Saturday, August 27, 2011

காவேரிபாக்கம்: 400 ஆண்டுகால பள்ளிவாசல் தமுமுகவால் மீட்பு

 

தமிழகத்தில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் மாவட்டங்களில் முதல் ஐந்தில் இடம் பெறுகிறது வேலூர் மாவட்டம். இப்பகுதி முகலாய மன்னர் ஓளரங்கசீபின் காலத்திலிருந்து ஆற்காடு நவாப் காலம்வரை முஸ்லிம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. மைசூர் மன்னர்கள் ஹைதர் அலி, திப்பு சுல்தான், தென்னக வேங்கை மருதநாயகம் உள்ளிட்டவர்கள் களமாடிய பகுதியும் கூட.
 இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இப்பகுதி முஸ்லிம்களிடம் ஏற்பட்ட அரசியல் சோர்வு மற்றும் சமூக அக்கறையின்மையின் காரணமாக பல நூறு மில்லியின் ரூபாய் மதிப்புள்ள வக்பு சொத்துக்கள் பாதுகாப்பை இழந்து பறிபோனது. பல மதரஸாக்கள் மூடப்பட்டு பின்னர் தானாகவே அழிந்தது. அதே போல் ஏராளமான பள்ளிவாசல்களும் செயல்பாடுகளை இழந்து பின்னர் இடிந்து அழிந்து போனது.
பல பள்ளிவாசல்கள் குடோன்களாகவும், பாழடைந்த கட்டிடங்களாகவும் பயன்பாட்டுக்கு ஒத்துவராத இடிபாடு களாகவும் மாறி ஆடு, மாடுகளின் தொழுவங்களாக இருந்து வருகிறது.
இந்நிலை வேலூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் அதிகளவிலும் திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் குறைந்தளவிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் வேலூர்(கிழக்கு) மாவட்ட தமுமுகவினர் தங்கள் மாவட்டத்தில் எங்கெல்லாம் இத்தகைய இடங்கள் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து வருகிறார்கள்.
அந்த வகையில் ராணிப்பேட்டையில் ஒரு பள்ளிவாசலையும், ஆற்காட்டில் இரண்டு பள்ளிவாசல்களையும்  மீட்டெடுத்து அதை புனரமைத்து, ஜமாத் ஒன்றையும் உருவாக்கி பொதுமக்களின் வழிபாட்டுக்கு அர்ப்பணித்துள்ளனர். அதனைச் சுற்றிலும் உள்ள கபரஸ்தான் இடங்களையும் கைப்பற்றி ஜமாத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். வக்பு ஆவணங்களில் உள்ளபடி பல ஏக்கர் சொத்துக்கள் இப்போது இல்லை. அவையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களால் விற்கப்பட்டுவிட்டதால், எஞ்சிய சில ஏக்கர்களை மட்டுமே தமுமுகவினர் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் காவேரிப்பாக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று நான்காவதாக ஒரு பள்ளிவாசலை தமுமுகவினர் மீட்டுள்ளனர்.
ஆற்காடு நவாப் தன் ஆட்சிக்காலத்தில் 50 முதல் 100 பேர் தொழக்கூடிய அளவில் 365 பள்ளிவாசல்களை கட்டினாராம். அதனைச் சுற்றிலும் 10 முதல் 100 ஏக்கர்வரை நிலங்களையும் தானம் செய்துள்ளார். அங்கு தினமும் அன்னதானத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
இதன் நோக்கம் என்னவெனில், தன் ஆட்சிப்பகுதிக்கு வருபவர்கள் தினம் ஒரு பள்ளிவாசலில் தங்கினாலும் ஒரு வருடம் முழுவதும் சிரமமின்றி சுற்றி வர வேண்டும் என்பதுதான். அப்படி கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தான் இன்று 90 சதவீதம் காணாமல் போயிருக்கிறது அல்லது இடிந்து பாழ்பட்டு கிடக்கிறது.
காவேரிப்பாக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் ராபர்ட் கிளைவின் படைகளுக்கும், முஸ்லிம் படைகளுக்கும் மோதல் நடந்தபோது இவ்வூர் முஸ்லிம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளனர். தொழுவதற்கு ஆள் இல்லை. பிறகு இப்பள்ளி பயனற்று போய் அது தொடர்ந்த நிலையில்தான், அதை மீட்க பிற்கால முஸ்லிம்கள் ஆர்வம் காட்டவில்லை.
தமுமுக அவ்வூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. வேலூர் கோட்டைப் பள்ளிவாசல் மீட்பு நடவடிக்கை தொடங்கிய நேரத்தில், இவ்வூர் பள்ளியையும் மீட்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. இப்பள்ளியின் நிலங்கள் அப்பகுதியின் பல்வேறு சமூகங்களால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் மாடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தது. பள்ளியின் மேலே பெரிய மரங்கள் முளைத்திருந்தது.
இதனைச் சுற்றியுள்ள இந்துக்களிடம் தமுமுகவினர் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தினர். முஸ்லிம்களின் நியாயத்தைப் புரிந்து கொண்ட அம்மக்கள், பள்ளிவாசலை ஒப்படைக்க சம்மதித்தனர். அதனடிப்படையில் கடந்த 15 நாட்களாக தமுமுகவினர் பள்ளியை சுத்தப்படுத்தும் பணியைச் செய்தனர்.
கடந்த 21.08.2011 ஞாயிறு அன்று தமுமுக துணைப்பொதுச் செயலாளர் ஜெ.எஸ்.ரிபாயி தலைமையில் 800க்கும் மேற்பட்டோர் அப்பள்ளிக்கு வருகை தந்தனர். மாலை 5 மணிக்கு அழகிய குரலில் ஒரு சிறுவன் பாங்கொலி எழுப்ப, எல்லோரும் உணர்ச்சிமயமாகினர். அவ்வூர் மக்கள் கண்ணீர் மல்க கட்டிப்பிடித்துக் கொண்டனர்.
5:15 மணிக்கு மமக மாநில அமைப்பு செயலாளர் நாசர் உமரீ தலைமையில் அஸர் தொழுகை நடைபெற்றது. பள்ளியில் அதிகபட்சம் 80பேர் மட்டுமே தொழ முடியும். அங்குள்ள இந்துக்கள் பக்கத்திலிருந்த திறந்தவெளி மனையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தனர். எனவே தொழுகை சிறப்பாக நடைபெற்றது.
அதன் பிறகு மமக துணைப் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, ஆம்பூர் மமக சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா, வேலூர் மாவட்ட பொறுப்பாளரான மாநில துணைச்செயலாளர் பீ.எல்.எம்.யாஸீன், முன்னாள் மாநில துணைச்செயலாளர் அவுலியா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
6:35 மணியளவில் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது, அப்போது கூட்டம் மேலும் திரண்டது. நட்பையும், நன்றியையும் வெளிக்காட்டும் வகையில் அப்பகு தியில் குடியிருக்கும் அனைத்து இந்துக்களுக்கும் நோன்பு கஞ்சி, சமோசா, குஸ்கா, வாழைப்பழம் ஆகியவை வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் சுற்றிலும் நின்று அனைத்து நிகழ்வுகளையும் அமைதியாகப் பார்த்துக் கொண் டிருந்தனர்.
இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹமது, மாணவரணி நிர்வாகிகள் ஜெயினுலாபுதீன், அமீன், மாவட்ட தமுமுக செயலாளர் குஸ்ரு கவுஸ் மைதீன், மமக மாவட்ட செயலாளர் கே.எம்.சதக்கத்துல்லாஹ், மாவட்ட பொருளாளர் ஜாகிர் உசேன், சத்தார் உசேனி, மஸ்தான், செய்யது கிதர் அஹமது உள்பட அனைத்து நிர்வாகிகளும் மாவட்டம் முழு வதிலிருந்தும் தமுமுகவினர் பங்கேற்றனர்.
நல்ல அணுகுமுறைகளும், அர்ப்பணிப்புடன் கூடிய திட்டமிட்ட உழைப்பும் இருந்தால் எந்த சவாலான காரியத்தையும் செயல்படுத்த முடியும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு உதாரணமாகும். இதுபோல் பாழடைந்து கிடக்கும் மேலும் பல பள்ளிவாசல்களை மீட்போம் என்று வேலூர் தமுமுக சூளுரைத்துள்ளது.எல்லாப் புகழும் இறைவனுக்கே 

அன்புடன்,
தமுமுக
துபை மண்டலம்.

வரலாற்றில் முஸ்லிம்களின் வணிகம்


உலகம் தோன்றிய காலம் முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை ஏற்படாத மாற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளாக ஏற்பட்டு வருகின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியும் தொடர்ந்து அவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளும் அதன் முடிவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மூலப் பொருள் உற்பத்தியும் சரக்குப் போக்குவரத்தும் விரைவுபடுத்தப்பட்டதின் விளைவாக உலகளாவிய வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் இவை இன்னும் வீரியம் பெற இருக்கிறது. இத்தகைய உலகளாவிய நிகழ்வுகளுக்கேற்ப இந்தியாவிலும் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. பலவிதமான குளறுபடிகள் இருந்தாலும், நாட்டில் தொழில் மற்றும் வணிக ரீதியான வாய்ப்புகள் பலதுறைகளிலும் பெருகி வருகின்றன என்பது உண்மை.
பெருகி வரும் தொழில், வணிக வாய்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் வாழும் முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய பொருளாதார நிலை, வரலாற்றில் அவர்களின் வியாபார வடிவங்கள், இனி உலகளாவிய வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியன குறித்து ஆழமாக, நுணுக்கமாக வரலாற்றின் அடிப்படையில் அலச வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இது நமது எதிர்கால தலைமுறையின் வாழ்வை வளப்படுத்திட உதவி செய்யும்.
அதே போல மற்றொரு வலிமையான மூலாதாரத் துறையான கல்வித்துறையை ஆளுமை செய்திடும் திறன் பெற்ற கல்வியாளர்களாக நமது பெண்களை உருவாக்கிட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
இன்று நம் நாட்டின் கல்வித்துறை உலகளாவிய அளவில் மிகப்பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிகப்படியான அந்நிய நாட்டு கல்வி நிறுவனங்கள் நம்நாட்டில் கால்பதித்து வருகின்றன.
இந்தச் சூழலில் நமது பெண் சமூகத்தை கல்வித்துறையில் கோலோச்சும் அளவிற்கு கைதேர்ந்த கல்வியாளர்களாக மாற்ற வேண்டும். ஆரம்பப் பள்ளி முதல் உயர் தொழில் நுட்ப நிறுவனம் வரை கல்வியாளர்களாவும் கல்வி நிறுவனங்களை வழி நடத்தக்கூடியவர்களாகவும் அவர்களை உருவாக்க வேண்டும். நமது பெண்களை அவ்வகையில் உருவாக்குவது குறித்து விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம். இந்த இதழில் ஆண்களுக்கான தொழில் வாய்ப்புகள் மற்றும் அவை தொடர்பான விவரங்களை வரலாற்றுப் பின்புலத்திலிருந்து அலசுவோம்!
தொழில்துறை :
உலகில் ஏற்படும் எந்த முன்னேற்றத்திலும் முஸ்லிம் சமுதாயம் ஒருநாளும் பின்தங்கிடக் கூடாது என்பதுதான் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இஸ்லாம் வலியுறுத்தும் தலையாய கருத்து இதனடிப்படையில் உலக மாற்றங்களை உள்வாங்கி எல்லா துறைகளிலும் மிகைத்து நிற்கும் வண்ணம் துறை வாரியாக முஸ்லிம் சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் அறிவு ஜீவிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இருக்கிறது.
வரலாற்றில் முஸ்லிம்களின் வணிகம்
தமிழக முஸ்லிம்கள் பலரின் குடும்பப் பெயர்களையும் பட்டப் பெயர்களையும் வைத்தே வரலாற்றில் அவர்களது குடும்பம் எந்த தொழிலைச் சார்ந்து இருந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லி விடலாம்.
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நில உடமை விவசாயிகளாகவும் ஒருசிலர் நெசவு சார்ந்த உற்பத்தி மற்றும் தொழிலாளர்களாகவும் இன்னும் சிலர் மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் விற்பனை மற்றும் போக்குவரத்து (ஜிக்ஷீணீஸீsஜீஷீக்ஷீt) தொழில் செய்பவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.
இதில் மிகப் பெரும்பான்மையாக தமிழக கடலோரம் வாழ்ந்த முஸ்லிம்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் சர்வதேச தொழில் செய்பவர்களாக வாழ்ந்துள்ளனர்.
நாட்டின் உட்புறத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்முதல் செய்து உலகின் பல பகுதிகளுக்கும் பாய்மரப் படகுகள் மூலம் பரம்பரை பரம்பரையாக ஏற்றுமதி தொழில் செய்து வந்துள்ளனர். இவை அல்லாமல் விவசாயம், தோல் பதனிடும் தொழில் என்று உழைத்து உண்ணும் உன்னதமான சமூகமாக வரலாறு முழுவதும் வாழ்ந்துள்ளனர்.
பழவேற்காடு, மைலாப்பூர், புதுச்சேரி, கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார், காரைக்கால், நாகை, அதிராம் பட்டிணம், மல்லிப் பட்டிணம், தொண்டி, வேதாளை, கீழக்கரை, உத்திர கோச மங்கை, பெரியபட்டிணம், காயல்பட்டிணம், குளச்சல், இவை அனைத்தும் சிறிய, பெரிய துறைமுகங்களாக உலகின் பல மார்க்கத்திற்கும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் துறைமுகப் பட்டிணங்களாக உலகின் பலநாட்டு வணிகர்களும் வந்துபோகும் சர்வதேச நகரங்களாகவும் இருந்துள்ளன.
உலகைச் சுற்றிய கடற்பயணி இப்னு பதூதா அவர்கள் இதுகுறித்து தனது பயணக் குறிப்பில் விவரித்துள்ளார்.
18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகள் முழுவதிற்கும் தங்களது வணிகப் படகுகளை அனுப்பும் சர்வதேச வணிகர்களாக முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து வந்தது. அதனால்தான் 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் 80 விழுக்காட்டினர் கடலோரப் பகுதிகளிலேயே வாழ்ந்துள்ளனர். மீதமுள்ள மக்கள் கடலோரப் பகுதிகளுக்கு சரக்குகள் அனுப்புவதற்கு தமிழகத்தின் உட்புறத்தில் வாழ்ந்தனர்.
16 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதையும் கொள்ளையடிக்கக் கிளம்பிய ஐரோப்பியர்களால்தான் முஸ்லிம்களின் கடல் வாணிபம் சிதைவுற்றது. ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சியை வீழ்த்திய இரத்தக் கையோடு இந்தியாவை நோக்கி வெறிபிடித்து வந்த போர்ச்சுகீசியர்களின் அட்டூழியமும் அவர்களுக்குப் பின்னால் வந்த டச்சு, பிரான்சு மற்றும் பிரிட்டிஷாரின் வஞ்சம் நிறைந்த வக்கிர புத்தியும் சேர்ந்து முஸ்லிம்களின் வணிகத்தைப் பாழாக்கி வாழ்வதாரங்களைப் படுகுழியில் தள்ளியது.
சிலுவை யுத்தக்காரர்களின் வாரிசுகளான இந்த ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை அழிப்பதையே முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள். இன்றுவரை அது தொடர்கிறது என்பதே அதற்கு சான்று.
இந்த வரலாற்றுப் பின்னணியை தமிழக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க வேண்டும்.
இலங்கை உள்ளிட்ட  இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளுக்கும் தமிழக கடலோரப் பட்டிணங்களுக்கும் இடையே செழித்து வளர்ந்திருந்த தொழில், வியாபார, கலாச்சார, திருமண உறவுகளினால் மேம்பட்டிருந்த தமிழக முஸ்லிம்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் 19 ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த இந்த  ஐரோப்பிய படுபாவிகள் அழித்து நாசம் செய்தனர்.
இந்த நயவஞ்சக நாசகார கூட்டத்தின் சதித் திட்டங்களில் சிக்கி முஸ்லிம்களின் வியாபாரங்கள் நசிந்து போயின. இதனால் வணிகத்தை இழந்து பொருளாதாரத்தை இழந்து நின்ற முஸ்லிம் சமுதாயம் வேறுவழியின்றி 1900க்குப் பிறகு தொழிலாளர்களாகவும் தோட்டங்களில் கூலி வேலை செய்திடவும் அயல் நாடுகளுக்கு பிழைப்பு தேடி ஓடினர்.
1950க்குப் பிறகு அரபு மண்ணில் பீறிட்டுக் கிளம்பிய எண்ணெய் செல்வமும் அதனால் உருவான வேலை வாய்ப்புகளும் தமிழக முஸ்லிம்களை “வா, வா” என்று அழைத்தது.
1965லிருந்து அரபு நாடுகளை நோக்கி கூட்டம் கூட்டமாக மாதச் சம்பளத்திற்கு பணியாற்றும் அடிமைகளாக ஓடத் துவங்கிய ஓட்டம் தற்போது உச்சநிலையை அடைந்து, வேறு வழியே கிடையாது, அரபு நாடுகள் சென்றால் தான் வாழ்வு என்ற சிந்தனையில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது பெரும்பான்மையான முஸ்லிம் சமுதாயம்.
19 ஆம் நூற்றாண்டு வரை வரலாறு முழுவதும் வணிகர்களாக வாழ்வாங்கு வாழ்ந்தனர். அந்த வணிகத்தில் நேர்மையும் நீதியும் செலுத்தினர்.இதனால் அவரவர் திறனுக்கேற்ப இறைவனுடைய அருளால் பலர் தொழில் அதிபர்களாக, மிகப் பெரும் செல்வந்தர்களாக மாறினர். மார்க்கப் பிடிப்பும் ஈகை குணமும் அவர்களை வாரி வாரி வழங்கும் வள்ளல்களாக மாற்றியது. மார்க்கத்திற்காக, மக்களுக்காக, அறப்பணிகள் தடையின்றி தொடர்ந்திட அள்ளி அள்ளிக் கொடுத்தனர். பரம்பரை சொத்துக்களை எல்லாம் வஃக்பு செய்து இறைவனின் அருளைப் பெற்றனர்.
வணிகர்கள் என்ற அடையாளம் மாறி மாத ஊதியத்திற்கு அரபு நாடுகளுக்குச் செல்லத் துவங்கியவுடன் வருமானம் சுருங்கியது. இப்போது அடிப்படைத் தேவைக்கே அதிக நேரம் உழைக்க வேண்டிய நிர்பந்தத்தில் முஸ்லிம் சமுதாயம் சிக்கித் தவிக்கிறது. இந்த மாத ஊதிய மனப்பான்மை முஸ்லிம்களின் வருமானத்தையும் ஈகை குணத்தையும் ஒரு வட்டத்திற்குள் சுருக்கி விட்டது.
இன்றைக்கு இந்தியாவில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் சில சமுதாயத்தினரிடம் காணப்படும் செல்வச் செழிப்பு வியாபாரத்தை விட்டு மாத ஊதியத்திற்கு மாறிய முஸ்லிம்களிடம் இல்லை.
இதனால் சமுதாயத்தில் தடையின்றி நடைபெற வேண்டிய சமூக நலப் பணிகள், வழிபாட்டுத் தளங்களின் விரிவாக்கங்கள் மற்றும் கல்விப் பணிகள் அனைத்தும் தேக்க நிலையிலேயே உள்ளன. இதனை இன்றைய இளைஞர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு தொலைநோக்கு செயல் திட்டத்தின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை நோக்கி முஸ்லிம் சமுதாயத்தை திருப்ப வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. தொழில், வணிக ரீதியாக நாம் இழந்த இடத்தை மீண்டும் எட்டிப் பிடிக்க வேண்டும். நாம் நமது பாரம்பரியமான பொருளீட்டும் வழிமுறையை எந்தக் காரணத்திற்காகவும் விடக் கூடாது. மாத ஊதியத்திற்கு வேலைசெய்வது நமது பாரம்பரியத்தில் நடைபெறாத ஒன்று. நமக்கு உகந்த பாதையும் அல்ல. இதில் மாற்றம் ஏற்படுவதற்கு மீண்டும் தொழில் துறையை கைப்பற்றுவதற்கு அடிப்படையாக முதலில் நமது குழந்தைகளின் உயர்கல்வியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
உயர்கல்வியில் மாற்றம் தேவை :
கடந்த 20 ஆண்டுகளாக நமது இளைய தலைமுறையின் உயர்கல்வியில் நமது பாரம்பர்யமான பொருளீட்டும் முறையான தொழில், வியாபாரம் குறித்த படிப்புகளுக்கு முதன்மை தந்து அவற்றில் இன்றைய நவீன வியாபார யுக்திகளை கற்றுத் தேறியவர்களாக உருவாக்காமல் பொறியியல் படித்து விட்டு ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாதச் சம்பளம் பெறுவதற்கு மட்டுமே தகுதியுடையவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் தொடர்ச்சியாக இன்றும் பாரம்பரியமாக தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகள் கூட இப்படித் தான் அடிமைகளாக உருவாக்கப்படுகின்றனர். நமது முந்தைய தலைமுறையினர் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தனர். ஏராளமான சமூகப் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் இப்போதைய தலைமுறையினர் அந்த பாரம்பரிய பாதையை விட்டு அகன்று குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இதற்கு பெற்றோரின் அலட்சியமும் நமது பாரம்பரிய வரலாறு குறித்த புரிதல் இன்மையுமே காரணம். தாங்கள் முதலாளிகள் என்ற அந்தஸ்தோடு வீற்றிருப்பது போல தங்களது குழந்தைகளையும் முதலாளிகளாக உருவாக்கிட இன்றைய முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.
சில்லரை வணிகமாக இருந்தாலும் மொத்த வணிகமாக இருந்தாலும் அவைகளை திறனோடு நிர்வகித்து தேர்ச்சி பெறும் ஆற்றல் முஸ்லிம் சமுதாயத்தின் இயல்பிலேயே ஊறிய குணங்கள். நாம் நம்முடைய வேர்களை விட்டு விடக் கூடாது. வியாபாரம் என்பது இறைவனுடைய அருள் நிறைந்த துறை. நேர்மையான வியாபாரம் என்பது இறைவனுக்குச் செய்கின்ற வழிபாடு. அதில் இறைவன் தன்னுடைய பரக்கத்தை எல்லையின்றி வாரி வழங்குகின்றான்.
இன்று உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்டது. பொருள் வாங்கிப் பொருள் விற்பதற்கான சந்தைக்களம் உலகளவில் பறந்து விரிந்த சந்தைக் களமாக மாறி விட்டது. எந்நாட்டவரும் உலகில் எந்த நாட்டிற்கும் பொருட்களை விற்கலாம் வாங்கலாம் தடையேதும் கிடையாது. அரசின் சட்ட திட்டங்களும் துறைசார்ந்த வழிகாட்டும் நெறிமுறைகளும் சர்வதேச வர்த்தகம் செய்ய ஆர்வமுடையவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உதவிகளையும் செய்து வருகின்றன.
வியாபாரத்தில் முஸ்லிம்களின் இன்றைய நிலை :
இன்றைய முஸ்லிம்கள் அதிகம் ஈடுபட்டுள்ள தொழில்களான மளிகை, ஜவுளி, ரெடிமேட், தோல், ஃபேன்ஸி ஸ்டோர், காலனி கடைகள் போன்ற சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை நிதிப் பற்றாக்குறைதான். இதனால் சரக்கு கொள்முதல் செய்வதிலும் விற்பனை செய்வதிலும் இலாபம் குறைவதோடு பலவிதமான சங்கடங்களும் ஏற்படுகிறன்றன. ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி அவர்களால் சிந்திக்க இயலாத நிலை உருவாகிறது. இந்த முதலீடு பற்றாக்குறை நெருக்கடியால் பெட்டிக்கடை மனப்பான்மை நம் மனதில் குத்தகை எடுத்து குடியிருக்கிறது.
வியாபாரத்தில் நிதிப் பற்றாக்குறையைப் போக்க வேறு வழியில்லாமல் சிலர் வங்கிகளின் உதவியை நாடுகின்றனர். வங்கிகளில் தங்களது பரம்பரை வீடு, சொத்துக்கள், நகைகள் முதலானவற்றை அடகு வைத்துவிட்டு தற்காலிக கடன் என்ற ளிஞி வாங்குகின்றனர்.
ஒரு வளரும் அல்லது வளர்ந்த தொழிலை அழிப்பதற்கு வேறு ஒன்றும் செய்யத் தேவையில்லை. வங்கிகளில் (வட்டிக் கடைகளில்) OD வாங்கினாலே போதும். வெகு விரைவில் தொழில் அழிந்துவிடும். ளிஞி என்ற தற்காலிக கடனுக்கு 18 விழுக்காடு வட்டி போட்டு தீட்டுகின்றனர். இரவு பகல் பாராமல் இரத்தம் சிந்தி உழைத்து உண்டாக்கிய இலாபம் எல்லாவற்றையும் வங்கிகள் வாயில் போட்டுக் கொண்டால் தொழில் எப்படி செழிக்கும்? வங்கியில் ஓ.டி. வாங்கிய பிறகு அதை அடைத்து முடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
வட்டி புழக்கத்தில் உள்ள இடத்தில் வறுமையும், வெறுமையும் நிறைந்திருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதை நினைவு கூற வேண்டும்.
இதற்கு இஸ்லாமிய அடிப்படையில் நாம் தீர்வு கண்டாக வேண்டும்.
வரலாற்றில் ஐரோப்பியர்களிடம் முஸ்லிம்களின் வியாபார யுக்திகள் தோற்றுப் போனதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அந்த நேரத்தில் வந்த ஐரோப்பியர்கள் முஸ்லிம்களின் இந்த குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் வியாபார முறைகளையும் ஒற்றுமை இல்லாத் தன்மையையும் பார்த்துவிட்டு குறிப்பாக பிரிட்டிஷார் லண்டனில் வைத்து ஒரு மிகப்பெரிய முதலீட்டு வணிக நிறுவனத்தை உருவாக்கினர். அதுதான் ணிகிஷிஜி மிழிஞிமிகி சிளிவிறிகிழிசீ உலகின் முதல் கார்ப்பரேட் நிறுவனம்.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பார்த்த தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிபம் தொடர்பாக அவர்களின் வழிமுறைகள் மற்றும் அன்றைய முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருந்தது என்றால் ஒருவரிடம் 1 இலட்ச ரூபாய் முதலீடு இருந்தது என்றால் அந்த 1 இலட்ச ரூபாயை வைத்து வியாபாரம் செய்து சம்பாதித்து வந்தார். தன்னிடம் உள்ள முதலீடு, தான் செய்யும் வியாபாரம், அதன்மூலம் பெறுகின்ற இலாபம் வேறு யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்த குறுகிய சுயநல மனநிலைதான் பெருவாரியான முஸ்லிம் வணிகர்களிடம் இருந்தது. வியாபார ரீதியான வாய்ப்புகளையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ளும் பரந்த மனப்பான்மை அறவே இல்லாமல் போனது.
(இன்றும் இதுதான் மிகப்பெரிய குறையாக உள்ளது).சிறுமுதலீட்டாளர்கள் ஒன்று கூடி சிறிய சிறிய தொகைகளை ஒரே தொகையாக மாற்றி பெரும் தொகையுடன் கூடிய முதலீட்டு நிறுவனத்தை உருவாக்கினர். அந்த பெரும் தொகையை இந்தியாவிற்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு யாரெல்லாம் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கினார்களோ அவர்களிடம் அந்த பெரும் தொகையை கொடுத்து பொருட்களை கொள்முதல் செய்தனர். இதனால் முஸ்லிம்களுக்கு சரக்கு கிடைக்காமல் போய்விட்டது. பிரிட்டிஷாரின் பிரம்மாண்டமான பணத்திற்கு முன்னால் முஸ்லிம்களின் தனிநபர் சிறிய தொகை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகிப் போனது.
அந்த நேரத்தில் கூட பிரிட்டிஷாரைப் போல தாங்களும் ஒத்த கருத்துடைய வணிகர்கள் ஒன்று கூடி தனித்தனி முதலீடுகளை ஒரே முதலீடாக மாற்றி பெரிய அளவிற்கு கொள்முதல் செய்ய வேண்டும். மாறி வருகின்ற வணிகமுறைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வரவில்லை. உலக வியாபார முறைகளின் மாற்றம் குறித்து விளங்கிக் கொள்ளாத தமிழக, இலங்கை முஸ்லிம்கள் குறுகிய காலத்திலேயே வியாபாரம் செய்வதற்கு சரக்கு கிடைக்காமல் சிக்கிக் கொண்டனர்.
17 ஆம் நூற்றாண்டில் EAST INDIA COMPANY இன் உருவாக்கத்தில் துவங்கிய கார்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் இன்று உலகத்தை ஆட்டிப் படைக்கிறது.
இன்றைய முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு அதிகப்படியான நிதியைத் திரட்ட வேண்டும். தற்போதுள்ள வியாபார நிறுவனங்களில் நிதிப் பற்றாக்குறையைக் களைய வேண்டும் என்றால் வட்டிக் கடைகளான வங்கிகளை நாடுவதை நிறுத்தி விட்டு கூட்டு முதலீடு என்கிற இஸ்லாம் வலியுறுத்தும் ஹலாலான வழிமுறைக்கு மாற வேண்டும்.
ஒரே அளவுள்ள ஓராயிரம் முதலீடுகளை ஒருங்கிணைத்து தொழில் தொடங்க வேண்டும். அதாவது இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள் போல உருவாக்கப்பட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்குகள் விற்பதிலும் வங்கிகளிடம் கடன் பெற்றும் முதலீடுகளை திரட்டுகின்றன. இதற்காக இந்திய அரசின் கார்ப்பரேட் சட்டமும் கம்பெனி சட்டமும் அவர்களை நெறிப்படுத்துகிறது. இதில் பல மறைமுகமான திட்டங்கள் உள்ளன. முஸ்லிம்கள் இதே வழிமுறையை கையாளுவதற்கு மார்க்கம் தடை செய்கிறது. பிறகு என்ன செய்வது?

