Wednesday, January 4, 2012

ஓடும் ரயிலில், கைக்குழந்தைகளுடன் சென்று, நூதன முறையில் திருடும் பெண்கள்


ஓடும் ரயிலில்கைக்குழந்தைகளுடன் சென்றுநூதன முறையில் திருடிய நான்கு பெண்களை,போலீசார் கைது செய்தனர். விசாரணையில்திருடும் பெண்களுக்கு பயிற்சி அளிப்பதுதிருட்டுக்கு ஏற்ப கமிஷன் வழங்குவது ஆகியவற்றைஇப்பெண்கள் மேற்கொண்டுள்ள விவரம் தெரிய வந்துள்ளது.சென்னையில் இருந்து அரக்கோணம் வரும் ரயில்களில்அடிக்கடி நகைபணம் திருட்டு நடந்தது. சில வாரங்களுக்கு முன்திருத்தணியை சேர்ந்த ரசீரா என்பவர்பர்சில் இருந்த, 400 ரூபாய்,ஜமிலா என்பவர் பையில் வைத்திருந்த, 20 ஆயிரம் ரூபாய் என, 60 பயணிகளிடம் திருட்டு நடந்தது.அரக்கோணம் ரயில்வே போலீசார்தனிப்படை அமைத்துவிசாரணை நடத்தி வந்தனர்.

அரக்கோணம் புது பஸ் ஸ்டாண்டில்டிசம்பர் 31ம் தேதி ரோந்து சென்ற போதுகைக்குழந்தைகளுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நான்கு பெண்களைப் பிடித்து விசாரித்த போதுகிடைத்த தகவல்கள்:திருத்தணி வசுந்தா கோவில் பகுதியைச் சேர்ந்த சுப்பு லட்சுமி,30, சுகந்தி,36, நல்லட்டூரை சேர்ந்த ரேணுகா,35, ரெஜினா,35, ஆகியோர்ரயில்களில்பயணிகள் போல கைக்குழந்தையுடன் பயணம் செய்வது வழக்கம்.
சீட்டில் அமர்ந்திருப்பவர்களிடம், "கொஞ்ச நேரம் குழந்தையை வைத்திருங்கள்என்றுபரிதாபமாக கேட்பர்இரக்கப்படும் சிலர்குழந்தையை வாங்கிக் கொள்வர். பின்குழந்தையை திரும்ப வாங்கி, "தேங்ஸ்சொல்லி இறங்கி விடுவர்.

சிறிது நேரத்திற்குப் பின்குழந்தையை மடியில் வைத்திருந்தவர்களிடமிருந்து, "ஐயோ... என் பர்சைக் காணோம்...எனஅலறல் சத்தம் கேட்கும். குழந்தையை வாங்கிக் கொள்ளும் சாக்கில்இந்தப் பெண்கள்பர்சை, "லபக்செய்ததையாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.
இப்படிக் கொள்ளையடிப்பவர்கள்தனியாக வர மாட்டார்கள்ஒரு ரயிலில், 40 பெண்கள் வருவர்.ஒருவர் திருடிய பிறகுஉடனுக்குடன் தங்கள் சகாக்களிடம் பொருட்களை கை மாற்றுவர். அங்கிருந்துமேலும் நான்கு பேருக்குபொருட்கள் உடனுக்குடன் கை மாறி விடும். கடைசிப் பெட்டியில் உள்ளவரிடம்,அனைத்துப் பொருட்களும் சென்று விடும்.
பெரும்பாலும்சென்னை-காட்பாடி மார்க்கத்தில் வரும் ரயில்களில்இது போன்ற திருட்டுகள் நடக்கின்றன.

திருவள்ளூர் ஸ்டேஷனில்கைக்குழந்தையுடன் ஏறுகின்றனர். அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் வருவதற்கு முன்அனைத்து "லபக்'குகளும் முடிந்து விடுகின்றன.
ஒரு ரயிலில் இவர்கள் ஏறி இறங்கினால்குறைந்தது, 25 பேரிடம் திருட்டு நடக்கிறது. இவர்கள் ஓசியில் பயணம் செய்வதில்லை. "சீசன் டிக்கெட்எடுத்து, "ஸ்டைலாகபயணம் செய்கின்றனர்.கைகளில் தூக்கி வரும் குழந்தைகளும்அவர்கள் பெற்றெடுத்த குழந்தைகள் அல்ல. திருத்தணிநல்லட்டூர்நகரியில்கைக்குழந்தைகளைதினசரி, 200 ரூபாய்க்குவாடகைக்கு எடுக்கின்றனர். ரயில்களில் திருடுவதற்கு எனநல்லட்டூரில் ஒரு குழுவே உள்ளது. இங்குஇதற்கென பயிற்சி கொடுக்கின்றனர்.

சில நேரங்களில் மாட்டிக் கொள்ளும் பெண்கள்ஓடும் ரயிலில் இருந்து கைக்குழந்தையுடன் குதித்து விடுகின்றனர். இதற்கும்இவர்களுக்கு சிறப்புப் பயிற்சி உண்டு!திருடும் பெண்களுக்குதினம் மூன்று வேளை சாப்பாடு போட்டு, 200 ரூபாய் சம்பளம் கொடுக்கின்றனர்திருடும் மதிப்புக்கு ஏற்றபடி,கமிஷனும் உண்டு. பெரும்பாலும், 20 வயது முதல், 30 வயதுள்ள பெண்கள் இதில் ஈடுபடுகின்றனர்.காலையில், 6 மணி, 10 மணிமதியம் மணி எனமூன்று ஷிப்டாக குழந்தையை வாடகைக்கு எடுத்து, 8 மணி நேரத்தில்மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்து விடுகின்றனர்.

இந்தத் தகவல்களைக் கேட்ட அரக்கோணம் ரயில்வே போலீசார்திகைத்து நின்றனர்.
அவர்கள் கூறியதாவது:ஓடும் ஒயில்களில் திருட்டுப் போவதுஅரக்கோணத்தில் தான் அதிகம் நடக்கிறது. ஒரு நாளைக்குகுறைந்தபட்சம், 400 பேரிடம் திருட்டுப் போகிறது. நிறையப் பேர் புகார் கொடுப்பதில்லை. நல்லட்டூருக்கு சென்று விசாரித்துஒட்டுமொத்த திருட்டுக் கும்பலையும் பிடிக்க,நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment