அறியாமையினால்; இவர்கள்தான் உரத்துக்கூவுகிறார்கள்.... ஹிஜாப் அடக்குமுறையென்று!!!!!!!!! |
பத்திரமாயிருக்கிறேன்... எனக்குள் - நான் மிக மிகப்பத்திரமாய்....!!! எச்சில் இலைமீதான இலையான்களைப்போல எவர் கண்ணும் என்னை அசிங்கப்படுத்துவதும் இல்லை...!!! டீக்கடை தாண்டி நடந்து போகையில்... எல்லோர் கவனமும் பறித்து என்னைப்பற்றியே விமர்சித்துத் தொலைத்து பாவங்களால் நிரம்பிவழிய... வாய்ப்பளிப்பதில்லை- நான்...!!! என்னைப் பின்தொடர்ந்து வா... விசிலடி..!!!! கேலிசெய்....!!! என யாரையும்... என் உடைகளால் சீண்டிவிடுவதில்லை நான்...!!! வகுப்பறைகளிலும்... பாடப்புத்தகம் மீதான அடுத்தவர் கண்களை ஒருபோதும் கிழித்துப்போடுவதில்லை-நான்!!! விழிகளால் ஊரே ரசித்து... கழித்துப்போட்ட எச்சில் பண்டமாய் எப்போதும் இருந்ததில்லை - நான்!!! அல்லாஹ்வின் கட்டளைகளில்; கணவனின் கண்களில்; நான் மிகப்பெரும் அழகியாய் உயர்ந்து நிற்கிறேன்...!!! அறியாமையினால்; இவர்கள்தான் உரத்துக்கூவுகிறார்கள்.... ஹிஜாப் அடக்குமுறையென்று!!!!!!!!! பாவம் அவர்கள்....; ....................... அநாவசிய பார்வைகளை.... அந்நியரின் விமர்சனங்களை .... அனாச்சாரங்களை .... அடக்கிவைக்கும் அதிஉன்னத ஆயுதம்.... ஹிஜாப் என்பதை அறியாமல்....!!!! நன்றி : றஹீமா பைஷால் |
Tuesday, September 6, 2011
ஹிஜாப் ஒரு கவசம் !!! கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment