இந்தியாவும் இஸ்ரேலும் ராணுவ ரீதியிலும், அரசியல் தொடர்புகளிலும் அதீத நெருக்கம் காட்டி கொஞ்சி குலாவிவரும் நிலையில் இஸ்ரேலின் ராணுவத் தளவாட தொழிற்சாலை இந்திய அரசின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஒப்பந்தங்களைப் பெற கையூட்டு உள்ளிட்ட முறைகேடான விவகாரங்களில் ஈடுபட்டதைக் கண்டு வெறுத்துப்போன நிலையில் மத்திய அரசு இந்த அதிரடி முடிவினை எடுத்துள்ளது.தெளிவான ஆதாரங்கள் கிடைத்ததால் இந்த முடிவு எடுத்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தரைப்படை, வான்படை, கடற்படை அனைத்திற்கும் தேவையான ஆயுதங்களை வழங்கும் இஸ்ரேலிய ராணுவத் தொழிற்சாலை இஸ்ரேலிய அரசு சார்புடையதாகும்.இந்தத் தகவலை சிபிஐயும் உறுதி செய்துள்ளது. போலி ஏவுகணைகள், வெடிக்காத ராணுவத் தளவாடங்கள் போன்றவற்றை இஸ்ரேல் முன்பு இந்தியாவிற்கு விநியோகம் செய்து ஏமாற்றியது நினைவிருக்கலாம்
www.tmmk.info
No comments:
Post a Comment