வர்த்தகக் கூட்டமைப்பு :
இன்றைய உலகிலும் இனிவரும் காலத்திலும் வியாபாரம், தொழில் ஆகியவற்றில் வெற்றி பெற வேண்டும் என்றால் கூட்டு முதலீடு என்கிற ஆயுதத்தை கையில் எடுத்தால் தான் முடியும். அடிப்படையில் தனித்தனி சிறுமுதலீடு என்ற மனப்பான்மையை விட்டு முஸ்லிம் சமூகம் வெளியே வரவேண்டும். சேர்ந்து முதலீடு செய்வது சேர்ந்து சம்பாதிப்பது இலாபத்தையும் நஷ்டத்தையும் சேர்ந்து பகிர்ந்து கொள்வது என்ற கொள்கை தான் இனி வெற்றி பெறும்.
இதற்கு மாநில அளவில் ஒரு தொழில் கூட்டமைப்பு மற்றும் வழிகாட்டி நிறுவனம் CHAMBER OF COMMERCE உண்டாக்கப்பட வேண்டும். அந்நிறுவனத்தின் மூலம் திறனான வல்லுனர்களை பணியமர்த்தி தொழில் மற்றும் முதலீட்டிற்கு வாய்ப்புள்ள துறைகள் எதுவென்று ஆராய வேண்டும். முதலீடு செய்வதற்கான திட்ட அறிக்கை, முதலீட்டாளர்கள், வரி விதிப்புகள், சந்தை வாய்ப்புகள் போன்ற அனைத்தையும் அலசி ஆராய்ந்து முதலீடு செய்வதற்கு இந்த கூட்டமைப்பு நிறுவனம் வழிகாட்ட வேண்டும்.
மேலும் அப்படிப்பட்ட நிறுவனம் செயல்படுவதற்கு ISLAMIC COMPANY LAW இஸ்லாமிய நிறுவனச் சட்டம் குறித்து தெளிவுடைய அறிஞர்களின் வழிகாட்டுதல் தேவை.
சமுதாயப் பற்றுடைய பெரும் செல்வந்தர்கள் இப்படிப்பட்ட நிறுவனத்தை உருவாக்கிட முன்வந்தால் மாநில அளவில் அனைவரும் ஒன்றிணைய வாய்ப்புள்ளது! இல்லையென்றால் ஒவ்வொரு பகுதிகளிலும் கூட இந்த தொழில் கூட்டமைப்பு மற்றும் வழிகாட்டி மையத்தை உருவாக்கலாம்.

வாய்ப்புகளைக் கண்டறிதல்:
தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அனுதினமும் உலக வர்த்தகம், அதன் போக்கு, இந்திய வர்த்தக வளர்ச்சி, விவசாயம், உணவு உற்பத்தி, தொழில்துறை வளர்ச்சி, பிற நாடுகளின் தேவைகள், அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், பட்ஜெட் விவரங்கள், வரி விதிப்புகள் போன்ற அனைத்தையும் அங்குலம் அங்குலமாக கண்காணிக்க வேண்டும்.
அடுத்த 20 ஆண்டுகளில் வியாபார ரீதியாக வாய்ப்புகள் எந்தெந்த துறைகளில் பெருக உள்ளதோ அவற்றில் நாமும் பங்கு பெறுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அத்திட்டத்தில் முதன்மையானது அந்த துறைகளில் அறிவும் நுணுக்கமும் பெறுவதற்கான உயர்கல்வியை நமது குழந்தைகளுக்கு தொடர்ந்து புகட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
இடைவெளி இல்லாத, தொடர்ச்சியாக நுண்ணறிவு பெற்ற வல்லுனர்களை, துறை வாரியாக ஒவ்வொரு காலத்திற்கும் உருவாக்கிடும் கல்வி அமைப்பு எந்தச் சமூகத்திடமோ நாட்டிடமோ இருக்கிறதோ அந்தச் சமூகமும் நாடும் உலகிற்கு வழிகாட்டிடும் முதன்மை இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்றைக்கு அமெரிக்கா, இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளிடம் உள்ளது போன்ற அறிவு ஜீவிகள் பட்டாளம் துறை வாரியாக தொய்வில்லாமல் நமது தமிழக முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டும்.
இதில் தொய்வு ஏற்பட்டால், அலட்சியம் காட்டினால் உலக முன்னேற்றத்திற்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாமல் பின்தங்கிப் போய்விடுவோம். இன்று அதுதான் நடந்துள்ளது. இனி அவ்வாறு நடைபெறுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.
நன்றி: ‘சமூக நீதி முரசு’ மாத இதழ்

தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி !

தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் இலவச தொழில் பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் வெளியிட் செய்திக் குறிப்பு:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பயிற்சி நிலையங்கள் மூலம் இலவசமாக அளிக்கப்பட உள்ளன. இதற்கான பயிற்சி கட்டனம் பயிற்சி நிலையத்துக்கு அரசால் அளிக்கப்படும்.
எலக்ட்ரிக்கல் வயரிங், ரீவைண்டிங், பிட்டர், வெல்டர் மற்றும் கணினி பயிற்சியும், புடவைகளில் கல் பதித்தல், தையல் பயிற்சி, நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் ஏர்கண்டிஷனிங் - ரெப்ரிஜெரேஷன் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர், குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்று, குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பயிற்சிகளை அளிக்க விரும்பும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் தங்களது பயிற்சி கட்டண விவரத்துடன் மேற்கண்ட அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

விவசாயக் கடனுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் - அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ

அ.அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நடத்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலே, புதிதாக உருவான ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பளித்த என் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் வெற்றிக்கு அயராது உழைத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியினருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் என் வெற்றிக்கு அயராது உழைத்த தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் முதலிய கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2011-12 ஆம் ஆண்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளதை, மனிதநேய மக்கள் கட்சி மனதார வரவேற்கின்றது.
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, கடந்த திமுக ஆட்சியிலே, ரமலான் மாதத்திலே பள்ளிவாசலில் கஞ்சி காய்ச்சுவதற்கு தேவையான அரிசி, ரமலான் நோன்பு ஆரம்பித்த 10 நாட்களுக்குப் பிறகுகூடப் கிடைத்துக் கொண்டிருந்தது. நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய நல்லாட்சியிலே நோன்பு ஆரம்பிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே அரிசி வழங்கவேண்டுமென்ற ஆணையைப் பிறப்பித்திருப்பதற்கு (மேசையைத் தட்டும் ஒலி) மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்று, நேற்றையதினம் நடைபெற்ற தொழில் துறை மானியக் கோரிக்கையிலே, ஆம்பூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் உள்ள இயந்திரங்களைப் பராமரிப்பதற்காக 48 இலட்சம் வழங்கியதற்கு என் சார்பாகவும், தொகுதி மக்களின் சார்பாகவும், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவிலே எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்திலே கடந்த 5 ஆண்டுகளாக ஒரு கோமா ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலே அந்த கோமா ஆட்சியை மக்கள் தூக்கியெறிந்துவிட்டு, இன்றைக்கு ஒரு நல்லாட்சியைத் தமிழகத்தில் தந்திருக்கின்றார்கள், சிறப்பான ஆட்சியை நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய நல்ல ஆட்சியிலே இந்தக் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மிகச் சிறப்பாகச் செயலபடுகிறது என்பதை நான் வரவேற்கிறேன். அவற்றில் விவசாயிகளுக்குப் பயிர்க் கடன், தொடங்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும், முதலீட்டுக் கடன் 300 கோடி ரூபாய் அளவிற்கும் வழங்கத் திட்டமிட்டுள்ளதை மனிதநேய மக்கள் சார்பாக வரவேற்கிறேன். விவசாயிகளுக்குக் கடன் அட்டை வழங்கும் திட்டம் 2011-12 ஆம் ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தானிய ஈட்டுக் கடனாக 100 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளதை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரவேற்கிறேன். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் பூ வணிகம், காய்கறிகள், பழங்கள், பெட்டிக் கடை நடத்துதல் போன்ற தொழில்களைச் செய்ய சிறு வணிகர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க இத்திட்டத்தில் 125  கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை மனமார வரவேற்கிறேன்.

சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் திட்டம், பணிபுரியும் மகளிர் கடன் திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கது. கொள்முதலை அதிகரிக்கும் நோக்கத்துடன் காவிரிப் பாசனப் பகுதியல்லாத இடங்களில் உள்ள விவசாயிகளின் நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்க உதவும் நோக்கத்துடன் காஞ்சிபுரம், வேலூர், மதுரை, இராமநாதபுரம்,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளதை வரவேற்கிறேன். விவசாயிகளுக்குத் தரமான விதை இன்றியமையாததைப்போல், இடுபொருளும் முக்கியமானதாகும். நெல்லை தவிர, பருப்புவகைகள் எண்ணெய் வித்துக்கள், தானிய வகைகள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றின் தரமான விதைகள் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் விற்க 41 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரவேற்கிறேன்.

அதேசமயம், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள  (Joint registrar, Deputy registrar Co-operative register) போன்ற பதவிகளை நிரப்பி, கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாகச் செயல்பட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போது கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிலவள வங்கிகள் நகை; கடன்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவ்வங்கிகளில் விவசாயத்திற்குக் கடன் வழங்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் இருக்கும் விவசாயிகள், கிராமப்புறங்களில் இருக்கும் இவ்வங்கிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த முன்வர வேண்டுமென்றால், அவர்களுக்கு விவசாயக் கடன் வழங்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக் கடன்கள் பெறுவதற்குப் பதிலாக, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு விவசாயிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும், நிலவள வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் இலாபத்தில் இயங்க, அதிக அளவில் விவசாயக் கடன்கள் கொடுக்கப்பட வேண்டும்.

பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிலவள வங்கிகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் இல்லை என தெரிவித்துக்கொள்கிறேன்.

போலி குடும்ப அட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டும்-ஆம்பூர் MLA அஸ்லம் பாஷா வலியுறுத்தல்


அ.அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முக்கிய குறிக்கோள் அனைவருக்கும் அனைத்துப் பொருட்களும் கிடைப்பதே, ஆனால் அரிசி, சர்க்கரை தவிர மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு வகைகள் அனைத்தும் குடும்ப அட்டைகளுக்குச் சரியாகக் கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

புதிய குடும்ப அட்டைகள் 2005ல் வழங்கப்பட்டன. ஆனால் 2009ல் ஆண்டு திமுக ஆட்சியிலே திடீரென்று ஆய்வு செய்கின்றோம் என்ற பெயரிலே உண்மையான குடும்ப அட்டைகளெல்லாம் இரத்து செய்யப்பட்டு போலியான குடும்ப அட்டைகளையெல்லாம் உண்மையான குடும்ப அட்டைகளாக இன்றைக்கு பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு திமுக கவுன்சிலர் வீட்டிலும் 100 கார்டுகள், 150 கார்டுகள் இன்றைக்கும் கூட இருக்கின்றன. ஆகவே தமிழக அரசு இந்தப் போலியான குடும்பக் கார்டுகளை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டுமென்று நான் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். போலி குடும்ப அட்டைகளைப்பற்றி தகவல் கொடுக்கின்றவர்களுக்கு தற்போது ரூ.500 சன்மானமாக வழங்கப்படுகிறது. அதை ரூ.1000 ஆக உயர்த்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கிராமப்புறங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளை ஒருவரே கவனிக்கும் நிலை உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். ஒரு கடைக்கு ஒருவரே பொறுப்பு என்ற நிலையை கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ரேஷன் பொருட்களின் எடை அளவைச் சரியாகப் பராமரிக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


மாண்புமிகு முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ரேஷன் கார்டுகள் பற்றி உணவுத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது நடப்பில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிகிறது. தற்போது குடும்ப அட்டைகள் வழங்கும் முறையில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயரைப் பதிவு செய்தால்இ அதைக் கண்டுபிடிக்க வழிவகை இல்லை.

இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் குடும்ப அட்டைகளில் ஒரே நபர் பெயர் இடம் பெறும் நிலையும் போலி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் நிலையும் உள்ளது. மேலும் நியாய விலைக் கடைகளுக்கு பொருள் பெற வராத குடும்ப அட்டைகளுக்கும் கடைப் பணியாளர்கள் போலி பட்டியலிடும் நிலை உள்ளது.

இப்பிரச்னையைக் களைய தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக உடற்கூறு பதிவு முறையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பு மக்களின் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண் பாவையை பதிவு செய்து பிரத்யேக அடையாள எண் வழங்கும் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் அந்த தகவல் தொகுப்பைப் பயன்படுத்தி மின்னணு குடும்ப அட்டை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தொகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால் ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளில் பதிவு செய்யும் நிலை மற்றும் போலி குடும்ப அட்டைகள் வழங்குதல் போன்றவை களையப்படும்.

மேலும் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பட்டியலிட முடியும். போலி பட்டியலிடுவது களையப்படும். எனவே தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாகஇ மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வரும் 2012-13ம் ஆண்டில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
http://www.tmmk.info/


அன்னா ஹசாரே போராட்டம்: சங்பரிவார் மற்றும் அமெரிக்க ஆதரவு அம்பலம்

அன்னா ஹசாரே யின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு அன்னிய நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்பரிவார பயங்கரவாத இயக் கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு தாராளமாக செலவழிப்பதாக ஆதாரப்பூர்வ தகவல் கள் தெரிவிக்கின்றன.


ஹசாரே குழுவினரின் பிரதிநிதியாக செயல்படும் அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பான ‘கபீர்’ மூலமாக போராட்டத்திற்கு அந்நிய நிதி வருகிறது. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற அமைப்பு கேஜ்ரவாலின் ‘கபீர்’ அமைப்பிற்கு இவ்வாண்டு இரண்டு லட்சம் டாலர் அளித்துள்ளது. இப்பணத்தின் பெரும்பகுதியும் ஹசாரேவின் போராட்டத்தை பிரபலப்படுத்த செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஹசாரேவின் போராட்டத்திற்கு பணத்தை இறைக்கின்றன. முன்னாள் இந்தியன் ரெவினியூ சர்வீஸ் பணியாளரான அரவிந்த் கேஜ்ரவால் கார்பரேட்டுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர். ஹசாரேவின் போராட்டத்திற்கு வலைதள உலகிலும் செயற்கையான எழுச்சி பிரச்சாரம் நடைபெறுகிறது. எஸ்.எம்.எஸ், இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியன வழியாக நடத்தப்படும் பிரச்சாரத்திற்கு அரவிந்த் கேஜ்ரவாலுடன் செயல்படும் அஸ்வதி முரளீதரனும், மனீஷ் ஸிஸோடி போன்றோரும் முதுகெலும்பாக செயல்பட்டுள்ளனர்.

தகவல் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ’கபீர்’ என்ற அமைப்பின் எக்ஸ்க்யூட்டிவ் உறுப்பினர்தாம் கேஜ்ரவால். தற்போது ஹசாரேவின் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை இவ்வமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. காந்தியவாதியாக வேடமிடும் அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு அமைப்பாளர்களாக காந்தியைக் கொலை செய்த தேசத்துரோக ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் துணை அமைப்புகளான வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், யுவமோர்ச்சா, ஏ.பி.வி.பி போன்றவை உள்ளன. இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்தாம் ஹசாரேவுக்காக வீதிகளில் இறங்கியுள்ளனர்.

யூத் எகைன்ஸ்ட் கரப்ட்(ஒய்.எ.சி), இந்தியா எகைன்ஸ்ட் கரப்ட்(ஐ.எ.சி) ஆகிய ஹசாரே ஆதரவு இயக்கங்களை கட்டுப்படுத்துவது சங்பரிவார் அமைப்புகளாகும். ஒய்.ஏ.சி இணை கன்வீனர் கோபால் அகர்வால், ஏ.பி.வி.பியின் தலைவராவார். ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தனது வலைப்பூவில் ஹசாரேவின் பிரச்சார இயக்கத்தை அவசரக் காலக்கட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயாணன் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் நடத்திய போராட்டத்திற்கு ஒப்பீடு செய்கிறார். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்ஸும், ஏ.பி.வி.பியும் முக்கியப் பங்கை ஆற்றியுள்ளன. அதுபோலவே ஊழலுக்கு எதிரான இதரப் போராட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அதன் பங்கை வகிக்கும் என ராம் மாதவ் கூறுகிறார்.

ஹசாரேவின் போராட்டத்தை நாங்கள் வெற்றிபெறச் செய்வோம் என வி.ஹெச்.பியின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சலும் தெரிவித்துள்ளார். ஹசாரேவுடன் போராட்டத்திற்கு களமிறங்கப் போவதாக பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரியும் கூறியுள்ளார்.

முன்பு கறுப்புப் பணத்திற்கு எதிராகப் போராட ஹைடெக் யோகா குரு ராம்தேவை களமிறக்கி ஆதாயம் தேட முயன்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் முயற்சியை மத்திய அரசு முறியடித்திருந்தது. தற்போது காந்தியவாதி வேடத்தில் அன்னா ஹசாரே காங்கிரஸ் எதிர்ப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறார். இது காவி முகாம் எழுச்சிபெற நடைபெறும் மறைமுக சதித்திட்டமாகவே உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Friday, August 26, 2011

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் மமக சட்டமன்றத்தில் கோரிக்கை

முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள இட ஒதுக்கீடு முறை நியாயமாக உள்ளது என்றும் இதில் creamy layer எனும் வளமான பிரிவினரை நீக்கும் அவசியம் இல்லை என்ற தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை  ஏற்று தமிழகத்தில் வளமான பிரிவினரை நீக்காமல் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதி செய்த சமூக நீதி காத்த மாபெரும் வீராங்கனை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமாரப் பாராட்டுகிறேன்.

தமிழகத்திலே பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு தனியாக 3.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரித்துத் தரப்படுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிர முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது திருச்சியிலிருந்து தொடங்கி பல்வேறு இடங்களிலே வாக்குறுதி தந்தார்கள். இதனை உடனே நிறைவேற்றித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முஹம்மத் ஜான்: பேரவை தலைவர் அவர்களே, சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு குறித்து வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்தக் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும்.
முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: தற்போது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த நடைமுறையில் உள்ள இன சுழற்சி முறையில், Roaster - ல் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதன் காரணமாக சில துறைகளில் குறிப்பாக மருத்துவ மேல் படிப்புகளிலும் பல்கலைக்கழப் பேராசிரியர் நியமனங்களிலும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வாய்ப்பு இல்லாத சூழல் உள்ளது. இதனைச் சீர் செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுப்பதுடன் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றது என்பதைக் கண்காணிக்க சட்டமன்ற உறுப்பினர்களும் இடம் பெறும் குழு அமைக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக முதல்வருக்கு முஸ்லிம்களின் வேண்டுகோள்! (வக்ஃபு நிலங்கள் மீட்பு)

அனுப்புனர்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்
129/64 தம்புச் செட்டித் தெரு,
மண்ணடி, சென்னை – 1.
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர்
சகோதரி ஜெ. ஜெயலலிதா அவர்கள்,
தலைமைச் செயலகம், சென்னை.
பொருள் : வக்ஃபு நிலங்கள் மீட்பு
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் சகோதரி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு, தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு மூன்றாவது முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு இறைவனுடைய அன்பும் அருளும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக என்று தமிழக முஸ்லிம்கள் சார்பில் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகின்றோம்.
கண்ணியம் நிறைந்த சகோதரி அவர்களே, கடந்த ஆட்சியில் அப்பாவி மக்களின் நிலங்கள் அநியாயமாக அபகரிக்கப்பட்டு வருகின்றன என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு எச்சரிக்கை செய்தீர்கள். ஆட்சி மாறிய உடன் அவை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்தீர்கள்.
இதனால் மக்கள் நம்பிக்கையோடு உங்களுக்கு வாக்களித்து உங்களுக்கு மகத்தான வெற்றியை தந்தனர். முதல்வராகப் பொறுப்பேற்றதும் விரைந்து நடவடிக்கை எடுத்து 2006இல் இருந்து 2011 வரை நடைபெற்ற நில அபகரிப்பு தொடர்பான அனைத்துப் புகார்களையும் விசாரித்திட காவல்துறையில் தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி  பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளங்களில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளீர்கள்.
இதற்காக மனதாரப் பாராட்டுகின்றோம். நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகின்றோம். உங்களின் இந்த முயற்சிக்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் துணை நிற்கும் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம்.
அன்புச் சகோதரி அவர்களே, தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது இதேபோன்ற ஒரு வாக்குறுதியை முஸ்லிம்களுக்கும் அளித்தீர்கள். தமிழகத்தில் உள்ள வக்ஃபு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என்று அறிவித்தீர்கள். அதைக் கேட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் தாங்களுக்கு ஆதரவாக மாறி தேர்தலில் வாக்களித்தது.. இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் யாரும் அறிவிக்காத உத்திரவாதம் அது. இதற்காக  தாங்கள் வெற்றி பெற்று முதல்வராக அமரவேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்த முஸ்லிம்கள் ஏராளம்.
இறை நம்பிக்கை இருக்கின்ற தங்களுக்குத் தான் இறைவனுடைய சொத்துக்களின் மகத்துவமும் அவை இறைவனின் படைப்புகளில் தேவையுடையோர்க்கு முறையாகச் செலவிடப்பட வேண்டிய அவசியமும் விளங்கும். இறை நம்பிக்கை இல்லாதவர்களிடம் இதை எதிர்பார்க்க இயலாது.
முஸ்லிம்களின் வறுமையைப் போக்கிட, கல்லாமையைக் களைந்திட, ஆதரவற்றோர்க்குச் சொந்தமான, விதவைகளின் மறுமணத்திற்கு பயன்பட வேண்டிய வக்ஃபு சொத்துக்கள், இத்தகைய பயன்பாட்டிற்காகவே முஸ்லிம் முன்னோர்களாலும் இந்து மத அரசர்களாலும் வாரி வாரி வழங்கப்பட்ட சொத்துக்கள், இன்று சில அடாவடி முஸ்லிம்களாலும் அரசியல்வாதிகளாலும், அரசின்
உயர் பதவிகளில் இருப்பவர்களாலும் ஓய்வு பெற்ற நீதிபதிகளாலும் அநியாயமாக அபகரிக்கப்பட்டு கேட்க நாதியில்லாமல் கிடக்கிறது.
இந்தச் சொத்துக்களைப் பாதுகாத்து முறையாகப் பராமரித்திட வேண்டிய வக்ஃபு வாரியமோ ஊழலில் ஊறித் திளைக்கிறது.
63 ஆண்டுகளாக அநீதியிழைக்கப்பட்ட மக்களாக வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றார்கள்  முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள்.
இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் அதே நேரம் சட்டத்தாலும் ஆட்சியின் அதிகாரத்தாலும் வக்ஃபு சொத்துக்களை மீட்கும் ஆற்றலும், வக்ஃபு வாரியத்தை ஊழலிலிருந்து து£ய்மை படுத்தும் அதிகாரமும் உள்ள தங்களிடம் கோரிக்கை வைக்கின்றோம்.
1. கடந்த 63 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பறிபோன வக்ஃபு நிலங்களை மீட்டு முஸ்லிம்களில் தேவையுடைய மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
2. வக்ஃபு வாரியத்தினை அடியோடு கலைத்துவிட்டு தற்போது அங்கே பணியாற்றுவோருக்குப் பதிலாக புதிய நேர்மையான அலுவலர்களை நியமித்து முறைப்படுத்தப்பட்ட நிர்வாகத்தின் மூலமாகவும், ஊழல் அற்ற முறையிலும் வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கும்படி மிகுந்த நம்பிக்கையோடு தங்களிடம் கோருகின்றோம்.
இறைவனுடைய சொத்துக்களை மீட்டெடுக்கும் இந்த உயரிய பணியில் தாங்கள் கனிவோடு அக்கறை செலுத்துவீர்கள் என்று மனதார நம்புகின்றோம். இறைவனுடைய அன்பும் அருளும் உங்களுக்கு என்றென்றும் நிலைத்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.
நன்றி
இப்படிக்கு
நிறுவனர்,
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்
சென்னை.

- நன்றி: 'சமூக நீதி முரசு' மாத இதழ்

Thursday, August 25, 2011

20 Chinese engineers embrace Islam

20 Chinese engineers embrace Islam
By Salman Al-Sulami and Hani Al-Luhaiyani
2,000 Al-Masha’er Train project workers have now become Muslims
Okaz/Saudi Gazette

MAKKAH – Twenty senior Chinese engineers working on the Al-Masha’er Train project have embraced Islam by pronouncing Shahada. These engineers have now joined 2,000 workers on the project who have become Muslims; there are 6,000 engineers and workers building the transportation system. 
A place for prayer has been established at the project.
Okaz/Saudi Gazette attended a lesson given to new Chinese Muslims by Makkah’s Cooperative Office for Call and Community Guidance’s supervisors of the Chinese Community Guidance Division.
Supervisors said they prepared a special program for the 20 engineers, which included an explanation, stating the Shahada, practical teaching and explanation of ablution, teaching Arabic and a speech by a Chinese Muslim scholar who works in Dawah (Call).
Muhanna Al-Harbi, a supervisor at the Chinese Community Call office in Arafat, said he and his colleagues need “learning resources to help us teach new Muslims matters of the religion and the Arabic language.”
The organization, which hopes to get help in founding a center inside the project, also needs books translated into Chinese and interpreters, he added.
The office serves 400 Iftar meals every day so people can have breakfast in their workplaces and has enabled 550 new Chinese Muslims to perform Haj, he added.
“Chinese people love order and honesty, and they have beautiful innate characteristics, as a result of which Islam has spread among them,” said Dr. Setr Al-Juaid, the office’s Director, who is also a professor at Makkah’s Umm Al-Qura University. 
“As the project is near the office in Al-Sharaye’ area, we used interpreters to call the Chinese company’s workers to embrace Islam. Allah blessed our efforts, despite our lack of resources,” he said.  __


மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?.

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை என்பது உண்மை. அடியிற் காணும் விளக்கங்கள் மேற்படி தடையைப் பற்றி தெளிவாக்க உதவும்:

1. நாட்டிலுள்ள எல்லா குடிமக்களும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாது.
நான் ஒரு இந்தியக் குடிமகன். ஆயினும்; ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல எனக்கு அனுமதியில்லை. ராணுவத்தில் பணிபுரிபவர்கள் - மற்றும் ராணுவத்தோடு தொடர்பு உடையவர்கள் மாத்திரம்தான் ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல அனுமதி உண்டு. அதுபோல- ஒவ்வொரு நாட்டிலும் - அந்த நாட்டின் சாதாரண குடிமக்கள் செல்ல முடியாதவாறு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சில இருக்கின்றன. அது போல இஸ்லாம் உலகத்திற்கும் - உலகத்தில் உள்ள மக்களுக்கும் பொதுவான மார்க்கமாக இருந்தாலும் - இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பது - இரண்டு புனித நகரங்களான மக்காவும் - மதினாவுமாகும். இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதியுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் மாத்திரமே.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தடை செய்திருப்பதை நாட்டின் சாதாரண குடிமகன் எதிர்ப்பது சரியானது அல்ல. அதே போன்றுதான் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியானது அல்ல.

2. மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதிக்கும் 'விஷா'.
ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் அந்நாட்டிற்கு செல்வதற்காக 'விஷா' அதாவது அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது நாட்டிற்கு வர அனுமதி பெற வேண்டுமெனில் தமக்கென வித்தியாசமான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ளன. மேற்படி வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் - விதிகளுக்கும் தேவைகளுக்கும் உட்படாதவர்களுக்கு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில்லை.

இவ்வாறு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில் கடுமையான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. குறிப்பாக மூன்றாம் தர நாடுகளில் உள்ள மக்களுக்கு அனுமதி கொடுப்பதற்கென கடுமையான சட்ட திட்டங்களை வைத்துள்ளது. மூன்றாந்தர நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல விஷா பெற வேண்டுமெனில் ஏராளமான தேவைகளையும் - நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கடந்த முறை நான் சிங்கப்பூருக்கு சென்றபோது போதைப்பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை என சிங்கப்பூர் இமிக்ரேஷன் படிவத்தில் எழுதப்பட்டிருந்தது. நான் சிங்கப்பூர் செல்ல வேண்டும் எனில் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும். மரண தண்டனை காட்டுமிராண்டித்தனம் என நான் வாதாட முடியாது. நான் சி;ங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்படுவேன் என்றால் மாத்திரமே என்னை சிங்கப்பூர் செல்ல அனுமதிப்பார்கள்.

இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல விரும்பும் எந்த மனிதருக்கும் -இருக்க வேண்டிய ஒரேயொரு முக்கியத் தகுதி என்னவெனில் - தன் உதடுகளால் மொழிந்து உள்ளத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய

'லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்' - வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி அவனது தூதராவார்
 - என்பதுதான்.

 http://www.ottrumai.net/IslamicQA/17-NoEntryForNonMuslims.htm

நமக்கு என்று ஒரு பி.ஏ.வைத்துக்கொள்ள

காலையில் 7 மணிக்கு மந்திரி உடன் சந்திப்பு.காலை 8 மணிக்கு வாழ்த்தலாம் வாங்க-பிளாக்கில் உள்ள கார்த்திக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து சொல்லவேண்டும்.காலை 9மணிக்கு திருச்சி ஞானசேகரனுடன் போட்டோ ஆல்பம் டிசைன் பற்றிடிஸ்கஷன். .காலை 10 மணிக்கு கரூர் தியாகராஜனுடன் டெக்ஸ்டைல் ஏற்றுமதிக்கு அக்ரிமெண்ட் கையெழுத்து இடவேண்டும்.காலை 11 மணிக்கு கோவை சக்தி உடன் சென்று நகைகள் ஆர்டர் கொடுக்கவேண்டும்..இவையெல்லாம் என்ன என்கின்றீர்களா? பெரிய மனிதர்களாக நாம் மாறிவிட்டவுடன் நமக்கு என்று ஒரு பி.ஏ. இருப்பார். அவர் நேரம் பிரகாரம் நமக்கு அன்றைய நிகழ்வுகளை ஞாபகப்படுத்துவார்.அவ்வாறு வசதி வரும்போது நாம் பி.ஏ. வைத்துக்கொள்ளலாம்.அதுவரை நமக்கு அன்றாட நிகழ்வுகளை நேரத்திற்கு ஞாபகப்படுத்த இந்த சின்ன சாப்ட்வேர் உதவுகின்றது.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.

இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் தேவையான தேதியை தேர்வு செய்யவும்.
இதில் வலதுபுறம் பார்த்தீர்களே ஆனால் நிறைய டேப்புகள் இருக்கும். அதில் இரண்டாவதாக உள்ள Events List கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் உள்ள Add கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் யாருக்கு நீங்கள் வாழ்த்துசொல்லப்போகின்றீர்களோ - அல்லது எதைப்பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்தவேண்டுமோ அதன் தேர்வு செய்யவும்.
இதில் வலதுபுறம் பார்த்தீர்களே ஆனால் நிறைய டேப்புகள் இருக்கும். அதில் இரண்டாவதாக உள்ள Events List கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் உள்ள Add கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் யாருக்கு நீங்கள் வாழ்த்துசொல்லப்போகின்றீர்களோ - அல்லது எதைப்பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்தவேண்டுமோ அதன் பெயரை தட்டச்சு செய்யவும்.
தேவையான விவரம் பூர்த்தி செய்ததும் இதில உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில வலதுபுறம் உள்ள Voice Options கிளிக் செய்து தேவையானதை பூர்த்தி செய்யவும்.
கடைசியாக உள்ள Startup Options கிளிக் செய்து தேவையான வார்த்தைகளை தட்டச்சு செய்துகொள்ளவும். Have a Good  Day ,Wish You all the Best போன்று வார்த்தைகளை தட்டச்சு செய்துகொள்ளவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். நாம் தட்டச்சு செய்யும் இந்த வார்த்தைகள் தான் நமது அசிஸ்டெண்ட தோன்றும் போது நமக்கு வாசித்துகாண்பிக்கும்.
நாம் கம்யூட்டரை ஆன்செய்ததும் உங்களுக்கு இந்த சேவகர் தோன்றி நமக்கு வாழத்துசொல்லும் அடுத்து அதன் சர்ட் பாக்கெட்டில் இருந்து கடிதம் எடுத்து பார்க்கும் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
எதும் குறிப்புகள் இல்லையென்றால் இரண்டுகைகளையும் விரித்து இல்லை என்று தலை ஆட்டும்.
உடன் தகவலும் சிறிய விண்டோவில் தோன்றும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தகவல் இருப்பின் தகவலை சொல்லிவிட்டு மறைந்துவிடும். இதனால் நாம் அன்றாட நிகழ்ச்சிகளை தொகுத்துவைத்துக்கொள்ளலாம்.
__._,_.___
 
Tnks

ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி

 ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி



மாணவி ஹதியா
மேங்களூர் ஜெயின் Pu கல்லூரியில் PUC இரெண்டாம் வருடம் படிக்கும் ஹதியா என்ற ஒரு இந்திய முஸ்லிம் மாணவி வகுப்பறையில் ஹிஜாப் அணிய உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார். இவர் தேவைபட்டால் கவர்னர் முதல் ஜனாதிபதி வரை சென்றாவது தனது மத உரிமையை மீட்க திட்டமிட்டுள்ளார்.

"இந்த விஷயத்தில் முன் வைத்த காலை பின் வாங்கும் எந்த எண்ணமும் தமக்கு இல்லை" என்று ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் ஹதியா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

கல்லூரி DCயிடமிருந்து ஊக்குவிக்கும் அளவுக்கு எந்த பதிலும் வரவில்லை என்றாலும் அவரிடமிருந்து நேரடியாகவோ அல்லது கல்லூரி நிர்வாகத்தின் மூலமாகவோ பதிலை எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.
.
ஹதியா தன்னுடைய இரெண்டாம் வருடத்தில் இருந்து ஹிஜாப் அணிய தொடங்கியுள்ளார்.ஹதியாவின் ஹிஜாப் அணிவதை கல்லூரி நிர்வாகம் வரவேற்கவில்லை ,இதற்க்கு கல்லூரி தரப்பில் கூறும் கூரணம் சீருடை சட்டத்தை இது மீருவதாக உள்ளது என்பதே ஆகும்.

முதலில் பெண்களுக்கான அறையில் இருந்து பாடங்களை எழுத ஹதியாவுக்கு கல்லூரி அனுமதி அளித்திருந்தது பிறகு கல்லூரிக்கு வருவதை விட்டு அவரை நிர்வாகம் தடை செய்தது.இவர் கல்லூரியிலிருந்து தடுக்கப்பட்டு சுமார் ஒரு மாத காலமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் இந்த போக்கை பற்றி தக்ஷினா கன்னட துணை கமிஷனர் சன்னப்பா கௌடாவிற்கு ஹதியா புகார் கடிதம் எழுதியுள்ளார்.துணை கமிஷனரிடமிருந்து சாதகமான மறுமொழி வரவில்லையெனில் பெரியவர்களின் ஆலோசனைக்கு பிறகு ஆளுநர் மற்றும் இந்திய ஜனாதிபதிக்கு எழுத இருப்பதாக 17 வயது ஹதியா தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் பெண்களை தங்கள் உடலை மறைப்பதை கட்டாயமாக ஆக்கி இருக்கிறது.ஹிஜாபை மத அடையாளத்திற்காக இஸ்லாம் அணிய சொல்லவில்லை.இந்தியாவில் உள்ள 1.1 பில்லியன் மக்களில் 140 மில்லியன் பேர் முஸ்லிம்கள்.உலக அளவில் இந்தோனேசியா விற்கும் பாகிஸ்தானுக்கும் அடுத்த அதிக முஸ்லிம்களை கொண்ட நாடு இந்தியா.

பாகுபாடு

கடந்த ஒரு வருடமாக ஹிஜாபின் உரிமைக்காக ஹதியா போராடி வந்திருக்கிறார்.இவருடைய இந்த முயற்சிக்கு கல்லூரியில் உள்ள 50 முஸ்லிம் மாணவர்களும் ,15 முஸ்லிம் அல்லாத மாணவர்களும் தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

கல்லூரியில் பதற்றம் உண்டாக்குவதாக முதன்மை ஆசிரியர் கூறுகிறார் ஆனால் என்னுடைய உரிமையை மீட்க்கும் காரணத்திற்காகவே இதை நான் செய்கிறேன் என்றும் என்னுடைய படிப்பை முடிப்பதே என்னுடைய நோக்கம் என்றும் ஹதியா முதன்மை ஆசிரியரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ஹதியா அந்த கல்லூரியில் ஹிஜாபுக்காக போராடும் முதல் பெண் அல்ல.ஆயஷா அஷ்ம்ன் (19) என்ற மாணவி ஏற்கனவே தன்னுடைய தலையை மறைக்க கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு கல்லூரிக்கு மாறியுள்ளார்.

உமைரா காதுன் ,சமூக சேவகர் கூறுகையில் 'ஹிஜாப்' என்பது இஸ்லாத்தின் ஒரு அங்கமாகும் அதை அனைவரும் மதிக்க வேண்டும்.கல்லூரிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது தமது நோக்கம் இல்லை.

இந்து மதம் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக வாழ்வின் அனைத்து நடைகளிலும் பாரபட்சமாக
இந்து மதம் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக வாழ்வின் அனைத்து நடைகளிலும் பாரபட்சமாக நடத்தப்படுவதாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் 13% இருக்கும் முஸ்லிம் மக்கள் கல்வியறிவில் மிகவும் பின்தங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.முஸ்லீம்கள் வேலைவாய்ப்பிலும் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்.பொது சேவை ஊழியர்களாக 7%க்கும் குறைவாகவே முஸ்லிம்கள் இருக்கிறார்கள்,ரயில்வே தொழிலாளர்களாக வெறும் ஐந்து சதவிகிதம்,வங்கி ஊழியர்களாக வெறும் நான்கு சதவிகிதம்,இந்திய ராணுவத்தில் உள்ள 1.3 மில்லியனில் வெறும் 29,000 பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்கிறது புள்ளி விபரம்.

இதுபோன்ற சமூக பிரச்சனைகளுக்கு அனைத்து முஸ்லிம்களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.முஸ்லிம்கள் கல்லூரிகளை அதிகமாக நிர்வகிக்க வேண்டும்.ஹிஜாப்,தாடி போன்றவை இஸ்லாத்தின் கட்டாய கடமை என்று இந்திய அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.இதுபோன்ற இஸ்லாத்தின் கடமைகளை தடுப்பது முஸ்லிம்களின் உரிமையை பறிப்பது போல் ஆகும் என்பதை நாம் அனைவரும் இந்திய அரசுக்கு வலியுறுத்த கடமை பட்டுள்ளோம்.


செய்தி : Onislam.net  

''டாலர்களை சந்தையில் கொட்டவா?!!''

-ஏ.கே.கான்

பொருளாதாரரீதியில் தன்னைவிட பலவீனமான நாடா.. ராணுவ பலத்தைக் காட்டி மிரட்டு. ராணுவ பலத்தில் தன்னைவிட பலசாலியா பொருளாதாரரீதியில் மடக்கு.. இது தான் சீனாவின் வெளியுறவுக் கொள்கை.

அருணாசலப் பிரதேசத்தில் அவ்வப்போது தனது ராணுவத்தினரை நுழைய விட்டு அங்குள்ள பாறைகளில் சிவப்பு நிற பெயிண்டை பூசிவிட்டுப் போவது சீனாவின் வாடிக்கை.. அதாவது 'இந்த ஏரியா எல்லாம் என்னுடையது' என்று மறைமுகமாகச் சொல்கிறது சீனா.

அதே நேரத்தில் ஆப்ரிக்க நாடுகளை பணத்தைக் கொடுத்து மடக்கி அந்த நாடுகளில் மாபெரும் திட்டப் பணிகளுக்கான காண்ட்ராக்ட்களைப் பெறுவதிலாகட்டும், அந்த நாடுகளின் இரும்பு உள்ளிட்ட தாது சுரங்கங்களை மொத்தமாக வாங்குவதாகட்டும், ஈரான்-வட கொரியா ஆகிய நாடுகளுக்கு ஆயுத உதவிகள் தந்து அவர்களை தன் பக்கம் இழுப்பதிலாகட்டும், இந்தியாவுக்கு தென் பகுதியிலும் தொல்லை தர இலங்கைக்கு உதவிகள் செய்வதிலாகட்டும், ரஷ்யாவிடம் மோதல் போக்கை கையாளமால் தனது வட பகுதி எல்லையில் அமைதியைப் பேணுவதிலாகட்டும் சீனாவுக்கு இணையான ஒரு ராஜதந்திர நாடு இப்போதைக்கு வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.

இப்படிப்பட்ட சீனா, அமெரிக்காவை மட்டும் விட்டு வைக்குமா?. விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை.

அமெரிக்கா மூன்று வகைகளில் சீனாவிடம் 'சிக்கியுள்ளது' என்று சொல்லாம்.

ஒன்று பிளேடுகளில் ஆரம்பித்து துணிகள் வரை அமெரிக்கா தனது நாட்டின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்ய பெருமளவில் சார்ந்துள்ள நாடு சீனா தான். அமெரிக்காவில் ஒரு சிறிய தொழிற்சாலையை உருவாக்கி, நடத்தி ஒரு பாட்டிலை தயார் செய்வதற்குக் கூட பல மில்லியன் டாலர் செலவாகும். இதனால், மக்கள் பெருவாரியாக பயன்படுத்தும் அடிப்படைப் பொருட்களைக் கூட அமெரிக்கா தயாரிப்பதில்லை. இதில் பெரும் தேவையை பூர்த்தி செய்வது சீனா தான். அமெரிக்காவின் பெரும் ஸ்டோர்கள் சீன இறக்குமதிகளையே பாதிக்கும் அதிகமாக சார்ந்துள்ளன என்று கூட சொல்லலாம்.

இரண்டாவது.. ஆசிய பிராந்தியத்தின் பெரும் பரப்பில் விரிந்து கிடக்கும் சீனாவை பகைத்துக் கொண்டு இந்தப் பகுதியில் அமெரிக்கா ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போட முடியாத நிலை. ஆப்கானி்ஸ்தான் விவகாரம், இராக் மீது போர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் சீனாவின் அனுமதி இல்லாமல் ஐ.நா.வில் அமெரிக்காவால் ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்றியிருக்க முடியாது.

ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் அமெரிக்கா பக்கமே நின்றாலும், ரஷ்யா-சீனா ஆகிய நாடுகள் உதவியில்லாமல் ஐக்கிய நாடுகள் சபையை தனது இஷ்டத்துக்கு அமெரிக்காவால் ஆட்டுவிக்க முடியாது. இதில் ரஷ்யா தனது உலகளாவிய கனவுகளை எல்லாம் இப்போதைக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு, 'கேபிடலிஸ்ட்' பொருளாதாரப் பாதையில் அமெரிக்காவை அப்படியே காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டது. இப்போதைக்கு சர்வதேச விவகாரங்களில் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதை விட்டுவிட்டு தனது பொருளாதாரத்தை பலப்படுத்திலேயே தீவிரமாக உள்ளது ரஷ்யா. அதற்கு அமெரிக்கா, ஐரோப்பாவின் உதவியும் தேவை என்பதால், அமெரிக்காவுடன் ரஷ்யா மோதல் போக்கை கையாளுவதே இல்லை.

ஆனால், சீனா அப்படியில்லை. ஆசிய பிராந்தியத்தையும் தாண்டி தனது செல்வாக்கை நிலை நிறுத்தும் பெரிய கனவு கண்டு வருகிறது. இதனால், அவ்வப்போது அமெரிக்காவுடன் மோதலைக் கையாளவும் சீனா தயங்குவதில்லை. ஆனால், அதை ஒரு அளவோடு.. தைவான், வட கொரியா ஆகிய நாடுகளின் விவகாரங்களோடு இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறது சீனா.

அருணாசலப் பிரதேசம் மாதிரி தைவானும் தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறும் சீனா, அதை அப்படியே ஆக்கிரமிக்க முயல்கிறது. சீனாவிடமிருந்து தப்புவதற்காக அமெரிக்காவிடமிருந்து பல பில்லியன் டாலர்களுக்கு ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது தைவான். உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான தைவான் தான் உலகில் மிக அதிகமான ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் நாடுகளில் ஒன்றாகும். தைவானுக்கு அமெரிக்கா ஆயுதம் தருவதை எதிர்த்து சீனா அவ்வப்போது 'சவுண்டு விடுவது' வழக்கம்.

அதே போல சோமாலியா, ஆப்கானிஸ்தான், இராக் என நினைத்த இடத்தில் எல்லாம் நினைத்த நேரத்தில் படைகளை அனுப்பி நாடுகளை ஆக்கிரமித்த அமெரிக்காவால் இதுவரை வட கொரியாவை நோக்கி ஒரு துப்பாக்கிச் சூடு நடத்த முடியவில்லை என்றால் அதற்கு முழுக் காரணம் சீனா தான். தென் கொரியாவில் அமெரிக்கப் படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கு சீனா எல்லா வகையான உதவிகளையும் தந்து வருவதால், அந்த நாடு அணு ஆயுதம் தயாரித்தால் கூட அமெரிக்கா அதை அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை. வட கொரியா விஷயத்தில் அமெரிக்காவை கையைக் கட்டி போட்டுள்ளது சீனா.

இப்படி 'மாஸ் புரொடக்ஷன்', சர்வதேச விவகாரங்கள் என அமெரிக்காவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, பொருளாதாரரீதியிலும் அமெரிக்காவை எப்போதும் அச்சுறுத்தியே வருகிறது.

அந்த வகையில் 3வது காரணம், சீனாவிடம் கையிருப்பில் உள்ள அமெரிக்காவின் 3.8 டிரில்லியன் டாலர்கள் பணம்.!

ஒரு டிரில்லியன் என்றால் 1000000000000 (ஒரு லட்சம் கோடி). இதை முதலில் 3.8 ஆல் பெருக்கிவிட்டு பின்னர் 45 ஆல் பெருக்குங்கள்... அது தான் 3.8 டிரில்லியன் டாலர்!.

இதில் 60 சதவீதத்தை டாலர்களாகவே வைத்துள்ளது சீனா. அதில் 1.1 டிரில்லியன் டாலர்களை அமெரிக்க நாட்டின் கருவூலப் பத்திரங்களில் (US Treasury bonds) முதலீடு செய்து நேரடியாக அமெரிக்கப் பொருளாதாரத்தின் 'இதயத்தில் கை வைத்துள்ளது' சீனா.

இந்த டாலர்களை சீனா ஒரு நாள் உலகச் சந்தையில் 'கொட்டினால்', அமெரிக்க டாலரின் மதிப்பு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்குச் சரியும். அமெரிக்கப் பொருளாதாரமும் ஒரே நாளில் முடங்கும். அதற்காகக் தான் இதை வாங்கி வைத்துள்ளது சீனா!.

தைவானுக்கு அமெரிக்கா தனது அதிநவீன போர் விமானங்களைத் தரும்போதெல்லாம் ''டாலர்களை சந்தையில் கொட்டவா?'' என்று அமெரிக்காவை சீனா மிரட்டுவது வழக்கம்.

அமெரிக்காவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா வைத்துள்ள 'பிரம்மாஸ்திரம்' இது. ஆனால், சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் இந்த டாலர்களையே சீனாவுக்கு எதிராகத் திருப்பியுள்ளன..!

அது எப்படி..?

''சரி.. தைவானை ஆதரித்தால் சீனா நமது டாலர்களின் மதிப்பை சரித்துவிடுமே.. நமக்கு எதுக்கு வம்பு' என்று அமெரிக்கா சும்மா இருக்கலாம் அல்லவா?. அதைவிட்டுவிட்டு தைவானை அமெரிக்காவே தேடிப் போய் உதவிகள் செய்வது ஏன்?.

''நீ டாலர்களை சந்தையில் கொட்டித் தான் பாரேன்'' என்று சீனாவை சீண்டுவதற்காகத் தான்..!

அது ஏன்?

(தொடரும்)
 
Thatstamil

முஸ்லிம் இட ஒதுக்கீடு உயர்கிறது

 ""முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்று, அமைச்சர் முகம்மத்ஜான் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று வருவாய் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இதில், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசியதாவது: பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடாக, 3.5 சதவீதம் இருக்கிறது. இதை உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என, தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் தெரிவித்தார். அறிவிப்பை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ படிப்புகள் மற்றும் அரசு கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் போன்றவற்றில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா என்பது தெரியவில்லை. இதில் பெரும் குழப்பங்கள் இருக்கின்றன.சிறுபான்மையினர் நலத்துறைக்கு, தனி செயலரை நியமிக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகம்மத்ஜான்: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நன்றி- தினமலர்




சட்டமன்றத்தில் சமுதாயத்தின் கோரிக்கை
சென்னை, ஆக.23: முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் என்று பேரவையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா (ராமநாதபுரம்) கோரிக்கை வைத்தார்.  பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது:  தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை உடனே அமல்படுத்த வேண்டும்.  இடஒதுக்கீட்டில் குளறுபடி: இடஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது ரோஸ்டர் முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் உள்ள குளறுபடி காரணமாக, முஸ்லிம் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளிலும், பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாக சேர்வதிலும் சிக்கல் எழுந்துள்ளது.  முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதை கண்காணிக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். 
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமது ஜான்:
சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு குறித்து வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். இந்தக் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும்.  ஜவாஹிருல்லா: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) சார்பில் வழங்கப்படும் தனிநபர் கடனை ரூ.5 லட்சமாக அதிகரிக்க வேண்டும். மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை கல்விக் கடன் வழங்கப்படுவதாக அறிவித்தாலும், சொத்து இணை ஆவணங்கள் இல்லாத மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.  முஸ்லிம்கள் வங்கிகளில் கடன் பெறும் அளவு மிகவும் குறைவாக உள்ளதாக சச்சார் கமிட்டி தெரிவித்துள்ளது. முஸ்லிம்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தில் வங்கி அல்லாத நிதி நிறுவனத்தை உருவாக்க வேண்டும். வளைகுடா நாடுகளில் வேலைசெய்யும் சிறுபான்மை மக்களிடம் இருந்து இதற்கான நிதியைப் பெற்று இந்த நிறுவனத்தை உருவாக்கலாம்.  சிறுபான்ûமைத் துறைக்கு என்று தனியான செயலரை நியமிக்க வேண்டும்.

நன்றி- தினமணி.

Wednesday, August 24, 2011

இஸ்லாமிய விரோத வலைத்தளங்களை தாக்கும் சவுதி பெண்மணி



அமெரிக்காவில் கல்வி கற்கும் சவுதி அரேபிய யுவதி ஒருவர் டென்மார்க் நாட்டில் இருந்து இயங்கும் 23 வலைத்தளங்களை தனது திறமையின் மூலம் தாக்கியுள்ளார், இவ்வளைத்தலங்கள் அனைத்தும் இஸ்லாத்துக்கு எதிராக இயங்குவதை தமது கொள்கையாக கொண்டுள்ளதுடன் இவைகள் அனைத்தும் நபி பெருமானார் (ஸல்) அவர்களை தூற்றுவதை வாடிக்கையாக கொண்ட இணையத் தளங்களாகும் என அல் மதீனா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பத்திரிகைக்கு பேட்டியளித்த நூப் ராஷித் என்ற குறித்த பெண்மணி நபிகளாரை பற்றி இட்டுக்கட்டப்பட்ட விடயங்களையும் மற்றும் கார்டூன்களையும் வெளியிடும் தளங்களையே ஹாக்கிங் செயற்பாடு மூலம் செயலிழக்க செய்ததாக குறிப்பிட்ட அவர் தனது பார்வையில் இத்தளங்களின் செயற்பாடுகள் தவறானவை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக பல ஆபாச வலைத்தளங்களும் நூப் ராஷித் இனால் செயலிழக்க செய்யப்பட்டதோடு ஆபாச படங்களை எடுத்து அதை பயன்படுத்தி இளம் பெண்களை பயமுறுத்திய ஒரு நபரின் கணனியின் செயற்பாட்டை கட்டுப்படுத்தி குறித்த ஆபாச படங்களை அழித்து பயமுறுத்தல்களுக்கு உள்ளான இளம்பெண்களையும் காப்பாற்றியுள்ளார். கணணியை கற்பதற்கான ஆர்வமே தான் இந்த துறையில் நிபுணத்துவம் அடைய காரணமாகும் என்று நூப் தெரிவித்துள்ளார்.
ஒரு இளைஞன் ஒரு யுவதியை அவளது அந்தரங்க புகைப்படங்களை கொண்டு மிரட்டி அவளை திருமணம் செய்ய முற்பட்ட சம்பவம் தான் ஹாக்கிங் துறையில் திறமைகளை வளர்க்க தூண்டுகோலாக அமைந்ததாக குறிப்பிட்ட நூப், இச்சம்பவத்தின் பின்னர் தன்னுடைய நண்பர்கள் மூலமே ஹாக்கிங் கலையை கற்றதாக கூறியுள்ளார். இதன் மூலம் அல்லாஹ்வின் கிருபையால் மேலும் பல பெண்களை இவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து நூப் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த டென்மார்க் தளங்களை தாக்கிய நூப் அவ்வலைத்தளங்கள் நடாத்துவோருக்கு பெருமானார பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் பொருத்தமான தகவல்களை அனுப்பியுள்ளார்.
இணையத்தை பாவிக்கும் இளம்பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நூப் வலியுறுத்தியுள்ளார். கணணி பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளுக்கு அதற்கான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கணணிகளை கொடுக்கும் போது இளம் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இவ்வாறான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கடமை புரியும் சில நபர்கள் இளம் பெண்களின் கணனிகளில் உளவு மென்பொருள்களை (Spyware) உட்புகுத்தும் சாத்தியங்கள் உண்டு எனவும் தெரிவித்தார்.
மேற்குலக ஊடகங்களின் தகவல்களின் படி அண்மையில் 900 க்கு மேற்பட்ட டென்மார்க் வலைத்தளங்கள் ஹாக்கிங் தாக்குதலுக்கு உள்ளாயின.
ஒரு சர்வதேச இணைய கண்காணிப்பாளர் தகவல் தருகையில் ஒரு சிறிய காலப்பகுதிக்குள் இவ்வாறு பெறும் எண்ணிக்கையான வலைத்தளங்கள் தாக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும் என்று தெரிவித்துள்ளார். அநேகமான ஹாக்கிங் தாக்குதல்களின் போது குறித்த தளங்கள் செயலிளப்புக்கு மாத்திரமே உள்ளாகும் அதேவளை சில சந்தர்ப்பங்களில் டென்மார்க் அரசையும் மக்களையும் எச்சரிக்கும் வாசகங்கள் பதிவேற்றப்படுகின்றன எனவும் தெரிவித்தார். தாக்கப்படும் தளங்கள் பின்னர் மீண்டும் இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவைப்போல் சவுதியிலும் ஹாக்கிங் குற்றத்துக்காக கடுமையான தண்டனைகள் அமுலில் உள்ளமை குறிப்பிட தக்கது.

Sunday, August 21, 2011

ஹஸாரேவின் நோக்கம்தான் என்ன?

ஹஸாரேவின் நோக்கம்தான் என்ன? கார்ப்பரேட் சதியா… ஊழல் ஒழிப்பா… ஆட்சிக் கவிழ்ப்பா…?

