கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினாலும் கூட மின்வெட்டு பிரச்சினையை அது தீர்க்காது என இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கிய ஜப்பானின் சுனாமி மற்றும் புகுஷிமா அணு உலை விபத்து நிகழ்ந்து ஓராண்டு ஆனதையொட்டி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் களமான இடிந்தகரை சென்றபின் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அணு உலை இயக்க தேவைப்படும் மின்சார செலவு மற்றும் மின்கடத்தலினால் வீணாகும் மின்சாரம்தான் கிடைக்கும். இது சென்னை மாநகரின் மின்சாரத் தேவையின் 13 சதவீதத்தை மட்டுமே நிறைவு செய்யும் என்றும் அட்மிரல் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினால் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 48 மணி நேரம்(!) மின்சாரம் தாராளமாகக் கிடைக்கும் என்று நீட்டி முழக்கி பொய்ப் பிரச்சாரம் செய்யும் நாராயணசாமிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
www.tmmk.info
No comments:
Post a Comment