Wednesday, February 23, 2011

BeWare --- PIZZA HUT: போர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா? ஹராமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... 
 
 
போர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா? ஹராமா?
 
 
வளர்ந்து வரும் இந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் கலாச்சராத்துடன் இப்பொழுது அதிகமாக வெளிநாட்டு உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் முன்னிலையில் இருப்பது ஃபாஸ்ட் ஃபுட் (Fast
Food)
கலாச்சாரம்.
 
கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் வீட்டிற்குச் செல்ல நேரமாகிவிட்டாலும் அல்லது பார்ட்டி (Party) என்றாலும் ஆர்டர் பண்ணுவது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) ஆகத்தான் இருக்கும். அதிலும் முக்கியமாக பிஸ்ஸா (Pizza). பிஸ்ஸாவை நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாது கிராமங்களில் உள்ளவர்கள் கூட இப்பொழுது டிவி விளம்பரங்கள் மூலம் தெரிந்து வைத்துள்ளார்கள். அவர்களுடைய ஓரே எண்ணம் ஒரு முறையாது இந்த பிஸ்ஸாவை ருசித்து விடவேண்டும் என்பதுதான்.
 
பிஸ்ஸாவை (Pizza) இந்தியாவில் PIZZA HUT DOMINO’S PIZZA என்ற இரண்டு கம்பெனிகள் விற்பனை செய்கின்றன. குறிப்பாக, பிஸ்ஸா பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் (Shopping Complex) ளில்தான் கிடைக்கும். பிஸ்ஸா (Pizza) வெவ்வேறு ருசிகளில் கிடைக்கி்ன்றது. எடுத்துக்காட்டாக சைவம், அசைவம்
(
ஆட்டுக்கறி, மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி).
 
கடந்த டிசம்பர் விடுமுறையில் சென்னைக்குச் சென்றிருந்தேன். புதிதாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் திறந்திருப்பதாகவும்
எல்லாப் பொருட்களும் அங்கே கிடைப்பதாகவும் சொன்னார்கள். நாங்களும் அங்கே சென்றோம். ஒரு தளத்தில் PIZZA HUT கடையைப் பார்த்த என்னுடைய நண்பர்கள்
"
பிஸ்ஸா (Pizza) சாப்பிடலாம்" என்று சொன்னார்கள். நான், "இந்தியாவில் உள்ள PIZZA HUT ஹலாலா என்று தெரியாது. ஆகையால் போக வேண்டாம்" என்று சொன்னேன்.
 
நிறைய முஸ்லிம் நபர்களை PIZZA HUT ல் பார்த்த நண்பர்கள், "அங்கே பார் முஸ்லிம் ஆட்கள் இருக்கிறார்கள்" என்று சொன்னார்கள். "ஹலாலாக இருப்பதனால்தானே அவர்கள் சாப்பிடுகிறார்கள்" என்று சொன்னார்கள். நானும் அரை மனதுடன் வெளிநாட்டில் உள்ள பிஸ்ஸாவிற்கும் இந்தியாவில் உள்ள பிஸ்ஸாவிற்கும் எப்படி சுவை வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று அங்கே சென்றேன்.
 
உணவுப் பட்டியலை (Menu Card) வாங்கி என்ன ஆர்டர் செய்யலாம் என்று பார்த்தேன். வெஜிடேரியன், ஃபியரி சிக்கன்... என்று பார்த்துக் கொண்டு வந்த எனக்கு PEPPERONI (100% Pork Pepperoni) என்று பார்த்தவுடன் தலை சுற்றியது.
 
