இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களை செல்போன் சர்வீஸ் இன்ஜினியரிங் ளாக மாற்றி அவர்களுக்கு வேலைவாய்ப்பும் தொழில் வாய்ப்பும் அளித்து வரும் ஐஎல்எஸ் பயிற்சி மையம் தற்போது நாட்டின் மிகப் பெரிய அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் உடன் கூட்டிணைந்து செல்போன் இன்ஜினியரிங் பயிற்சியை வழங்குகிறது.ஜிஎஸ்எம் மொபைல் ஆர் எஃப் இன்ஜினியரிங் என்ற பிஎஸ்என்எல் சான்றளிக்கப்படும் இந்தப் பயிற்சி சென்னை இல் இயங்கும் பிஎஸ்என்எல் டெலிகாம் பயிற்சி மையத்தில் அளிக்கப் படுகிறது.
ஐந்து வாரங்கள் நடக்கும் இந்த பயிற்சியில் முதல் நான்கு வாரங்கள் புத்தக வடிவ பயிற்சி மற்றும் சென்னை பிஎஸ்என்எல் பயிற்சி மையத்தில் நேரடி செயல்முறை பயிற்சி ஆகியவை நடத்தப்படும்.
கடைசி வாரம் தமிழ்நாடு தொலைத்தொடர்பு மண்டலத்தின் மாவட்ட தலைமையகத்தில் செயல்முறை பயிற்சி அளிக்கப் படும்.இந்த ஜிஎஸ்எம் மொபைல் ஆர் எஃப் இஞ்சீனியர் பயிற்சியானது தற்போதுள்ள தொலைத்தொடர்பு துறையின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.பயிற்சியை முடிக்கும் மாணவர் மிக எளிதாக ஒயர்லெஸ் நெட்வொர்க் யை திட்டமிடுதல் நிறுவுதல் இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய பணிகளை மிக எளிதாக மேற் கொள்ளலாம்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இயங்கும் இந்தப் பிரிவுகளில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பும் பெறலாம்.இந்தப் பிரிவுகளில் பணியாற்ற சரியான நிபுணர்கள் இல்லாமல் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திண்டாடுவது குறிபிடத்தக்கது.
இப்பயிற்சியில் பொறியியல் இசிஇ சிஎஸ்இ ஐடி எம்எஸ்சி எம்சிஏ டிப்ளோமா இசிஇ சிஎஸ் ஐடி மாணவர்கள் அல்லது தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றுபவர்கள் சேர்ந்து பலன் பெறலாம்.தொலைதூர மானவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணங்களில் தங்கும் வசதியும் செய்து தரப்படுகிறது.
இப்பயிற்சிக்கான சேர்க்கை நடைமுறைகளை மற்றும் கட்டணங்கள் வசூலிப்பிற்காக ஐஎல்எஸ் பயிற்சி மையத்தை அதிகாரப் பூர்வமாக நியமித்துள்ளது பிஎஸ்என்எல்.
சேர்க்கை மற்றும் மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
ஐஎல்எஸ் எண் 224,என்எஸ்சி போஸ் சாலை,பாரிமுனை,சென்னை-600001.
(உயர்நீதி மன்றம் எதிரில்),
தொலைபேசி-9444002994.
No comments:
Post a Comment