காலையில் 7 மணிக்கு மந்திரி உடன் சந்திப்பு.காலை 8 மணிக்கு வாழ்த்தலாம் வாங்க-பிளாக்கில் உள்ள கார்த்திக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து சொல்லவேண்டும்.காலை 9மணிக்கு திருச்சி ஞானசேகரனுடன் போட்டோ ஆல்பம் டிசைன் பற்றிடிஸ்கஷன். .காலை 10 மணிக்கு கரூர் தியாகராஜனுடன் டெக்ஸ்டைல் ஏற்றுமதிக்கு அக்ரிமெண்ட் கையெழுத்து இடவேண்டும்.காலை 11 மணிக்கு கோவை சக்தி உடன் சென்று நகைகள் ஆர்டர் கொடுக்கவேண்டும்..இவையெல்லாம் என்ன என்கின்றீர்களா? பெரிய மனிதர்களாக நாம் மாறிவிட்டவுடன் நமக்கு என்று ஒரு பி.ஏ. இருப்பார். அவர் நேரம் பிரகாரம் நமக்கு அன்றைய நிகழ்வுகளை ஞாபகப்படுத்துவார்.அவ்வாறு வசதி வரும்போது நாம் பி.ஏ. வைத்துக்கொள்ளலாம்.அதுவரை நமக்கு அன்றாட நிகழ்வுகளை நேரத்திற்கு ஞாபகப்படுத்த இந்த சின்ன சாப்ட்வேர் உதவுகின்றது.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் தேவையான தேதியை தேர்வு செய்யவும்.
இதில் வலதுபுறம் பார்த்தீர்களே ஆனால் நிறைய டேப்புகள் இருக்கும். அதில் இரண்டாவதாக உள்ள Events List கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் உள்ள Add கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் யாருக்கு நீங்கள் வாழ்த்துசொல்லப்போகின்றீர்களோ - அல்லது எதைப்பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்தவேண்டுமோ அதன் தேர்வு செய்யவும்.
இதில் வலதுபுறம் பார்த்தீர்களே ஆனால் நிறைய டேப்புகள் இருக்கும். அதில் இரண்டாவதாக உள்ள Events List கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் உள்ள Add கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் யாருக்கு நீங்கள் வாழ்த்துசொல்லப்போகின்றீர்களோ - அல்லது எதைப்பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்தவேண்டுமோ அதன் பெயரை தட்டச்சு செய்யவும்.
தேவையான விவரம் பூர்த்தி செய்ததும் இதில உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில வலதுபுறம் உள்ள Voice Options கிளிக் செய்து தேவையானதை பூர்த்தி செய்யவும்.
கடைசியாக உள்ள Startup Options கிளிக் செய்து தேவையான வார்த்தைகளை தட்டச்சு செய்துகொள்ளவும். Have a Good Day ,Wish You all the Best போன்று வார்த்தைகளை தட்டச்சு செய்துகொள்ளவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். நாம் தட்டச்சு செய்யும் இந்த வார்த்தைகள் தான் நமது அசிஸ்டெண்ட தோன்றும் போது நமக்கு வாசித்துகாண்பிக்கும்.
நாம் கம்யூட்டரை ஆன்செய்ததும் உங்களுக்கு இந்த சேவகர் தோன்றி நமக்கு வாழத்துசொல்லும் அடுத்து அதன் சர்ட் பாக்கெட்டில் இருந்து கடிதம் எடுத்து பார்க்கும் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
எதும் குறிப்புகள் இல்லையென்றால் இரண்டுகைகளையும் விரித்து இல்லை என்று தலை ஆட்டும்.
உடன் தகவலும் சிறிய விண்டோவில் தோன்றும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தகவல் இருப்பின் தகவலை சொல்லிவிட்டு மறைந்துவிடும். இதனால் நாம் அன்றாட நிகழ்ச்சிகளை தொகுத்துவைத்துக்கொள்ளலாம்.
__._,_.___
Tnks
No comments:
Post a Comment