Tuesday, February 7, 2012

நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?


இரண்டாண்டுகளுக்கு முன் கேரளா வந்து தங்கியிருக்கும் இஸ்ரேலிய தம்பதியினர் ரகசிய உளவாளிகளா? என்று மத்திய உளவுத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. அவர்கள் சந்தேகத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டுவருவதால் விரைவில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.
ஷினோர் ஸல்மான், யஃப்ஃபா ஷினாய் என்னும் பெயர்களினைக் கொண்ட இத்தம்பதி ஃபோர்ட் கொச்சியின் ரோஸ் சாலையில், 50,000 ரூபாய் மாத வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். மாத வாடகை 50,000 ரூபாய்கள் என்பது அந்த ஸ்தலத்தில் மிக மிக அதிகபட்ச வாடகையாகும்.

"மாத வாடகைத் தொகையே இவர்கள் மீதான முதல் ஐயத்திற்கு வித்திட்டது" என்று கூறிய மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், "தினமும் ஒரு குழுவினர் வந்து இத்தம்பதிகளைச் சந்தித்துச் செல்வதும், அச்சந்திப்பு நீண்ட நேரம் நீடிப்பதும் மேலும் ஐயத்தை உறுதி செய்தது" என்றார்.
"மும்பையில் சம்பவித்த 26/11 துர்ச்சம்பவத்திற்குப் பிறகு (அதில் யூத மதகுரு, அவர் கர்ப்பிணி மனைவி உள்ளிட்ட ஆறு யூதர்கள் கொல்லப்பட்டிருந்தனர்) நாட்டின் அநேக நகரங்களில் இஸ்ரேலியர்கள் சுற்றுலாவில் வந்து குடியேறியுள்ளதை தற்செயலானது என்று கருத இயலாது" என்றும் அவர் கூறினார்.

கடந்த திங்களன்று அவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டதாகவும், அதற்குமுன் அவர்களிடம் முறையான விசாரணையும், அவர்களின் நிதி ஆதாரங்கள் மீதான விசாரணநடைபெறும் என்றும் தெரிகிறது.

நாடெங்கும் பல்வேறு நகரங்களில் இஸ்ரேலியர்கள் வந்தமர்ந்துள்ளதாக உளவுத்துறை 'தகவல்' ஒன்று தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment