்த பல கட்சிகளும் மெதுவாக நழுவ துவங்கினர். ஏனெனில் தங்களுடைய வாக்கு வங்கிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்ற கவலை அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் யோகாவுக்கு கிடைத்த மரியாதை சுவாமிஜியின் அரசியல் கட்சிக்கு கிடைக்கவில்லை. இதனால் 'கறுப்புப் பணத்திற்கான போர்' என பிரகடனப்படுத்தி ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் அவர். இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கு அவர் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதற்கிடையேதான் ராம்தேவின் சட்டத்திற்கு புறம்பான வருமானத்தைக் குறித்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை பல தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது. அதில் முக்கியமானவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் திக் விஜய்சிங்.

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கியதுக் குறித்து ஒரு நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பிய ராம்தேவை அருணாச்சல மாநில காங்கிரஸ் எம்.பியான நினோங் எரிங் 'ப்ளடி இந்தியன் டாக்' என திட்டியது சமீபத்திய சர்ச்சையாகும்.

காங்கிரஸ் எம்.பியை பாராளுமன்றத்தில் நுழைய அனுமதிக்கமாட்டோம் என ராம்தேவ் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். எம்.பியிடம் காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்டுள்ளது.

இதற்கிடையே ராம்தேவை ஆதரித்து பாசிச பா.ஜ.க களமிறங்கியுள்ளது. சாமியார்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாதல்லவா?

மாத்யமத்திலிருந்து

Saturday, February 26, 2011

லிபியாவில் உள்நாட்டு கலகம் - ஷாவேஸின் குருட்டு நியாயம்

லிபியாவில் உள்நாட்டு கலகம் - ஷாவேஸின் குருட்டு நியாயம்

கராக்கஸ்,பிப்.26:லிபியாவும், சுதந்திரமும் நீண்ட நாள் வாழவேண்டும். லிபியாவில் கத்தாஃபி எதிர்கொள்வது உள்நாட்டு கலகமாகும் என லத்தீன் அமெரிக்க நாடுகளில் கத்தாஃபியின் நெருங்கி நண்பரான ஷாவேஸ் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி லிபியாவில் மக்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்த பிறகு முதன்முதலாக தனது கருத்தைப் பதிவுச் செய்துள்ளார் ஷாவேஸ்.

கத்தாஃபிக்கு ஆதரவாக ட்விட்டரில் மேலும் ஷாவேஸ் தெரிவித்திருப்பதாவது: லிபியாவில் ராணுவம் மக்களிடம் கொடூரமாக நடந்துக் கொள்வதையடுத்து கத்தாஃபியின் அரசை தண்டிக்க வேண்டுமெனக்கோரும் அமெரிக்கா ஏன் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அப்பாவிகளை கொன்று குவித்தவர்களை தண்டிக்க வேண்டுமென கூறுவதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷாவேஸின் இக்கூற்று நியாயமானதுதான். அதற்காக லிபியாவில்
நடக்கும் அட்டூழியங்களை நியாயப்படுத்துவது அநியாயமாகும்.

லத்தீன் அமெரிக்காவைச் சார்ந்த ஷாவேசும், லிபியாவின் கத்தாஃபியும் அமெரிக்காவின் சாம்ராஜ்ஜியத்துவ கொள்கைகளை எதிர்ப்பவர்களாவர். ஆனால், அமெரிக்காவை எதிர்ப்பதுபோல் நடித்துக் கொண்டு உள்நாட்டில் அதேக்கொள்கையை பின்பற்றுபவர்தாம் கத்தாஃபி என்பது குறிப்பிடத்தக்கது.

லிபியாவில் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்ததையொட்டி கத்தாஃபி வெனிசுலாவுக்கு தப்பிச் சென்றதாக செய்தி வெளியாகின. பின்னர் அதனை மறுத்து தொலைக்காட்சியில் தோன்றினார் கத்தாஃபி.

எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்தபொழுது கத்தாஃபியுடன் ஷாவேஸ் தொலைபேசியில் தொடர்புக் கொண்டதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், வெனிசுலாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் நிக்கோலஸ் லிபியாவில் நடந்துவரும் அக்கிரமங்கள் தாம் ஆதரிக்கவில்லை என ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

செய்தி:மாத்யமம்

Friday, February 25, 2011

கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறு தோண்டும் பிரிட்டிஷ் நிறுவனம்!!

கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறு தோண்டும் பிரிட்டிஷ் நிறுவனம்!!

தூத்துக்குடி: கச்சத்தீவு அருகே பிரிட்டிஷ் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.

இதனால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து மேலும் அதிகரித்துள்ளதோடு, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மீனவ அமைப்புகள், கடல் சூழல் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கு நேர் கிழக்கே உள்ள மன்னார் வளைகுடாப் பகுதி யுனெஸ்கோ அமைப்பால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டு, உயிர்க்கோள் காப்பகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அரிய வகை பவளப் பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் ஆமை போன்ற அரிய கடல்வாழ் உயிரினங்களின் உறைவிடமாக இப்பகுதி திகழ்கிறது. எனவே, இங்குள்ள 21 குட்டித் தீவு பகுதிகளில் மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் வளைகுடாவை ஒட்டிய கச்சத்தீவு பகுதியில், பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் லங்கா என்ற நிறுவனம் எண்ணெய் வளம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் கச்சத்தீவு அருகே சுமார் 3 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் இந்த ஆய்வை மேற்கொள்ள கெய்ர்ன் லங்கா நிறுவனத்துக்கு இலங்கை அரசு 2008-ல் அனுமதி அளித்தது.

இதற்காக, அந்நிறுவனம் பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளதாகவும், இப் பகுதியில் 3 எண்ணெய்க் கிணறுகளை இந்த ஆண்டு மத்தியில் அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், இப் பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகும் என அச்சம் தெரிவித்தார் கடலோர மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.புஷ்பராயன்.

"மீனவர்களை கடல் பகுதியிலிருந்து விரட்டிவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடல் பகுதிகளைத் தாரை வார்க்கும் முயற்சிதான் இது. மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் இந்தியா, இலங்கை நாடுகள் கூட்டாக ஈடுபட வேண்டும் என 1974 இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்படுகிறது. அதனை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது" என்றார் அவர்.

கெய்ர்ன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற அந்த பிரிட்டிஷ் நிறுவனம் இந்தியாவில் கெய்ர்ன் இந்தியா என்ற பெயரிலும், இலங்கையில் கெய்ர்ன் லங்கா என்ற பெயரிலும் துணை நிறுவனங்களை நடத்தி வருகிறது.

கச்சத்தீவு பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்த திசைக்கே தமிழக மீனவர்கள் மட்டுமல்ல, இலங்கை மீனவர்கள் கூட செல்ல முடியாது. புயல், காற்று நேரத்தில் கூட அப் பகுதியில் ஒதுங்க முடியாத நிலை உருவாகும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த எண்ணெய்க் கிணறுகளால் மீனவர்களுக்கு மட்டும் ஆபத்து அல்ல, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் கடல் சூழல் ஆராய்ச்சியாளரான முனைவர் மன்னர்மன்னன்.

"பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா தேசியப் பூங்காவுக்கு மிக அருகில் இந்த எண்ணெய்க் கிணறுகள் அமையவிருப்பதால், அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். கச்சா எண்ணெய் உறிஞ்சி எடுக்கப்படும்போது, கசிவு ஏற்பட்டு கடலில் பரவ வாய்ப்புள்ளது. இளம் கடல்வாழ் உயிரினங்கள், நுண்ணியிரிகளை உண்டுதான் வாழ்கின்றன. எனவே நுண்ணியிரிகள் அழியும். அதன்மூலம் இளம் கடல்வாழ் உயிரினங்களும் அழிய நேரிடும்", என்றார் அவர்.


