அ.தி.மு.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் பாலாறு தேனாறு ஓடவிருப்பதாகவும், தடையில்லா மின்சாரமும் குடிநீரும் கிடைத்துவிடும் எனும் மூடநம்பிக்கையும், தொழிற்துறையும், கல்வியும் வளர்ந்துவிடும் எனும் எதிர்பார்ப்பும்…. புதிதாக வாக்களித்த இளைய தலைமுறையினர்க்கோ அல்லது ஓட்டு போடும் வயதிலிருந்திருந்தும் முந்தைய ஜெ.வின் ஆட்சியினை நினைவுக் கூற இயலாதவர்களுக்கும் வேண்டுமானால் இருந்திருக்கலாம்! விலைவாசி உயர்வு, பஸ்கட்டண உயர்வு, விரைவில் மின்கட்டண உயர்வு.. போன்றவை பேரதிர்ச்சியினையும் தந்திருக்கலாம்!! ஆனால் அன்றாட அரசியலை உற்றுநோக்கும் அரசியல் ஆய்வகர்களுக்கு மட்டுமல்ல, ஜெ.வின் முந்தைய ஆட்சியில் பொருளாதார ரீதியில் தனியாக குடித்தனம் செய்த ஜாபக மறதியில்லாத அனைத்து குடிமகன்களும் இந்த ஆப்பினை... அதாங்க அபார உயர்வினை உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்பு வரும் என்பதை எதிர்பார்த்தே இருந்திருப்பர்!
ஜெ.வின் சிறப்பு என்னவெனில்…. மற்ற ஆட்சியாளர்களை போல ஒவ்வொரு பொருளின் விலையும் ஒவ்வொரு முறையாக ஏற்றி பல முறை அதிருப்தியடைவதை விட, ஒரேயடியாக அனைத்தையும் ஏற்றி ஒரேயொரு முறை மட்டும் அதிருப்தியினை திருப்தியுடன் சம்பாதித்துக் கொள்பவர். மறதி மன்னர்களாகிய நாம் சில நாட்கள் கூவிக் கொண்டு பின்னர் அவரவர் பிழைப்பினைக் காண்பதிலேயே மும்முரமடைவர். வாங்கும் திறன் தமிழக மக்களுக்கு அதிகரித்துள்ளதால் இத்தகைய உயர்வுகள் அவர்களை பாதிக்காது என அவரோ அவரது அல்லக்கை ஊடகங்களோ திரித்தும் கூறும். அது உண்மையெனில், வாங்கும் திறன் வாய்ந்த மக்களுக்கு இலவச பிச்சைகள் இனி எதற்கு?
இவரது சாணக்கியத்தனத்தினை, முன்பு ஆண்டவர்களை முடக்குவது எப்படி என்பதற்கே முழு நேரமும் மூளையை செலவிட்டு விரயமாக்காமல், சாமான்ய மக்களின் வாழ்வினை பாதிக்காத வகையில் ஆட்சி நடத்திக் காண்பிக்கட்டும்! நாடும் மகிழும்; நாமும் மகிழ்வோம்!! வாங்க நாம கார்ட்டூன்களை பார்க்க போகலாமுங்க. குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க!!
சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த விகடன், தினமணி,துக்ளக்... போன்ற அனைத்து தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!
எனது நன்றி:nellimoorthy.blogspot.com


















No comments:
Post a Comment