Tuesday, February 28, 2012

ஈரானுடன் உறவை வலுப்படுத்தும் இந்தியா



ஈரானுடன் உறவை மேம்படுத்தும் பிற நாடுகளின் முயற்சிகளை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சக்திகள் கடுமையாக கண்டிப்பதோடு ஈரானுடன் உறவை மேம்படுத்தும் நாடுகளுக்கு மறைமுக மிரட்டலையும் விடுத்துவரும் நிலையில் அமெரிக்காவுக்கு இந்திய அரசு மூக்கறுப்பினை வழங்கியுள்ளது.
மேலும் இந்தியாவிலிருந்து வர்த்தகக்குழு ஒன்றும் ஈரானுக்கு செல்ல உத்தேசித்துள்ளது. தேயிலை, கோதுமை, அரிசி, மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் மேம்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு சக்திகளுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருவதில் இந்திய அரசு மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஈரானுடனான வர்த்தக உறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் இந்திய மற்றும் அமெரிக்க உறவில் சில முக்கிய வினாக்களை எழுப்பியுள்ளன. ஈரானுடனான எண்ணெய் இறக்குமதியில் எவருடைய நிர்பந்தத்துக்கும் அடிபணிய மாட்டோம் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்து அமெரிக்காவின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
www.tmmk.info

No comments:

Post a Comment