Tnks http://thatstamil.oneindia.in/news/2011/02/24/cairn-energy-oil-well-work-kacha-theevu-aid0136.html

ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?


ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?



ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர்.  இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.
இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 12 குற்றவாளிகளுள் மகேந்திரா ஹெம்ப்ராம் என்பவனின் தண்டனையை மட்டும் உறுதி செய்து, மீதி 11 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
ஒரிசா உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இம்மி பிசகாமல் உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது.  “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் அந்தந்த சம்பவத்தின் உண்மை நிலை, சூழ்நிலையை பொறுத்தே அமைய வேண்டும்; இவ்வழக்கில் பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” எனக் குறிப்பிட்டு, தாரா சிங்கின் தண்டனை குறைக்கப்பட்டதை நியாயப்படுத்தியிருக்கிறது.  இவ்வழக்கில் சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டபொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன?  அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, “மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது.
இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ்.  இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது.  இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. – பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது.  நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது போல ஸ்டெயின்ஸ் பாதிரியாருக்கு ஒரு பாடம் புகட்டுவது மட்டும்தான் தாரா சிங்கின் நோக்கம் என்றால், அவர் தனது இரு குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஜீப்பைக் கொளுத்தியிருக்க வேண்டிய அவசியமே கிடையாது.  அவரை எழுப்பி மிரட்டிவிட்டு, ரெண்டு தட்டுதட்டிவிட்டுப் போயிருக்கலாம்.  ஆனால், தாரா சிங் தலைமையில் வந்த கும்பலோ, மனோகர்பூர் கிராமத்திற்குள் நுழைந்தவுடன், அக்கிராமத்தின் தகவல் தொடர்புகளைத் துண்டித்தனர்.  தீ வைக்கப்பட்ட ஜீப்பில் இருந்து அம்மூவரும் தப்பித்துவிடாதபடி ஜீப்பைச் சுற்றி நின்றுகொண்ட அக்குண்டர்கள், அம்மூவரும் கருகி இறந்தபின்தான் அக்கிராமத்தை விட்டுத் தப்பிச் சென்றனர்.
ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்திக் கொல்லுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதம் மாற்றும் பாதிரியார்கள், மதம் மாறிய பழங்குடியினரை மட்டுமின்றி, நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினர் மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை.  இந்தியத் தண்டனைச் சட்டங்களின்படி பயங்கரவாதக் குற்றமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டிய இக்கொலையை, நீதிபதிகள் சாதாரண கொலை வழக்காக நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.
ஒரு உயிரற்ற கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில், அப்பாவியான அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை அளிக்கத் தயங்காத உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்டு மூவரை உயிரோடு கொளுத்திக் கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்காமல் கருணை காட்டியிருக்கிறது.  எப்பேர்பட்ட நடுநிலை! எப்பேர்பட்ட மதச்சார்பின்மை!
இப்படுகொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட வாத்வா கமிசன், “1991-க்கும் 1998-க்கும் இடைபட்ட காலத்தில் ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் – படுகொலை நடந்த பழங்குடியின மக்கள் வசித்து வரும் மாவட்டம் – குறிப்பிடத்தக்க அளவில் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இக்காலகட்டத்தில் கிறித்தவ மக்கள் தொகை அதற்கு முந்தைய காலத்தைவிட 575 எண்ணம்தான் அதிகரித்திருக்கிறது.  இது இயற்கையான உயர்வுதான்” எனக் குறிப்பிட்டுள்ளது.  ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ இந்த உண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மதம் மாற்றுவதைத்தான் அபாயகரமானதைப் போலத் தீர்ப்பு எழுதியுள்ளனர்.
‘‘பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்ற நீதிபதிகளின் சூக்குமமான  வார்த்தைகளுக்கு, “கிறித்தவர்கள் மருந்து கொடுத்து, கல்வி கொடுத்துப் பழங்குடியின மக்களை மதம் மாற்றுவது சட்டப்படி குற்றம்” என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கையைத்தான் பொழிப்புரையாக எழுத முடியும்.
இக்காவித் தீர்ப்பைக் கண்டித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தவுடன், “பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” என்ற வரிகள் வரும் பத்தியைத் தீர்ப்பில் இருந்து நீதிபதிகள் நீக்கிவிட்டனர்.
இதை நீக்கியவுடன்,  ” தாரா சிங்கிற்கு மரண தண்டனை அளிக்கப்படாதது ஏன்?” என்ற கேள்வி வந்துவிடும் என்பதை உணர்ந்திருந்த நீதிபதிகள், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டதால், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை அதிகரிக்கத் தேவையில்லை” எனத் தீர்ப்பைத் திருத்தியும் விட்டனர்.
தாரா சிங்கிற்கு அதிகபட்ச தண்டனை அளிக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் நீதிபதிகள் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?
600-க்கும் மேற்பட்ட முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட மும்பக் கலவரம் நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன.  2,000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம் நடந்து 8 ஆண்டுகள் மறைந்துவிட்டன.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பார்த்தால், இக்குற்றச் செயல்களைப் புரிந்த இந்து மதவெறி பயங்கரவாதிகளுள் ஒருவருக்குக்கூட அதிகபட்ச தண்டனை அளிக்கவே முடியாது.
“பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்பதற்குப் பதிலாக, “மற்றவர்களின் மத நம்பிக்கையில் எந்த வழியில் தலையீடு செய்வதையும் நியாயப்படுத்த முடியாது” எனத் தீர்ப்பு தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.  முழுக்க நனைந்த பின்னும் முக்காடு போட்டுத் திரிவது   என்பது இதுதானோ!

Tnks saahul@gmail.com

Wednesday, February 23, 2011

மொபைலுக்கான தரவிறக்க இணையதளங்கள்!

மொபைலுக்கான தரவிறக்க இணையதளங்கள்!



மது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், மென்பொருட்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி நமது கைப்பேசி மாடலையும் தேர்வு செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கலாம்.அதிகபட்ச நிறுவனங்களின் பலதரப்பட்ட மாடல் கைப்பேசிகளுக்கு இங்கே எல்லாமும் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் நேரடியாக நமது கைப்பேசியிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கு உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.zedge.netஎன்று டைப் செய்து இணையலாம்.

நமது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும்அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.
மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கு வைக்கலாம்.

www.getjar.com     
முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,மென்பொருட்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது.
பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.கைப்பேசியில் நேரடியாக தரவிறக்கம் செய்ய உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.getjar.net என்று டைப் செய்து இணையலாம்.

ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான மென்பொருட்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மேன்போருளைப்பற்றிய சிறு குறிப்பும் உள்ளது,அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் மென்பொருளை தேர்ந்தேடுக்கலாம்.

வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள்,ஸ்க்ரீன் சேவர்ஸ் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மெம்பராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஐ-போன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ராய்டு வகையை சேர்ந்த போன்களுக்கு வால்பேப்பர்கள்,கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகு தான் தரவிறக்கம் செய்ய முடியும்.அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்த தளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.

இந்த தளத்தில் Fun, Games and Entertaining என்ற பிரிவில் சென்று நமது எந்த வகை  கைப்பேசிக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய மென்பொருட்களையும்,பழைய மென்பொருட்களின் புதிய அப்டேட் செய்யப்பட்ட மென்பொருட்களும் உடனுக்குடன் தருகிறார்கள்.

ஜாவாசிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி,ஆன்ராய்டு வகை போன்களுக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.

இலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள். காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை. ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் இ-மெயில் முகவரியை கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கைப்பேசி வழியாக http://wab.youpark.com என்ற முகவரியில் நேரடியாக இணையலாம்