பாரதீய ஜல்சா பார்ட்டி எனவும், பலான ஜனதா கட்சி எனவும் நாட்டு மக்களால் விலாநோகச் சிரிக்கும் அளவுக்கு பாரதீய ஜனதா கட்சியின் மானம் சந்தி சிரிக்கிறது.
பாரதீய ஜனதா கட்சிக்கு பல்வேறு எதிர்மறைப் பெயர்கள் உண்டு. எனினும் பாரதீய ஜனதா ஆபாச இமேஜ் தற்போது விண்ணை முட்டும் அளவுக்கு எகிறியுள்ளது என்றால் அது மிகையே அல்ல.
கர்நாடக சட்டமன்றத்தில் முக்கியமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாஜகவின் மூன்று அமைச்சர்கள் லட்சுமன் சவேதி, சி.சி.பாட்டீல் மற்றும் கிருஷ்ணா பால்மர் என்ற மூவரும் மன்ற அரங்கில் தங்களது செல்போன்களில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதனை உள்ளூர் சானல் உடனடியாக படம் பிடித்து நாடு முழுவதும் அம்பலப்படுத்தியது. கர்நாடக மாநிலம் கொந்தளித்தது. எதிர்க்கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் கடும் போராட்டத்தில் குதிக்க, வேறு வழியின்றி அஞ்சி நடுங்கிய பாஜக, மூன்று அமைச்சர்களையும்கெஞ்சிக்கேட்டு ராஜினாமா செய்ய வைத்தது.
இந்த சம்பவத்திற்கு முன்பு இந்த அமைச்சர்கள் மூவரும் ஆபாசப் படங்களை மொபைல்போனில் வைத்திருந்ததைக் கண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் பலரும் தங்களுக்கும் அதனை செல்போன் வழியாக அனுப்ப வேண்டுமெனக் கெஞ்சி ஏறக்குறைய அரைடஜன் எம்எல்ஏக்கள் ஜொல் வழிய பார்த்துக் கொண்டிருந்ததாக அவுட்லுக் செய்திஏடு குறிப்பிட்டுள்ளது.
காவிகளின் கலாச்சாரக் காவலர்கள் வேடம் கன்னாபின்னாவென கலைந்து போய்விட்டது.
இது மட்டுமல்ல, இதற்கு முன்பும் இந்தப் பாலியல் ஜனதா கட்சியினர் பல்வேறு கசமுசாக்களை அரங்கேற்றியுள்ளனர் என்பதும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதே பாரதீய ஜல்சா பார்ட்டி, 2007ஆம் ஆண்டு, பாஜக அமைச்சர் ஒரு நர்சை தன்னைக் காதலிக்கச் சொல்லியும் மணமுடிக்கச் சொல்லியும் கொடுமைப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார்.
2008ஆம் ஆண்டு ரகுதி பட் என்ற உடுப்பியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வின் மனைவி பத்மப்பிரியா மர்மமான முறையில் காணாமல் போனார். இறுதியில் டெல்லியில் அவர் இறந்துகிடந்த தகவல் வெளிவந்தது. அதன் மர்மம் இன்னும் நீடிக்கிறது.
2010ஆம் ஆண்டில் பாஜகவின் உணவு வழங்கல் துறை அமைச்சர் ஹாலப்பா தனது நண்பரின் வீட்டில் தங்கிக்கொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி தனது நண்பரை மருந்து வாங்கிவரச் சொல்லி நள்ளிரவில் வெளியே அனுப்பிவிட்டு நண்பரின் மனைவியைப் பாலியல் வன்முறைக்கு இலக்காக்க முயற்சித்தபோது அந்தப் பெண் கூச்சல்போட, பின்னர் கையும் களவுமாகப் பிடிபட்டு பின்னர் அமைச்சர் பதவியை இழந்தார். ஆனால் இன்னமும் எம்எல்ஏவாக தொடர்கிறார். தற்போது செல்போனில் அமைச்சர்கள் சட்டமன்றத்தில் ஆபாசப் படம் பார்த்து பதவி இழந்துள்ளனர்.
கடவுளே... பாரதீய ஜல்சா கட்சியிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்று.
--பி.சி.ராவ்
courtesy www.tmmk.info
No comments:
Post a Comment