Tuesday, January 31, 2012

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்


திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம்.உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக,துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.
http://www.shotpix.com/images/34561138020662321578.jpg

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டுவருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது. 
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிதனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன் என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய்  நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன் என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட. 
நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லிசிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன்,பெரும் பெருமை கொள்கிறேன் 


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. 
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே


http://www.akshayatrust.org/contact.php 


Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933 
E mail :ramdost@sancharnet.in

தமுமுக-மமக பொதுக்குழு தீர்மானங்கள்


1. தமிழக இடஒதுக்கீடு

தமிழகத்தில் தற்போது முஸ்லிம்களுக்கு நடைமுறையில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை குறைந்தது 5 சதவீதமாக உயர்த்தித் தரவேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
2. மத்திய அரசில் இடஒதுக்கீடு
மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கும் அனைத்து சிறுபான்மையினருக்குமான 4.5 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒரு மோசடி என இப்பொதுக்குழு குற்றம்சாட்டுகிறது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின்படி மொத்த சிறுபான்மையினருக்கும் 15 சதவீத இடஒதுக்கீடும், அதில் முஸ்லிம்களுக்கு மட்டும் 10 சதவீத உள் ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்றும், இதற்காக அரசியல் சாசன சட்டத்தின் 9வது அட்டவணையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் இப்பொதுக்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.
3. கூடங்குளம் அணுஉலை விவகாரம்
கூடங்குளம் அணுஉலை உற்பத்திக்கு எதிராக நான்கு மாத காலமாக அப்பகுதி மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகிறார்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, நமது எதிர்காலத் தலைமுறைகளின் பாதுகாப்பையும், சுற்றுச்சூழலையும் காத்திடும் வகையில் கூடங்குளம் அணுஉலை செயல்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மேற்கு வங்கத்தில் அணுஉலைகளை அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில அரசு அறிவித்திருப்பது போல், இவ்விஷயத்தில் தமிழக அரசும் உறுதியான நிலைபாட்டைப் பின்பற்ற வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
4. முல்லைப் பெரியாறு விவகாரம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடுகள், மனிதாபிமானத்திற்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் சவால்விடும் வகையில் இருப்பதாக இப்பொதுக்குழு குற்றம்சாட்டுகிறது.
இவ்விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பொதுநல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று தமிழகத்தின் உரிமையை மீட்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
5. மீனவர்கள் பாதுகாப்பு
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டுள்ளன. இவ்விஷயத்தில் இந்திய அரசு போதிய அக்கரையின்றி செயல்படுகிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடற்பகுதியில் இந்தியக் கடற்படையை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
6. தீவிரவாத பீதி
இந்தியாவெங்கும் நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் காவி பயங்கரவாத சக்திகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குப் பின்னணியாக செயல்படும் முதன்மை சக்திகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள அனைத்து குண்டுவெடிப்புகளுக்குப் பின்னாலும் உள்ள இவர்களது தொடர்புகள் முழுமையாக கண்டறியப்பட வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
7. அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
இந்தியா முழுக்க பல்வேறு தீவிரவாதப் பின்னணியின் தொடர்பாக சந்தேகிக்கப்பட்டு, விசாரணைக் கைதிகளாக வாடும் அனைவரையும் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நஷ்டஈடு வழங்கவும் ஆவண செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
8. மதக்கலவர தடுப்புச் சட்டம்
நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்த "மதக்கலவர தடுப்புச் சட்டத்தை' எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படாமல் அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு ஜனநாயகத்தின் மீதும், மதச்சார்பின்மையின் மீதும் அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
9. பரமக்குடி சம்பவம்
பரமக்குடியில் கடந்த செப்.11, 2011 அன்று காவல்துறையில் ஆறு தலித்துகள் சுட்டுக் கொல்லப்பட்டதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கட்டுப்படுத்த வேண்டிய ஒரு நிகழ்வை, போர்க்களமாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு இலாக்காப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
10. கட்டண உயர்வு
தமிழக அரசு பேருந்துக் கட்டண உயர்வு அதிரடியாக உயர்த்தியது பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. சாமான்ய மக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் அன்றாடம் பாதிக்கப்படுவதால், பேருந்து கட்டண உயர்வைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
11. ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை
பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதிகளின் விடுதலை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், 14 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
12. வெளிநாட்டு வாழ் தமிழர் நலன்
வளைகுடா நாடுகளில் உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நலனைக் காக்கும் விதத்தில் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சகத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
மேலும், வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட ஆவண செய்யப்படும் என சமீபத்தில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியிருப்பதை இப்பொதுக்குழு மனமார வரவேற்கிறது.
13. அரபு வசந்தத்திற்கு வரவேற்பு
மத்திய கிழக்கு - அரபு நாடுகளில் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகம் வேண்டி பொதுமக்கள் நடத்திவரும் கிளர்ச்சிகளுக்கு இப்பொதுக்குழு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
எகிப்தில் அமைதி வழியில் தேர்தலை சந்தித்து, தங்களின் எண்ணங்களை சாதித்துக் கொண்ட எகிப்து மக்களை இப்பொதுக்குழு பாராட்டுகிறது. மேலும் சிரியா, ஜோர்டான், ஏமன் உள்ளிட்ட நாடுகளிலும் அமைதியும், ஜனநாயகமும் மலர அரபு லீக்கும், முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பும் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தலையிட வாய்ப்பளிக்க வேண்டாம் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
14. போர் வேண்டாம்
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் தேர்தலைக் கணக்கில் கொண்டு, ஈரானின் மீது போர் தொடுக்க முயலும் அமெரிக்காவை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது. சட்டவிரோதமாக அணுகுண்டுகளை வைத்திருக்கும் இஸ்ரேலைப் பாதுகாக்கும் அமெரிக்காவுக்கு ஈரானை எச்சரிக்க எந்தத் தகுதியும் இல்லை. மேலும், சர்வதேச சமூகம் இந்த பாரபட்சப் போக்கைக் கண்டிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
15. ஹஜ் விசாவை அதிகரிக்க வேண்டும்
இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் செய்யும் புனிதப் பயணிகளின் எண்ணிக்கை வருடந்தோறும் உயர்ந்து வருகிறது. 20 கோடி இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கேற்ப, சவூதி அரேபியாவிடம் கூடுதல் ஹஜ் விசாக்களைப் பெற மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
16. உளவு அமைப்புகளுக்கு கண்டனம்
இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் செய்யும் ஹாஜிகளுடன் உளவாளிகளை இந்திய அரசு அனுப்பி வைப்பதாக பல ஹாஜிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் உண்மையாக இருக்குமெனில், இப்பொதுக்குழு அதை வன்மையாக கண்டிக்கிறது. முஸ்லிம்களின் இறைநம்பிக்கையையும், தேசப்பற்றையும் உளவுபார்ப்பதை ஜீரணிக்க முடியாது. இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
17. பூரண மதுவிலக்கு
மக்களின் முன்னேற்றம், ஆரோக்கியம், குடும்ப வாழ்வு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி, பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
18. தானே புயல் நிவாரணம்
கடந்த மாதம் கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களையும், புதுச்சேரியையும் தாக்கிய தானே புயலில் உயிரிழந்த அனைவருக்கும் தமிழக அரசின் நிவாரண உதவிகள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்ற குறைகளும், கவலைகளும் உள்ளது. இவ்விஷயத்தில் கூடுதல் கவனத்தை செலுத்துமாறு தமிழக அரசையும், மத்திய அரசையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
www.tmmk.info

ஆட்டோ…ப்ளீஸ்

அதிகமான ஊதியத்தை பெருவதற்காக வேண்டி அமீரகம் வந்தவர்களில் நானுமொருவன். ஆனால் இன்றைய சூழல் மாறிக் கொண்டு வருகிறது. அரபு நாடுகளை விட நம் தாயகமே சிறந்தது என்ற நிலை வளர்ந்து வருகிறது.காரணம் விலை ஏற்றங்கள். விலைகள் ஏறக்கூடிய அளவு பலருக்கு சம்பளம் ஏறுவதில்லை. வந்தக் காலத்தை கணக்கிலெடுத்தால் கையில் மிஞ்சிய தொகை கடனாக இருக்கிறது.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கிறது நம் நாட்டில் நம்மால் வாழமுடியுமா? என்ற கேள்வி என்னுல் எழுந்தது; அதை தெளிவு படுத்தியது ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் நடந்த உரையாடல்.

இரண்டாண்டுகளுக்கு முன் சென்னை சென்றிருந்தேன். மூன்று தினங்கள் சென்னையில் தங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. T நகர் செல்வதற்கு ஆட்டோவை அமர்த்திக் கொண்டேன்.

ஆட்டோ ஓட்டுனர் சுமார் 45 வயதுமிக்கவராக தோற்றமளித்தார். 
அவரிடம் 'உங்க பொழப்பு எப்படி இருக்கு?' என்று பேச்சுக் கொடுத்தேன். 
"நன்றாக இருக்குது சார்; வீட்டுக்கு போய் மூன்று தினங்கள் ஆச்சு; கோயிலுக்கு போகனும் பெரிய சிலவாக இருக்கு, அதனால வீட்டுக்கு போகாமல் வேலைப் பார்க்கிறேன்" என்றார்.

'உங்க வீடு எங்கிருக்கு' என்றேன்? 
'அம்பத்தூர் பக்கத்துல சார்; என்றார் . 
"அம்பத்தூர் தூரமில்லையே; பக்கத்துல தானே இருக்கீங்க தினமும் போய் வரலாம் தானே" என்றேன். 
"போகலாம் சார் வீட்டுக்கு போயிட்டா நேரம் எடுத்துடும் அதனால இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு போவேன்" என்றார்.

"எத்தனை பிள்ளைகள்?' கேட்டேன்.
"மூனு பொட்ட புள்ளைங்க; பெருசு காலேஜ் போகுது மற்ற ரெண்டும் இங்கிலீஸ் மீடியத்துல படிக்குதுங்க" என்று அவர் கூறியதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

'நீங்க என்ன படிச்சுருக்கீங்க?'

"பெருசா ஒன்னும் படிக்கல அதனால தான் என் பிள்ளைங்கல நல்லா படிக்க வைக்கிறேன்" என்றார்.

'படிப்பு சிலவே பெரிய தொகை வருமே எப்படி சமாளிக்கிறீங்க?'

"ஆமா சார்! சிலவு அதிகம் தான் அதனால தான் இரண்டு மூனுநாளு கண்விழிச்சி ஆட்டோ ஓட்டுறேன் கிடைக்கிது சார்" என்றார்.

"இப்படி ஓய்வில்லாமல் ஆட்டோ ஓட்டினா உங்க உடம்பு பாதிக்குமே ரெஸ்ட்டும் தேவைதானே" என்றேன்.

"கஸ்டமர் இல்லாத சமயத்துல எங்கனயாவது ஓரமா வண்டிய நிறுத்தி தூங்கிக்குவேன்: என்றார்.

'வீடு வாடகை எவ்வளவு கொடுக்குறீங்க.?'

"சொந்த வீடு சார் என்றார். நான் மெட்ராஸ் வந்து இருபது வருடம் ஆச்சு வந்தப்ப வாடகைவீட்டுலதான் இருந்தேன் 15 வருசத்துக்கு முன்னால இடம் வாங்கி வீடு கட்டிட்டேன்" என்றார்.

'வேற ஏதும் தொழில் பண்றீங்களா?'

"இல்ல சார் நமக்கு தெரிஞ்சது ஆட்டோ மட்டும்தான்" என்றார்.
"ஆட்டோ ஒட்டி இவ்வளவு சம்பாதிக்கிறீங்களா?ஆச்சரியமா இருக்கு சார்… எப்படி இது உங்களால முடியுது . வெளிநாட்டுல 20 வருசத்துக்கு மேல இருந்தும் முக்கி முக்கி ஒரு வீட்டை கட்டுவதற்கு எவ்வளவு கஸ்டப்படுறாங்க கடனாளியா இருக்காங்க நீங்க சொலறத என்னால நம்ப முடியல சார்" என்றேன்.

"என்ன சார் நம்பிக்கை! மெட்ராசுக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேரு வராங்க, போறாங்க தெரியுமா? இப்ப இருக்குற ஆட்டோ மாதிரி இன்னொரு மடங்கு தேவை இருக்கு; எங்கேயும் ஆட்டோ சும்மா நின்னு நீங்க பார்க்க முடியாது. அப்படி நின்னா அது ரிப்பேருலதான் நிக்கும். மனுஷங்கிட்ட நேர்மையும், வைராக்கியம் இருந்தா எப்படியும் முன்னுக்கு வரலாம் சார்." என்றார்

அவருடைய அந்த வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது .
உண்மைதான் மனுஷனிடம் நேர்மையும், வைராக்கியமும் இருக்க வேண்டும் அது இல்லாத போது வாழ்க்கையே நேர்மை இழந்து விடும்.

ஆட்டோ ஓட்டக் கூடிய ஒருவரால் தன் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கொடுக்க முடிகிறது, தன் குடும்பத்தை சொந்த வீட்டில் வாழவைக்க முடிகிறது, தேவைகளை நிறைவேற்ற முடிகிறது, இத்தனையும் நம் நாட்டில் உழைத்து செய்யமுடிகிறது என்றால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்தளவு வளர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

வளைகுடாவில் உழைத்து வளமிக்கவர்களாக ஆனவர்கள் சிலர். ஆனால் இன்னும் வளமோடு வாழ்ந்துவிடலாம் என்ற கனவில் உழைக்கக் கூடியவர்களில் நானும் ஒருவன். 
பல ஆண்டுகளை கடந்து பிழைப்புக்காக வாழ்க்கையை இழந்து இன்னும் வீடு கட்ட முடியாதவர்கள் எத்தனைபேர்? உழைப்பு என்பது வளைகுடா நாட்டுக்கு மட்டும் சொந்தமானதா? அந்த உழைப்பை நம் நாட்டில் மூலதனமாக்கினால் முன்னேற்றம் காண முடியாதா? 
நம் நாட்டில் உழைத்து வளமான வாழ்க்கை வாழ முடியுமா ? என்ற கேள்வி என்னுல் எழும்போதெல்லாம் ஆட்டோ ஓட்டுனரை நினைத்துக் கொள்கிறேன்.