உடனே வெளியே வந்து விட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்களைப் பார்த்து மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. Pork Pepperoni தவிர வேறு பிஸ்ஸாவை அவர்கள் சாப்பிடலாம் என்று எண்ணிக்கொண்டேன். இருந்தாலும் மனது கேட்கவில்லை. ஆகையால் அங்கே நின்றிருந்த சில முஸ்லிம் நபர்களிடம் "PIZZA HUT ஹலாலா?" என்று கேட்டேன். சிறிது யோசித்து விட்டு
"
ஹலால்தான்" என்றார்கள். ஆனால் Pork Pepperoni என்று உணவுப் பட்டியலில் போட்டிருக்கிறதே.. என்று இழுத்தேன். அதைப் பார்த்து விட்டு, "அதனால் ஒன்றுமில்லை" என்று சொன்னார்கள்.
 
மற்ற சிலர், "நாங்கள் வெஜிடேரியனைத்தான் வாங்குகிறோம்" என்று சொன்னார்கள். எனக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது. நிறைய போ்களுக்கு PORK என்றால் பன்றியின் இறைச்சி என்றே தெரியவில்லை. நான் அவர்களிடம் "PORK என்றால் பன்றியின் இறைச்சி" என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர்கள் நான் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று அரை மனதுடன் வெளியே வந்தார்கள்.
 
இதற்கு முஸ்லிம்களின் அறியாமைதான் காரணம். "இந்தியாவில் கிடைக்கும் இறைச்சி எல்லாம் நம்மாளுகதானே (முஸ்லிம்கள்) அறுக்கிறார்கள்" என்று நினைப்பது. தற்பொழுது கிடைக்கும் வெளிநாட்டு உணவுப் பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன. ஆகையால் ஹலாலாக இல்லாமல் இருக்கலாம். இந்தியாவில் பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுதில்லை. ஆகையால் எல்லா உணவுக் கடைகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும் பன்றிக் கறி விற்க மாட்டார்கள் என்று நினைப்பது தவறு. PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA போன்றவை வளைகுடா நாடுகளில் ஹலாலாக இருக்கலாம். ஆனால் அவை இந்தியாவிலும் ஹலாலாக இருக்கும் என்று எண்ணுவது தவறு.
 
LARD
எனப்படும் பன்றியின் கொழுப்பை பிஸ்ஸா சுவையாக இருக்க CHEESE ல் பயன்படுத்துகின்றனர். LARDஐ எல்லா பிஸ்ஸாவுக்கும் பயன்படுத்தமாட்டார்கள் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. நாம் வெஜிடேரியன் பிஸ்ஸாவைத்தானே சாப்பிடுகிறோம் என்று நினைப்பது மிகத் தவறு. பிஸ்ஸாவைச் சுட வைக்க வெஜிடேரியனுக்கும் மற்ற பிஸ்ஸாவிற்க்கும் வெவ்வேறான தட்டுக்களை உபயோகப்படுத்துவதில்லை. PORK மற்றும் LARD மற்ற பிஸ்ஸாவில் கலப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
 
சொந்தங்களுக்கு PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA ஹலால் இல்லை என்று எடுத்துச் சொல்லி மிகப் பெரிய தவறிலிருந்து தடுக்க அல்லாஹ் அருள் புரிவானாக. முஸ்லிம் சமூக அமைப்புகள் கூட மக்களிடம் இதனை எடுத்துச் சொல்லலாம்.   உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு SMS மூலம் "In India, Pizza Hut and Domino’s Pizza are NOT HALAL. Their PIZZA contains PORK
(Flesh of PIG) and LARD (Fat of PIG)"
என்று தெரியப்படுத்துங்கள்.   இன்னும் சந்தேகமா? PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA பற்றி அவர்களின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.    
http://www.pizzahut.co.in/cheesybites_menu.php
 
http://www.pizzahut.co.in/cheesybites_menu.php
 
http://www.pizzahut.co.in/
 
 http://www.pizzahut.co.in/
 
http://www.dominos.co.in/nonvegpizzas.jsp
 
http://www.dominos.co.in/nonvegpizzas.jsp
 
and Click CHEESE AND PEPPERONI menu.
  
 
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

No comments:

Post a Comment