Friday, February 10, 2012

புதிய தொழிற்கல்வி படிப்பு அறிமுகம்

பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வியை அளிக்கும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகளை போன்ற புதிய தொழிற்கல்வி படிப்பினை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் துவக்கி வைத்துள்ளார்.
தேசிய தொழிற்கல்வி தகுதி உருவாக்கம் என்ற இந்த புதிய கல்வி முறையை துவக்கி வைத்த கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த படிப்பு 7 நிலைகளைக் கொண்டதாகும். இதனை ஒரு மாணவர் 9ம் வகுப்பு படிக்கும் போதே துவங்கலாம்.
7 நிலைகளையும் முடிக்கும் மாணவருக்கு பட்டம் வழங்கப்படும். ஒவ்வொரு நிலைகளிலும் 1000 மணி நேரம் பயிற்சி மற்றும் வகுப்பில் பங்கேற்க வேண்டும். பல்வேறு பிரிவுகள் இதில் அமைந்திருக்கும்.
2012-13ம் கல்வியாண்டில் ஐடி, மீடியா, பொழுதுபோக்கு, தொலைத்தொடர்பு, செல்பேசி தொடர்பு, ஆட்டோமொபைல், கட்டடமைப்பு, விற்பனை, உணவு உற்பத்தி, சுற்றுலா, ஹோட்டல், நகை வடிவமைப்பு, ஆடை வடிவமைப்புத் துறைகளில் இந்த படிப்பு வழங்கப்பட உள்ளது, மேலும் பல படிப்புகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் இணைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் எந்த கல்வி நிறுவனம் வேண்டுமானாலும் இந்த படிப்பினை வழங்க ஏஐசிடிஇவிடம் அனுமதி பெறலாம். அனுமதி பெறும் நிறுவனங்கள் குறைந்தது 5 படிப்புகளில் அதிகபட்சம் 500 மாணவர்களை சேர்க்க வேண்டும். ஒவவொரு பிரிவிலும் 100 மாணவர்கள் இருக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment