Wednesday, March 28, 2012

ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு அமெரிக்கா ஆயத்தம்? இந்தியா கடும் எச்சரிக்கை


ஈரானுக்கு எதிரான தாக்குதல் மேற்காசியாவில் கடும் விளைவுகளை உருவாக்கும் என அமெரிக்காவின் இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் விரேந்திர பால் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கம் மற்றும் இந்தியாவுக்குத் தேவையான எரிபொருள், எண்ணெய் இறக்குமதி போன்றவற்றை சீர்குலைக்கும் விதமாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடுவது இந்தியா மீது ஈரானுக்கு தவறான புரிதல்களை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்திய மக்களின் எரிபொருள் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும் ஈரானுடனான வர்த்தக முடிவில் மேற்குலக நாடுகள் விமர்சிக்கக் கூடாது. இந்தியா சர்வதேச அளவில் ஒரு பொறுப்புமிக்க நாடு. எனவே ஈரானுடனான மோதல் போக்கை நாங்கள் விரும்பவில்லை என்று விரேந்திர பால் தெரிவித்தார்.

 www.tmmk.info

No comments:

Post a Comment