Sunday, August 7, 2011

கடன் தர வரிசை... சறுக்கியது அமெரிக்கா... முதலீட்டாளர்கள் பீதி!

வாஷிங்டன்: சர்வதேச கடன் தரவரிசையில் அமெரிக்காவுக்கு முதல் முறையாக குறைவானண ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு பொருளாதாரம் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

பொருளாதார கொள்கைகளை மதிப்பீடு செய்து தரச்சான்றிதழ் வழங்குவதில் ஸ்டான்டர்டு அண்டு பூவர் (Standard & Poor - S&P) நிறுவனம் சர்வதேச அளவில் பிரபலமானது.

அமெரிக்க அரசு சமீபத்தில் வெளியிட்ட கடன் கொள்கைகளை அந்த நிறுவனம் ஆய்வு செய்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடன் தர வரிசையில் அமெரிக்காவுக்கு குறைந்த ரேட்டிங்கை அளித்துள்ளது.

மேலும், ஏஏஏ தரத்தில் இருந்த அமெரிக்காவின் நீண்ட கால பொருளாதார கொள்கையை தற்போது ஏஏ+ என்று குறைத்துள்ளது. குறைந்த கால கடன் தர வரிசையில் A-1+ என்ற தரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

முதன்முதலாக தரவரிசை பட்டியலில் அமெரிக்காவின் பொருளாதாரம் இறக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், அமெரிக்காவின் பொருளாதாரம் பற்றி பல்வேறு கேள்விக்குறிகள் எழுந்துள்ளது. மேலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் மற்ற கடன் தரவரிசைப்படுத்தும் நிறுவனங்களான மூடி இன்வெஸ்டர் சர்வீஸ் மற்றும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் அமெரிக்காவுக்கு AAA ரேட்டிங்கை வழங்கியுள்ளன.
Thatstamil

No comments:

Post a Comment