Wednesday, January 4, 2012

சிறுபான்மையினருக்கு இலவச ஓட்டுனர் பயிற்சி!


சிறுபான்மை மக்களில் வேலையில்லாதவர்களுக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சிகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இலவச ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
"வேலையில்லாத சிறுபான்மை பிரிவினர்களுக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சிகள் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இலவச ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னை, தரமணி சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் திருச்சி சாலை போக்குவரத்து கழகம் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சியும் விழுப்புரம், வேலூர், திருச்சி (அரசு விரைவு போக்குவரத்து கழகம்), புதுக்கோட்டை, கும்பகோணம், காரைக்குடி, சேலம், தர்மபுரி, ஈரோடு, பொள்ளாச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திண்டுக்கல், விருதுநகர், கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சியும் அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேருவதற்கான நேர்காணல் ஜனவரி 5 மற்றும் 6-ம் தேதி நடைபெறும். குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்துக்குக் குறைவாக 20 வயது நிறைவு பெற்ற சிறுபான்மை பிரிவினர் இதில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம்."
என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment