Saturday, January 29, 2011

சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்

Saturday, January 29, 2011 1:57 PM IST

சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜன. 28: தமிழக அரசின் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தில் சேர சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ. சுகந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்த ஆண், பெண் இரு பாலருக்கும் முற்றிலும் இலவசமாக, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் திறன் வளர்ப்புப் பயிற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பயிற்சி நிலையங்கள் மூலமாக அளிக்கப்பட உள்ளன.

பயிற்சி கட்டணம் முழுவதும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால், பயிற்சி நிலையத்திற்கு வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பப் படிவத்தில் உரிய விவரங்களை நிறைவு செய்து, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சலிலோ அல்லது ஆன் லைன் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம். எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத சிறுபான்மையினத்தவர் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு முழுவதும் ஹார்டுவேர் நெட் ஒர்க்கிங் பயிற்சி - 5148 பேருக்கும், எம்.எஸ் ஆபீஸ் வித் சி, சி பிளஸ் பிளஸ் பயிற்சி- 2198 பேருக்கும், எம்எஸ் ஆபீஸ் வித் டாலி பயிற்சி - 3253 பேருக்கும் என மொத்தம் 10,599 பேருக்கு பின்வரும் நிறுவனங்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சிஎஸ்சி கம்யூட்டர் எஜுகேஷன் மூலமாக புதுக்கோட்டை, அறந்தாங்கியிலும், ஸ்டூடன்ட் சாப்ட்வேர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட் மூலமாக புதுக்கோட்டையிலும், டாட் நெட் பயிற்சி 340 நபர்களுக்கும், டிடிபி பயிற்சி 671 நபர்களுக்கும் சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் நடத்தப்பட உள்ளன. பிளஸ் 2-வில் தேர்ச்சி பெறாதவர்களும் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். ரெப்ரிஜிரேஷன், ஏர்கண்டிஷனிங் பயிற்சி 115 பேருக்கு சென்னையில் நடத்தப்பட உள்ளது. எஸ்எஸ்எல்சி வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

கார்மென்ட் எக்ஸ்போர்ட் மெர்சன்டைசிங் மேனேஜ்மென்ட் பயிற்சி 30 பேருக்கு சென்னை தரமணியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் ( தொடர்புக்கு 044- 22542756, 22542768) நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பேஷன் டிசைனிங், தையல் கைவேலைப்பாடுகள், பிட்டர், டர்னர், வெல்டர், ரீவைண்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளன. பயிற்சியில் சேர சிறுபான்மை இனத்தவராக இருக்க வேண்டும். ஜாதிச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்றிதழ், குடும்ப வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாதவர்கள், அதற்கு மேல் படித்திருப்பின் அதற்குரிய நகல்களை இணைக்க வேண்டும். குடும்ப வருமானச் சான்றிதழை உடனடியாக வருவாய்த் துறையிடமிருந்து பெற முடியாதவர்கள் பயிற்சி தொடங்கும்போது சான்றிதழை அளிக்க உறுதி அளித்து பயிற்சியில் சேரலாம்.

பயிற்சியில் சேர விரும்புவோர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, அண்ணாசாலை 5-வது தளம், சென்னை- 600 002 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தில் பயிற்சி பெற விரும்பும் நிறுவனம், இடத்தின் பெயர், பயிற்சியின் பெயரை தெளிவாக பெரிய எழுத்தில் குறிப்பிட வேண்டும். முன்னதாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் (ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ஸ்ரீர்.ண்ய்) இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

tnks dinamani

No comments:

Post a Comment