மும்பையில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யவில்லை என குற்றச்சாட்டுள்ளது. தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள அஜ்மல் கசாபை மட்டும் கைது செய்து மற்றவர்களைத் தப்ப விட்டுவிட்டனர். அஜ்மல் கசாபுக்கு அவர் விரும்பிய வழக்கறிஞரைக் கூட நியமிக்க அனுமதிக்கவில்லை. இதன்மூலம் அஜ்மல் கசாப் உண்மையான குற்றவாளியா? என்ற சந்தேகத்தை பிரபல ஊடகவியலாளர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
26.11.2008 அன்று நடைபெற்ற தீவிரவாதத்தாக்குதலில் மும்பை நரிமன் ஹவுசிலுள்ள சபாத் ஹவுசில் தாக்குதல் நடைபெற்றது. இதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையிலுள்ள காமா மருத்துவமனை தாக்குதலில்தான் தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரேயும் கொல்லப்பட்டார்.
நாட்டில் நடைபெறும் பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்கள் என பிஜேபி, ஆர்எஸ்எஸ் போன்ற சங்பரிவார அமைப்பினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வந்த நிலையில், ஏ.டி.எஸ். தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு இஸ்ரேல் உளவுப்பிரிவான மொஸாத்தும், சங்பரிவாரத்தைச் சேர்ந்த அமைப்புகளும் சேர்ந்து நடத்திய கூட்டுச் சதிதான் என்ற குற்றச்சாட்டை பிரபல பத்திரிக்கையாளர் அம்ரேஷ் மிஸ்ரா மற்றும் பல்வேறு பத்திரிகைகளும் குற்றம்சாட்டின.
இந்த தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலியர்களின் நடவடிக்கைகளை இந்திய உளவுத்துறையினர் ரகசியமாக கண்காணித்தனர். இந்த கண்காணிப்பில் வெளிவந்த தகவல்களில், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் மொஸாத் உளவுத்துறையினர் அதிக அளவில் இந்தியாவிற்கு வந்து செல்கின்றனர் என்பதும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளதும், வாடகைக்கு எடுக்கப்படும் வீடுகளுக்கு பலமடங்கு அதிகமான வாடகைப்பணம் கொடுப்பதும் தெரிய வந்துள்ளது.
அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ரகசியமாகவே உள்ளன. அவர்களில் பலபேர் நள்ளிரவில்தான் சந்தித்துக் கொள்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ரோஸ் தெருவில் இஸ்ரேல் மொஸாத் உளவாளிகளான சியோர் ஜல்மான் மற்றும் யாஃப்பா செனோய் ஆகிய இருவரும் வீடு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் அடிக்கடி இந்தியாவிற்கு வருவதற்காக பண்முறை நுழைஅனுமதி பெற்றுள்ளனர். அந்த வீட்டிற்குரிய வாடகை மதிப்பை விட பலமடங்கு அதிகமாக கொடுக்கின்றனர் என்று காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் சேக் பரீத் கூறுகையில், இவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்குரியதாக உள்ளது. பணப்பரிமாற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது. நள்ளிரவு நேரங்களில் சந்தேகத்திற்குரிய பல்வேறு நபர்கள் சந்தித்துவிட்டுச்செல்கின்றனர்; அவர்களின் வீடுகளுக்கு எளிதில் உள்ளே நுழைந்துவிட முடியாத அளவுக்கு நெருக்கமாக கண்காணிக்கக்கூடிய கருவிகள் பொருத்தியுள்ளனர்; பாதுகாப்புக்கு பல நபர்களை நியமித்துள்ளனர் என்றுதெரிவித்துள்ளார். மேலும், இவர்களைப்பற்றிய விசாரணை ஆரம்பக் கட்டத்தில்தான்உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளாக வரும் இஸ்ரேலியர்கள் ஆண்டுக்கணக்காக வாடகைக்குவீடு எடுத்துள்ளது பலத்த சந்தேகத்தைஎழுப்பியுள்ளது.ஏற்கெனவே இஸ்ரேல் உளவுப்பிரிவான மொஸாத்துக்கும், ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவாரக் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது யாவரும் அறிந்ததே! மத்தியில் பாஜக ஆட்சி செய்தபோது, இஸ்ரேலோடு நெருங்கிய தொடர்புகள் வெளிப்படையாக ஏற்படுத்தப்பட்டது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்தலைவர்கள் அடிக்கடி இஸ்ரேலுக்குச் சென்று வந்துள்ளனர். அதுபோலவே, இஸ்ரேல் உளவுப்பிரிவான மொஸாத் பிரிவினரும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்திப்பதைவழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் பல்வேறு தாக்குதல்களுக்கு மொஸாத்தும், ஹிந்துத்துவ கும்பலான பாஜக, ஆர்எஸ்எஸ்தான் காரணமென தெரியவந்துள்ளது. இதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஒரே காரணத்திற்காக ஏ.டி.எஸ். தலைவர் கர்கரே சுட்டுக்கொல்லப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு அப்பாவி முஸ்லிம்களை நாடு முழுவதும் காவல்துறையினர் கைதுசெய்வது தொடர்கதையாகியுள்ளது. மலேகான் குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மக்கா பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, சம்ஜவ்தாஎக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புகளில்அப்பாவி முஸ்லிம்களைத்தான்காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தால் பல ஆண்டுகளுக்குப் பின்விடுவிக்கப்பட்டனர்.
நாட்டில் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் முஸ்லிம்களைக் கண்மூடித்தனமாகக் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.முஸ்லிம்களுக்கு எதிராக காவல்துறையினர் பொய்யான சாட்சிகளையும், ஜோடனைகளையும் செய்து வருகின்றனர். சமீபத்தில்கூட காவல்துறைக்கு தகவல் கொடுக்கும் முஸ்லிம் நபர் ஒருவரையே மும்பை குண்டுவெடிப்புகுற்றவாளியாக்கிய கொடூரமும் இந்தியாவில் நடைபெற்றுள்ளது.
www.tmmk.info
No comments:
Post a Comment