லக்னோ : உத்திர பிரதேச மாநிலத்தில் சமீபத்திய தேர்தலில் 63 முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிக பட்சமாக முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி சார்பில் 40 பேரும், பகுஜன் சமாஜ் வாடி ( மாயாவதி) கட்சி சார்பில் 14 பேரும், தேர்வாகியிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு 18 சத இட ஒதுக்கீட்டை வழங்குவோம் என்ற உறுதிமொழியை அளித்த காங்கிரஸ் கட்சி சார்பில் 3 பேர் மட்டுமே எம்.எல்.ஏ.,க்களாயினர். அமைதி இயக்கம் சார்பில் 3 பேரும், கவுமி ஏக்தா தள் சார்பில் 2 பேரும் , ஒரே ஒரு முஸ்லிம் மட்டும் சுயேச்சையாகவும் நின்று எம்,எல்,ஏ,.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2007 ல் - 56 ஆக இருந்தவர்கள் தற்போது 63 ஆக உயர்ந்திருக்கின்றனர். அயோத்தி பிரச்னை இருந்த நேரம் ( 1993 ) தேர்தலில் 25 பேர் மட்டுமே தேர்வாகியிருந்தனர். சமீபத்திய தேர்தலில் தான் வரலாற்றிலேயே கூடுதலாக 63 பேர் முஸ்லிம்களை சேர்ந்தவர்கள் எம்,எல்.ஏ.,வாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=422283
No comments:
Post a Comment