Friday, August 5, 2011

துபாயில் மொபைல் படக்கண்காட்சி, போட்டி

துபாய்: துபாயில் முர்டோச் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் மொபைல் போன் மூலம் எடுக்கப்படும் சிறந்த படங்களுக்கான போட்டி மற்றும் கண்காட்சியை நடத்த இருக்கிறது.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் மொபைலில் படம் எடுத்து அந்த படங்களை http://www.blogger.com/mc/compose?to=discoverers@murdochdubai.ac.ae எனும் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வரிக்கு மே 7ம் தேதிக்குள் அனுப்ப‌ வேண்டும். புகைப்ப‌ட‌ங்க‌ள் பெய‌ர், மொபைல் போன் எண், வ‌ய‌து ஆகிய‌ த‌க‌வ‌ல்க‌ளுட‌ன் அனுப்புங்கள்.

இந்த புகைப்ப‌ட‌ங்க‌ள் வரும் மே 14ம் தேதி முத‌ல் க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் ந‌டைபெறும் புகைப்ப‌ட‌க் க‌ண்காட்சியில் இட‌ம்பெறும்.

தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று படங்களுக்கு பிஜி பிலிம் வ‌ழ‌ங்கும் நவீன தொழில்நுட்ப‌ம் கொண்ட‌ கேம‌ராக்க‌ள் பரிசாக வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

இப்போட்டிக‌ளுக்கு கிராண்ட் ஸ்டோர்ஸ் ம‌ற்றும் பிஜி பிலிம் ஆகிய‌வை அணுச‌ர‌ணை வ‌ழ‌ங்கியுள்ள‌ன‌. மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு http://www.murdochdubai.ac.ae/ / 04-435 5700.

No comments:

Post a Comment