Sunday, January 8, 2012

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஓய்வூதியத்துடன் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.



ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருப்பதாக அவர் கூறினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறிய அவர், சிரியா, லிப்யா, பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக தெரிவித்தார். அநந்டுகளில் பதற்றம் அதிகரித்தால் எகிப்து, பஹ்ரைன் நாடுகளில் மேற்கொண்டதைப் போல அங்கிருந்து இந்தியர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

No comments:

Post a Comment