Friday, October 7, 2011

சவூதி அரேபியாவில் 2 உ.பி. இளைஞர்கள் சுட்டு கொலை

துபாய்: சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த 2 இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அவர்களை சுட்டுக் கொன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

ஜெட்டா நகரில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் உள்ள செயில் அல்-சாகீர் நகரில் உள்ள இரும்பு பொருட்கள் தயாரிக்கும் சிறிய பட்டறை ஒன்று உள்ளது. இதில் உத்தர பிரதேசம், ஜான்பூரை சேர்ந்த அகமது யாசின் (46). முகமது ஷக்கீர் அகமது (41) உட்பட 3 இந்தியர்கள் பணியாற்றி வந்தனர்.

சில நாட்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றிற்கு இரும்பு ஜன்னல் மற்றும் கதவு தயாரிக்க இந்த இரும்பு பட்டறையில் ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த ஆர்டரை குறித்த நேரத்தில் செய்து முடிக்கவில்லை என தெரிகிறது.

சம்பவத்தன்று இரும்பு பட்டறைக்கு வந்த ஹோட்டல் அதிபர் சில நாட்களுக்கு முன் தயாரிக்க கொடுத்த ஆர்டர் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது இந்திய சகோதர்களான யாசின் மற்றும் முகமது ஆகியோர் அவரை எதிர்த்து பதில் அளித்துள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த ஹோட்டல் அதிபர், தனது காரில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் 2 பேரையும் சரமாரியாக சுட்டார். இதில் நிலைக்குலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்களுடன் இருந்த மற்றொருவர் எந்த காயமும் உயிர் தப்பினர். துப்பாக்கியால் சுட்ட ஹோட்டல் அதிபரை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல்களை இந்திய தூதர் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Thanks Thatstamil

No comments:

Post a Comment