Thursday, August 25, 2011

முஸ்லிம் இட ஒதுக்கீடு உயர்கிறது

 ""முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்று, அமைச்சர் முகம்மத்ஜான் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று வருவாய் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இதில், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசியதாவது: பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடாக, 3.5 சதவீதம் இருக்கிறது. இதை உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என, தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் தெரிவித்தார். அறிவிப்பை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ படிப்புகள் மற்றும் அரசு கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் போன்றவற்றில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா என்பது தெரியவில்லை. இதில் பெரும் குழப்பங்கள் இருக்கின்றன.சிறுபான்மையினர் நலத்துறைக்கு, தனி செயலரை நியமிக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகம்மத்ஜான்: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நன்றி- தினமலர்




சட்டமன்றத்தில் சமுதாயத்தின் கோரிக்கை
சென்னை, ஆக.23: முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் என்று பேரவையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா (ராமநாதபுரம்) கோரிக்கை வைத்தார்.  பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது:  தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை உடனே அமல்படுத்த வேண்டும்.  இடஒதுக்கீட்டில் குளறுபடி: இடஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது ரோஸ்டர் முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் உள்ள குளறுபடி காரணமாக, முஸ்லிம் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளிலும், பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாக சேர்வதிலும் சிக்கல் எழுந்துள்ளது.  முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதை கண்காணிக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். 
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமது ஜான்:
சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு குறித்து வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். இந்தக் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும்.  ஜவாஹிருல்லா: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) சார்பில் வழங்கப்படும் தனிநபர் கடனை ரூ.5 லட்சமாக அதிகரிக்க வேண்டும். மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை கல்விக் கடன் வழங்கப்படுவதாக அறிவித்தாலும், சொத்து இணை ஆவணங்கள் இல்லாத மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.  முஸ்லிம்கள் வங்கிகளில் கடன் பெறும் அளவு மிகவும் குறைவாக உள்ளதாக சச்சார் கமிட்டி தெரிவித்துள்ளது. முஸ்லிம்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தில் வங்கி அல்லாத நிதி நிறுவனத்தை உருவாக்க வேண்டும். வளைகுடா நாடுகளில் வேலைசெய்யும் சிறுபான்மை மக்களிடம் இருந்து இதற்கான நிதியைப் பெற்று இந்த நிறுவனத்தை உருவாக்கலாம்.  சிறுபான்ûமைத் துறைக்கு என்று தனியான செயலரை நியமிக்க வேண்டும்.

நன்றி- தினமணி.

No comments:

Post a Comment