Sunday, July 10, 2011

பெண்ணுக்கு வளைகாப்பு(ஸீமந்தம்) நடத்துவது ஏன் தெரியுமா? - முஸ்லிம்களே சொல்லுங்கள்

அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு,
 
அஸ்ஸலாமு அலைக்கும்,
 
 
கருவுற்ற பெண்ணுக்கு சீமந்தம் (வளைகாப்பு) என்பது ஏன் செய்கின்றார்கள் என்ற கேள்வி என் மனதில் எழுந்ததுண்டு. அதற்கான ஒரு விளக்கம் கீழே உள்ள தினமலரில் வெளியான ஒரு கட்டுரையின் மூலம் எனக்கு கிடைத்தது.
 
முழுக்க முழுக்க இந்துகளின் மாத நம்பிக்கையின் ஒரு பங்காக தோன்றிய இந்த ஒரு சடங்கு, ஓர் இறை கொள்கையை முன்வைக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் மக்கள் சிலரிடமும் வந்தது எப்படி என்பது மட்டும் தான் எனக்கு இன்னும் தெரியவில்லை.
 
முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒரு சிலரும் இந்த வளைகாப்பு விஷயத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவும், இந்த சடங்கை நிறைவேற்றினால் தான் குழந்தை நல்லாவிதமாக பிறக்கும் என்று நம்பிக்கை கொண்டவர்களாகவும், இது நாள்வரையும் இந்த சடங்கை செய்கின்றனர்.
 
இத்தகையோர் சிந்திக்க வேண்டும்.............................
 
நன்மையும் தீமையும் அல்லாஹுவை அன்றி வேறு எதனை கொண்டும் நடப்பதில்லை என்று முழங்கிவிட்டு , வளைகாப்பு செய்வது தான் குழந்தையை நல்ல முறையில் பிறக்க வைக்கும் என்று நம்பினால், அடிப்படையிலேயே தவறு இருப்பது தெரியவில்லையா ???
 
 
ஒரு வேலை " லா ஹவ்ல வாலா கூவத இல்லா பில்லாஹ்" என்று அரபியில் அர்த்தம் விளங்காமல் சொல்வதால் தான் இந்த தடுமாற்றமோ??
 
இதுவரை எந்த நோக்கத்தில் செய்திருந்தாலும், வளைகாப்பின் உண்மை அர்த்தமும் தோற்றமும் தெளிவாக தெரிந்த பின்பாவது இந்த சமுதாயம் இந்த தவறில் இருந்து விலகி தவ்பா செய்தால் அல்லாஹுவின் அருளை பெற்ற நல்லதொரு சமுதாயமாக நாம் மாறமுடியும். எல்லாம் வல்ல இறைவன் அத்தகைய அருளை பெற்ற நல்ல மக்களாக உங்களையும் என்னையும் ஆக்கி, ஷிர்க் என்னும் கொடும் பாவத்தில் இருந்து விலகி வாழக்கூடியவர்களாக நாம் அணைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!!!!!!!
 
 
 
 
 
துவாவுடன்
 
அல்லாஹுவின் அடிமை
 
 
 
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
 
தினமலரில் 06.07.11 அன்று வெளியான பதிவு:
 
 
பெண்ணுக்கு வளைகாப்பு(ஸீமந்தம்) நடத்துவது ஏன் தெரியுமா?
ஜூலை 06,2011
  
 
 
பெண்களுக்கு நடத்தப்படும் வளைகாப்புக்கு ஸீமந்தம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் மாப்பிள்ளை வீட்டில் வளைகாப்பு நடத்தி தாய் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், அக்காலத்தில் தாய் வீட்டுக்கு பெண்ணை வரவழைத்து அங்கு வைத்தே வளைகாப்பு நடக்கும். அப்போது பெண்ணின் தாய் மகளுக்கு, லட்சுமியை பற்றிய பாடல்களைப் பாடிக் கொண்டே நெற்றி வகிட்டில் முள்ளம்பன்றியின் முள்ளால் லேசாக கீறி குங்குமம் வைப்பார். முள்ளம்பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும். வகிடு என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே ஸீமந்தம். பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கிறாள். நெற்றியில் பொட்டிட்டால் அவள் சந்தோஷமடைவாள். அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் ஸீமந்தம் நடத்துகிறார்கள்.

No comments:

Post a Comment