Saturday, March 17, 2012

உலக நுகர்வோர் தினம் 15th march 2012




ஜனநாயக அமைப்பில் மக்களுக்கு உரிமைகள் பல இருக்கின்றன ஆனால் அதைப்பற்றிய புரிதல் இல்லை.


2) ஒரு நாட்டின் பொருளாதாரம் மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கிறது. தொன்று தொட்டு வணிகமும் வியாபாரமும் சமுதாய வளர்ச்சியோடு இணைந்துள்ள்து. ஒரு நாடு செழிப்பாக இயங்க வேண்டும் என்றால் நேர்மையான வணிகம் இன்றியமையாதது. “No Nation is Destroyed by Trade”

3) வணிகம் முறையாக இயங்கவில்லை என்றால் வியாபாரமும் விவசாயமும் படுத்துவிடும்.

தமிழரின் பண்டைகால வணிகமுறை
“ கொள்வதும் மிகை கொளாது
கொடுப்பதும் குறை கொடாது “ 
எவ்வளவு நிதர்சன உண்மை.

4) “Customer is important” வாடிக்கையாளர்களே முதன்மையானவர் என்றார் மகாத்மா காந்தி அவர்கள். நுகர்வோரை புறக்கணித்தாலோ, ஏமாற்றினாலோ வியாபாரம் முடிவில் படுத்துவிடும். பண்டம் மாற்று முறையில் வணிகம் செய்த காலத்தில் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உழைப்பிற்கு ஏற்றவாறு பண்டம் கொடுக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இது மாறி பணத்தின் ஆதிக்கம் தலை தூக்கிவிட்டது. நாணயம் வியாபாரத்தின் நாணயத்தை நசுக்கி விட்டது.

5) இத்தகைய சூழலில் நுகர்வோரின் உரிமைகளைப் பற்றி எடுத்துச் சொல்லவும் உரிமைகளை நிலை நாட்டவும் எடுக்கப்படும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது.

6) ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ என்பதில் அர்த்தம் புதைந்திருக்கிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் தழைப்பார்கள். அதிக வட்டி என்று முதலீட்டார்களை ஈர்த்து முடி0வல் அவர்கள் ஏமாற்றப்பட்டு பல வழக்குகள் பதிவாயின. நாட்டில் இத்தைகைய மோசடி அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம். சுமார் 10 லட்சம் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை இழந்துள்ளார்கள். இழந்த பணம் சுமார் ரூபாய் 3000 கோடி. இவ்வளவு நடந்த பிறகும் ஏமாறுபவர்கள் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

7) “எந்த படியால் அளக்கிறோமோ, அந்த படியால் அளந்து கொடுக்கப்படும்” என்கிறது பைபிள். எவ்வளவு தெளிவான கட்டளை! உழைப்பில்லாமல் சம்பாதிக்க முடியாது. நுகர்வோரின் நம்பிக்கையை சம்பாதித்தால்தான் வியாபாரம் நிலைத்து நிற்கும். சம்பாத்தியமும் நிலைக்கும். அதற்கு நுகர்வோர் விழிப்புணர்வு இருந்தால், உழைப்பிற்கு மதிப்பு கொடுத்தால் இத்தகைய மோசடிகள் நிகழாது.
நாணய வியாபாரம் நாணயமாக நிகழும். நுகர்வோர் கொடுப்பது பணம் மட்டும் அல்ல. அது அவர்களின் உழைப்பு அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். 

நுகர்வோர் பாதுகாப்பே அதற்கு வழிவகுக்கும்.


உலக நுகர்வோர் தினத்தில் ஏற்பட வேண்டிய விழிப்புணர்வு

இன்று உலக நுகர்வோர் தினம். பாவனையாளர்களால் கொள் வனவு செய்யப்படுகின்ற பொருட்கள் ஒவ்வொன்றினதும் தரம் சிறந்ததென உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பதே உலக நுகர்வோர் தினத்தின் கருப்பொருளாகும்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு நோக் குகையில் இன்றைய நுகர்வோர் தினம் முக்கியத்துவம் பெறுகி றது. ஏனெனில் பாவனைப் பொருட்களின் தரமே பொது மக்க ளின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் காரணியாக அமைகிற தெனலாம்.
நுகர்வுப் பொருட்களெனக் கூறுமிடத்து அவற்றினுள் உணவுப் பொரு ட்கள் மாத்திரமே அடங்குவதில்லை. மக்களால் பாவனை செய் யப்படும் அத்தனை பொருட்களுமே இவற்றுள் உள்ளடங்குகின் றன. எனினும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மாத்திரமே மக்களில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஏனைய பொருட்கள் சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதன் வாயி லாக மனிதனில் மறைமுக தாக்கத்தைச் செலுத்துகின்றன.
எனவேதான் நுகர்வுப் பொருட்களென நோக்குமிடத்து உணவு மற் றும் மருந்துப் பொருட்களின் தரம் தொடர்பாகவே உலகெங்கும் கூடுதலான கவனம் செலுத்தப்படுகிறது.
இன்றைய விஞ்ஞான, தொழில்நுட்ப அபார வளர்ச்சி காரணமாக உலகமென்பது எமது உள்ளங்கைக்குள் சுருங்கி வந்துள்ளதெனக் கூற வேண்டியுள்ளது. ‘பூகோளக் குடும்பம்’ என்று இம்மாற்ற த்தை வர்ணிப்பர்.
தொடர்பாடலின் இத்தகைய முன்னேற்றத்தின் விளைவாக பொருளா தார முறைமைகளும் திறந்த ரீதியாக மாறி வருகின்றன. நாடுக ளுக்கிடையிலான திறந்த பொருளாதார நடவடிக்கைகள் காரண மாக ஒரு நாட்டின் உற்பத்திப் பொருட்கள் மற்றைய நாடொன் றுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது தாராளமயமாகிப் போயுள்ளது. பொருளாதார வளர்ச்சிப் போக்கில் இந்நிலைமை தவிர்க்க முடி யாததாகிறது.
இவ்வளர்ச்சிப் போக்கில் நன்மைகள் எத்தனை தூரம் விளைகின்ற னவோ அத்தனை தூரம் தீங்குகளும் தலைதூக்குகின்றன. உற் பத்திப் பொருட்களின் தரம் குன்றுவதே இங்குள்ள தீங்கான விளைவாகும். இன்றைய அவசர யுகத்தில் பொருளாதார நலன் களை மாத்திரம் கவனத்தில் கொண்டு தயாராகும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களால் மக்களின் உடல் ஆரோக்கியம் மோச மாகப் பாதிக்கப்படுகிறது. இன்றைய நுகர்வோர் தினத்தில் நாம் பிரதானமாகக் கவனம் செலுத்த வேண்டியது மக்களின் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினையின் மீதாகும்.
மருந்துப் பொருட்களை எடுத்துக்கொள்வோமானால் நாட்டின் பாவ னைக்கென அங்கீகரிக்கப்படாத சில மருந்து வகைகளும் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருவ தாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்த இறக்குமதியும் விற்ப னையும் சட்டவிரோதமானதாகும். அதேசமயம் போலியான மரு ந்துப் பொருட்களும் தனியார் மருந்தகங்கள் சிலவற்றில் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தரமற்ற இம்மருந்துகளால் நோயாளர்க ளுக்குப் பாதிப்பு ஏற்படுமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இத்தகைய பாதிப்பைத் தவிர்க்க வேண்டுமானால் அரசாங்க மருந் தாக்கல் கூட்டுத்தாபனத்தையோ அன்றி உத்தரவாதம் பெற்ற தனி யார் மருந்தகங்களையோ மக்கள் நாடுவதே ஒரே வழியாகும்.
இதுபோலவே உணவுப் பொருட்கள் மீதும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொரு ட்கள் மாத்திரமன்றி உள்ளூர் உணவுப் பொருட்கள் தொடர்பாக வும் மக்கள் போதிய அறிவைக் கொண்டிருத்தல் வேண்டும். உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவற் றின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மக்கள் மத்தியில் போதிய விழி ப்புணர்வு ஏற்பட வேண்டியுள்ளது.
பொதி செய்யப்படாத உணவுகள் பழுதடைந்துள்ளதா என்பதையிட் டும் பொதி செய்யப்பட்ட உணவுகளின் காலாவதித் திகதி முடிவ டைந்துள்ளதா என்பது குறித்தும் மட்டுமே நம்மில் பலர் கவனம் செலுத்துவதுண்டு. உணவுப் பொருட்கள் பழுதடையாமல் பாதுகா ப்பதற்காகவும் உணவுக்கு சுவையும் வாசனையும் அளிப்பதற்கா கவும் சேர்க்கப்படும் சேர்மானங்களின் பாதகங்கள் குறித்து பலர் கவனம் கொள்வதில்லை. உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் இரசாயனப் பதார்த்தங்களே உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கின்றன. புற்றுநோய், சிறுநீரகக் கோளாறுகள் போன்ற வற்றுக்கெல்லாம் இதுபோன்ற இரசாயனப் பதார்த்தங்களே காரணி களாகின்றன.
எனவே பாவனைப் பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் முழு மையான அறிவையும் விழிப்புணர்வையும் பெறவேண்டும். அதுவே தரமற்ற பொருட்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற் கான வழியாகும்.
 

Engr.Sulthan

No comments:

Post a Comment