-ஜெய்பிரகாஷ் பாண்டே
ஞ்சம் – ஊழல் – கறுப்புப் பணத்துக்கெதிராக கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்துவரும் ‘போராட்டங்கள்’, இலக்கு தவறி வெறும் அரசியலாக, விளம்பர யுத்தமாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.
உடனே, ஊழலுக்கு ஆதரவா என உணர்ச்சிவசப்பட வேண்டாம். எத்தனையோ ஆண்டுகள் இருக்குமிடமே தெரியாமல் இருந்த அன்னா ஹஸாரே திடீரென ஒரு நாள் லஞ்சத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தியாவை ரட்சிக்க முளைத்ததும், அடடா முழு பெருமையும் அவருக்கே போவதா என கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் அதற்கு பங்காளியாக முனைந்ததும், அதில் ஹஸாரேவும் பாபாவும் குழாயடிச் சண்டை போட்டதும் மறந்திருக்க நியாயமில்லை.
லோக்பாலுக்கு ஒரு உண்ணாவிரதம், வலுவான லோக்பாலுக்கு இன்னொரு உண்ணாவிரதம், காங்கிரஸ் தலைவர்கள் தன்னை விமர்சித்ததற்காக ஒரு உண்ணாவிரதம், அந்த விமர்சனங்களை விலக்கிக் கொள்ளும் வரை ஒரு உண்ணாவிரதம், ஆகஸ்ட் 15 -ல் ‘மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக’ தடையை மீறி ஒரு உண்ணாவிரதம், அதற்காக கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்ட பின்னும், தான் சொல்வதைத்தான் அரசு கேட்க வேண்டும் என்ற பிடிவாத உண்ணாவிரதம்… ஆக உண்ணாவிரதம் மட்டும்தான் ஹஸாரேவின் குறிக்கோளா?
இந்த கிளிப்பிள்ளைக்கு உண்ணாவிரதம் என்பதை மட்டும் சொல்லிக் கொடுத்தவர்கள், உண்ணாவிரதம் தாண்டி என்ன செய்யலாம் என்பதைச் சொல்ல மறந்துவிட்டார்களா?
ஆகஸ்ட் 15 ம் தேதி அறிவித்தபடி தடையை மீறி உண்ணாவிரதம் ஆரம்பித்தார் ஹஸாரே. ‘சட்டத்துக்குப் புறம்பான இந்த போராட்டத்தை’ அடக்க போலீசார் கைது செய்தனர். திகார் சிறையில் அடைத்தனர். அங்கும் உண்ணாவிரதம் தொடர்ந்தது. ஹஸாரேவின் போராட்ட நோக்கம், அதனால் விளையும் பயன்கள் என்னவென்றே யோசிக்காமல், மெழுகுவர்த்தி ஏந்திய ‘உயர்நடுத்தட்டு போலிகளின்’ பின்னால் உழைக்கும் மக்களும் அணி திரண்டுவிட்டனர். இது ஹஸாரேவின் வெற்றி என்று மீடியா கொண்டாட ஆரம்பிக்க, அரசு இப்போது இறங்கி வந்து சமரசம் பேசுகிறது.
ன்று திகார் சிறையில் ஹஸாரே குழுவுக்கும் அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையே நிகழ்ந்த முக்கிய உரையாடல் இது:
அரசு பிரதிநிதி: அன்னாஜி, உங்களுக்கு என்னதான் வேண்டும்… எங்களை வேலை செய்ய விடுங்கள்…
ஹஸாரே: உண்ணாவிரதத்துக்கு என்னை அனுமதிக்க வேண்டும். நான் விரும்புமிடத்தில் இருப்பேன். எந்த நிபந்தனையும் ஏற்கமாட்டேன்.
கேஜ்ரிவால்: எந்த நிபந்தனையையும் ஏற்கமாட்டோம். எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் என்பதை யாரும் முடிவு செய்யக் கூடாது.
அரசுப் பிரதிநிதி: 7 நாட்கள் அதிகபட்சம். வேண்டுமானால் இரண்டொரு நாட்கள் வரை நீட்டித்துக் கொள்ளலாம். எழுத்துப் பூர்வாக வேண்டுமானாலும் தருகிறோம். நீங்கள் விரும்பும் வரை இருக்க எப்படி அனுமதிக்க முடியும்… நகரின் இயக்கம் பாதிக்குமே பரவாயில்லையா…
ஹஸாரே: அதுபற்றி நான் கவலைப்பட முடியாது. நீங்கள் சொல்லும் நிபந்தனைகளையும் ஏற்க முடியாது…
அரசுப் பிரதிநிதி: சரி, உண்ணாவிரதமே வேண்டாம். நீங்கள் வேண்டுவது என்ன… மீண்டும் ஒரு குறைந்தபட்ச சமரசத்தோடு அரசு பேச விழைகிறது. சம்மதமா?
ஹஸாரே: முடியாது. எனக்கு இப்போது நிபந்தனையற்ற அனுமதி வேண்டும். ஒரு மாதமாவது நான் உண்ணாவிரதமிருப்பேன்.
அரசுப் பிரதிநிதி: லோக்பாலில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை குழுவுடன் அமர்ந்து பேசுங்கள். அதன்பிறகே பாராளுமன்றத்தில் வைக்கப்படும். அதுவரை போராட்டத்தை ஒத்திப் போடுங்கள்.
ஹஸாரே, கேஜ்ரிவால்: இல்லை இல்லை… உண்ணாவிரதம்தான் முக்கியம். அதை தள்ளிப் போட முடியாது. நாங்கள் சொல்வதை இப்போது அரசு கேட்கட்டும். மற்றவற்றை அப்புறம் முடிவு செய்யலாம்!
-இது கற்பனை உரையாடல் அல்ல. செவ்வாய்க்கிழமை இரவிலிருந்து புதன்கிழமை இரவு வரை திரும்பத் திரும்ப ஹஸாரே கோஷ்டிக்கும் அரசுப் பிரதிநிதிகள் கோஷ்டிக்கும் இடையே நிகழ்ந்த நிஜ உரையாடலின் ஒரு பகுதிதான்.
ஆக, சமரசமோ பிரச்சினைக்குத் தீர்வோ ஹஸாரேவுக்கும் அவரை பின்னிருந்து ஆட்டுவிப்பவர்களுக்கும் தேவையில்லை. அவர்களது நோக்கம் உண்ணாவிரதம். ‘தேசம் ஸ்தம்பித்தது… மக்கள் கொந்தளிப்பு… இரண்டாவது சுதந்திரப்போர் ஆரம்பம்… ஊழல் காங்கிரஸ் விரட்டப்பட்டது’ என்ற தலைப்புச் செய்திகள்தான்.

ஒரு எதிர்க்கட்சியாக தங்களால் செய்ய முடியாததையெல்லாம் ஹஸாரே என்ற முகமூடியை வைத்து செய்கிறது பாஜக என்ற குற்றச்சாட்டை கிட்டத்தட்ட மெய்ப்பித்தது அருண் ஜெட்லியின் இன்றைய நீ…ண்ட உரை!
அவரது பேச்சை இன்று பாராளுமன்றத்தில் கேட்டேன். லோக்பாலை வலுவாக்க அவர் கோரியதை விட, பிரதமர் மன்மோகன் சிங் கையாலாகதவர் என்பதை மீண்டும் மீண்டும் கூறி பதிய வைப்பதில்தான் குறியாக இருந்தார்.
இன்னொரு பக்கம் காங்கிரஸ் ஏன் ஹஸாரேவுக்காக இவ்வளவு தூரம் இறங்கி வருகிறது, கெஞ்சுகிறது என்ற கேள்வியை கேட்காதவர்கள் ரொம்ப குறைவு.
கைது செய்யப்பட்ட பிறகு ஒருவர் உண்ணாவிரதமிருந்தால், கட்டாயப்படுத்தி வாயில் உணவைத் திணிப்பது ‘திகார் மரபு’. விடுதலை என்று அறிவித்த பிறகு போக மறுத்தால் குண்டுகட்டாக தூக்கிப் போய் எங்காவது இறக்கிவிடுவதும் போலீஸ் மரபுதான். எத்தனை லட்சம் பேர் சிறைக்கு வெளியே காத்திருந்தாலும், போலீஸ் நினைத்தால் அதைச் சாதித்திருக்கிறது. ஆனால் ஹஸாரேவுக்கு மட்டும் சிறப்புச் சலுகை!
நல்ல தலையணை, திண்டெல்லாம் போட்டு மார்வாடி மாதிரி அவர் வீற்றிருக்கிறார் அறையில். அவரைத் தேடி அவரது சகாக்கள் வருகிறார்கள். மந்திராலோசனை மாதிரி கூட்டம் நடக்கிறது. பின்னர் கிளம்பிப் போய் வெளியில் உள்ள ‘வெள்ளைக் காலரில் அழுக்குப்படாத’ கூட்டத்துக்கு செய்தி சொல்கிறார்கள் கிரண்பேடியும், சிசோதியும். அதிலும் இந்த சிசோதி, திடீரென ரிலீசாகி வெளியில் போகிறார்… திடுமென்று உள்ளே வந்து ஹஸாரேயுடன் மந்திராலோசனை நடத்துகிறார்.
அட… என்னதான் நடக்கிறது? இதற்கு முன், இதைவிட நியாயமான காரணங்களுக்காக எத்தனையோ பேர் கைதாகி சிறைவாசம் அனுபவித்தார்களே, அவர்களுக்குக் காட்டப்படாத சலுகைகள் ஹஸாரே கோஷ்டிக்கு ஏன்?
அப்படியெனில், தலைநகரில் இடதுசாரிகள் பேசிக் கொள்வதைப் போல, இந்த ஹஸாரே நாடகத்தில் காங்கிரஸுக்கும் பங்குள்ளதா? ராம்தேவ் நாடகத்தை பிசுபிசுக்க வைத்த காங்கிரஸ், ஹஸாரே நாடகத்துக்கு மட்டும் ஏன் வெற்றிகரமான இரண்டாவது, மூன்றாவது நாள் போஸ்டர்களை அடித்துக் கொண்டிருக்கிறது?
இது ஜனநாயக நாடு. கருத்து சுதந்திரம் நன்றாகவே உள்ளது. நினைத்ததைப் பேசவும், அரசு அனுமதியோடு அதற்கு செயல்வடிவம் தரவும் சட்டம் இடம்தருகிறது. ஆனால் ஆட்சி மாற்றத்துக்கேற்ப ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இதற்கு புதிய விளக்கங்களைத் தருவது வாடிக்கை. அதே நேரம், தனிமனிதர் ஒருவர் அரசு தன்னிஷ்டப்படி ஆட வேண்டும் என எதிர்ப்பார்ப்பது சரிதானா? எனில் தேர்தல், பாராளுமன்றம், அமைச்சரவை எதற்காக? இதே மிரட்டலை அனைத்துக் குழுக்களும் மேற்கொள்ளலாமா?
எந்த அதிகாரமும் இல்லாத ஒரு நபர், மக்கள் ஆதரிக்கிறார்கள் என்ற ஒரே விஷயத்தை வைத்துக் கொண்டு, ஒரு சர்வாதிகாரி போல நடந்துகொள்வதும், மக்கள் பிரதிநிதிகளான பிரதமர் உள்ளிட்டோரை கேவலமாக விமர்சிப்பதும் சரிதானா? எனில் இந்த உரிமையை அனைத்து போராட்டக்காரர்களுக்கும் இனி தருவார்களா மத்திய மாநில அரசுத் தரப்புகளில்? உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டத்துக்கென இனி குறிப்பிட்ட இடம்தான் என்ற வரையறையை எந்த அரசும் விதிக்கக் கூடாது. போராட்டக்காரர்கள் விரும்பிய இடத்தில்தான் போராட்டம் நடக்கும் என்ற நிலையை உறுதிப்படுத்துமா அரசு?
-இந்தக் கேள்விகளை எழுப்புவோரை உடனே காங்கிரஸ் ஆதரவாளர்கள் அல்லது ஊழல் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தவும் ஒரு கூட்டமே அலைகிறது. அவர்களின் குழு மனப்பான்மைக்கு நாம் தலைவணங்கிப் போகமுடியாதல்லவா?
இதில் யாரும் வெளியில் சொல்லாத ஒரு கேவலம் இந்த இரண்டு தினங்களிலும் அரங்கேறி வருகிறது… முக்கிய பிரமுகர்கள் சிலர் ஹஸாரேவுக்கு ஆதரவாக திகார் சிறைக்கு வெளியில் நின்று சீன் போடுவதை மீடியா நன்றாக கவர் செய்ய ‘சிறப்பு உபசரிப்புகளை’ச் செய்து வருகின்றனர்.  குறிப்பாக டிவி சேனல்காரர்களுக்கு. எப்படி இருக்கிறது ஊழல் எதிர்ப்பு லட்சணம்!
இந்த முறை காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்து ஹஸாரேவை அடக்குகிறது… பாஜக முட்டுக் கொடுக்கிறது. அடுத்த முறை, அதிகார கோல் பாஜக கையில் கிடைத்ததும் விழும் முதல் அடியும் ஹஸாரே  மீதுதான் இருக்கும், அவர் உண்மையிலேயே ஊழலை எதிர்த்து நின்றால்.
இல்லாவிட்டால், ராலேகான் சித்தியின் சர்வாதிகாரியாக அந்த ஐந்துவருடங்களை ஓட்டிவிடுவார் ஹஸாரே… கார்ப்பரேட் தர்மகர்த்தாக்கள் இருக்கும்வரை, ஹஸாரேக்களால் புதுப்புது ஷோக்களை அரங்கேற்ற முடியாதா என்ன?
-ஷைலேந்தர் உதவியுடன், தலைநகர் புது டெல்லியிருந்து…
குறிப்பு 1: கட்டுரையாளர் ஜெய்பிரகாஷ் பாண்டே தலைநகர் டெல்லியில் 25 ஆண்டுகாலம் அரசியல் நிருபராக, நாட்டின் முதல்நிலை பத்திரிகையான ‘சரஸ்சலீலி’ன் ஆசிரியராக பணியாற்றியவர். பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை ஆகிய மூன்று அதி உயர் அமைப்புகளிடமிருந்தும் அங்கீகார அட்டை பெற்றவர்.  அனைத்து அரசியல் மற்றும் அதிகார மட்டத்திலும் நல்ல தொடர்புகள் கொண்டவர். குறிப்பாக, ஹஸாரே போராட்ட அரசியல் குறித்து ஏராளமான கட்டுரைகளை இவர் எழுதி வருகிறார்.
என்வழிக்காக அவர் தந்துள்ள சிறப்புக் கட்டுரையின் தமிழ் வடிவம் இது! இதில் உள்ள கருத்துக்கள் கட்டுரையாளருடையவைதான். ஆனால், அவரது கேள்விகளில் உள்ள அடிப்படை முகாந்திரம் மறுக்க முடியாதது என்பதால், ஒரு வார்த்தையைக் கூட நீக்காமல் வெளியிட்டுள்ளோம்!
குறிப்பு 2: ‘தலைவரே  ஆதரவு தெரிவித்த ஒரு விஷயத்தை விமர்சிப்பதா’ என சிலர் திரிபை ஏற்படுத்த முயலக்கூடும். தலைவர் ஆதரித்தபோது இருந்த நிலைவேறு. இன்றைக்கு அதில் பல்வேறு சந்தேகங்கள் வந்திருக்கின்றன. ஒரு மூத்த பத்திரிகையாளர் கண்டறிந்த உண்மைகளை எழுதியுள்ளார். மெய்ப்பொருள் காணும் ஒரு முயற்சியே இந்தக் கட்டுரை.
Thanks-என்வழி