சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தினர் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு தமிழ்நாடு அரசு சாலை போக்குவரத்து நிறுவனம் சார்பில் இலகுரக மற்றும் கனரக ஓட்டுனர் பயிற்சி வகுப்பு நடத்தப்படஉள்ளன. சென்னை தரமணி சாலைபோக்குவரத்து நிறுவனம், திருச்சி சாலைபோக்குவரத்து நிறுவன ஓட்டுனர் பயிற்சி பள்ளி ஆகியவற்றில் இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி மற்றும் நேர்காணல் நடக்கிறது.
விழுப்புரம், வேலூர் திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம், காரைக்குடி, சேலம், தருமபுரி, ஈரோடு, பொள்ளாச்சி, மதுரை,திருநெல்வேலி, நாகர்கோவில், திண்டுக்கல், விருதுநகர், கும்முடிபூண்டி ஆகிய ஊர்களில் கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி மற்றும் நேர்காணல் வருகிற 23 ம் தேதி மேற்கண்ட பயிற்சி மையங்களில் நடக்கிறது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ 1 லட்சத்திற்கு மிகாமலும், 1 .1 .2012 அன்று 20 வயது நிறைவு பெற்ற இஸ்லாமிய,கிருஸ்தவ,சீக்கிய, புத்த மற்றும் பார்சிய மதத்தை சேர்ந்த சிறுபான்மையினர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். தஞ்சை மாவட்ட சிறுபான்மையின மக்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என்று தஞ்சை கலக்டர் பாஸ்கரன் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment