மீண்டும் உயிர் பெற்றது உடங்குடி(குலசை) அனல் மின் நிலையத் திட்டம். இறுதியாக தமிழக முதல்வர் ரு 8000 கோடி தமிழக அரசின் பங்கு மூலதனமாக மின் வாரியத்திற்கு அளித்து இதை மாநில அரசின் திட்டமாகவே தொடரப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். 2008ல் தொடங்கப்பட்ட இத் திட்டம் ஆரம்ப கட்டத்திலேயே இது வரை இருந்து வந்தது. இப்போது மீண்டும் தொடங்க இனி எந்தவித தடையும் (கூடங்குளம் அனு மின் நிலையம் போல்) இருக்காது என நம்புவோம். இத் திட்டம் மூலம் 1600 MW மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும் என்பது நம் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி. பூங்கொத்து கொடுத்து (இவ்விசயத்தில்) பாராட்டுகிறோம் நம் முதல்வரை. ஒரு செய்தி: இத்திட்டம் தொடங்கப்படும் இடம் குலசேகரப் பட்டினம் (குலசை)என்ற எங்கள் ஊரின் எல்கையில் அமைந்துள்ளது. திட்டத்தின் பெயர் தான் உடங்குடி. அவ்வளவே. சில மாதங்களுக்கு முன் தமிழ் விக்கீப்பீடியாவில் இதைப் பற்றி விரிவாக (குலசேகரப் பட்டினம் அனல் மின் திட்டம் என) எழுதி, அதுவும் அதிகாரப் பூர்வமாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது.இதைப் பற்றி தமிழக அரசுக்கும் தகவல் அனுப்பியிருந்தேன். உடங்குடி என இத் திட்டத்திற்கு பெயர் வரக் காரணம், பழைய அரசு வருவாய்த் துறை ரிகார்டுகளில், குலசேகரப் பட்டினத்தின் சில இடங்களும், இத்திட்டம் அமைந்துள்ள இடமும் உடங்குடி கிராமத்தில் அமைந்திருப்பதாக உள்ளதால், அரசும் இத்திட்டத்திற்கு உடங்குடி அனல் மின் திட்டம் என பெயர் வைத்து விட்டார்கள். ஆனால் இத்திட்டம் முழுக்க முழுக்க எங்கள்(குலசை) ஊரில் தான் அமைந்திருக்கிறது என உரிமையோடு உரக்கச் சொல்வேன். தூத்துக் குடி மாவட்டக் காரர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.
குலசை சுல்தான் (எ) Engr.Sulthan |
|
|
|
|
No comments:
Post a Comment