Saturday, September 12, 2009

ரெட்டியின் மரணமும்-இஸ்லாமும்!

ஆந்திர முதல்வர் மரியாதைக்குரிய ராஜசேகரரெட்டி அவர்களின் அகாலமரணம் நாம் அறிந்த ஒன்றே! திரு ரெட்டி அவர்கள் மதசார்பற்ற சிறந்த ஜனநாயகவாதியாக திகழ்ந்தார். தனது மாநில மக்களில் அனைத்து தரப்பாரும் உயரவேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருந்தார். அதனால் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த முஸ்லீம் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக தனி இடஒதுக்கீடு வழங்கினார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதை பொறுக்க முடியாத சங்க்பரிவார சக்திகள் சட்டரீதியாக தடைபோட முயற்சித்தபோது அதை சாதுர்யமாக எதிர்கொண்டு முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டின் பயனை அடைய வழிவகை செய்தார். அவரது மரணம் உள்ளபடியே மிகமிக வருத்தத்திற்குரிய ஒன்றாகும். அதே நேரத்தில் அவரது மரணத்தையடுத்து தொடரும் அவரது அபிமானிகளின் உயிரிழப்புகள் கவலையளிப்பதாக உள்ளது. இதுவரை சுமார் 170 க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியாலும்- தற்கொலையாலும் உயிரிழந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஒருவர் மீதான அபிமானம் உயிரைவிடும் அளவுக்கு கொண்டு செல்வதற்கு காரணம் மரணம் தொடர்பான தெளிவின்மைதான்.இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகமாக நிகழும் மாநிலம் கேரளமாகும். இங்கே தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் சதவிகிதம் மிகமிக குறைவானதாகும். ஏனென்றால், முஸ்லிம்களுக்கு இஸ்லாம் உயிர் விசயத்தில் தெளிவான வழிகாட்டியிருக்கிறது. முதலாவதாக நம்முடைய நேசத்திற்குரிய ஒருவர் மரணித்துவிட்டால் செய்யவேண்டியது என்ன என்பதை இஸ்லாம் சொல்லிக்காட்டுகிறது. கணவன் இறந்து விட்டால் அவனது மனைவி நான்கு மாதம் துக்கம் அன்ஷ்டிக்கலாம். மற்றவர்கள் அவர்கள் பெற்றவர்களே ஆனாலும் மூன்று நாட்களுக்கு மேலாக துக்கம் அனுஷ்டிக்க இஸ்லாம் தடைவிதிக்கிறது. காரணம் மரணம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இன்று நமது நேசத்திற்குரியவர்களுக்கு வந்த மரணம் நாளையோ-அடுத்த வாரமோ- அடுத்த வருடமோ- அல்லது சில ஆண்டுகளிலோ நமக்கும் வரத்தான் போகிறது. இதில் நம் கையில் ஒன்றும் இல்லை.
மனிதனை படைத்த அல்லாஹ் கூறுகின்றான்;நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;. நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே![அல்-குர்ஆன்;4:78 ]
அனைத்து மாந்தருக்கும் மரணம் உறுதி என்ற இறைவன், தன் புறத்திலிருந்து அந்த உயிர் கைப்பற்ற படுவதற்கு முன்பாக யாருக்காகவும்- எதற்காகவும் அந்த உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
'ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ்? என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். [நூல்;புஹாரி 1364]
ஒரு முஸ்லிமின் இலக்கு சுவனத்தை அடைவதுதான். அந்த சுவனத்தை அடைவதற்கு தடைக்கல்லாக தற்கொலை இருப்பதால்தான் முஸ்லிம்கள் யாருக்காகவும் தற்கொலை செய்வதில்லை. இதற்கு சான்றாக ஒன்றை கூறலாம். முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய ஒரே தலைவர் நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் மரணித்தபோது அவர்களுக்காக யாரும் தன் உயிரை நீத்துக்கொள்ளவில்லை. மாறாக ஒரு சில நபித்தோழர்கள் நபியவர்கள் இப்போது மரணிக்கவில்லை என்ற எண்ணத்தில் இருந்த போது நபியவர்களின் உற்ற தோழர் அபூபக்கர்[ரலி] அவர்கள் சொன்னார்கள்;
'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்" (திருக்குர்ஆன் 3:144) என்றார்.[புஹாரி]
லட்சக்கணக்கான மக்கள் உயிரினும் மேலாக நேசிக்கக்கூடிய நபியவர்கள் இறந்தபோது, அவர் மனிதர்தான்; அவர் மரணிக்கக்கூடியவர்தான். அவரை படைத்த அல்லாஹ் மட்டுமே மரணத்திற்கு அப்பாற்பட்டவன் என்று ஆணித்தரமாக எப்படி அந்த நபித்தோழரால் கூறமுடிந்தது..? ஒருவர் மீது நாங்கள் உயிரினும் மேலாக நேசம் கொண்டாலும் அவரை நாங்கள் கடவுளாக கருதமாட்டோம். கடவுளின் தன்மை[சாகாவரம்] அவருக்கு இருக்கிறது என்று நம்பமாட்டோம் என்ற கொள்கைதான் இஸ்லாம். அந்த இஸ்லாம்தான் ஒருவரது மகிழ்ச்சியில் தடம் புரளாமல் இருக்கவும், ஒருவரது துக்கத்தில் நிலைகுலையாமல் இருக்கவும் வழிகாட்டும் என்பது நிதர்சனமாக அன்று நபியவர்கள் காலத்திலும் நிரூபிக்கப்பட்டது. இன்றும் எத்துணையோ முஸ்லீம் மன்னர்கள் மரணித்தபோதும் அவர்களுக்காக எந்த முஸ்லிமும் தன் உயிரை விடமாட்டான் என்பதை இன்றும் நிரூபிக்கிறது. ஆம்! இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்க்கம்.
குறிப்பு; சில முஸ்லிம்கள் தற்கொலை செய்கிறார்களே என்ற கேள்வி வருமாயின், அவர்கள் இஸ்லாத்தை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்பதே காரணம்.

பெரிய மனுசி

“ஆயிஷா இனி ஸ்கூலுக்கு வராதாம்” சக நண்பனின் வார்த்தைகள் என்னுள் சாட்டையடியாகப் பதிந்தன.
“ ஏண்டா” பதற்றம் என்னுள்
“அது பெரிய மனுசி ஆயிடுச்சாம்”
'அது எப்படி நானும் அவளும் ஒண்ணாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப்படிக்கிறோம், நான் பெரிய மனுசனாகலை அது மட்டும் எப்படி,,,?' விடை தெரியாத கேள்விகள் என்னுள் முட்டி மோத அன்று இரவு என்றும் இல்லாத அளவு ஆயிசாவின் நினைவு என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது..
ஆயிசா என் முதல் பள்ளித்தோழி…பள்ளி செல்லும் வழியில் என்னுடன் பயணப்படுபவள்…என்னை விட உயரம், தெத்துப்பல் சிரிப்பு, நல்ல அறிவாளி முதல் மதிப்பெண்ணைத் தட்டிச்செல்ல எங்களுக்குள் ஒவ்வொரு பரீட்சைக்கும் போட்டா போட்டி இருந்தாலும்,,,நட்பில் எங்கள் நெருக்கம் கண்டு பள்ளியே வியந்து நிற்கும்…
அடுத்த நாள் பள்ளிக்குச் சென்ற போது நண்பன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது…அவன் சொன்னது பொய்யாக இருக்க கூடாதா என்று மனசு ஏங்கியது. நடந்து செல்லும் தூரத்தில் பள்ளி என்பதாலும்,அன்று மாட்டு வண்டிப்பயணம் கூட வசதியானவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதாலும் என் பள்ளிப்பயணம் முழுவதும் நடை பயணமே…எங்கள் வீட்டிலிருந்து இரண்டாவது முடுக்கை* கடக்கும் போது கடலில் கலக்கவரும் நதி போல் எனக்காக காத்திருப்பாள்.இன்று அந்த இடத்தில் வெறுமை…முடுக்கின் வழியே அவள் வீட்டை எட்டிபார்த்தேன்.ஆயிசாவின் லாத்தா* நின்றிருநதார்கள்.அவரிடமே கேட்டுவிடுவது என்று அருகில் சென்றேன்.
“ரியாஸ், என்ன ஸ்கூலுக்கு கிளம்பியாச்சா…”
“ஆமாம் லாத்தா அது தான் ஆயிசாவை கூட்டி போகலாம்னு வந்தேன்…என்றேன் தயங்கியபடி…
என் சத்தத்தைக் கேட்டு ஆயிசாவின் உம்மாவும் வெளியே வந்தார்…நான் சலாத்தி* வழியே ஆயிசா தெரிகிறாளா என்று ஊடுருவி பார்க்க முயன்றேன்…அவள் தென்பட வில்லை…
“இனி ஆயிசா ஸ்கூலுக்கு வராது வாப்பா..” ஆயிசாவின் உம்மா.
“ஏன்” இனம் புரியாத ஏக்கத்துடன் நான்.
“அவ பெரிய மனுசி ஆயிட்டா..” ஆயிசா உம்மா முற்றுப்புள்ளி வைத்தார்கள்ஏமாற்றத்துடன் பள்ளி நோக்கி நடந்தேன்..
‘அவ பெரிய மனுசி ஆயிட்டாளாம் ஸ்கூலுக்கு வரமாட்டாளாம் இது எப்படி பதிலாகும்…போன வாரம் வகுப்பில் லீலா டீச்சர் , பெரிய ஆளா வரனும்னா நல்லா படிக்கணும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. ஆயிசா நல்லா படிச்சதுனாலே பெரிய மனுசி ஆயிட்டாளா..?’ வகுப்பில் அவள் ஞாபகம் இருமடங்கானது.
நேற்றுவரை என் கூடவே இருந்தவள் இன்று அவள் வீடு செல்லும் போது கூட நம்மைப்பார்க்க வரலையே…குழப்பம் தொடர்ந்தது…
இரவு சாப்பிடும் போது உம்மாவிடம் கேட்டேன்…“ உம்மா நான் பெரிய மனுசனாயிட்டா என்னை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டியா…? “
“நீ நல்லா படிச்சா தாண்டா பெரிய மனுசனாவே” டீச்சர் சொன்ன அதே வார்த்தை..”
“அப்ப ஏன் ஆயிசா பெரிய மனுசியாயிட்டான்னு ஸ்கூலுக்கு விட மாட்டேன்றாங்க”
“அவ பொம்பளப்புள்ளடா”
“அது என்ன பொம்பளபுள்ளைக்கு ஒண்ணு ஆம்பளை புள்ளைக்கு ஒண்ணு…”
“கெப்பர்தனமா* பேசாமே போய் தூங்குடா..” அம்மா குரலில் சற்று கடுமை.
அன்று விடை தெரியாத வினாக்களுடன் உறங்கிப்போனேன்.
வருடங்கள் உருண்டோடின…நான் படித்து டாக்டராகி எங்கள் ஊரிலேயே கிளினிக் ஆரம்பித்ததென்று என் வாழ்வில் பல அத்தியாயங்களுக்குப் பின் ஆயிசாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அன்று அஸர்* தொழுகையை முடித்து விட்டு வீடு வந்த போது வரண்டாவில் ஒரு பொண்ணுடன் உம்மா பேசிக்கொண்டிருந்தார்கள், அவள் கையில் எட்டு வயசு மதிக்கத்தக்க ஒரு சிறுமி காய்ச்சலில் நடுங்கிய படி…நான் பெரும்பாலும் வீட்டில் வைத்து நோயாளிகளைப் பார்ப்பதில்லை..யார் இவர்கள் என்று எண்ணிய படி வந்த என்னைப்பார்த்த உம்மா…
“ரியாஸ் வாப்பா இது யாரென்று தெரியுதா…பதிலுக்கு காத்திருக்காமல் பதிலையும் சொன்னார், இது நம்ம ஆயிசாடா…அது புள்ளைக்கு ரொம்ப முடியலைன்னு உன்னை பார்க்க வந்திருக்கு…”
“ஆயிசாவா”…எத்தனை வருடங்களாயிற்று…புன்முறுவலுடன் பார்த்தேன்.அவளிடம் முன்பிருந்த உற்சாகமில்லை…அடையாளமும் தெரியவில்லை.இருந்தாலும் அதே தெத்துப்பல் சிரிப்பு…வறுமையின் வாட்டம் அவளைச்சுற்றி தெரிந்தது.
“ எப்படிருக்கே ஆயிசா? “என்ற படி அவ மகளை பரிசோதிக்க ஆரம்பித்தேன்…
“நல்லா இருக்கேன் டாக்டர்” வார்த்தையில் மரியாதை என்னை அன்னியப்படுத்தியது.
“நீ பார்த்துக்கிட்டுயிரு ரியாஸ் வராத புள்ள வீட்டிற்கு வந்திருக்கு, நான் சாயா எடுத்துக்கிட்டு வர்றேன்” என்று கூறிய படி பதிலை எதிர்பாராமல் உம்மா உள்ளே சென்றார்.
நான் ஆயிசாவை நோக்கினேன்…
“ரெண்டு நாளா காய்ச்சல், நானும் சளிக்காச்சல் என்று மருந்து கொடுத்துட்டு விட்டுடேன்.. இப்ப ரொம்ப கொதிக்க ஆரம்பிச்சிடுச்சி…ஊரெல்லாம் மலேரியா, டைபாயிடுன்னு வந்து இப்ப சிக்கன் கூனியா,பன்ணி காய்ச்சல் வேறெ பரவுதாம் பயமா இருக்கு டாக்டர்…”
“பயப்பட ஒண்ணும் இல்லே…பார்த்திடலாம்..”
ஆபிஸ் ரூமிற்கு சென்று ஸ்டெதஸ்கோப்பால் சோதித்தபடி கேட்டேன்…
“:ஏன் ஆயிசா உனக்கு என்னை ஞாபகம் இருக்கா..”
“எப்படி மறக்கும் டாக்டர்…சின்னப்புள்ளையிலே குண்டா இருப்பீங்க…நாம சேர்ந்து தானே ஸ்கூலுக்கு போவோம்…உங்களுக்கெல்லாம் ஹைஸ்கூலு, காலேஜ்ன்னு எவ்வளவோ நினைச்சி பார்க்க இருக்கும் ஆனா ஆறாவது வரை படிச்ச இந்த மக்கிற்க்கு நினைச்சிப்பார்க்க சந்தோசமான நாட்கள்ன்னா அது தானே…டாக்டர்”
“நான் டாக்டர் இல்ல ஆயிசா உனக்கு எப்பவுமே நான் “குண்டு ரியாஸ்” தான்.”
ஆச்சரியப்பார்வைப்பார்த்தாள்…”பரவாயில்லையே எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்கீங்களே…”
“ஒட்டக ஆயிசா” கூட ஞாபகம் இருக்கு…
சிரித்தாள்...
உன் மாப்பிள்ளை எங்கே இருக்கார்…
சிரிப்பு மறைந்தது…
“உங்களுக்குத்தெரியாதா அவங்க எனக்கு வார்த்தை சொல்லிட்டாக *”
எனக்குத்தூக்கி வாரிப்போட்டது.
“ஏன்”
“அவங்க ரொம்ப படிச்சவங்க…அவங்களுக்கு படிக்காத இந்த மக்குக்கூட ஒத்து வரலையாம்” சொல்லும் போதே கண்ணில் நீர் கோர்த்தது…
“ஆமா வாப்பா, இந்தப்புள்ளைக்கு படிக்கிற வயசுலே கட்டிக்கொடுத்துட்டாங்க வந்தவனோ அதிமேதாவி, அது நொட்டை, இது சொத்தைன்னு எடுத்ததுக்கெல்லாம் சண்டை…இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிறா…இவ காக்கா* தான் அக்கச்சியாவை* வச்சிகாப்பாத்துறான்”.உள்ளிருந்து வந்த உம்மா காபி ஆத்திய படி பேசிய வார்த்தைகளில் காபியின் சூடு குறைந்தது… எனக்கு சூடு ஏறியது…
சமுதாயத்தின் மீது கோபம் திரும்பியது…வயசுக்கு வந்துட்டா படிப்பை நிறுத்தும் பழக்க வழக்கம் மீது வெறுப்பு அதிகமாகியது… நல்ல படிக்க வேண்டிய ஒரு பெண்ணின் வாழ்வு என் கண் முன்னேயே கரைந்து போனதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை…
அன்று இரவு தஹஜ்ஜத்* துவாவில் சமுதாய நலனையும் சேர்த்துக்கொண்டேன்…
இரண்டு நாட்கள் கழித்து ஆயிசா மகளுடன் கிளினிக் வந்தாள்…குழந்தையின் உடல்நிலை நன்கு தேரியிருந்தது.
ஸ்டெதஸ்கோப்பை எடுத்த படி “உங்க பேரென்னா” என்றேன்.
“சபானா”
“வெரிகுட் நாக்கை நீட்டுங்க…ஆ குட்…ரொம்ப நல்ல இம்ரூமெண்ட் இனி ஒரு கவலையும் இல்லை” என்றபடி ஆயிசாவை பார்த்தேன்.
முகத்தில் புன்னகை…
“சபானா எத்தனாவது படிக்கிறீங்க”
“ஃபோர்த்…என்றவள் சிறு இடைவெளிக்குப் பிறகு
“டாக்டர் அங்கிள் நான் பெருசா ஆனதும் உங்களை மாதிரி டாக்டரா ஆவேன்” என்க,
நான் ஆயிசாவைப்பார்த்தேன் தலை குனிவாள் என்று எதிர்பார்த்தேன்…ஆச்சரியம் தலை நிமிர்ந்தாள்…நீண்ட பெருமூச்சு விட்டவள்,அழுத்தமாகச் சொன்னாள்.“இப்பவெல்லாம் படிச்சா மட்டும் தான் பெரிய மனுசி ஆக முடியும்”
அவள் அழுத்த திருத்த உச்சரிப்பில் எனக்கு ஆயிரம் அர்த்தம் தெரிந்து.
===================================================================


வட்டாரத்தமிழ்*முடுக்கு – சந்து, தெரு, *லாத்தா – அக்கா, சலாத்தி-திரை, *காக்கா –அண்ணன், *வார்த்தை சொல்லுதல் – விவாகரத்து, *கெப்பர் தனம் –அதிக பிரசங்கித்தனம், *அஸர் – மாலை வேளைத்தொழுகை ,*தஹஜ்ஜத் – நடுநிசித்தொழுகை, *அக்கச்சியா - சகோதரி
கீழை ராஸா(எ)முஹம்மது ராஜாக்கான்

Thursday, September 3, 2009

Andra chiefminister 'killed' in crash

India minister 'killed' in crash

The aircraft went missing more than an hour before it was due to land
A powerful Indian politician has been killed along with four others in a helicopter crash in southern India, media reports say.
The wreckage of Andhra Pradesh Chief Minister YS Rajasekhara Reddy's helicopter was found on a hill a day after it disappeared.
This followed a massive search operation involving 11 aircraft and over 2,000 security personnel.
Mr Reddy, 60, was an influential politician from the Congress party.
He had been elected for a second term in the general elections this year.
Television footage showed Mr Reddy's family and supporters crying after news emerged that there had been no survivors in the helicopter crash.
Earlier on Thursday Mr Reddy's helicopter was found on a small hill, some 70km (43 miles) east of Kurnool.
The discovery follows a massive search and rescue operation launched by the state government.
Remote forest
Some 2,000 members of the security forces, supported by 11 helicopters and airplanes, took part.
Rain reduced many areas to mud, making the search difficult.
The Bell helicopter carrying Mr Reddy and four others was on what should have been a two-hour flight from Hyderabad's Begumpet airport.

It took off at 0845 IST (0315 GMT) on Wednesday bound for the village of Anupally in Chittoor district.
The aircraft went missing over Kurnool district more than an hour before it was due to land.
The remote Nallamalla forest area where it vanished is a stronghold of Maoist rebels in Andhra Pradesh state.
But federal officials have ruled out the possibility that insurgents shot down the helicopter.
Andhra Pradesh is one of several Indian states with a significant Maoist rebel presence.
Thanks BBC News

Tuesday, September 1, 2009

ஜின்னா-என்ன தான் சொல்கிறார் ஜஸ்வந்த்?

ஜின்னா-என்ன தான் சொல்கிறார் ஜஸ்வந்த்?
சிம்லா: இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம்.. இது தவறானது என்று பாஜகவலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.நேற்று சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் 'டெவில்ஸ் அட்வகேட்' நிகழ்ச்சியில் ஜஸ்வந்த் சிங் அளித்துள்ள பேட்டியின் சில முக்கிய பகுதிகள்...ஜின்னா சுதந்திர இந்தியாவுக்காக இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து தீவிரவமாக போராடியவர். அதேசமயம், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் நலனுக்காகவும் போராடினார். அதற்காக இந்துக்களை ஜின்னா ஒருபோதும் வெறுத்ததில்லை.அவர் ஒருபோதும் இந்துக்கள் மீது துவேஷம் கொள்ளவே இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே அவருக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இதை தனது கடைசிக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும் அவர் தெளிவுபடத் தெரிவித்துள்ளார்.மகாத்மா காந்தியுடன்தான் அவருக்கு மிகப் பெரிய கருத்து வேறுபாடு இருந்தது. காந்தியை ஒரு அரசியல் சுயநலவாதி என்று அவர் விமர்சித்துள்ளார்.ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார். உண்மையில் இவர்கள் இருவருமே ஜின்னாவை விரும்பாதவர்கள்.ஜின்னாவிடம் பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் சுயமாக வளர்ந்தவர். எந்தவித பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து வளர்ந்தவர். ஆனால் காந்தி அப்படி அல்ல. அவர் ஒரு திவானின் மகன்.அதேபோல நேரு மிகப் பெரிய கோடீஸ்வரரின் வாரிசு. அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள். ஆனால் ஜின்னா அப்படி அல்ல. தானே முயன்று, கடுமையாக உழைத்து தனக்கென ஒரு அரசியல் வரலாற்றை படைத்தவர் ஜின்னா.அவ்வளவு பெரிய மும்பையில், பரம ஏழையாகத்தான் அவரும் வாழ்ந்தார். அங்கு அவர் தாக்குப்பிடிக்க காரணம் அவரது மன வைராக்கியம் மற்றும் கடுமையான முயற்சிகளே. மும்பையில் அவர் வாட்சன்ஸ் ஹோட்டலின் மொட்டை மாடியில் தான் ஒரு அறையில்தான் தங்கியிருந்தார்.
ஜின்னா என்றில்லை, சுயமாக உயர்ந்த, கடுமையாக உழைக்கக் கூடிய யாரையும் நான் பாராட்டவே செய்வேன், அவர்களை மதிப்பேன்.இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது.1946ல் நடந்த தேர்தலில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி அனைத்து முஸ்லீம் தொகுதிகளிலும் வென்றது. ஆனால் அவர்களால் ஆட்சியில் அமர முடியாத நிலை. காரணம், காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தாமல் பெரும்பாலான இடங்களில் வென்றிருந்தது. எனவே முஸ்லீம் லீக்கால் ஆட்சியில் இடம் பிடிக்க முடியவில்லை. அப்போதுதான் அவர் தேர்தலில் நின்றால் மட்டும் போதாது என்பதை ஜின்னா உணர்ந்தார்.முஸ்லீம்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்பதை காங்கிரஸுக்கும் உணர்த்தினார். இதையடுத்தே இடஒதுக்கீடு உத்தரவாதம் தரப்பட்டது.. முதலில் 25 சதவீதம் என்று அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு பின்னர் 33 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் இது சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டப்பட்டது, இது தான் நாடு பிளவுபடக் காரணமானது.நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.முஸ்லீம்களுக்கு அதிகாரம் வழங்க காந்தி ஒப்புக் கொண்டார். ஆனால் அதை நேரு விரும்பவில்லை. இந்தியா பிரியும் வரை தனது கருத்தில் நேரு உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார்.இந்தத் தவறை பின்னால்தான் நேரு உணர்ந்தார், அதை ஒப்பும் கொண்டிருக்கிறார். இந்தியா இரண்டாகப் பிரிந்ததற்கு நேருவும், அதேபோல ஜின்னாவும்தான் முக்கிய காரணம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.இதை நான் குற்றச்சாட்டாக கூறவில்லை. உண்மையைப் பதிவு செய்கிறேன். அந்த சமயத்தில் என்ன நடந்தது, எந்தச் சூழ்நிலை பிரிவினைக்கு இட்டுச் சென்றது என்பதைக் கூறுகிறேன்.எனது கருத்து என்னவென்றால் ஜின்னா மட்டுமே பிரிவினைக்குக் காரணம் அல்ல. அப்படிப்பட்ட கருத்தை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே.மேலும் ஜின்னா பாகிஸ்தான் என்ற வார்த்தையை நெடுங்காலத்திற்கு பயன்படுத்தவில்லை. முஸ்லீம்களுக்கு தனி இடம் வேண்டும் என்று மட்டுமே கோரினார். சில மாகாணங்களை முஸ்லீம்களுக்காக ஒதுக்க வேண்டும். அவை இஸ்லாமிய மாகாணங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும், இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார்.
சிறுபான்மையினருக்கும் அதிகாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்தான் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமுதாயத்தில் கெளரவத்துடனும், அதிகாரத்துடனும் இருக்க முடியும் என அவர் நினைத்தார்.அதுதான் அவரது முதன்மையான நோக்கமாக இருந்ததே தவிர பிரிவினை அவரது முதல் எண்ணமாக இல்லை. அதாவது இந்தியாவுக்குள் சுயாட்சி கொண்ட ஒரு பாகிஸ்தானையே அவர் விரும்பினார். அந்தக் கருத்து சாத்தியமானதுதான் என்றும் அவர் நினைத்தார். அவரது எண்ணத்திற்கு மதிப்பளித்திருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது.இந்துக்களை அவர் ஒருபோதும் வெறுத்ததில்லை. காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் தலைமை மீதும்தான் அவரது கோபம் இருந்தது. இந்துக்களை நான் எதிரியாகவே நினைக்கவில்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.முதன் முதலாக காந்தியிடம் ஜின்னாவை கோகலே அறிமுகப்படுத்தியபோது, காந்தி சொன்ன வார்த்தை இது- ''ஒரு முஸ்லீம் தலைவரை வரவேற்பதில் பெருமை அடைகிறேன்''. அங்கேயே பிரிவினை வந்து விட்டது.ஜின்னாவை ஒரு முஸ்லீம் என்ற கோணத்தில்தான் காந்தியே பார்த்திருக்கிறார். ஆனால் தான் ஒரு முழுமையான இந்தியர் என்ற எண்ணத்துடன் இருந்தவர் ஜின்னா. தன்னை ஒரு முஸ்லீமாக பார்ப்பதை அவர் விரும்பாதவர்.ஜின்னாவுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜின்னா ஒரு சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, நாடாளுமன்ற அரசியலில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். பிரிவினைவாதத்தை எந்த நிலையிலும் அவர் ஏற்காதவர். ஆனால் காந்தி, தனது கருத்துக்களைக் கூற மதத்தைத் துணைக்கு அழைத்தவர். ஆனால் ஜின்னா மதம் என்ற சொல்லை கடைசி நேரத்தில்தான் கையில் எடுத்தார். ஆனால் காந்திக்கோ, அவரது அரசியலின் ஆரம்பத்திலிருந்தே மதமும் கலந்தே இருந்தது.ஆனால் ஜின்னா, அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தவர். இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை நான் ஜின்னாவின் மாபெரும் வெற்றியாக கூற மாட்டேன். அதேபோல தான் நினைத்ததை ஜின்னாவும் சாதிக்கவில்லை. பாகிஸ்தான் உருவான சில காலத்திலேயே ஜின்னாவின் கொள்கைகள், நோக்கங்கள் அடிபட்டுப் போய் விட்டன. அந்த வகையில் காந்தியும் சரி, ஜின்னாவும் சரி தோல்வியடைந்தவர்கள் என்றே கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இப்போது கூட முஸ்லீம்களை நாம் சரியாக நடத்துகிறோமா என்றால்.. இல்லை. அவர்களை வெளிகிரகவாசிகள் போல நடத்துகிறோம். அப்படி நடத்தியதால் தான் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. இப்போதும் அவர்களை அப்படி நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டுமா?.இந்தியாவில் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு சம உரிமையோடு வாழ அனுமதி வேண்டும். அதைச் செய்யாத வரை பிரச்சனைகள் தீராது. முஸ்லீம்கள் குறித்த பாஜகவின் நிலை சரியல்ல என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.அன்று அனுமன்.. இன்று ராவணணா?:இந் நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் சிம்லாவில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,ஒரு புத்தகம் எழுதியதற்காக நீக்கியுள்ளார்கள். உண்மையில் என் புத்தகத்தை பாஜத தலைவர்கள் படித்துக் கூட பார்க்கவில்லை.என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக ராஜ்நாத் சிங் தொலைபேசியில் கூறினார். இதை அத்வானியும் ராஜ்நாத் சிங்கும் டெல்லியிலேயே நேரில் சொல்லியிருக்கலாம்.சிம்லா கூட்டத்துக்கு வரச் சொலிவிட்டு, இங்கு வைத்து கட்சியை விட்டு நீ்க்குவதாக போனில் சொன்னது தான் வருத்தம்.நான் இதுவரை பாஜகவின் அனுமனாக இருந்தேன். இப்போது என்னை பாஜக ராவணனாக கருதுகிறது..நான் ராணுவத்திலிருந்து மக்கள் சேவைக்கு வந்தவன். நான் பென்ஷன் வாங்கும் ஆசாமியும் அல்ல. 30 வருடமாக பாஜகவில் அரசியலில் இருந்தேன். அதன் ஆரம்பகால உறுப்பினர் தான். கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளேன். அது இப்படி முடிவுக்கு வரும் என்று நினைத்ததில்லை.என் புத்தகத்தை வைத்து காங்கிரஸ் பிரச்சனை செய்தால் அதைப் புரிந்து கொள்ளலாம். காரணம் நாடு பிளவுபட காரணம் என்று நான் காங்கிரஸ் தலைவர்களைத் தான் அதில் விமர்சித்துள்ளேன். ஆனால், பாஜக பிரச்சனை செய்தால் என்ன செய்வது?. எல்லாவற்றையும் அரசியலாக்குவது தவறு. குறிப்பாக ஒருவரின் சிந்தனைகளுக்கு தடை போடுவது பெரும் தவறு.ஜின்னா குறித்தும், நாடு பிளவுபட்ட அந்த வலி மிகுந்த நாட்களையும் தான் நான் புத்தகமாக்கினேன். அந்தப் புத்தகம் 5 வருட கடும் உழைப்பில் உருவானது. புத்தகம் எழுதியதற்காக நான் வருதப்படவில்லை. அதை கவனமாகப் படித்துப் பாருங்கள்.
இந்து-முஸ்லீகள் ஒற்றுமையின் தூதராக இருந்த ஜின்னா ஏன் பாகிஸ்தானின் தந்தையாக மாறினார். ஏன் நாடு பிளவுபடக் காரணமானார்.. அவரில் ஏன் அந்த மாற்றம் ஏற்பட்டது.. என்பதை விளக்கும் நூல் தான் இது. இந்தப் புத்தகம் எழுதி நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.அத்வானி எதிர்க் கட்சித் தலைவராக நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.இளைய தலைமுறையிடம் பொறுப்பைத் தருமாறு பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் அறிவுரை தந்துள்ளது குறித்து கேட்கிறீர்கள். அது குறித்து நான் ஏதும் கூற விரும்பவில்லை. நான் ஆரஎஸ்எஸ்சில் எந்தக் காலத்திலும் உறுப்பினராக இருந்ததில்லை. அவர்களது கருத்துக்களுக்கு நான் எப்படி பதில் சொல்வது என்ற ஜஸ்வந்த் சங் பரிவார் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

User Comments
[ Post Comments ]
[ Read All Comments ]

பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 19 Aug 2009 8:12 pm
உண்மையில் இஸ்லாமியருக்கும் இந்துக்களுக்கும் ஒரு பிரச்சனையும் கிடையாது. பங்காளி தகராறு கூட கிடையாது. அவர் அவர் மார்க்கம் அவர்களுக்கு. பின் எங்கே பிரச்னை? இன்றைய சுதந்திர இந்தியாவில் பிராமிணர்களின் அதிகார பிடி சிறுது சிறுதாக விலகும் நிலைமை. இந்த நிலைமையை மாற்ற முஸ்லிம்களை ஹிந்துக்களின் எதிரியாக காட்ட ஒரு அமைப்பு. அப்படி காட்டினால் இந்துக்கள் அந்த அமைப்பின் கீழ் திரள்வார்கள். அதன் மூலம் அதிகார மையத்தை கைபற்றலாம். இதுதான் திட்டம். இரு தரப்பினருக்கும் பிரச்சனையே உண்மையில் இல்லை. புரிந்துக்கொள்ளுங்கள்.