Thursday, March 1, 2012

இனப்படுகொலை தொடர்பாக மோடியை விசாரித்தே தீரவேண்டும் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை



E-mailPrintPDF
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனப்படுகொலை சம்பவத்தில் மோடியின் பங்கு குறித்து ஆதாரமில்லை என கூறும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் முதல்கட்ட அறிக்கைக்குஎதிராக நாடெங்கும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

இனப்படுகொலைகளின் சூத்ரதாரியான மோடிக்கு தொடர்பே இல்லை என்பதைப் போல வெளியிடப்படும் அறிக்கை நாட்டையே அதிர்ச்சியுறச் செய்தது. 2002ஆம் ஆண்டு கோத்ராவில் வேதனைக்குரிய சம்பவம் நிகழ்ந்த உடன்இதுதொடர்பான செய்திகளை வெளியிட்டஊடகங்கள் அனைத்தும் இது ஒரு விபத்துஎன்றே செய்திகளை வெளியிட்டன. சில மணிநேரம் கழித்து குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சம்பவ இடத்திற்கு வந்துவிட்டு செல்லும்வரை அது விபத்து என்ற உண்மைதான் நாடு முழுவதும் வியாபித்திருந்தது. மோடி வந்தார். கோத்ராரயில் பெட்டிகளைப் பார்வையிட்டார். அதில்மிகப்பெரிய சதி இருப்பதாக அறிவித்தார். அதன்பிறகு நடைபெற்றவையெல்லாம் உலக சரித்திரத்தின் கறைபடிந்த கறுப்பு பக்கங்களாயின.காவல்துறை உயர்அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரவர்க்கத்தினரை ரகசியமாகக் கூட்டிய மோடி, நடைபெற்ற விபத்தைப்படுகொலையாக்கி விஷமத்தனமாக உரையாற்றியதோடு, ஹிந்துக்களின் கோபத்தைத்தீர்த்துக்கொள்ள அரசு அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும், அவர்களின் மீது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாது அமைதிகாக்க வேண்டும் என்று கூறி முஸ்லிம் இனப்படுகொலைகளுக்கு முழுமுதற் காரணமாக இருந்தார்.
இந்த அதிர்ச்சித்தரத்தக்க உண்மையை குஜராத்தின் அன்றைய காவல்துறைத் தலைவர் டி.ஜி.பி. ஸ்ரீகுமார், புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரி சஞ்சீவ்பட் ஆகியோர் ஆவணப்படுத்தியுள்ளனர். இனப்படுகொலைகளை நிகழ்த்த திட்டமிடப்பட்ட சதி ஆலோசனைக் கூட்டத்தின் பேச்சுக்களை அடங்கிய பதிவுகள், காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்துகொண்டே அப்பாவி சிறுபான்மை மக்களைக் கொத்துக் கொத்தாக கொல்லுமாறுக் கூறிய பாஜக முன்னணிப் பிரமுகர்களின் டெலிபோன் மற்றும் செல்போன் உரையாடல்கள் அடங்கிய டேப்களை விசாரணை ஆணையங்களின் முன்பு சமர்ப்பிக்க வேண்டுமென, ஜனசங்கர்ஷா மஞ்சின் தலைவர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்காக வாதாடிய வழக்கறிஞர் முகுல்சின்ஹாவின் வாதங்கள், உரிமைப் போராளி தீஸ்தா செதல்வாட்டின் தொடர் சடட்ப்போராட்டங்கள், கயவர்களால் தன் கணவர் உள்ளிட்ட 69 பேரை தன் கண்ணெதிரே குதறப்பட்ட காட்சியைக் கண்டு பதைத்த குல்பர்க் மாளிகையின் ஜாகியா ஜாஃப்ரி ஆகியோர் நீதித்துறையின் கதவுகளைத் தொடர்ந்து தட்டிவந்த நீதிப் போராட்டங்களையெல்லாம் காதிலே வாங்காமல் சிறப்பு புலனாய்வுக்குழு மோடிக்கு உத்தமர் சான்றிதழ் கொடுத்துள்ளதா என்ற கேள்வி நாலாபுறங்களிலும் இருந்து புறப்பட்டு வரும் சூழலில், சிறப்புப் புலனாய்வுக்குழுவின் முதல்கட்ட அறிக்கை நிச்சயம் அதிர்ச்சி தரக்கூடியது என்பதில் ஐயமில்லை.
இந்நிலையில் இனப்படுகொலை விவகாரத்தில் மோடியை விசாரித்தே தீரவேண்டும் என அமிக்கஸ் க்குயூரி (நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞர்) ராஜு ராமச்சந்திரன் கூறியுள்ளார். மேலும், குஜராத் மாநில உளவுத்துறை அதிகாரியும் தற்போது மோடி அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப்படும் சஞ்சீவ் பட்டின் வாதங்களை நிராகரித்ததற்கு கடுமையான விமர்சனங்களை வீசிய ராஜு ராமச்சந்திரன், நரேந்திர மோடியை விசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு ஒன்றையும் சமர்ப்பித்திருக்கிறார். இத்தகவலை தெஹல்கா செய்தி ஏடு வெளியிட்டுள்ளது. சிறப்புக்குழுவின் அறிக்கைகள் முழுமையான அளவில் வெளிவந்து மக்களின் அதிருப்தியைப் போக்குமா?
www.tmmk.info

No comments:

Post a Comment