Sunday, January 29, 2012

மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜே.எஸ்.ரிபாயி


மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவராக ஜே.எஸ்.ரிபாயி போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் முறையே தாம்பரம் மற்றும் மேடவாக்கத்தில் நடைபெற்றது. இதில் மாநில புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


இது குறித்த த.மு.மு.க. மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தாம்பரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மாநில தலைவர் ஜே.எஸ்.ரிபாயி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிபொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜே.எஸ்.ரிபாயி, பொருளாளராக ஒ.யு.ரஹ்மத்துல்லா,


த.மு.மு.க. பொதுச் செயலாளராக பி.அப்துல்சமது 




மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளராக தமீமுன் அன்சாரி 
ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் நிர்வாக குழு மூத்த தலைவர்களாக நானும், ஹைதர் அலியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.

இடஒதுக்கீடு
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின் படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தானே புயலால் கடலூர், விழுப்புரம், நாகை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட சேதத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் அப்பகுதி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டிக்கத்தக்கது. மேற்கு வங்காளத்தில் அணு உலைகளை அனுமதிக்கமாட்டோம் என அந்த மாநில அரசு அறிவித்து இருப்பது போல தமிழக அரசும் இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

ஆதரவு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகச் சிறப்பான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். தமிழக அரசு எடுத்துவரும் மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி என்றும் ஆதரவாக இருக்கும்.

தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தர மத்திய அரசை வலியுறுத்தி த.மு.மு.க. சார்பில் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.எஸ்.ரிபாயிக்கு மூத்த தலைவர்கள் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.ஹைதர் அலி வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் யாக்கூப் நன்றி தெரிவித்தார்.

www.tmmk.info

Friday, January 27, 2012

அல்ஹாஜ் M.O.H. ஃபாரூக் மரைக்காயர் அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும்,

சவுதி அரேபியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதரும், தற்போதைய கேரள மாநில கவர்னருமான M.O.H. ஃபாரூக் மரைக்காயர் அவர்கள் இந்திய நேரப்படி இன்று 26.01.2012 இரவு 9:15க்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைத்து மரணமடைந்துவிட்டார்கள். 
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்  إنا لله وإنا إليه راجعون 

அவர்களின் நல்லடக்கம் இன்ஷா-அல்லாஹ் பாண்டிச்சேரியில் முழு அரசு மரியாதையுடன்  நடக்க இருக்கிறது, எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து, தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. 

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)” 

29:57
Every soul will taste death. Then to Us will you be returned.

Profile of Late M.O.H. Farooq.
Born on 6th September 1937 at Karaikal (Pondichery), B.A. (Economics) at Loyola College, Chennai. He was appointed as the Indian Ambassador to Saudi Arabia in September 2004. In 2010, Farook was appointed as Governor of Jharkhand. He was appointed as Governor of Kerala on August 25, 2011. He is a Political and Social worker. He was a member, Pondichery Legislative Assembly from 1964-91 and also a Speaker, Legislative Assembly from 1964-67 and also 1980-85.
 He was the Chief Minister of Pondichery during the period 1967-68, 1969-74 & 1985-90. He was also the Leader of opposition, Pondichery Legislative Assembly from March to December 1990. In 1991, he was elected to the Indian Parliament (Lok Sabha). He also served as a Union Minister of State for Civil Aviation and Tourism from June 1991 to December 1992. He was re-elected to the Parliament in 1996 and also in 1999.
He also held several other positions such as a member of Central Haj Committee, Mumbai (1975-2000), Public Accounts Committee of Parliament of India, Member of Parliamentary Standing Committee on Home Affairs, Member of Committee on Wakf Laws, Member, Joint Committee to enquire into Irregularities in Securities and Banking Transactions, Member Consultative Committee on Ministry of Science and Technology, Member, Committee on Members of Parliament, Local Area Development Scheme.
 
His special interests are Books, Women Welfare and Upliftment of the downtrodden. His favourite pastime and recreation are reading, sports, social work and horticulture. He visited many countries like Australia, France, Malaysia, Saudi Arabia, Syria, UK, USA and erstwhile USSR. He also attended world Tamil conference at Paris in 1970, Disarmament conference at Vienna, Seminar at Fletcher School of Law and Diplomacy, Harvard University, USA, Deputy Leader and Leader, Hajj Goodwill Delegation in 1987 and 1989 respectively. Visited Syria in 1991 for signing a protocol on tourism. He participated in struggle for liberation of Pondichery as a student during 1953-54 when Pondichery was a French colony.