கேரளாவில் உள்ள காடுகவுக்கானபட்டி எனும் இடத்தில் கோவில் வளாகத்தில் கட்டப்படுள்ள திருவிழா கமிட்டி அலுவலகத்திற்கு தீவைக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை கேரள காவல்துறை கையும் களவுமாக கைது செய்துள்ளது.
கோவில் திருவிழா கமிட்டி அலுவலகத்திற்கு தீ வைத்துவிட்டு அந்த பழியினை சிறுபான்மை சமூகத்தினர் மீது போட இருந்த சதித்திட்டம் அம்பலமானது.
இந்த ஒரே சம்பவத்தை வைத்து சமூகப்பதட்டத்தை உருவாக்க சதிகாரர்கள் முயற்சி செய்துள்ளனர். தங்களது வன்முறை சூழ்ச்சி கலாச்சாரம் மூலம் தங்களது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள திட்டமிடும் போக்கை நாட்டு மக்கள் அணைவரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் தங்களது அரசியல் செல்வாக்கைப் பரப்புவதற்காக திரைமறைவு சதிவேலைகளில் இறங்குவது தொன்று தொட்டு நிகழ்ந்து வருவதை யாராலும் மறைக்க முடியாது.
தேசதந்தை எனப்போற்றப்படும் காந்தியடிகள் 1948 ஆம் ஆண்டு இதே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொடூர செயலை செய்வதற்கு முன்பாக தனது கையில் இஸ்மாயில் என்றும் பச்சைக் குத்திக்கொண்டான் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.
காந்தியடிகள் கொல்லப்பட்ட பிறகு ஆவேசமடைந்த மக்கள், கோட்சேவை கைவேறு கால்வேறாக பிய்த்து கொன்றுவிடுவார்கள். கையில் இஸ்மாயில் என்ற பெயர் பச்சைக் குத்தப்படிருப்பதை பார்த்து முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி ஏராளமான முஸ்லிம்களைக் கொன்று குவிக்கலாம் என ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தீட்டியிருந்த திட்டம் உயிர்போகும் தருவாயிலும் காந்தியாரால் சமயோசிதமாக முறியடிக்கப்பட்டது.
தன்னை துப்பாக்கியால் சுட்டவனை ஒன்றும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டதையடுத்து அடித்தே கொல்லப்படும் கதி கோட்சேவுக்கு நிகழவில்லை. காந்தியாரைக் கொன்றது முஸ்லிம் அல்ல என டெல்லியில் நேருவும், தமிழ்நாட்டில் பெரியாரும் வானொலியில் நாட்டு மக்களுக்கு அறிவித்தனர். மிகப்பெரிய சதிச் சூழலில் இருந்து இந்த நாடும் முஸ்லிம்களும் காப்பாற்றப்பட்டனர்.
காந்தியடிகளின் படுகொலையில் முஸ்லிம்கள் மீது பழிபோட்டு வெறியைத் தீர்த்துக்கொள்ள நினைத்த சங்பரிவார் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2002 ஆம் ஆண்டு கோத்ராவில் நிகழ்ந்த ரயில் விபத்து நிகழ்வை வைத்து மூவாயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்தனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. முஸ்லிம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். கற்பினி பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவை வெளியே எடுத்து சூலாயுதத்தால் குத்தி குதறி குதறப்பட்ட தாய் முன்பே பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
இது போன்று ஒன்று இரண்டல்ல எண்ணற்ற நிகழ்வுகள் சிறுபான்மையினரைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன. அதில் பல அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் அருகே கோயிலின் தேர் தீ வைக்கப்பட்டு முற்றிலும் எரிந்து சாம்பலானது. அந்த நிகழ்விலும் முஸ்லிம்கள் மீது பழிபோட பெரும் சதி நடந்தது. இறுதியில் தமிழக காவல் துறையினரால் அந்த சதியினை நிகழ்தியவர்கள் இந்து முன்னணியினர் என்ற உண்மை வெளியானது.
இவ்வாறே சமீபத்தில் கர்நாடக மாநிலம் பிஜப்பூரில் தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தானிய கொடி ஏற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தேச துரோகிகள் ஸ்ரீராம் சேனா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கர்நாடக காவல்துறை அறிவித்தது.
ஆனால் ஸ்ரீராம் சேனாவின் தலைவன் பிரமோத் முத்தலிக் தங்கள் அமைப்பு மீதான குற்றச்சாட்டை மறுத்ததோடு தாலுகா அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களே என்றும் தங்கள் மீதான பழியை மறைக்க ஸ்ரீராம் சேனாவைக் குற்றம் சாட்டுகின்றனர் என்றும் இதற்கு கர்நாடக அரசும் உடந்தையாக உள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
இதன் மூலம் ஒன்று தெளிவானது. இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களின் மூலமும், தேசதுரோக செயல்களின் மூலமும் தாங்கள் யார் என்று நிரூபித்துள்ளனர்.
விஷயத்திற்கு வருவோம். கேரள கோவில் திருவிழா கமிட்டி மண்டபத்தை தீ வைத்து கொளுத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் சபேஷ் மற்றும் பஜீஸை காவல்துறை சட்டப்பூர்வ முறையில் தண்டிக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் வேண்டுகோளாகும்.
- கந்தரதேவன், மக்கள் உரிமை வார இதழ்
No comments:
Post a Comment