Saturday, February 26, 2011

லிபியாவில் உள்நாட்டு கலகம் - ஷாவேஸின் குருட்டு நியாயம்

லிபியாவில் உள்நாட்டு கலகம் - ஷாவேஸின் குருட்டு நியாயம்

கராக்கஸ்,பிப்.26:லிபியாவும், சுதந்திரமும் நீண்ட நாள் வாழவேண்டும். லிபியாவில் கத்தாஃபி எதிர்கொள்வது உள்நாட்டு கலகமாகும் என லத்தீன் அமெரிக்க நாடுகளில் கத்தாஃபியின் நெருங்கி நண்பரான ஷாவேஸ் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி லிபியாவில் மக்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்த பிறகு முதன்முதலாக தனது கருத்தைப் பதிவுச் செய்துள்ளார் ஷாவேஸ்.

கத்தாஃபிக்கு ஆதரவாக ட்விட்டரில் மேலும் ஷாவேஸ் தெரிவித்திருப்பதாவது: லிபியாவில் ராணுவம் மக்களிடம் கொடூரமாக நடந்துக் கொள்வதையடுத்து கத்தாஃபியின் அரசை தண்டிக்க வேண்டுமெனக்கோரும் அமெரிக்கா ஏன் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அப்பாவிகளை கொன்று குவித்தவர்களை தண்டிக்க வேண்டுமென கூறுவதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷாவேஸின் இக்கூற்று நியாயமானதுதான். அதற்காக லிபியாவில்
நடக்கும் அட்டூழியங்களை நியாயப்படுத்துவது அநியாயமாகும்.

லத்தீன் அமெரிக்காவைச் சார்ந்த ஷாவேசும், லிபியாவின் கத்தாஃபியும் அமெரிக்காவின் சாம்ராஜ்ஜியத்துவ கொள்கைகளை எதிர்ப்பவர்களாவர். ஆனால், அமெரிக்காவை எதிர்ப்பதுபோல் நடித்துக் கொண்டு உள்நாட்டில் அதேக்கொள்கையை பின்பற்றுபவர்தாம் கத்தாஃபி என்பது குறிப்பிடத்தக்கது.

லிபியாவில் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்ததையொட்டி கத்தாஃபி வெனிசுலாவுக்கு தப்பிச் சென்றதாக செய்தி வெளியாகின. பின்னர் அதனை மறுத்து தொலைக்காட்சியில் தோன்றினார் கத்தாஃபி.

எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்தபொழுது கத்தாஃபியுடன் ஷாவேஸ் தொலைபேசியில் தொடர்புக் கொண்டதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், வெனிசுலாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் நிக்கோலஸ் லிபியாவில் நடந்துவரும் அக்கிரமங்கள் தாம் ஆதரிக்கவில்லை என ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

செய்தி:மாத்யமம்

No comments:

Post a Comment