Wednesday, January 4, 2012

"பேய்' வீட்டுக்குள் நுழைந்த பெண்ணிடம் சேட்டை செய்த இருவர் கைது


பிரமாண்டமான வணிக வளாகத்தில் திகில் அனுபவத்துக்காக அமைக்கப்பட்டிருந்த,"பேய்வீட்டுக்குள் நுழைந்த பெண்ணிடம் சேட்டை செய்ததாகஇன்ஜினியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.சென்னைஅமைந்தகரை பகுதியில்,"ஸ்கை வாக்வணிக வளாகம் உள்ளது. இங்கு பொழுது போக்க பல்வேறு விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. அதில், "பேய் வீடும்ஒன்று. இருட்ட நிறைந்த அறைக்குள்விநோத சப்தங்களை பேய்கள் எழுப்பும். இதற்குள் புகுந்து வெளியே வர வேண்டும். திகைப்பான அனுபவத்தை ஏற்படுத்துவதற்காக இந்த அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. பாடிகுமரன் நகர்ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த அபுதாகிர்அவரது மனைவி ராபியா மற்றும் உறவினர் ஷகிரா பானு ஆகியோர், "ஸ்கை வாக்வளாகத்திற்குச் சென்றனர்.

திகில் அனுபவத்தைப் பெற பேய்வீடு பகுதிக்குள் ஒவ்வொருவராக சென்று வந்தனர். கடைசியாக ஷகிராபானு சென்றார். அப்போதுஇருட்டு பகுதிக்குள் இரண்டு வாலிபர்கள்அவரிடம் தவறாக நடக்க முயன்றனர். அதிர்ச்சியில் அலறியனார் பெண். திகில் அடைந்த அபுதாகிர் குடும்பத்தினர். வாலிபர்களை மடக்கினர். அடித்துதுவைத்தனர். அமைந்தகரை போலீசில் புகாரும் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் மலர் மன்னன் இருவரையும் கைது செய்தார். விசாரணையில்அவர்கள் மேற்கு மாம்பலம்எல்லையம்மன் கோவில் தெரு சுரேந்திரன், 25; சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் ஹரிஷ், 27;தனியார் நிறுவன விற்பனை மேலாளர் ஆகியோர் என்பதும் தெரியவந்தது.பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

நன்றி:  payanullathagaval

No comments:

Post a Comment