திருப்பூர்: சாலை விதிகளை மீறுபவர்களுக்கு ஸ்பாட் பைன் விதிக்கும் முறை, தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் எல்லா மாவட்டங்களிலும் ஸ்பாட் பைன் வசூலிக்கப்படும் என்று அரசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள. தமிழகத்தில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். முன்பெல்லாம் விதிகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்ணை வைத்து, சம்பந்தப்பட்டவருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்புவார்கள். அந்த நபர், கோர்ட்டுக்கு சென்று அபராத தொகையை செலுத்த வேண்டும். செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில் காலதாமதத்தை தவிர்க்க முக்கிய நகரங்களில் மொபைல் கோர்ட் அறிமுகப்படுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து தலைநகர் சென்னையில், ஸ்பாட் பைன் முறை கொண்டு வரப்பட்டது. விதிமீறும் வாகன ஓட்டிகளிடம் அந்த இடத்திலேயே போலீசார் அபராத தொகையை வசூலித்துக் கொண்டு ரசீது வழங்கினர். இந்த திட்டம் கோவை, மதுரை போன்ற மாநகரங்களும், பின்னர் நெல்லை, திருச்சிக்கும் விரிவுபடுத்தப்பட்டது. மற்ற மாநகரங்களிலும், மாவட்டங்களிலும் பழையபடி நோட்டீஸ் வழங்கப்பட்டு, கோர்ட்டில் அபராதம் செலுத்தும் முறையே அமலில் இருந்து வந்தது.இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஸ்பாட் பைன் முறையை விரிவுபடுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் ஸ்பாட் பைன் வசூலிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. மாநகரங்களில் எஸ்.ஐ முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகளும், மாவட்டங்களில் இன்ஸ்பெக்டர் முதலான போலீஸ் அதிகாரிகளும், போக்குவரத்து துறை சோதனை சாவடிகளில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்களும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஸ்பாட் பைன் வசூலிக்கலாம்.மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த முறை உடனடியாக அமலுக்கு வருகிறது. இனி போலீசார் வாகன சோதனை நடத்தும் இடங்களிலேயே லைசன்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் போன்ற முறையான ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளிடமும், சாலை விதிகளை மீறுபவர்களிடமும் உடனடியாக அபராதம் வசூலிக்கலாம். அதற்கான ரசீது, வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும். அபராத பணத்தை இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் வசூல் செய்யலாம். தினமும் வசூல் செய்யப்படும் பணத்தை வேலை நாட்களில் அரசு கருவூலத்தில் கட்ட வேண்டும். போதையில் வாகனம் ஓட்டி போலீசிடம் சிக்கும் நபர்கள் மட்டும் கோர்ட்டில் அபராதம் கட்ட வேண்டும். முதல் முறையாக விதி மீறினால் குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூலிக்கப்படும். 2வது முறையும் அதே குற்றத்தை செய்தால் கூடுதல் தொகை அபராதமாகவும் விதிக்கப்படும். வாகன ஓட்டி, ஒருமுறைக்கு மேல் சிக்கியுள்ளாரா என்பதை தெரிந்து கொள்ள வெய்க்கிள் டிராக்கிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.<span style='font-weight: bold; color: rgb(255, 0, 0);'>அபராத விவரம்</span>குற்றங்கள் முதல் முறை 2வது முறைவாகன பதிவை புதுப்பிக்க தவறுதல் ரூ.100 ரூ.300பெயர் மாற்றம் செய்யாமல் இருத்தல் ரூ.100 ரூ.300போக்குவரத்து உத்தரவுகளை மீறுதல் ரூ.100 ரூ.300இருசக்கர வாகனங்களில் மூவர் பயணித்தல் ரூ.100 ரூ.300ஹெல்மெட் இல்லாமல் பயணித்தல் ரூ.100 ரூ.300லைசென்ஸ், ஆர்சி புக் இல்லாமல் பயணித்தல் ரூ.100 ரூ.300போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் ரூ.500 ரூ.500லைசென்ஸ் இல்லாதவர்கள் வாகனம் ஓட்டுதல் ரூ.500 ரூ.500ஓட்டுனர் தகுதி இழந்தவர்கள் வாகனம் ஓட்டுதல் ரூ.500 ரூ.500அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல் ரூ.400 ரூ.1000அபாயகரமாக ஓட்டுதல் ரூ.1000 ரூ.2000மனதளவில், உடல்அளவில் சரியில்லாமல் ஓட்டுதல் ரூ.200 ரூ.500பதிவு செய்யப்படாத வாகனம் ஓட்டுதல் ரூ.2500 ரூ.5000ஓவர் லோடு ரூ.2000 ரூ.2000இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுதல் (பைக்) ரூ.500 ரூ.1000இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுதல் (நான் டிரான்ஸ்போர்ட்) ரூ.700 ரூ.1000இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுதல் (டிரான்ஸ்போர்ட்) ரூ.1000 ரூ.1000
Dinakaran
No comments:
Post a Comment