Saturday, July 30, 2011

மாணவி சாதனை--அமெரிக்காவின் நற்செயல்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் ஃபாத்திமா. இவர் ஒரு அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா தர்வேஷ் (20). நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3-ம் ஆண்டு பயில்கிறார்.

கடந்த ஆண்டு பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் கடந்த ஆண்டு அமெரிக்க தூதரகத்தினர் நடத்திய ஆங்கில பேச்சு போட்டியில், "ஜனநாயகம்" என்ற தலைப்பில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பி, அதில் சில விமர்சனங்களை சொல்லச்செய்தனர். அதையும் சிறப்பாக செய்த மாணவி ஹலிமாவை, அமெரிக்க அரசின் செலவில் 10 மாதங்களுக்கு வடக்கு அலபாமா பல்கலையில் கலாச்சாரம் மற்றும் கம்ப்யூட்டர் கல்விக்கு தேர்வு செய்தனர். மாதம் சுமார் ரூ.12 ஆயிரம் ஊதியத்துடன் தங்கும் வசதி, உணவுடன் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.

அமெரிக்காவில் 10 மாத படிப்பிற்கு பின், தற்போது நெல்லை திரும்பியுள்ள மாணவி ஹலிமா தர்வேஷ் கூறியதாவது :-

 
மிகவும் பின்தங்கிய பகுதியில் வளர்ந்த நான் சிறுவயதில் நன்றாக படித்தேன்.என் தந்தை தர்வேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருந்தார். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். அப்பாவின் மரணத்தால், குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. உறவினர்களின் செலவில்தான் மேலப்பாளையம் பெண்கள் கல்லூரிக்கு பயில வந்தேன். 

அப்போதுதான் இந்த அமெரிக்க வாய்ப்பு கிடைத்தது. தனியாக என்னை அமெரிக்கா அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை என்றாலும், கல்வி கற்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதற்காக அனுப்பி வைத்தார். கடந்த 10 மாதங்களாக அமெரிக்காவில் நிறைய கற்றுக்கொண்டேன். நவீனமுறையில் கற்றுக்கொடுத்தல், கம்ப்யூட்டர் துறையில் நாம் 5 ஆண்டுகளுக்கு பின்பு படிக்கும் விஷயங்களை அங்கு உடனுக்குடன் கற்றுத்தருகிறார்கள். என்னைப்போலவே ஜோர்டான், இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 88 பேர் அங்கு பயின்றோம்.


பெற்றோரின் பிரிவு தெரியக்கூடாது என்பதற்காக ஹேஸ்டிங்க்ஸ் தம்பதியினர் என்னை குழந்தையாக தத்தெடுத்துக்கொண்டு உதவிகள் புரிந்தார்கள். மாதாமாதம் அமெரிக்கா தந்த உதவித்தொகையை, எங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி முடிந்த பிறகு வீட்டின் தேவைக்காகவும் 11-ம் வகுப்பு பயில உள்ள தங்கை ரிஸ்வானாவிற்காகவும் நான் ஏதாவது வேலையில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தொடர்ந்து படித்து ஐ.ஏ.எஸ்., படிப்பேன்.


ரயில்களில் தொலைத்த பொருட்களை பெற

பாசத்துக்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும் நிலை

திருமண விழா ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அங்கு ஒரு துண்டுப் பிரசுரத்தை அளித்தார்கள். ஏதோ வாழ்த்து மடல் என்றெண்ணிப் படித்தபோது, இன்றைய பெற்றோர் பலரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அது இதுதான்.

என் அருமை மகனே, மகளே, நான் முதுமையால் தள்ளாடும் நாள்களில், நான் உண்ணும்போது, உடை அழுக்கானால்.. நான் உடையணிய முடியாதிருந்தால்..

பொறுமையைக் கடைப்பிடி. நீ குழந்தையாய் இருந்தபோது, அவற்றைக் கற்றுத் தர நான் செலவிட்ட பல மணி நேரங்களை எண்ணிப் பார்.

நான் குளிக்க விரும்பாதபோது என்னை அவமானப்படுத்தாதே, கோபித்துக் கொள்ளாதே, உன்னைக் குளிப்பாட்ட ஆயிரம் கற்பனைக் காரணங்களைச் சொல்லி உன் பின்னால் ஓடி வந்த நாள்களை நினைத்துப்பார்.

சொன்னதையே திரும்பத் திரும்ப நான் சொன்னாலும், அதைக் கவனித்துக் கேள். உனக்குத் தூக்கம் வரும்வரை திரும்பத் திரும்ப ஒரே கதையைச் சொன்னது நானல்லவா.

என் கால்கள் தளரும்போது உன் கரங்களால் என்னைத் தாங்கு. நீ நடை பழக என் கரங்கள் உன் பிஞ்சுப் பாதங்களைத் தாங்கி நின்றதை அப்போது நினைத்துக்கொள்.

மறதி என்னை ஆட்கொள்ளும்போதெல்லாம் என்னிடம் சிடுசிடுக்காதே. என் உரையாடலைவிட, நான் உன்னுடன் இருப்பதும், நீ என்னைக் கவனித்துக் கொள்வதுமே முக்கியம்'.

வயதான தாய், தந்தையரைத் தொட்டிலில் அமர்த்தி தனது இரு தோள்களில் சுமந்த நம் நாட்டில்தான் இந்த ஏக்கப் பெருமூச்சு வார்த்தைகள் உதித்துள்ளன.

இன்று பணமும், பகட்டும் மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது.

இதற்காக இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த கணவன், மனைவி வேலைவாய்ப்பைத் தேடி வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது.

தனிக் குடித்தனம் என்ற புதிய சிந்தாந்தம் இன்றைய இளைய தலைமுறை பெண்களிடம் வேரூன்றிவிட்டது. இதனால் கிராமப்புறங்களில்கூட கூட்டுக்குடும்ப வாழ்க்கை மெல்லச் சிதைந்து வருகிறது. இத்தகைய சூழலில் பெற்றோர் வயதான காலத்தில் தனித்து விடப்படும் நிலை உருவாவதைத் தடுக்க முடியவில்லை. ஒண்டுக் குடித்தனம், உல்லாச வாழ்க்கை,

வயதான பெற்றோரின் அறிவுரையை ஏற்க இயலாத மனப்போக்கு, அவர்களைப் பராமரிக்க நேரத்தைச் செலவிட மனமின்மை போன்ற காரணங்களால் இன்றைக்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க நாட்டின் கலாசாரச் சீரழிவால், இன்றைக்கு 17 ஆயிரம் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட்டு 1.5 கோடி முதியோரைப் பராமரிக்கும் நிலை உருவெடுத்துள்ளது. மேலைநாட்டுக் கலாசாரம் மெல்ல நம்மிடையே பரவும் நிலையில் இங்கேயும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் வியப்பில்லைதான்.



இன்றைக்கு நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் இருப்பினும், அவற்றில் பெரும்பாலானவை லாபநோக்குடனும், விளம்பர நோக்குடனும் பராமரிக்கப்படுபவையாகவே உள்ளன.

இந்நிலையில், தமிழக அரசு மாவட்டம்தோறும் அரசு சார்பில் முதியோர் இல்லங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நிலை வருவது தலைக்குனிவுதான் இன்றைய தலைமுறைக்கு. வெளிஇடங்களிலும், வெளிநாடுகளிலும் பணம் சம்பாதிக்கக் குடியேறும் இளைய தலைமுறையினர் பலர் ஏனோ தனது பெற்றோரைத் தன்னோடு வைத்துப் பாதுகாக்கத் தவறுகின்றனர். இதனால் தனித்துவிடப்படும் பெற்றோர், தனது மகனின், மகளின் பாசத்துக்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும் நிலை அதிகரித்து வருகிறது.

முதியோர் இல்லங்களில் என்னதான் பராமரித்தாலும், அவற்றை அண்டி வாழும் பெற்றோரின் இறுதிக்காலம் மகிழ்ச்சிகரமாக இருக்க வாய்ப்பில்லை.

செல்ல நாய்க்குட்டியைப் பராமரிக்கவும், பாசத்தைக் காட்டவும் நேரம் ஒதுக்க முடிந்த இன்றைய தலைமுறையினர் பெற்றோர் விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை, கணவன்-மனைவி கட்டாயம் வேலைக்குச் செல்லும் மனப்போக்கு, குழந்தைகளிடம் இருந்து பெற்றோரைப் பிரித்துவிடுகிறது. இதில் இன்றைய தலைமுறை உடனடியாகக் கவனம் செலுத்தியாக வேண்டும். இல்லையெனில், அவர்களும் முதியோர் இல்லங்களை எதிர்காலத்தில் நாட வேண்டியிருக்கும்.

பாசத்துக்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும் நிலை

திருமண விழா ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அங்கு ஒரு துண்டுப் பிரசுரத்தை அளித்தார்கள். ஏதோ வாழ்த்து மடல் என்றெண்ணிப் படித்தபோது, இன்றைய பெற்றோர் பலரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அது இதுதான்.

என் அருமை மகனே, மகளே, நான் முதுமையால் தள்ளாடும் நாள்களில், நான் உண்ணும்போது, உடை அழுக்கானால்.. நான் உடையணிய முடியாதிருந்தால்..

பொறுமையைக் கடைப்பிடி. நீ குழந்தையாய் இருந்தபோது, அவற்றைக் கற்றுத் தர நான் செலவிட்ட பல மணி நேரங்களை எண்ணிப் பார்.

நான் குளிக்க விரும்பாதபோது என்னை அவமானப்படுத்தாதே, கோபித்துக் கொள்ளாதே, உன்னைக் குளிப்பாட்ட ஆயிரம் கற்பனைக் காரணங்களைச் சொல்லி உன் பின்னால் ஓடி வந்த நாள்களை நினைத்துப்பார்.

சொன்னதையே திரும்பத் திரும்ப நான் சொன்னாலும், அதைக் கவனித்துக் கேள். உனக்குத் தூக்கம் வரும்வரை திரும்பத் திரும்ப ஒரே கதையைச் சொன்னது நானல்லவா.

என் கால்கள் தளரும்போது உன் கரங்களால் என்னைத் தாங்கு. நீ நடை பழக என் கரங்கள் உன் பிஞ்சுப் பாதங்களைத் தாங்கி நின்றதை அப்போது நினைத்துக்கொள்.

மறதி என்னை ஆட்கொள்ளும்போதெல்லாம் என்னிடம் சிடுசிடுக்காதே. என் உரையாடலைவிட, நான் உன்னுடன் இருப்பதும், நீ என்னைக் கவனித்துக் கொள்வதுமே முக்கியம்'.

வயதான தாய், தந்தையரைத் தொட்டிலில் அமர்த்தி தனது இரு தோள்களில் சுமந்த நம் நாட்டில்தான் இந்த ஏக்கப் பெருமூச்சு வார்த்தைகள் உதித்துள்ளன.

இன்று பணமும், பகட்டும் மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது.

இதற்காக இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த கணவன், மனைவி வேலைவாய்ப்பைத் தேடி வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது.

தனிக் குடித்தனம் என்ற புதிய சிந்தாந்தம் இன்றைய இளைய தலைமுறை பெண்களிடம் வேரூன்றிவிட்டது. இதனால் கிராமப்புறங்களில்கூட கூட்டுக்குடும்ப வாழ்க்கை மெல்லச் சிதைந்து வருகிறது. இத்தகைய சூழலில் பெற்றோர் வயதான காலத்தில் தனித்து விடப்படும் நிலை உருவாவதைத் தடுக்க முடியவில்லை. ஒண்டுக் குடித்தனம், உல்லாச வாழ்க்கை,

வயதான பெற்றோரின் அறிவுரையை ஏற்க இயலாத மனப்போக்கு, அவர்களைப் பராமரிக்க நேரத்தைச் செலவிட மனமின்மை போன்ற காரணங்களால் இன்றைக்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க நாட்டின் கலாசாரச் சீரழிவால், இன்றைக்கு 17 ஆயிரம் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட்டு 1.5 கோடி முதியோரைப் பராமரிக்கும் நிலை உருவெடுத்துள்ளது. மேலைநாட்டுக் கலாசாரம் மெல்ல நம்மிடையே பரவும் நிலையில் இங்கேயும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் வியப்பில்லைதான்.



இன்றைக்கு நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் இருப்பினும், அவற்றில் பெரும்பாலானவை லாபநோக்குடனும், விளம்பர நோக்குடனும் பராமரிக்கப்படுபவையாகவே உள்ளன.

இந்நிலையில், தமிழக அரசு மாவட்டம்தோறும் அரசு சார்பில் முதியோர் இல்லங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நிலை வருவது தலைக்குனிவுதான் இன்றைய தலைமுறைக்கு. வெளிஇடங்களிலும், வெளிநாடுகளிலும் பணம் சம்பாதிக்கக் குடியேறும் இளைய தலைமுறையினர் பலர் ஏனோ தனது பெற்றோரைத் தன்னோடு வைத்துப் பாதுகாக்கத் தவறுகின்றனர். இதனால் தனித்துவிடப்படும் பெற்றோர், தனது மகனின், மகளின் பாசத்துக்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும் நிலை அதிகரித்து வருகிறது.

முதியோர் இல்லங்களில் என்னதான் பராமரித்தாலும், அவற்றை அண்டி வாழும் பெற்றோரின் இறுதிக்காலம் மகிழ்ச்சிகரமாக இருக்க வாய்ப்பில்லை.

செல்ல நாய்க்குட்டியைப் பராமரிக்கவும், பாசத்தைக் காட்டவும் நேரம் ஒதுக்க முடிந்த இன்றைய தலைமுறையினர் பெற்றோர் விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை, கணவன்-மனைவி கட்டாயம் வேலைக்குச் செல்லும் மனப்போக்கு, குழந்தைகளிடம் இருந்து பெற்றோரைப் பிரித்துவிடுகிறது. இதில் இன்றைய தலைமுறை உடனடியாகக் கவனம் செலுத்தியாக வேண்டும். இல்லையெனில், அவர்களும் முதியோர் இல்லங்களை எதிர்காலத்தில் நாட வேண்டியிருக்கும்.

பாசத்துக்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும் நிலை

திருமண விழா ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அங்கு ஒரு துண்டுப் பிரசுரத்தை அளித்தார்கள். ஏதோ வாழ்த்து மடல் என்றெண்ணிப் படித்தபோது, இன்றைய பெற்றோர் பலரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அது இதுதான்.

என் அருமை மகனே, மகளே, நான் முதுமையால் தள்ளாடும் நாள்களில், நான் உண்ணும்போது, உடை அழுக்கானால்.. நான் உடையணிய முடியாதிருந்தால்..

பொறுமையைக் கடைப்பிடி. நீ குழந்தையாய் இருந்தபோது, அவற்றைக் கற்றுத் தர நான் செலவிட்ட பல மணி நேரங்களை எண்ணிப் பார்.

நான் குளிக்க விரும்பாதபோது என்னை அவமானப்படுத்தாதே, கோபித்துக் கொள்ளாதே, உன்னைக் குளிப்பாட்ட ஆயிரம் கற்பனைக் காரணங்களைச் சொல்லி உன் பின்னால் ஓடி வந்த நாள்களை நினைத்துப்பார்.

சொன்னதையே திரும்பத் திரும்ப நான் சொன்னாலும், அதைக் கவனித்துக் கேள். உனக்குத் தூக்கம் வரும்வரை திரும்பத் திரும்ப ஒரே கதையைச் சொன்னது நானல்லவா.

என் கால்கள் தளரும்போது உன் கரங்களால் என்னைத் தாங்கு. நீ நடை பழக என் கரங்கள் உன் பிஞ்சுப் பாதங்களைத் தாங்கி நின்றதை அப்போது நினைத்துக்கொள்.

மறதி என்னை ஆட்கொள்ளும்போதெல்லாம் என்னிடம் சிடுசிடுக்காதே. என் உரையாடலைவிட, நான் உன்னுடன் இருப்பதும், நீ என்னைக் கவனித்துக் கொள்வதுமே முக்கியம்'.

வயதான தாய், தந்தையரைத் தொட்டிலில் அமர்த்தி தனது இரு தோள்களில் சுமந்த நம் நாட்டில்தான் இந்த ஏக்கப் பெருமூச்சு வார்த்தைகள் உதித்துள்ளன.

இன்று பணமும், பகட்டும் மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது.

இதற்காக இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த கணவன், மனைவி வேலைவாய்ப்பைத் தேடி வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது.

தனிக் குடித்தனம் என்ற புதிய சிந்தாந்தம் இன்றைய இளைய தலைமுறை பெண்களிடம் வேரூன்றிவிட்டது. இதனால் கிராமப்புறங்களில்கூட கூட்டுக்குடும்ப வாழ்க்கை மெல்லச் சிதைந்து வருகிறது. இத்தகைய சூழலில் பெற்றோர் வயதான காலத்தில் தனித்து விடப்படும் நிலை உருவாவதைத் தடுக்க முடியவில்லை. ஒண்டுக் குடித்தனம், உல்லாச வாழ்க்கை,

வயதான பெற்றோரின் அறிவுரையை ஏற்க இயலாத மனப்போக்கு, அவர்களைப் பராமரிக்க நேரத்தைச் செலவிட மனமின்மை போன்ற காரணங்களால் இன்றைக்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க நாட்டின் கலாசாரச் சீரழிவால், இன்றைக்கு 17 ஆயிரம் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட்டு 1.5 கோடி முதியோரைப் பராமரிக்கும் நிலை உருவெடுத்துள்ளது. மேலைநாட்டுக் கலாசாரம் மெல்ல நம்மிடையே பரவும் நிலையில் இங்கேயும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் வியப்பில்லைதான்.



இன்றைக்கு நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் இருப்பினும், அவற்றில் பெரும்பாலானவை லாபநோக்குடனும், விளம்பர நோக்குடனும் பராமரிக்கப்படுபவையாகவே உள்ளன.

இந்நிலையில், தமிழக அரசு மாவட்டம்தோறும் அரசு சார்பில் முதியோர் இல்லங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நிலை வருவது தலைக்குனிவுதான் இன்றைய தலைமுறைக்கு. வெளிஇடங்களிலும், வெளிநாடுகளிலும் பணம் சம்பாதிக்கக் குடியேறும் இளைய தலைமுறையினர் பலர் ஏனோ தனது பெற்றோரைத் தன்னோடு வைத்துப் பாதுகாக்கத் தவறுகின்றனர். இதனால் தனித்துவிடப்படும் பெற்றோர், தனது மகனின், மகளின் பாசத்துக்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும் நிலை அதிகரித்து வருகிறது.

முதியோர் இல்லங்களில் என்னதான் பராமரித்தாலும், அவற்றை அண்டி வாழும் பெற்றோரின் இறுதிக்காலம் மகிழ்ச்சிகரமாக இருக்க வாய்ப்பில்லை.

செல்ல நாய்க்குட்டியைப் பராமரிக்கவும், பாசத்தைக் காட்டவும் நேரம் ஒதுக்க முடிந்த இன்றைய தலைமுறையினர் பெற்றோர் விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை, கணவன்-மனைவி கட்டாயம் வேலைக்குச் செல்லும் மனப்போக்கு, குழந்தைகளிடம் இருந்து பெற்றோரைப் பிரித்துவிடுகிறது. இதில் இன்றைய தலைமுறை உடனடியாகக் கவனம் செலுத்தியாக வேண்டும். இல்லையெனில், அவர்களும் முதியோர் இல்லங்களை எதிர்காலத்தில் நாட வேண்டியிருக்கும்.

Friday, July 29, 2011

தலித்களின் வீடுகளை இடித்து, நிலத்தை ஆக்கிரமித்த ராஜாத்தி அம்மாளின் அக்கவுண்டன்ட்!

திருச்சி: திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் அக்கவுண்டன்ட் ரமேஷ் தங்களது வீடுகளை இடித்து தள்ளிவிட்டு நிலத்தை அபகரித்துக் கொண்டதாக திருச்சியில் உள்ள இ.புதூர் தலித்துகள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர்.

அவர்கள் தந்துள்ள புகார் மனுவில், இ.புதூர் கிராமத்தில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 31 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
1993-94ம் ஆண்டில் இருந்து வீட்டு வரியையும் திருச்சி மாநகராட்சிக்கு செலுத்தி வந்தோம்ர்.

அங்கு வசித்த மக்களுக்கு மின்சாரம், குடிநீர், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் வழங்கப்பட்டிருந்தன.

இந் நிலையில், 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி ராஜாத்தி அம்மாளின் அக்கவுண்டன்ட் ரமேஷ், காரைக்குடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தம்பிராஜா என்பவருடன் வந்து, அந்த நிலத்தை தான் வாங்கிவிட்டதாக கூறி அங்கு குடியிருந்தவர்களை காலி செய்யுமாறு கூறினார்.

பின்னர் அவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அங்கிருந்த வீடுகளை இடித்து தள்ளிவிட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

அங்கு குடியிருப்பவர்களை புகார் கொடுக்க தலைமையேற்று வந்த நிர்மலா தேவி என்பவர் நிருபர்களிடம் கூறுகையில், அங்கிருந்த எல்லா விடுகளையும் ஒரு மணி நேரத்தில் இடித்து தள்ளிவிட்டனர்.

நாங்கள் இதுபற்றி அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரி, ஸ்ரீரங்கம் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் முறையிட்டோம். ஆனால், யாரும் எங்களுக்கு உதவிக்கு வரவில்லை.

அங்கிருந்த வீடுகளுக்கு ஆதரவான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் வைத்திருக்கிறோம் என்றார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவை மாவட்ட வருவாய் அதிகாரி பேச்சியம்மாள், திருச்சி போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
Thatstamil

அழகிரியின் கூட்டாளி அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளியான அட்டாக் பாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.

நில அபகரிப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டோரை தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வளைத்து வளைத்துக் கைது செய்து வருகின்றனர். மதுரையில் மு.க.அழகிரியின் நெருங்கிய கூட்டாளிகளான அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், கோ.தளபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவர்களில் அட்டாக் பாண்டி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுரேஷ், தளபதி உள்ளிட்டோர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமையன்று பொட்டு சுரேஷ் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதனால் அவர் ஒரு ஆண்டுக்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையி்ல் இன்று அட்டாக் பாண்டி மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. மதுரை மாநகர காவல்துறை ஆணையர் கண்ணப்பனின் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம், அட்டாக் பாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகர் திருச்சி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் மூலம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதியுள்ள அழகிரியன் 2வது கூட்டாளி பாண்டி ஆவர்.

அட்டாக் பாண்டி மீது நில அபகரிப்பு, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன. ஏற்கனவே இவர் தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.
thatstamil

ஆக 5-க்குள் சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்க வேண்டும்- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சமச்சீர் கல்வி பாடத்திட்டப் புத்தகங்களை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்பட்டுவிட வேண்டும் என உச்சநீதி மன்றம் தமிழக அரசுக்கு இன்று உத்தரவிட்டது.

திமுக அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வியை இப்போதைய ஜெயலலிதா அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என கடந்த 18-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும் வருகிற 22-ந்தேதிக்குள் மாணவர்கள் அனைவருக்கும் சமச்சீர் பாட புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் ஆகஸ்ட் 2 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வினியோகிக்க உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கு குறித்த இறுதி விசாரனை நடைபெற்று வருகின்றது.

கடந்த 2 நாட்களாக அரசுத் தரப்பு வாதம் நடந்து வந்தது. அப்போது ஆகஸ்ட் 2 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க இயலாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆகஸ்ட் 5 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவுவிட்டுள்ளது.

மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் வரும் செவ்வாய்கிழமை விசாரணை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
thatstamil

எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்

பெங்களூர்: வெறும் 25 எம்.எல்.ஏக்கள் வரை மட்டுமே தன்னை ஆதரித்ததால் கடும் அதிர்ச்சி அடைந்த முதல்வர் எதியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். தனது ராஜினாமாக் கடிதத்தை கட்சித் தலைவர் நிதின் கத்காரிக்கு அவர் அனுப்பி வைத்தார்.

கர்நாடக சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் எதியூரப்பா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பாஜக இன்று காலை உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய, பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை நடக்கிறது என்றும் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

ஆனால் இதை முதலில் எதியூரப்பா ஏற்கவில்லை. மாறாக, தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டத்தை அவர் அதிரடியாக பெங்களூரில் கூட்டினார். ஆனால் அவருக்கு அங்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. அவர் கூட்டிய கூட்டத்துக்கு அதிகபட்சம் 25 பேர் வரை மட்டுமே வந்திருந்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியுற்ற எதியூரப்பா தனது பிடிவாதத்தை தளர்த்தியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து கத்காரியுடன் தொலைபேசியில் அவர் தொடர்பு கொண்டு பேசினார். கட்சி முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், கத்காரியுடன் எதியூரப்பா பேசினார். அப்போது கர்நாடகத்தில் தனது நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் மேலிட முடிவுக்குத் தான் கட்டுப்படுவதாகவும் அவர் தெரிவித்தார் என்றார்.

இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாலையில் கத்காரிக்கு அனுப்பி வைத்தார் எதியூரப்பா.

இதன் மூலம் கர்நாடக பாஜகவில் நிலவிய பெரும் பூசல் முடிவுக்கு வந்துள்ளது. நாளை புதிய முதல்வரை பாஜக தேர்வு செய்யவுள்ளது.

எதியூரப்பாவுக்குப் பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய நாளை பெங்களூரில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நடக்கும். மூத்த தலைவர்களான அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோர் முன்னிலையில் இக் கூட்டம் நடக்கும்.

அடுத்த முதல்வர் யார்?

அடுத்த முதல்வர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தக்குமார், ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன. இவர்களில் ஈஸ்வரப்பா, எதியூரப்பாவின் ஆதரவாளர் ஆவார். ஜெகதீஷ் ஷெட்டர் தீவிர எதியூரப்பா எதிர்ப்பாளர் ஆவார். இவர்கள் தவிர எதியூரப்பாவின் தீவிர ஆதரவாளரான வி.எஸ்.ஆச்சார்யாவும் போட்டிக் களத்தில் உள்ளார்.
thatstamil

காசு கொடுத்துதானே சார் வாங்குறீங்க....? நுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை!


காசு கொடுத்துதானே சார் வாங்குறீங்க....? நுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை!

 அன்றாட வாழ்க்கையின் அவசரத்தில் நுகர்வோராய் இருக்கும் நாம் வியாபாரிகளை பல்வேறு காரணங்களுக்காக குற்றம் சொல்வோம் ஆனால் நுகர்வோரின் கடமைகள் என்ன? என்று நமக்குத் தெரியுமா?  இது பற்றிய ஒரு விழிப்புணர்வு பார்வை இதோ...

முக்கியப் பேருந்து நிலையங்கள் போன்ற, அவசரகதியாக மக்கள் கூடும் இடங்களில் அமைந்திருக்கும் கடைகளில் சென்று பொருட்களை வாங்கும் போது பார்த்தால், பெரும்பாலும் இரண்டு மூன்று ரூபாய் அதிகம் விலை வைத்தே விற்பனை செய்கிறார்கள். என்னது இது? எம்.ஆர்.பி இவ்வளவு தானே, ஏன் அதிகமான விலைக்கு இந்த பொருட்களை விற்கிறீர்கள் என்று கேட்டு விட முடியாது. அப்படிக் கேட்பின் சுற்றி நிற்பவர்களும், கடைக்காரரும் நம்மைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே... கொடுமை. அத்தனை ஏளனம் இருக்கும். நாம் வாங்குகின்ற பொருளுக்கு காசு குடுக்கின்ற நாம் எஜமானர்கள் கிடையாது. இது தான் நடப்பில் உள்ள நிதர்சனமான உண்மை. சரி, அதட்டித்தான் கேட்க வேண்டாம், "என்ன சார் இது? இப்டிப் பண்றீங்களே" என நியாயமான முறையில் கேட்டாலும் கூட... அதான் எல்லாரும் வாங்கிட்டுப் போறாங்களே.. உனக்கு மட்டும் என்னய்யான்னு துரத்தாத குறையாக, ஒரு அலட்சியப் பதில் வரும். ஏன் இந்த நிலை? எப்படி நாம் இந்த சூழலுக்குத் தள்ளப் பட்டோம்?
நம் மனமும் இது போன்ற அநியாயங்களுக்கு வேறு வழியின்றி இசைந்து,சகித்துக் கொள்ளப் பழகி விட்டது போலும்... மற்றவர்களும் வாங்கி விட்டுத் தானே செல்கிறார்கள். நமக்கு மட்டும் என்ன? என்று போகவும் மனமில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. வாங்கிவிட்டுச் செல்லும் அத்துனை பேர்களும் 1% அளவாவது எரிச்சல் படாமல் இல்லை. இது தான் நம் தலையெழுத்து போலும். நாம்(சாமானியர்கள்) ஒடுக்கப்படும் போது, எங்குமே குரல் எழுப்பக் கூட முடியாதபடி தான் நம் குரல்வளைகள் குடும்பம் என்ற கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றன.சரி.. ஒரு சாமானிய மனிதனாக... இதை எப்படித் தட்டிக் கேட்பது? இல்லையென்றால் யாரிடம் புகார் அளிப்பது என விசாரித்ததில் கிடைத்த தகவலைப் பார்ப்போம்.
  MRP -ஐ விட பத்து பைசா அதிகம் வாங்கினாலும் அதற்கான பில்லை முதலில் வாங்குங்கள். அப்படியே சென்று நுகர்வோர் பாதுகாப்பு மையத்தில் ஒரு புகார் செய்தால் போதும். மற்றவை தானாகவே நடந்துவிடும். அல்லது உங்கள்  ஊரில் உள்ள நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் உணவுகலப்பட  தடுப்புப் பிரிவில் சென்று புகார் தாருங்கள். ஏனெனில் அவர்கள் தான் இதை ஆய்வுசெய்து கண்டுபிடிக்க கடமைப் பட்டவர்கள்.  எனவே புகார் அளிப்பதற்கு ரசீது(பில்) வேண்டும். அது சரி.. நம் நாட்டில் எல்லாக் கடைகளிலும் பில்லிங் வசதி உண்டா? அதையும் பார்ப்போம்..

விற்பனைவரி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காத ஒரு சிறு அல்லது  சாலையோரக் கடைகளில் மட்டுமே பில் இருக்காது. மற்றபடி பதிவு செய்யப்பட்டிருக்கும் கடைகள் அனைத்திலும் பில் கண்டிப்பாக இருக்கவேண்டும். இப்பொழுது கேள்வி என்னவென்றால் அனைத்துக் கடைகளிலும் பில்லிங் வசதியைக் கட்டாயப் படுத்தினால் தான் என்ன? இது சாத்தியமா? இதனால் உண்டாகும் நன்மைகள் என்ன? என ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
பில்லிங் முறையை அனைத்துக் கடைகளிலும் கட்டாயப்படுத்தினால் என்ன நன்மை? நிச்சயமாக  பில் போட்டு வாங்கினால் தான் அந்த பொருளுக்கான வரி அரசாங்கத்திற்குச் செல்லும்.  அரசாங்கம் நினைத்தால் எதுவுமே சாத்தியம் தான். ஆனால் சிறு, குறு மற்றும் நடைபாதைக் கடைகள் வரிவிதிப்பில் கொண்டுவந்தால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவர். மிகப்பெரிய லஞ்சத்திற்கு வழிவகை செய்யும். விலைவாசி மிகக்கடுமையாக உயரும்.

இதையெல்லாம் சரி செய்ய வரிவிதிப்பில் நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அது மிகவும் எளிமையாகவும், வியாபாரிகளுக்கும் அரசுக்குமான நேரடி தொடர்பில் நடக்க வேண்டும். வியாபாரிகளை தாமாக வரிகட்ட  முன்வரவைக்க வேண்டும். இது மிகவும் சாத்தியம் தான். அரசுக்கும் இப்பொழுது உள்ளதை விட அதிக  வருமானம் கிடைக்கும், விலைகளும் பெறுமளவில் குறையும். வியாபாரிகளும் நிம்மதியாக மக்களுக்கு இன்னும் பல வசதிகளுடன்  கூடிய சேவையைத் தருவார்கள். ஆனால் இதையெல்லாம் அரசியல்வாதிகளும்அதிகாரிகளும் செய்யமாட்டார்கள். காரணம் அவர்களது தனிப்பட்ட வருமானம் நின்று போகும்.


சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், ஸ்மக்லிங் ப்ராடக்ட்ஸைத் தவிர்ப்பதற்கும், கடைகள் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருத்தல் நலம். இது நன்மையா என அலசி ஆராய்ந்து பார்ப்போம். சரி, எல்லாக் கடைகளையும் விற்பனை வரி அலுவலகத்தில் பதிவு செய்துகொள்வது நல்லதா என்றால் அது யாருக்கு நல்லது? என்ற உப கேள்வியோடு இருக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட மூன்று பிரிவினருக்கான நல்லது கெட்டதுகளைப் பற்றிச் சொல்லவேண்டும்.


1. கடைக்காரர்கள், 2. அரசாங்கம், 3. மக்கள்

பதிவு செய்யாமல் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் தெருவோர சிறுகடைக்காரர்களுக்கும், கிராமத்து கடைக்காரர்களுக்கும் இது நல்லது அல்ல. அதனால் அந்தக் கடைகளின் வாடிக்கையாளர்களான தினக்கூலி வாங்கிப்பிழைக்கும் மக்களுக்கும் இது நல்லது அல்ல. ஏனென்றால், தெருவோரக்கடை வைத்திருப்பவர்கள் யாரும் மாடிவீட்டில் வாழ்வது இல்லை தான்!  அவர்கள் வயிற்றில் நாம் ஏன் அடிக்க வேண்டும்? வேறு வழியே இல்லை என்கிறபோது - இந்த நிலை எப்பொழுது வரும்? ஒரு குக்கிராமத்திலோ, காட்டுப்பகுதியிலோ,  மக்கள் தொகை மிக மிக குறைவாக (அதிக வியாபாரத்திற்கு வழியில்லாத பகுதிகளிலோ ) உள்ள பகுதிகளிலோ தான் இந்த மாதிரி கடைகள் இருக்கும்.


அங்குள்ள சொற்பமானவர்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் காத தூரம்போக வேண்டும். அதற்கான செலவைப் பாருங்கள். அதிக வியாபார வாய்ப்பு இல்லாத இடங்களில் ஒருவனுக்கு எப்படி பிரேக் ஈவன் வரும்? அப்படி அதையும்தாண்டி லாபம் என்ற ஒன்றை அவன் பார்க்க வேண்டும் என்றால் இப்படி விலையைக் கொஞ்சம் அதிகம் வைத்துத் தான் விற்க வேண்டி  வரும். ஒரு உதாரணத்திற்கு உங்கள் தெருவில் ஒரு சிறிய பலசரக்கு கடை இருக்கும்,  அதில் மளிகை, காய்கறி, கூல்ட்ரிங்க்ஸ் உட்பட அனைத்துமே இருக்கும். ஆத்திர அவசரத்திற்கு தினமும் ஏதாவது ஒன்றை அங்கு தான் வாங்கவேண்டியிருக்கும்.இல்லையென்றால் கொஞ்சம் தூரம் அதிகம் சென்று வாங்க வேண்டியிருக்கும். 

அந்த மாதிரி கடைகள் கொஞ்சம் அதிகம் விலை வைத்து விற்பதுவாடிக்கையான விஷயம் தான். அவர்களை கண்டுபிடித்து  தண்டனை வாங்கிக்கொடுத்தால் என்ன ஆகும்? நீங்கள் தினமும் அவசர ஆத்திரத்திற்கு உங்கள் வீட்டுக்காரரையோ அல்லது பிள்ளையையோ தொலைதூரத்திற்கு அனுப்பவேண்டிவரும்! அவர்களுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும். இது ஒரு சிச்சுவேசன். 


ஆனால், இதை அப்படியே.. டி.நகர் போன்ற பெரிய பசார் தெருக்களில் உள்ள சிறு சிறு கடைகளை மனதில் இருத்திப் பார்ப்போம். இங்கே எப்படி வியாபரம் நடக்கிறது? தி.நகரில், நீங்கள் வாங்கும் பொருட்களின் விலை, வேறு எங்கும் வாங்குவதை விட குறைவாகத்தான் இருக்கும். நெருக்கடியான சந்தை,அல்லது மக்கள் அதிகம் வந்து விற்பனையாகும் பகுதிகளில் உள்ள கடைகள்(ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் தவிர்த்து - இங்கெல்லாம் மக்களின் முன்திட்டமிடாமையையும், அவசரத்தையும் அவர்கள் பயன்படுத்திக் காசாக்குகிறார்கள்) நிச்சயமாக எம்.ஆர்.பி ஐ விட அதிகமாக விற்கமாட்டார்கள். சொல்லப்போனால் அதைவிடக் குறைவாகத்தான் விற்பார்கள்.சரி தான்.. ஆனால் பொருட்களின் தரம் மற்றும் அரசுக்கு வரும் வருவாய் இழப்பீடு(வரி) இவற்றைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும்? இது எப்படி மேற்கூறிய  கிராமங்களில் இருக்கும் கடைகளின் சிச்சிவேசனோடு ஒத்துப் போகும்?


அடுத்ததாக அரசாங்கம். அனைத்து கடைகளையும் பதிவுசெய்ய வலியுறுத்தினால் அரசுக்கு 100 ரூபாய் வருமான அதிகரிப்பு ஏற்படும் என்று கணக்கிட்டால் அதில் 80 சதவிகிதத்தை சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர், மற்றும் உயரதிகாரிகள் முதற்கொண்டு, கடைநிலை ஊழியர் வரையிலும் தான் சாப்பிடுவார்கள். வெறும் 20 ரூபாய் வருமானத்திற்காக, வியாபாரிகளிடம் பெறுமளவிலான அதிருப்தியையும், விலையேற்றம் காரணமாக மக்களிடம்  பெரிய அளவிலான எதிர்ப்பும் தான் மிஞ்சும். இதனால்  விலைவாசி கடுமையாக உயர்வதோடு, பல சிறு, குறு வியாபாரிகளும், தெருவோரக் கடைக்காரர்களும்,தொழிலைவிட்டு வெளியேறும் அவலங்களும் ஏற்படும்.


அடுத்ததாக மக்கள். ஒரு வரிவிதிப்பு அல்லது அனைத்து கடைகளுக்கும் வரிகட்டும் அவசியமாதல் நடைமுறைக்கு வந்தாலே, உடனடியாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படப்போவது பொது மக்கள் தான். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்களின் வாழ்க்கை படு திண்டாட்டமாகிவிடும்.


எவை நம் நாட்டில் அதிகம் இருக்கின்றன? எங்கு வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது? அரசுக்கு இதனால் எவ்வளவு வரி இழப்பு. அதை விட இன்னும் கொடுமைகள் பெரிய பெரிய கடைகள் வைத்திருந்தாலும், பில்லிங் வசதி இருந்தாலும், அங்கும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் அதிகம். அவர்களும் வரியை ஒழுங்காக கட்டுகிறார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். வரிக் கட்டுதலும் நம் ஜனநாயகக் கடமைகளில் ஒன்றெனெக் கொள்வோம். பில் போடாமல் பொருள்(உதாரணத்திற்கு தங்கம்) வாங்கினால் அதற்கு ஒரு விலை. அரசைக் குறை சொல்லும் நாம், இவை எல்லாம் நம் ஜனநாயகக் கடமை எனவும், ஒரு வகையான ஒழுக்கம் எனவும் உணர்தல் வேண்டும். வேறு வழியாகவும் இந்த வரி வசூலித்தல் பற்றி யோசித்துப்பார்க்கலாம்.


மாத்தி யோசி:

பொருட்களுக்கு வரி போடக் கூடாது. வியாபாரிகளின் விற்பனை அளவிற்கு ஏற்றார் போல குறைந்த பட்சம் ஒன்றிலிருந்து அதிக பட்சமாக 5 வரையிலும் வரிவிதிக்க வேண்டும். அதாவது மாதம்1000 ரூபாய் விற்பனை செய்பவர் 10 ரூபாய் வரி கட்ட வேண்டும். 5000 ரூபாய் விற்பனைசெய்பவர் 250 ரூபாய் வரி கட்ட வேண்டும்.

அப்படியிருந்தால் அனைத்து வகையான கடைகளுக்கும் நேராகவே வணிகவரி அலுவலர் வந்து அவர் விவரங்களைக் கேட்டு வாங்கி கையோடு பதிவுச் சான்றிதழை வழங்க வேண்டும். ஒருகடைக்காரர் பதிவு செய்யப்படவில்லை என்றால் அது அவரின் குற்றமாக ஆகாது, மாறாக அது  அந்த வணிக வரி அலுவலரின் குற்றமாகக் கருதப்படும்.

அதேப்போல் அவரே மாதாமாதம் வந்து வரியையும் வசூல் செய்துவிட்டுப் போய்விடவேண்டும். இப்படிச் செய்தால் அனைவரும் வரிகட்டுவார்கள். மக்களுக்கும் விலையேற்ற பிரச்சினை வராது. அரசாங்கத்திற்கும் இப்பொழுது உள்ளது போல நூறு மடங்கு
வருமானம்அதிகரிக்கும்

சமச்சீர் மாயை தொடர்கிறது

சமச் சீர் கல்வி என்பது ஒரு கனவு;ஒரு லட்சியம்; ஒரு லட்சியக் கனவு.
கல்வியை வியாபாரமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் அதை ஏற்கமாட்டார்கள். அந்த வணிகத்துக்கு துணை போகக்கூடிய அரசியல்வாதிகளும் அதை ஆதரிப்பது போல நடித்து ஏமாற்றுவார்கள்.
தி.மு.கவும் அ.இ.அ.தி.மு.கவும் சமச்சீர் கல்வியை ஏற்கனவே அரசியலாக்கி சிதைத்துவிட்டார்கள். தன் பங்குக்கு இப்போது நீதிமன்றங்களும் குழப்பத்தை அதிகரித்திருக்கின்றன.
மெட்ரிகுலேஷன், ஸ்டேட் போர்ட், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்று நான்கு விதமான பாடத் திட்டங்கள் இருப்பதற்கு பதிலாக ஒரே பொதுப் பாடத்திட்டத்தை எல்லா பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்பது சமச்சீர் கல்வியின் ஓர் அம்சம். அந்த ஓர் அம்சத்தை மட்டும்தான் கருணாநிதியின் அரசு செயல்படுத்த ஆரம்பித்தது. ஜெயலலிதா அரசு நிறுத்திவிட்டது.
இப்போது சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின்படி, ஜெயலலிதா அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து சமச்சீர் கல்வித்திட்டத்தை ஒழிக்கப் பார்த்தது தவறு. தி.மு.க அரசு தயாரித்து வைத்த பாடப் புத்தகங்களைப் பயன்படுத்தவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது.
அத்தோடு நிறுத்திக் கொள்ளாதது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. பாடத்திட்டத்தில் நிபுணர்கள் சொல்லும் மாற்றங்கள், சேர்க்கைகள் இருந்தால், அவற்றை மூன்று மாதங்களுக்குள் துணைப் புத்தகங்களாகத் தரும்படி உத்தரவிட்டிருக்கிறது. இது தேவையற்ற குழப்பம்.
பாடப் புத்தகங்கள் தரமற்றவை; அவற்றை மாற்றியமைத்து அடுத்த கல்வியாண்டிலிருந்து புதுப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவோம் என்றுதான் ஜெயலலிதா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.. மாற்றியமைக்க மூன்று மாதம் போதும் என்கிறது நீதிமன்றம்.
ஆனால் பாடப்புத்தகங்களை மாற்றியமைக்கும் உரிமை அரசுக்கு உண்டு என்பதை நீதிமன்றம் இந்தத்தீர்ப்பின் மூலம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வேலை செய்ய தனக்கு ஒரு வருடம் தேவை என்று அரசு சொல்லும்போது, இல்லையில்லை மூன்று மாதம் போதும் என்று எப்படி நீதிமன்றம் சொல்லமுடியும் என்று தெரியவில்லை. எத்தனை மாதம் தேவை என்பது நிர்வாக முடிவு. அதைத் தீர்மானிப்பது நீதிமன்ற வரம்புக்கு அப்பாற்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு உறுப்பினர்கள் அதற்குப் பொருத்தமானவர்கள் அல்ல என்று நீதிமன்றம் முன்பு மனுதாரர்கள் சிலர் வாதாடியிருந்தார்கள். அந்த விஷயத்துக்குள் போக விரும்பவில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள்.
ஏன் போக விரும்பவில்லை என்று சொல்ல வேண்டாமா? அரசு நியமித்த குழுவே சரியில்லை என்று வாதிடப்படும்போது, நீதிமன்றம் அந்த குழு சரியான குழுதான் என்றாவது சொல்ல வேண்டும். அல்லது சரியில்லை என்றாவது சொல்ல வேண்டும். இரண்டுமே சொல்லமாட்டேன் என்பது என்னமாதிரியான தீர்ப்பு என்று புரியவில்லை.ஏன் தயங்குகிறார்கள் என்றும் புரியவில்லை.
முந்தைய அரசு உருவாக்கிய பொதுப் பாடத்திட்டம் சரியில்லை என்று புதிய அரசு எந்த ஆய்வும் செய்து முடிவுக்கு வரவில்லை என்றும், அந்த பாடத்திட்டம் சமசீர் கல்வி பற்றி 4 ஆண்டுகள் ஆராய்ந்தபின் எடுத்த முடிவு என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
நான்கு ஆண்டுகள் ஆராய்ந்தபின்னர் முத்துக்குமரன் குழு தெரிவித்த பரிந்துரைகள் பொதுப் பாடத்திட்டம் பற்றி மட்டும் அல்ல. அடிப்படை வசதிகள், பயிற்றுவிக்கும் தரம், தேர்வு முறை என்று பல பரிந்துரைகள் முத்துக்குமரனால் வழங்கப்பட்டுள்ளன.
நான்காண்டு ஆய்வுக்குப் பின் உருவாக்கிய மீதி பரிந்துரைகளை ஏன் தி.மு.க அரசோ புதிய அரசோ நிறைவேற்ற முன்வரவில்லை என்று நீதிபதிகள் கேட்கவே இல்லை. கேட்டிருக்க வேண்டும். உத்தரவிட்டிருக்க வேண்டும்.
ஏனென்றால், ஜெயலலிதா அரசு சமச்சீர்க் கல்வி சட்டத்துக்கு கொண்டு வந்த சட்டத்திருத்தம் செல்லாது என்று நீதிபதிகள் எந்த அடிப்படையில் சொன்னார்கள் என்று பார்த்தால், இந்திய அரசியல் சாசனத்தில், சம உரிமையை வழங்கும் 14ம் பிரிவுக்கு அது எதிரானது என்றுதான். கல்வி பெறுவதற்கான சம உரிமை என்பது பொதுப் பாடத்திட்டம் மட்டும்தானா? சமச்சீர் கல்வியின் மீதி அம்சங்களையும் உடனே நிறைவேற்ற வேண்டும் என்றல்லவா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கவேண்டும் ?
பொது பாடத்திட்டம் இந்த ஆண்டே வந்தாலும், இன்னும் ச்ல மாதம் கழித்து வந்தாலும், அது சமசீர் கல்வியாக இருக்கப் போவதில்லை என்பதற்கு இரு காரணங்களைப் பார்ப்போம்.
தனியார் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியரின் தரமும் அரசுப் பள்ளி ஆசிரியர் தரமும் சமமாக இல்லவே இல்லை. சென்ற பதினைந்து நாட்களில் நான்கு செய்திகள் தமிழ் நாட்டில் வெளியாகியிருக்கின்றன. நான்கும் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வருவது, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வது பற்றியவை. இதில் ஒரு சிலர் தலைமை ஆசிரியர்கள். எல்லா குற்றவாளி ஆசிரியர்களும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான்.தனியார் பள்ளியில் இப்படிப்பட்ட ஆசிரியர் ஒரு நாள் கூட வேலையில் நீடிக்க முடியாது. விதிவிலக்காக இருக்க கூடிய நல்ல தரமான அரசு பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவுதான். இந்தப் பிரச்சினை பற்றி எதுவும் செய்யமுடியாத நிலையில்தான் அரசு இருக்கிறது. சமச்ச்சீர் கல்விக்காக தெருவில் இறங்கிப் போராடும் இடதுசாரி கட்சிகள் கூட தங்கள் ஆசிரியர் சங்கங்கள் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க எதுவும் செய்வதில்லை.
இரண்டாவது பிரச்சினை, தி.மு.க அரசுத் தன் கடைசி காலத்தில் கல்வித் துறையில் செய்துவிட்டுப் போன இரண்டாவது குளறுபடி. தனியார் பள்ளிக் கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக முதலில் நீதிபதி கோவிந்தராஜன் குழுவை நியமித்தது.அவரது பரிந்துரைகளைத் தனியார் பள்ளி முதலாளிகள் எதிர்த்தது, இன்னொரு குழுவாக நீதிபதி ரவிராஜபாண்டியனை நியமித்தது.
இவர் நிர்ணயித்த கட்டணங்களையும் பள்ளி முதலாளிகள் ஏற்கவில்லை.ஆனால் அவை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக புதிய அரசு அறிவித்துவிட்டது. பல ஊர்களில் பெற்றோருக்கும் பள்ளிகளுக்கும் இடையில் கட்டணம் தொடர்பாக கடும் சண்டைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
பல பள்ளி நிர்வாகங்கள் இப்போது புது உத்தியை மேற்கொண்டுவிட்டன. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான் செலுத்துவோம் என்று பெற்றோர் சொன்னால், அதை வாங்கிக் கொண்டு, இந்தக் காசுக்கு உங்கள் குழந்தைக்கு இவ்வளவுதான் தரமுடியும் என்று பள்ளி செயல் திட்டத்தையே மாறி வருகிறார்கள். அதிக கட்டணம் கொடுத்தால் வேறு மாதிரி செயல்திட்டம். பல பல்ளிகளில் குறைந்த கட்டணம் செலுத்திய குழந்தைகளுக்கான பள்ளி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விளையாட்டு, அசெம்ப்ளி பிரேயர், பேச்சுப் போட்டி முதலான போட்டிகள், ஸ்பெஷல் கிலாஸ் எதுவும் கிடையாது. காலையிலிருந்து மதியம் வரை எல்லாருக்குமாக பொதுவாக வகுப்புகள் நடத்திய பின்னர், குறைந்த கட்டண மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மீதிபேருக்கு மட்டும் ஸ்பெஷல் வகுப்புகளைத் தொடர்கிறார்கள்.
இப்படிப்பட்ட கொடுமையை உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது. ஒரே வகுப்பில் இருக்கும் குழந்தைகளை இரண்டு விதமாகப் பிரித்து நடத்துவது. அரசு, தனியார் பள்ளிகளின் குழந்தைகள் எல்லாருக்கும் சமச்சீர் கல்வி என்று ஒரு பக்கம் கேட்டுக் கொண்டிருக்கும்போது, இப்போது தனியார் பள்ளிகளுக்குள்ளேயே சமமற்ற கல்வி முறை புகுத்தப் பட்டுவிட்டது.
இதற்கு ஒரே தீர்வுதான் உண்டு. அரசு நிர்ணயித்த கட்டணங்களைப் பின்பற்றவில்லையென்றால் அந்தப் பள்ளியை ஒன்று இழுத்து மூடவேண்டும். அல்லது அரசே எடுத்துக் கொள்ள வேண்டும்.
கல்வித் துறையில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் ஆழமானவை. ஆனால் நடப்பவை எல்லாம் மேம்போக்கானவை. முதலில் எல்லா பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வருமானவரி விதிக்க வேண்டும். அறக்கட்டளைக்கு வரி விலக்கு உண்டு என்றால், பள் ளி, கல்லூரி கட்டண வருவாய் செலவுகளை அறக்கட்டளையின் இதர நடவடிக்கைகளிலிருந்து பிரித்து வரி விதிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணங்களை வசூலித்தால் மட்டுமே வரி விலக்கு தரவேண்டும்.
எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் . அமெரிக்காவைப் பின்பற்று என்று சொல்லும் போக்கு பெருமளவு அதிகரித்துள்ள இன்றைய சூழலில், கல்வி விஷயத்தில் அமெரிக்காவைப் பார் என்று நான் சொல்ல விரும்புகிறேன்.
அமெரிக்காவில் மொத்த மாணவர்களில் வெறும் பத்து சதவிகிதம்பேர்தான் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். மீதி அத்தனை பேரும் அரசுப் பள்ளிகளில்தான் உள்ளனர். தமிழ்நாட்டில் சரிபாதிக்கு மேல் தனியார் பள்லிகளில் படிக்கிறார்கள். அங்கே 12 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர். இங்கே 34 பேருக்கு ஓர் ஆசிரியர் என்பது அதிகாரப்பூர்வ கணக்கு. நடைமுறையில் அறுபதுக்கு ஒருவர்.
குடியிருக்கும் பகுதியில் இருக்கும் பள்ளியில்தான் அமெரிக்காவில் படிக்க முடியும். விதிவிலக்காக மட்டுமே வேறு இடத்துக்கு சென்று படிக்க முடியும். இங்கே மைல் கணக்கில் பயணம் செய்து படிப்பது சகஜமாக இருக்கிறது.
அமெரிக்காவில் பாடத் திட்டம் மாவட்ட அளவில் முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டமும் அதற்கு உரிய பாடத் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்குமான பொது அம்சங்கள் உண்டு. இங்கே நேர் மாறான முயற்சியில் இருக்கிறோம்.
கல்வியை அரசியலிலிருந்தும் வணிகத்திலிருந்தும் பிரித்தால்தான் அசலான மாற்றம் வரும். அமெரிக்காவில் தெளிவாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். இங்கே கல்வியை அரசியலும் வணிகமும்தான் தீர்மானிக்கின்றன. எனவே சமச்சீர் மாயை தொடரும்.
இந்த வாரக் கேள்விகள்:
முதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு இருப்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சியில் அவர் நீதிபதிளுடன் கலந்துகொள்ளக்கூடாது என்று சில வழக்கறிஞர்கள் அண்மையில் எதிர்த்தார்கள். தலைமை நீதிபதி ஜெயலலிதாவை வீட்டுக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுத்தபோது அவர்கள் ஏன் தலைமை நீதிபதிக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை ? தி.மு.க ஆட்சியில், கலைஞர் குடும்பப் படமான எந்திரனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சிறப்புக் காட்சி போட்டுக் காட்டப்பட்டபோது அதற்கு சென்ற நீதிபதிகளுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை ? அப்போது ஓட்டல் தாக்குதல் வழக்கில் புகார் பதிவாகி தேடப்பட்ட குற்றவாளியாக இருந்த சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சேனாதான் நீதிபதிகளை வரவேற்றார் என்பதை ஏன் அப்போது இதே வழக்கறிஞர்கள் கண்டுகொள்ளவே இல்லை ?
__._,_.___

பாலஸ்தீன எல்லையில் குடியேற்றங்கள் : இஸ்ரேல் மீது இந்தியா புகார்

 
நியூயார்க்: "பாலஸ்தீன எல்லைப் பகுதியில் குடியேற்றங்களை உருவாக்குவதை முதலில் இஸ்ரேல் நிறுத்த வேண்டும். அதுதான் இருதரப்புக்கிடையில் பேச்சுவார்த்தை துவங்க முதற்கட்ட தீர்வாக இருக்க முடியும்' என, ஐ.நா., சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.பாலஸ்தீன எல்லைப் பகுதிகளில், இஸ்ரேலியர்கள் உள்நுழைந்து குடியேற்றங்களை பல ஆண்டுகளாக உருவாக்கி வருகின்றனர். இருதரப்பு பேச்சுவார்த்தை துவங்கப்பட வேண்டுமானால், குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என, பாலஸ்தீனம் கோரி வருகிறது. குறைந்தது 10 மாதங்களாவது இந்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என, கடந்தாண்டு செப்டம்பரில் கூறியது. ஆனால், இஸ்ரேல் அதை ஏற்க மறுத்தது. இதனால், அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள பாலஸ்தீனம் மறுத்து விட்டது.இந்நிலையில், ஐ.நா.,வில் நடந்த மாதாந்திர இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய, ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி, ""குடியேற்ற நடவடிக்கைகளை முதலில் இஸ்ரேல் நிறுத்த வேண்டும். இதில், சர்வதேச சமூகத்தின் கருத்தை இந்தியா ஏற்றுக் கொள்கிறது. குடியேற்ற நிறுத்தம் தான் அமைதிப் பேச்சுவார்த்தையின் துவக்கமாக இருக்க முடியும்,'' என்றார்.
Source : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=283541
 

ராஸ் அல் கைமா மண்டல த.மு.மு.க மற்றும் தவ்ஹீத் பிரச்சாரப் பேரவை இணைந்து நடத்தும்

அல்லாஹ்வின் அழகிய திருப் பெயரால்…

ராஸ் அல் கைமா மண்டல த.மு.மு.க மற்றும்
தவ்ஹீத் பிரச்சாரப் பேரவை இணைந்து நடத்தும்

“ஏகத்துவ எழுச்சி மாநாடு”

இடம் : அல் நக்கில், ராஸ் அல் கைமா
நாள் : ஜூலை – 19, வெள்ளிக்கிழமை, மாலை 5.30 அளவில்

..: இப்தார் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது :..

தலைமை உரை :
அப்துல் ஹாதி, அமீரக தலைவர் – த.மு.மு.க.

சிறப்பு பேச்சாளர்கள் :

மவ்லவி எஸ்.பி.யுசுப் அவர்கள்

இலங்கை முஹம்மத் நாஸர் அவர்கள்
( இஸ்லாமிய அழைப்பாளர்)

கோவை ஜெய்னுலாபிதீன் அவர்கள்

நன்றியுரை :
கடியாச்சேரி ஹாஜா அவர்கள்
—————————————————————————————————————
அல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் தூய வடிவில் அறிந்துக் கொள்ள
அழைக்கிறது…
த.மு.மு.க – ராஸ் அல் கைமா மண்டலம் மற்றும்
தவ்ஹீத் பிரச்சாரப் பேரவை – ராஸ் அல் கைமா.
——————————————————————————————————————
மேலதிக விபரங்களுக்கு :
055 1398 200 – 050 6903 993 – 055 9853 712

Wednesday, July 27, 2011

மும்பை தொடர் குண்டுவெடிப்புகள் விசாரணை என்ற பெயரில் வதைத்துக் கொல்லப்பட்ட ஃபயாஸ் உஸ்மான் தடம் புரளும் புலனாய்வுத்துறை?-

ஜூலை 13ம் தேதி மும்பையில் நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப் புகளில் 21 பேர் பலியானார்கள்; 144 பேர் படுகாயமடைந்தனர். மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளான ஒபேரா ஹவுஸ், ஜாவேரி பஜார், தாதர் பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகளை சதிகாரர்கள் நிகழ்த்தியதன் மூலம் இந்தக் கொடியவர்கள் தாங்கள் ஒரு மனிதகுல விரோதிகள், இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.


இத்தகைய கொடிய செயலை செய்பவர்கள் யார்? இவர்களது பின்னணியில் இயங்கும் உள்நாடு மற்றும் அயல்நாட்டு சக்திகள் எவை என்பதில் வழக்கம் போலவே புலனாய்வு அமைப்புகள் திணறி வருகின்றன.

நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாதச் செயலை செய்தவர் கள் யார்? என்பதைக் கண்டறிய தீவிரமாக நடுநிலைமையுடன் செயல்படாமல் மீண்டும் தங்களது வழக்கமான, கீழ்த்தரமான, முட்டாள் தனமான, முன்யோ சனை யற்ற, ஒருபக்க சார்பான விசாரணையை மேற்கொண்டு நாட்டையே சர்வதேச அவமானத் தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது மகாராஷ்ட்ரா காவல் துறை.

ஃபயாஸ் உஸ்மான் என்ற 35 வயது இளைஞரை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பின்னர் மும்பை சியான் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என குடும்பத்தினரிடம் மிகவும் துணிகரமாக சொல்லியிருக்கிறது. மகாராஷ்ட்ரா அரசு.

காவல்துறையினர் ஃபயாஸ் உஸ்மானை சித்திரவதை செய்து படுகொலை செய்து விட்டதாக கதறுகின்றனர் அவரது உறவினர்கள்.

ஹைபர் டென்ஷனில் பாதிக்கப் பட்டு இருந்த ஃபயாஸ் உஸ்மானை அச்சுறுத்தி, உருட்டி மிரட்டியே சாகடித்துள்ளனர் பாவிகள் என குமுறுகின்றனர் ஃபயாஸின் உறவி னர்கள்.

தனது தந்தையை சம்பவம் நடந்த அன்று இரவு 7 மணிக்கு யூனிபார்ம் அணியாத சில மர்ம மனிதர்கள் அழைத்துச் சென்றதாகவும், தங்களிடம் அது குறித்து எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல் இழுத்துச் சென்றதாகவும் படு கொலை செய்யப்பட்ட ஃபயாஸ் உஸ்மானின் மகன் அஜீம் உஸ்மானி கூறுகிறார்.

ஃபயாஸ் உடல்நிலை மோச மடைந்து இருப்பதாவும் அவரை சியோன் மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாகவும் உடனடியாக பார்க்க வருமாறும் எங்களிடம் சொல்லப்பட்டது. ஆனால் நாங்கள் மருத்துவமனைக்கு சென்ற போது ஃபயாஸ் உஸ்மானின் இறந்த உடலைத்தான் பார்க்க முடிந்தது என வெடிக்கிறார் ஃபயாஸின் அண்டை வீட்டுக்காரர் சலீம் ஸித்தக்கி.

மூளைப் பகுதியில் நரம்புகள் வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டதால் ஃபயாஸ் இறந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் 2008ல் நிகழ்ந்த தொடர்குண்டுவெடிப் புகளில் தொடர்புடையவர் என்றும் இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸ் உஸ்மானின் சகோதரர் அஃப்சல் உஸ்மானி தற்போது சிறையில் உள்ளார்.

இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பே போலியானது. அந்த அமைப்பை உருவாக்கியவர்கள் யாரோ பெயர் தெரியாத சில பயங்கரவாதிகளா? என்பதையே நிரூபணம் செய்ய முடியாத நிலையில், இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு உண்மையான தாய் தந்தை சங்பரிவார் அமைப் புகளா? அல்லது புலனாய்வு அமைப்பில் உள்ள சில விஷமம் படைத்தவர்களா? என்ற வினா நாட்டு மக்களின் மனதில் எழுந்தது. கடந்த ஆண்டு இந்திய ஆங்கில சேனல்களிலும் மேற்கூறிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் அகமதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஒருவரின் சகோதரரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்கிறோம் என்ற பெயரில் ஒரு அப்பாவியின் உயிரை அநியாயமாக பறித்து விட்டார்களா? என்ற கேள்வி நாடெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் உள்ளங்களில் எழுகிறது.

உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டுமேயல்லாது அப்பாவிகளை இழுத்துச் சென்று அவர்களது உயிர்போகும் வரை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துக் கூடாது என மகராஷ்ட்ர மாநில சமாஜ்வாடிக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அபூ அஸிம் ஆஸ்மி தெரிவித்தார்.

இந்தியாவின் நியூயார்க் என அழைக்கப்படும் வர்த்தகத் தலை நகரான மும்பை, இதுவரை 11 பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்துள்ளது. 704 உயிர்கள் பலியாகி உள்ளன. 2 ஆயிரத்து 289 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் எத்தனை பேர் அதன்பிறகு உயிரிழந்திருப்பர் என்ற விவரம் யாருக்கும் தெரியாது.

18 ஆண்டுகளாக நடைபெறும் மும்பை குண்டுவெடிப்புகளா னாலும் சரி, நாட்டில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளானாலும் சரி கடந்த ஐந்து ஆண்டுகளாக குண்டுவெடிப்பு வழக்குகளின் போக்கும், குண்டுவைப்பவர்கள் யார் என்பது குறித்த போக்கிலும் ஒரு திருப்புமுனையையும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் இந்த தேசம் சந்தித்தது.

அதுவரை இந்திய அரசும் இந்திய புலனாய்வு அமைப்புகளும் காற்றிலே சிலம்பம் விளையாடு வதைப் போன்று குருட்டுப் பூனை விட்டத்தில் தாவுவதைப் போன்று இருந்த நிலை மாறியது.

மாவீரன் ஹேமந்த கர்கரே போன்ற நெஞ்சுரம் மிக்க நேர்மையான காவல்துறை அதிகாரிகள் குண்டுவெடிப்பு வழக்குகளில் விசாரணைகளை தொடங்கிய பிறகு, சங்பரிவார் பாசிஸ பயங்கரவாதத்தின் பின்னணி ஒவ்வொரு குண்டு வெடிப்புகளிலும் பின்னணியாக இருந்து செயல்பட்டது அம்பலமாகி வருகிறது.

இரண்டு பேரை மட்டும் பலிகொண்ட அஜ்மீர் குண்டு வெடிப்பாகட்டும் ஏராள மானவர்களை பலிகொண்ட சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு மாலேகான் குண்டுவெடிப்புகள் போன்றவற்றில் சங்பரிவார் பாசிஸ பயங்கரவாதிகளின் தொடர்புகள் அம்பலம் ஆன பிறகு சங்பரிவார் பயங்கரவாதிகளின் சதிச்செயல்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

பெண்சாமியார் பிரக்யாசிங் முதல் ராணுவத்தில் இருந்து கொண்டே தேசத்துரோக செயல் களை செய்த பயங்கரவாதி லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித், ஆர்.எஸ்.எஸ் காரர்களால் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் முக்கியப் பிரமுகர் பயங்கரவாதி சுனில் ஜோஷி போன்றவர்களின் முக்கிய தேசத்துரோக பயங்கரவாத சதிச் செயல்கள் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதுவரை இந்நாட்டின் அப்பாவி களை துன்புறுத்தி சிறைப் பிடித்ததற்கு காவல்துறையும் புலனாய்வுத்துறையும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பங்களும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்.

இனி நாட்டில் நடைபெறும் அசம்பாவிதங்கள் அனைத்திற்கும் இனிமேல் நியாயமான முறையில் நீதிவிசாரணை நடத்தப்படும், அப்பாவிகள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என நாட்டு மக்கள் நம்பி வந்த நிலையில்&உண்மைக் குற்றவாளிகளை தேடும் வேலையை விட்டுவிட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்படுகிறவர்களை விட்டு விட்டு, இந்நாட்டின் பழமையான பயங்கரவாதிகளை கண்காணிப்பதை விட்டுவிட்டு அப்பாவிகளை துன்புறுத்தும் போக்கு மீண்டும் தொடர்வதா?

2008ம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. நிலைமையை அமைதிப் படுத்துவதை விட்டுவிட்டு தொழுகைக்கு வந்தவர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆந்திர காவல்துறை.

ஏராளமான இளைஞர்களைக் கைது செய்து கொடுமைப் படுத்தியது ஆந்திர காவல்துறை; அதில் பலர் பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டனர். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் தவறுதலாக கைது செய்யப்பட்ட ஹலீம் என்ற இளைஞரை ஹைதராபாத் சிறையில் கண்டு மனம் மாறினார் உண்மைக் குற்றவாளியான சுவாமி அஸீமானந்தா.

இவ்வாறு பல்வேறு நடுநிலை யான காரணங்கள் இருந்தபோதும் மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை இழுத்து பிடித்து வளைக்கும் போக்கு தொடர்வது நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் ஒருவித பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு குண்டுவெடிப்பு நிகழும் காலகட்டத்தையும் தீவிர மாக ஆராய்ந்து பார்த்தால் இந்தியா&பாகிஸ்தான் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக இருதரப்பு பேச்சுவார்த் தைகளை மேற்கொள்ளும் பொழு தெல்லாம் அதனை சீர்குலைக்கும் தீய நோக்கோடு குண்டுகளை வைக்கும் சதிகாரச் செயல் நடை பெறுகிறது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

2007ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பேச்சு நடத்தும் முன்முயற்சிகள் நடந்தன. இருநாடுகளுக்கு உறவு ஓரளவு சீர்பட்டு இந்தியா பாகிஸ்தான் இடையே சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சென்று வந்தது. பேச்சுவார்த்தைகளையும் சீர்குலைக்க வேண்டும், இருநாட்டு உறவுக்குப் பாலமாக அமைந்து இருக்கும் சம்ஜோதா ரயிலையும் குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் சம்ஜோதா தொடர்வண்டி குண்டுவைத்து சதிகாரர்களால் தகர்க்கப்பட்டது.

அதைப்போன்று 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் பாகிஸ்தான்&இந்தியா இடையே உறவுக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தியதோடு இரு நாடுகளுக் கிடையே போர் வெறியாக மாறியது நிஜம்.

உள்நாட்டிலும் அமைதி குலைய வேண்டும். அண்டை நாட்டு உறவையும் சீர்குலைக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியிருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரிப்பதை விடுத்து அப்பாவிகளை வதைப் பது என்ன நியாயம்?

மும்பை குண்டுவெடிப்பைப் பொறுத்தவரை மகராஷ்ட்ரா காவல்துறையினர் காலகாலமாக ஒரே மாதிரியான விசாரணை பாணியையே பின்பற்றுகின்றனர்.

ஆம், தற்போது குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் நண்பர்கள் அல்லது உறவினர்களை வளைத்து சித்திரவதை செய்தனர். தற்போதைய குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையிலும் ஃபயாஸ் உஸ்மான் என்ற இளைஞ ரின் உயிரே பறிக்கப்பட்டு விட்டது. மகாராஷ்ட்ரா அரசு உஸ்மானின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்திருக்கிறது. உயிருக்கு விலை நிர்ணயித்து விட்ட நிம்மதியில் மகராஷ்ட்ர மாநில அரசு இருக்கிறது. மக்களின் மனக்குமுறல்கள் கொந்தளிப்பாக மாறினால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்க்க மறுக்கும் இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் என்கிறார் ஒரு மூத்த ஊடகவியலாளர்.

ஃபயாஸ் உஸ்மானைப் போலவே மன்சர் இமாம் என்ற மற்றொரு இளைஞரை மகராஷ்ட்ரா காவல் துறை ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து கைது செய்து விசாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் அஹமதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக சிறையில் வாடும் டேனிஷ் ரியாஸ் என்பவரின் நண்பராம். தற்போது மன்சர் இமாம் கதி என்னவானது என்பது குறித்து அவரது குடும்பத்தினர் பெரும் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்காக பிடித்து செல்லப்பட்ட ஃபயாஸ் உஸ்மான் விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டு விட்டார். ஜார்கண்ட் மாநிலத்தி லிருந்து மன்சர் இமாம் என்ற இளைஞர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப் பட்டுள்ளார்.

அத்தோடு பீகார் மாநிலத்தி லிருந்து ரியாவுல் சர்க்கார் என்ற இளைஞர் மகராஷ்ட்ரா காவல்துறையால் கைது செய்யப் பட்டுள்ளார். மேலும் குஜராத், கர்நாடக மாநிலம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்திற்கும் மகராஷ்ட்ரா காவல்துறை சென்றுள்ள தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை என்ற பெயரில் இன்னும் எத்தனை இளைஞர்களின் உயிர்கள் பந்தாடப்படுமோ என்ற அச்சம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அச்சமும் விரக்தியும் நிலவுவது ஒரு ஜனநாயக நாட்டிற்கு நன்மை அளிக்க முடியாது என சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தீவிரவாதமும் பயங்கர வாதமும் வீழ்த்தப்பட உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனைகள் வழங்க வேண்டும்.
நேற்று வரை அப்பாவிகளை அச்சுறுத்தி சிறையில் அடைத்த மகராஷ்ட்ர காவல்துறை தற்போது அச்சுறுத்தி அச்சுறுத்தி உயிர்களை கருவறுக்கும் நிலைக்கு சென்றுள்ளது வெட்கக் கேடானது.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு துணிச்சலான நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டும்.

திக்விஜய்சிங் போன்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

உண்மைக் குற்றவாளியை காப் பாற்றி அப்பாவிகளை அழிக்கும் செயல் ஒடுக்கப்பட வேண்டும்.

சங்பரிவார் அமைப்புகளிடம் விசாரிக்க வேண்டும்-திக் விஜய்சிங்


சங்பரிவார் உட்பட அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும், மும்பை குண்டு வெடிப்பு சம்பவ விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.  "மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் சங்பரிவார் அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம்' என, குற்றம் சாட்டினார்.: மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இந்து அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். இந்து அமைப்புகளால் தான் நாட்டில் பயங்கரவாதம் பரவுகிறது. அவை வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் போன்று செயல்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.


-ஹபிபா பாலன்

நார்வே குண்டுவெடிப்பு மறைக்கப்பட்ட தகவல்கள்!

