Saturday, August 6, 2011

கட்டப் பட இருக்கும் உலகின் மிக உயர்ந்த கட்டிடம் : ருசிகர தகவல்கள்

--
உலகின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற பெருமையை இது வரை துபாயில் அமைந்துள்ளபுர்ஜ் கலிஃபா என்ற கட்டிடம் இது வரை தக்க வைத்துக் கொண்டுள்ளது .

ஆனால் அதன் பெருமை தற்போது முறியடிக்கப் பட உள்ளது .சவூதி அரேபியாவிலுள்ளஜெட்டா நகரத்தில் 1000  மீட்டர் (1  கிலோ மீட்டர் ) உயரத்தில் கட்டிடம் கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன .

கட்டிடத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டு இதர வேலைகளுக்கான டெண்டர்கள் விடப்பட்டு வருகின்றன .

                                                             கட்டிடத்தின் மாதிரி

இக்கட்டிடத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் .

1. 1000 மீட்டர் உயரம் (1  கிலோ மீட்டர் )

2 .5400  கோடி ரூபாய் செலவில் கட்டப் படுகிறது
 
3 .மொத்தம் 5,30,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது
 
4.நான்கு பருவ காலங்களையும்      உணரும் வகையிலான ஹோட்டல்    ஒன்றும்  இக்கட்டிடத்தில்  அமைகிறது
 
5 .மேலே செல்ல வசதியாக 59  லிப்டுகள் அமைக்கப்பட உள்ளன
 
6 .லிப்டுகள் வினாடிக்கு 10  மீட்டர் வேகத்தில் இயங்கும்


                                                உலகின் உயரமான கட்டிடங்கள்

டிஸ்கி : செலவை யாராவது ஏற்றுக் கொண்டால் அடுத்த பதிவர் சந்திப்பை இங்கு நடத்தலாம் ?!

sahulDubai
+971504753730

No comments:

Post a Comment