பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகவும்முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கமுடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமே திரும்பிப் பார்க்கும்ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில்என்றால் நம்புவீர்களா !?
ஆம் நண்பர்களே..!! இதுநாள் வரை நம் அனைவருக்கும் சவூதி அரேபியா என்றாலே உடனேஞபாகத்திற்கு வருவது உலகத்தின் மிகப்பெரிய மசூதி என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே.அத்துடன் இப்பொழுது ஒரு புதிய சாதனையை பெண்களுக்காக மட்டுமே நிகழ்த்தி இருக்கிறார்கள் சவூதிஅரபியர்கள். ஆம்..! உலகத்தில் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக் கழகம் (World's Largest University Gives Saudi Women Hope for Change ) ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப்பல்கலைக் கழகத்தில் ஒரே நேரத்தில் ஐம்பது ஆயிரம் பெண்கள் பயிலும் அளவில் இந்த பிரமாண்டப்பல்கலைக் கழகத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாது இதுவரை உலகத்தில் எங்கும் இல்லாத அளவில் ஒரு பல்கலைக் கழகத்திற்குள்ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்கள் கொண்டநூலகம் அமைக்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் மாணவிகள் ஒரே நேரத்தில்தங்கிப் படிப்பதற்காக 12,000 அறைகள் கொண்ட தங்கும் விடுதிகளும் அருகில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.உடற்பயிற்சி, மற்றும் விளையாட்டு, சிறப்பு ஆய்வுகள் என இதன் சுற்றளவு 26 கி.மீ தூரத்தை தாண்டிநீள்கிறது இதன் பரப்பளவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..!!
உலகத்தில் முதன் முறையாக பல்கலைக் கழகத்தை முழுவதும் சுற்றி வருவதற்கு மெட்ரோ ரயில்அமைத்திருக்கும் ஒரே பல்கலைக் கழகம் இதுதான் என்று சொல்லவேண்டும். அந்த அளவிற்குபல்கலைக் கழகத்தில் பரப்பளவு விரிந்துக் கிடக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்..!
கால நிலையை மாற்றி அமைப்பதற்காக செயற்கையான முறையில் பல புதுமைகளை ஏற்படுத்திஇருக்கிறது சவூதி அரேபியா. 40000 சதுர மீட்டரில் சூரிய ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்திசெய்யும் விதமாக கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவுமிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல் பல்கலைக் கழகத்தின்வெப்பநிலையை சீராக வைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.
இதுமட்டுமல்லாது தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் பொருட்டு 700 படுக்கைஅறை கொண்ட ஹாஸ்பிடல், கான்ஃபரன்ஸ் ஹால், பரிசோதனைக் கூடம், நோனோ டெக்னாலஜிசம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு, தகவல் தொழில் நுட்பம், உயிரியியல் போன்றவற்றிற்காக தனித்தனிதுறைகள் இயக்கி இருக்கிறார்கள்.
இத்தனை சிறப்பு மிக்க இந்தப் பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம் (Princess Nora Bint Abdulrahman University in Riyadh) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20பில்லியன் ரியால் தாண்டும் என்கிறது தகவல்கள்.
No comments:
Post a Comment