Friday, January 20, 2012

இராமநாதபுரத்தில் இரயில்களின் சேவையை அதிகப்படுத்த வேண்டும் - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை


இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
இராமாநாதபுரத்திற்கு வருகைப் புரிந்த தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் இன்று (19-01-2012) 10 கோரிக்கை மனுக்களை அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுக்களில் இடம் பெற்றுள்ளவை-
1. 16701 சேது விரைவு வண்டி இராமநாதபுரத்திற்கு அதிகாலை 2.55 மணிக்கு வருகின்றது. இது அசாதாரணமான நேரமாகும். இதனால் அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் காலை 6 மணி வரை பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.மேலும் இந்த வருகை நேரம் முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு தொல்லைகளை அளிக்கின்றது.
சென்னையிலிருந்து வரும் மற்றொரு ரயிலான 16712 காலை 9.55 மணிக்கு ராமநாதபுரத்திற்கும் 11.45க்கு ராமேஸ்வரத்திற்கும் வருகின்றது. இதனால் அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என பல தரப்பட்டோர் ஒரு நாளின் கால் பகுதியை ரயிலிலேயே கழிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த இரு ரயில்களும் காலை 5 முதல் 8 மணிக்குள்ளாக இராமநாதபுரம் வரும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட வேண்டும்
2. சென்னைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் பகலில் இரு மார்க்கங்களிலும் அதிவிரைவு ரயில் விடப்பட வேண்டும். இந்த ரயில்கள் சென்னையிலிருந்தும் ராமேஸ்வரத்திலிருந்தும் காலை 6 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு சென்றதடைய வேண்டும்.
3. ராமேஸ்வரம் - –மதுரை தடத்தில் இரு மார்க்கத்திலும் கூடுதல் பாஸஞ்சர் வண்டி விடப்பட வேண்டும். ராமேஸ்வரத்தில் காலை 8 மணிக்கு புறப்பட்டு 11.30க்கு மதுரை அடைய வேண்டும். இதே போல் மதுரையில் காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30க்கு ராமேஸ்வரம் வந்தடைய வேண்டும்.
4. ராமேஸ்வரம் –- திருச்சி தடத்தில் இரு மார்க்கத்தில் பாஸஞ்சர் வண்டி விடப்பட வேண்டும். இரு மார்க்க்த்திலும் பகல் 2 மணிக்கு புற்ப்பட்டு இரவு 8 மணிக்கு சென்றடைய வேண்டும்.
5. ராமநாதபுரம்,தூத்துக்குடி வழியாக காரைக்குடியிலிருந்து கன்னியாகுமரிக்கு புதிய இரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு அறிவிப்பு 2008 மத்திய வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆய்வு பணி கடந்த ஆகஸ்ட் 2011 முடிவடைந்து ரயில்வே வாரியத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இந்த திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்பட வேண்டும். இந்த திட்டம் பிற்படுத்தப்பட்ட இந்த பகுதியின் முன்னேற்றத்திற்கு உதவுவதுடன் ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரிக்கு வரும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பெரிதும் உதவிடும்.
6. 2011 ஜனவரியில் முடிவடையும் என்று கூறப்பட்ட விருதுநகர் –- மானாமதுரை அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் விரைவில் முடிக்கப்பட வேணடும்.
7. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இரு நடைமேடைகளிலும் முழுமையாக நிழல் கூரை அமைக்கப்பட வேண்டும்.
8. உச்சிப்புளி ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வரும் இரண்டு விரைவு வண்டிகளும் நிற்க வேணடும்.
9. தற்போது ராமேஸ்வரம் – மதுரையிடையே ஒடும் பாஸஞ்சர் ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதால் கூடுதல் ரயில் பொட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.
10. சென்னையில் மூன்றாவது நிறுத்தமான தாம்பரத்தை அமைக்காமல் முதல் ரயில் நிலையமான ராயபுரத்தை விரிவாக்க வேண்டும்.

www.tmmk.info

No comments:

Post a Comment