Sunday, February 19, 2012

போலி ஆசிரியர்கள் பெயரில் ரூ40 லட்சம் சம்பளம் மோசடி


போலி ஆசிரியர்கள் பெயரில்

ரூ40 லட்சம் சம்பளம் மோசடி

 த்துகள்


சேலம்: சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட் ஆக பணியாற்றி வந்தவர் லிங்குராஜ். இந்த அலுவலகத்தில் ஆசிரியர்களின் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பெயரில் போலியாக வங்கிக் கணக்கு தொடங்கி, அவர்கள் பெயரில் மாதந்தோறும் லிங்குராஜ் சம்பளம் பெற்று மோசடி செய்துள்ளது சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த அக்டோபர், ஜனவரி மாதங்களில் மட்டுமே ரூ9.40 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. லிங்குராஜ், வாரிசு வேலை அடிப்படையில் கொங்கணாபுரம் அரசுப்பள்ளியில் ரிக்கார்டு கிளர்க் ஆக சேர்ந்தார். அந்தப்பள்ளியிலும் அவர் போலியாக சம்பள பட்டியல் தயார் செய்து, ரூ4.50 லட்சம் முறைகேடு செய்திருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்த விவகாரத்தை அதிகாரிகள் தோண்ட ஆரம்பித்ததை அடுத்து, நான்கு நாட்களுக்கு முன் லிங்குராஜ் திடீரென்று ராஜிநாமா செய்துவிட்டு திடீரென்று தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, சேலம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (டி.இ.இ.ஓ.,) தனசேகரன், நேற்று ஏஇஓ அலுவலகத்தில் லிங்குராஜ் பணியில் சேர்ந்த காலத்தில் இருந்து எந்தெந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்?. அவர் தயாரித்து வழங்கிய சம்பள பில் பட்டியல், கம்ப்யூட்டரில் உள்ள ஆசிரியர் மற்றும் அவர்களின் சம்பவ விவரங்கள் குறித்து நேற்று நேரில் விசாரணை நடத்தினார். லிங்குராஜ் பணியாற்றிய காலத்தில் இதுவரை மொத்தம் ரூ40 லட்சத்திற்கு கையாடல் செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக டி.இ.இ.ஓ கூறினார். 
Dinakaran

No comments:

Post a Comment