இணைய தளத்திலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் ‘அடுத்த ஜனாதிபதியாக வரும் தகுதி உடைய ஒரே மனிதர் அப்துல்கலாம்தான்; ஆனால், அவரை நம் கேடுகெட்ட, இழிவான அரசியல்வாதிகள் வரவிட மாட்டார்கள். இளைய தலைமுறையின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கலாம்’ என்று நடக்கும் பிரசாரம் பெரும் புதிராக இருக்கிறது. இதே கேடுகெட்ட, இழிவான அரசியல்வாதிகள்தான் கலாமை முதலில் ஜனாதிபதியாக்கினார்கள் என்பதையே இந்தப் பிரசாரகர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, கலாம் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியான-வரே அல்ல! காரணம், அவர் இந்தியாவை மேலும் மேலும் ராணுவமய-மாக்கிய விஞ்ஞானத் துறை நிர்வாகி என்பதுதான். அடிப்படை மருத்துவ வசதியும் கல்வியும் இல்லாத கோடிக்கணக்கான ஏழைகள் வாழும் நாட்டில், கோடிக்கணக்-கான ரூபாய்களை ராணுவத்துக்குச் செலவிடுவது சமூக விரோதச் செயல் என்பது என் தீர்மானமான கருத்து. வல்லரசு, வல்லரசு என்பதுதான் அவருடைய ஓயாத பல்லவி.
எங்கு சென்றாலும் மாணவ&மாணவிகளைக் கூட்டிவைத்துக்-கொண்டு பேசும் அபாரமான பொதுஜனத் தொடர்பு உத்தியை அவர் வெற்றிகரமாகக் கையாண்டு, இளைய தலைமுறையின் ஹீரோ என்ற பட்டத்தைப் பெற்றார். இது அவருக்கு ஒரு வசதியான முகமூடியாக அமைந்தது, அவ்வளவுதான்!
அவருடன் நேரில் உரையாடிய பிறகு, தங்கள் ஹீரோ வொர்ஷிப் பாவனையி-லிருந்து வெளியே வந்துவிட்ட கல்லூரி மாணவர்களை நான் பார்த்தேன். பாரதிதாசன் பல்-கலைக்கழக இளைஞர்-களுடன் அவரைச் சந்திக்கச் சென்றபோது, சந்திப்புக்கு முன் பரவசமாக இருந்தவர்கள் எல்லாரும், பின்னர் ஏமாற்றம் தெரிவித்தார்கள். சந்திப்புக்குப் பின் அந்த இளைஞர்களை வசீகரித்த வி.ஐ.பி. கிரண் பேடி.
உண்மையில், குழந்தைகளின் பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை எதுவும் அப்துல் கலாமால் அரை அங்குலம்கூட மாற்றியமைக்கப் படவில்லை.
தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட-லாமா, கூடாதா?
தொழிற் படிப்புக்கு நுழைவுத் தேர்வு சரியா, தவறா?
நன்கொடை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது?
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, மேற்படிப்பில் தேவையா, இல்லையா?
இப்படிக் கல்வி சார்ந்த மிக முக்கியமான எரியும் பிரச்னைகள் எதைப் பற்றியும் அவர் தீர்மானமாகக் கருத்துச் சொன்னதே இல்லை.
தாங்கள் விரும்பும் முஸ்லிம்கள் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவதற்காக பி.ஜே.பி. முன்னிறுத்திய இஸ்லாமியர் அவர். இந்து & முஸ்லிம் பிரச்னை பற்றியும் அவர் கருத்து தெரிவித்ததில்லை.
தமிழகத்தில் சுனாமி பாதிப்பை நேரில் காண அவர் வரவில்லை.
ஜெயேந்திரர் கைதின்போது அவரை வீட்டுச் சிறையில் மட்டும் வைக்க முடியுமா என்று அவர் அலுவலகத்திலிருந்து அன்றைய தமிழக அரசுக்குப் பல மன்றாடல் கோரிக்கைகள் வந்ததாக, அப்போது பத்திரிகைகளில் வெளியாகியிருக்கிறது.
தற்போதைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பல முறை திரும்பப் போட்டியிட விருப்பமில்லை என்று சொல்லி வந்தவர், ஜெயலலிதாவின் மூன்றாம் அணி முயற்சியின் போது, ஜெயிப்பது நிச்சயம் என்று இருந்தால், தயார் என்று சொன்னது அவருடைய சலனத்தை வெளிப்படுத்தியது.
அப்துல் கலாம் எப்படி ஒரு ஐகான் ஆக இளைய சமுதாயத்-துக்கு இருக்கிறார் என்பது எனக்கு இன்னமும் புதிர்தான்.
நன்றி - ஞானி
அன்பு சகோதரர்களே !
ஜனாதிபதியாக கே. ஆர். நாராயணன் என்ற ஒரு தலித் இருந்தார்.
பதவி முடிந்த பின் அவரது பேட்டியில் இருந்து ஒரு பகுதி :
Q : It is said that you were very sad and disturbed on the last days of your term as President. Did the communal riots in Gujarat upset you?
Ans : There was governmental and administrative support for the communal riots in Gujarat. I gave several letters to Prime Minister Vajpayee in this regard on this issue. I met him personally and talked to him directly. But Vajapyee did not do anything effective.
I requested him to send the army to Gujarat and suppress the riots. The Centre had the Constitutional responsibility and powers to send the military if the state governments asked. The military was sent, but they were not given powers to shoot. If the military was given powers to shoot at the perpetrators of violence, recurrence of tragedies in Gujarat could have been avoided.
However, both the state and central government did not do so. Had the military been given powers to shoot, the carnage in Gujarat could have been avoided to a great extent. I feel there was a conspiracy involving the state and central governments behind the Gujarat riots.
ஜனாதிபதி பதவி அதிகாரங்கள் குறித்து எல்லாம் தெரிந்து அதில் அமர்ந்து இருந்த இந்த புண்ணியவானுக்கு,
மனிதாபிமானம் பேணும் மாமனிதருக்கு,
கூடங்குளம் பற்றி அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கைவிட்டு வாலண்டியராக வேனில் ஏறும் இந்த புலிகேசிக்கு,
தனது அரசு பதவி போன பிறகு கூட இதை பற்றி பேச நாக்கு எழவில்லையா ?
No comments:
Post a Comment