Monday, September 5, 2011

முஸ்லிம் சமுதாயத்தில் குழப்பம் விழைவிக்க முயற்சி…


கடையநல்லூரில் குழப்பம் விழைவிக்க முயற்சி…
கடையநல்லூரில் கடந்த சில தினங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பெயரில் சில பெண்கள் முஸ்லீம்கள் இருக்கும் பகுதிகளான பேட்டையில் வீடுதோறும் சென்று எத்தனை பேர் வீட்டில் இருக்கிறார்கள் அதில் எத்தனை பேர் வெளிநாட்டில் வசிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து வந்துள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு சில மதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் இப்படியொரு சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அறிந்த கடையநல்லூர் பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த இளைஜர்கள் சிலர் இது குறித்து கணக்கெடுக்க வந்த ஆண்கள் மற்றும் பெண்களிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான தவளை தெவித்தனர்.இதில் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் அவர்கள் கொண்டு வந்த லேப்டாப்பை கைப்பற்றி விசாரித்ததில் அதில் முஸ்லீம் பகுதிகளான மேலப்பாளையம் மற்றும் சில முலீம்கள் அதிகம் வாழும் ஊர்கள் தகவல்கள் இருந்தததை கண்டறிந்து.அவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடையநல்லூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் சகோதரர்கள் தங்களை சார்ந்தவர்களை உஷாராக இருக்க சொல்லவேண்டும்.அதுமட்டுமல்லாது கணக்கெடுக்க வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு யாரவது உங்களிடம் தேடி வந்தால்,தீர விசாரித்து அவர்களிடம் பேசுங்கள் உங்களுக்கு அவர்களுடைய நடத்தையில் சந்தேகம் ஏற்ப்பட்டால் உடனடியாக நீங்கள் இருக்கும் பகுதி இளைஞ்சர்கள் மற்றும் ஜமாத்தார்களுக்கு தகவலை தெரியப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment