வெற்றிப்பாதையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி;ஆனந்த விகடன்
தேர்தலில் எப்படிப்பட்ட டிரெண்ட் இருந்தாலும் கூட்டணி கட்சிகளின் செல்வாக்குத்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன..என்று கருணாநிதி நினைக்கிறார்..விஜயகாந்த் சேரும்போது அ.தி.மு.க வுக்கு கிடைக்கப்போகும் வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் கூடும்..
கடந்த சட்டமன்ற தேர்தலை அடிப்படையாக கொண்டு ,கட்சிகளின் வாக்குகளை தீர்மானித்தால் ,தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் இப்போதைய பலம் 47.78% இதில் ,தி.மு.க காங்கிரஸ்,பா.ம.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன்..
இன்றைய அ.தி.மு.க கூட்டணியின் பலம் 51.26% அ.தி.மு.க ,தே.மு.தி.க,ம்.தி.மு.க,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகிய ஐந்து கட்சிகள் மட்டுமே இதில் சேர்க்கப்பட்டுள்ளன..
அதிகாரம்,மக்கள் நலத்திட்டங்கள்,பண பலம் ஆகிய மூன்று விசயங்களுக்காகவே தி.மு.க கூட்டணி 5 சதவீத வாக்குகளை இழுக்கும் என வைத்துக்கொள்வோம்..அதே சமயம் ,அதிகார துஷ்பிரயோகம்,ஆளுங்கட்சி மீதான வெறுப்பு,ஸ்பெக்ட்ரம் மற்றும் ஊழல் முறைகேடுகள் ஆகிய விஷயங்களை வைத்து அ.தி.மு.க கூட்டணியும் 5 சதவீத வாக்குகளை இழுக்கும் வாய்ப்பு உள்ளது..எப்படி பார்த்தாலும் வித்தியாசம் சுமார் 10 சதவீதமாகவே அப்போதும் தொடரும்..!
இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் வென்ற கட்சிக்கும்,தோற்ற கட்சிக்கும் வித்தியாசம் 3 சதவீதம் மட்டுமே..ஆனால் இன்றைக்கு 10 சதவீதம் என்பதாகவே தெரிகிறது கணக்கு..!தி.மு.க தல்;ஐமை அதிகமாகவே கவலைப்படுவதற்கு இதுதான் காரணம்..!
2006 தேர்தல் வாக்கு சதவீதம்
தி.மு.க - 26.46% --- அ.தி.மு.க-32.64%
காங்கிரஸ்- 8.38% --- தே.மு.தி.க-8.38%
பா.ம்.க - 5.65% -- ம.தி.மு.க-5.98%
சிறுத்தைகள்-1.29% -- சி.பி.எம்- 2.65%
-- சி.பி.ஐ-- 1.61%
மொத்தம்- 41.78% ---மொத்தம் -51.26%
No comments:
Post a Comment