 

ஜூலை 22ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஐரோப்பாவை மட்டும் அல்ல உலகத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது மீண்டும் ஒருமுறை தீவிரவாதம், பயங்கரவாதிகள் என்ற வாசகம் உச்சரிக்கப்பட்டது. ஆனால் இப்போது இடமும் ஆட்களும் தான் வேறு வேறு.

சரியாக வெள்ளிக்கிழமை மதியம் அரசு அலுவலகங்களை குறிவைத்தே இந்த குண்டுவெடிப் புகள் நிகழ்த்தப்பட்டன. குண்டு வெடிப்பில் ஏழு பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து சிலமணி நேரங்களில் ஆளும் கட்சி கூட்டத்தில் தீடீரென தோன்றிய ஒரு மர்ம மனிதன் சரமாரியாக சுட்டுத் தள்ளி 80க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தான். குண்டுவெடிப்பு நடந்தவுடன் இந்த செயல் நிச்சயம் அல் கைதாவின் வேலையாகத் தான் இருக்கும் என ஊடகங்கள் புறப்பட்டன.

நார்வேயில் ரொம்ப கால மாக இருக்கும் உள்ளூர் பாகிஸ்தானியர்கள் தான் இந்த செயலுக்கு காரணமாக இருக்கும் என பல்வேறு முனைகளில் இருந்தும் கருத்துக்கள் பரவின. அவை பரவின என்பதைவிட பரப்பப்பட்டன என்பதே நிஜம்.

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் 10க்கும் குறைவானவர்கள் என்ற தகவலும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 90பேர் கொல்லப்பட்ட தகவலும் வெளியாக வழக்கமாக உப்பு, புளி, மிளகாய் தூள் சேர்த்து காரசாரமாக கதை வசனம் எழுதி பட்டையை கிளப்பும் புளுகு பரப்பும் பல ஊடகங்கள் சோர்வடைந்தன.

இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் அவங்களே தான். சந்தேகமில்லை அவர்கள் தான் என கீறல் விழுந்த ரிகார்ட்டுகளாக புலம்பியவர்கள் நொந்து போனார்கள்.

நார்வே குண்டுவெடிப்பு ஐரோப்பாவில் பரவிவரும் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் தீவிரத்தினை காட்டுகிறது என முதல் நாள்நீட்டி முழக்கியவர்கள் மறுநாள் சாப்பிடுவதற்கும் கொட்டாவி விடுவதற்கும் மட்டுமே வாய்திறந்தார்கள்.

நார்வே குண்டுவெடிப்பின் தகவல் முடிச்சுகள் ஒவ்வொன் றாக அவிழ அவிழ புளுகு பட்டாளத்தின் நிலைமை பரிதாபகரமாய் அமைந்தது. துப்பாக்கியால் சுட்டவன். ஒரு நார்வே நாட்டுக்காரன். வலதுசாரி கொள்கையுடையன். ஒரு தீவிர கிறித்தவன். 32 வயதான ஆண்டர்ஸ் பெஹரிங் பெலிவிக் என்பதே அவன் பெயர்.

அவ்வளவுதான் சதிகாரன் வெள்ளைக்காரன் என்றவுடன் அவனுடைய மூதாதையார் எந்த இனம் என்பதை பற்றியெல்லாம் கூட சிலர் ஆய்வில் ஈடுபட்டார்கள். அதை வைத்தாவது அவன் எந்த நாட்டுக்காரன் என்பதை வைத்து நாம் நினைத்ததுபோல் பொய்களை பரப்பலாம் என நினைத்தவர்களுக்கு சரியான ஏமாற்றம் காத்திருந்தது.

அதில் சிலபேர் கொஞ்சம் அதிகமானவே புதிய பரப்புரை யை தொடங்கினார்கள். அல்கைதா இப்போதெல்லாம் வெள்ளை காரர்களை வேலைக்கு எடுக்கத் தொடங்கியுள்ளார்கள் என்றும் கதை பரப்பல் நடந்தது.

இப்படி புளுகுகளை பரப்பமுடியாதவர்கள் தங்கள் முயற்சிகளில் தோற்றுப்போன தோடு, பிரச்சினையின் தீவிரத்தை முனை மழுங்கச் செய்யும் வேலையிலும் கூர்மையாக இறங்கினார்கள்.

சதி செய்தவன் முஸ்லிம் என கதை பரப்பமுடியாததால் எக்கேடோ கெட்டு போகட்டும் என்ற எண்ணத்துடன் துப்பாக்கி சூடு நடத்தியன் ஒரு பைத்தியக்காரன் என கற்பனைகளை கருத்துக்களாக பரப்பிவிட்டு அமைதிகாக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் நிகழ்த்தப்பட்ட சதிமி கவும் பயங்கரமானது, அமைதி யையும் சமாதானத்தையும் என்றை க்கும் நார்வேயில் தீவிர வலதுசாரி குழுக்கள் புதிய நாசிச கொள்கை கொண்டவர்கள் தீவிர குணம் கொண்டவர்கள் நார்வேயில் பெருகிவருவதன் அறிகுறியே இந்த குண்டு வெடிப்பு என தெரிய வந்துள்ளது.

நார்வே நாடு இந்த பூமிப்பந்தில் அமைதி நிலவ வேண்டும் என விரும்பும் நாடாகும் சுவிட்சர்லாந் தைப் போல அல்லாமல் உண்மை யிலேயே அமைதியை நேசிக்கும் நாடு நார்வே ஆகும்.

நமது அண்டை நாடான இலங்கையில் விடுதலைப்புலிகளுக் கும் அரசாங்கத்திற்கும் இடையி லான பேச்சுவார்த்தையில் நார்வே முக்கியப்பங்கு வகித்தது. உண்மையில் இன அழிப்பு போர் நடைபெறக்கூடாது என பாடுபட்ட நார்வே தூதுக்குழுவின் தலைவர் எரிக்சோல்ஹிமை மறக்கமுடியுமா? என்ன?

எனினும் இலங்கை சமாதான பேச்சுவார்த்தையில் தமிழர்களின் நிலையை கருணையுடன் பார்த்தது நார்வே தூதுக்குழு என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பிடிக்காத சக்திகள் ஏதும் இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருக்கக்கூடுமா? என்ற ஐயப் பாட்டில் விசாரணைகள் நடத்தப் பட வேண்டும் என்பதே சர்வதேச பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் முக்கிய சூத்திரதாரியாக கருதப் படும் ஆண்டர்ஸ் கடும் தீவிர கொள்கை கொண்டவன். இவனின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இணையதளங்களில் அவர் பயன்படுத்திய வாசகங்கள் அவனது எண்ண ஒட்டத்தை காட்டியுள்ளன. ஒரு மதநம்பிக்கையாளன் ஒரு லட்சம் வீரர்களுக்கு சமமானவன் என்றும் ஒரு வாசகம் அதில் இருக்கிறது.

திருக்குர்ஆனின் வசனங்களுக்கு தவறான பொருள் கொடுத்து கொச்சைப்படுத்திய நெதர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் குர்ஆனை இழிவுபடுத்தி 'ஃபித்னா' என்ற டாகுமெண்டரி படம் எடுத்து பலத்த சர்ச்சைக்குரியவனாகக் கருதப்பட்ட கீட்வைல்டர்ஸ் முக்கிய முஸ்லிம் எதிர்பாளர்களை தனது உற்றநண்பர்களாக கொண்டி ருக்கும் இந்த வெள்ளைக்கார பயங்கரவாதி தன்னை நார்வேயின் தேசிய வாதியாக காட்டிக்கொண்டு தனது முழக்கத்தினை சர்வதேசி யவாதத்திற்கு எதிரான தேசிய வாதிகளின் உரிமைப்போர் என வெறித்தனமாக கூறியுள்ளான்.

சர்வதேச அளவில் தற்போது கம்யூனிசமும் உலகில் ஆதிக்கம் செலுத்தவில்லை முதலாளித் துவம் என்று அழைக்கப்படும் காபிடலிஸமும் ஆதிக்கம் செலுத்த வில்லை. தற்போது உலகளாவிய கொள்கையாக நுகர்வோர் கொள்கை என்ற கன்ஸ்யூமரிசம் முக்கிய இடத்தைப்பிடிக்கிறது. கம்யூனிஸத்தையும் கேபிடலிஸத் தையும் பின்னுக்கு தள்ளி கன்ஸ்யூமரிசம் முன் வரிசைக்கு வரத்தொடங்கியதில் இருந்து தொழிலாளர்கள், வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி போன்றவை அனைத்தும் நுகர்வோர் நலனுக்காகவும், நுகர்வோர் லாபத்துக்காகவும் மட்டுமே என்ற லட்சியம் முழங்கப்பட்டது. குறைந்த செலவில் நிறைந்த உழைப்பு வரவேற்கப்பட்டன. குறைந்த பதவியில் நிறைந்த கடமைகள் வழங்கப்பட்டன.

குறைந்த அளவு ஊதியத்தில் அதிக பொறுப்பு சுமையுடன் கூடிய பணிகளுக்கு ஆசிய ஆப்பிரிக்க மக்கள் பெருமளவு வந்தனர். மேற்குலகில் பெரும்பான் மையினராக வாழும் வெள்ளைக் காரர்களுக்கு அவர்கள் நாட்டிலே யே வாய்ப்புகள் குறையும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
ஏற்கனவே நிற வெறியால் பெரும் ஆத்திரம் கொண்டு வாழ்ந்த வெள்ளையர்களுக்கு ஆசிய ஆப்பிரிக்க மக்கள் தங்கள் நாட்டில் வந்து தங்களது வேலை வாய்ப்புகளை பறிக்கி றார்கள் என்ற அச்சம் அதிகம் உண்டு. அதுமட்டுமின்றி வெள்ளையர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை தவிடுபொடியாக்குவது போல் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்கள் தங்கள் சமயசெழுமையையும், பண்பாட்டையும் பேணத்துவங்கி யதையே ஏதோ நாகரீகங்களுக்கு இடையிலான யுத்தம் என்பதைப் போல் மேற்குலக ஆதிக்கவாதிகள் எண்ணத் தொடங்கியதன் விளைவு ஆண்டர்ஸ் போன்றவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கியுள்ளது.

அதனால் சமரச கருத்தாளர் களுக்கும் கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக நியோ நாஜிக்களும், போலி தேசியவாதிகளும் ஐரோப் பிய உள்ளிட்ட பகுதிகளில் இந்த அபாய நிலை அதிகரித்து வருகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் நியூநாஜிக்கள், மற்றும் தேசிய வாதிகளின் அரசியல் அழுத்தங்கள் மற்றும் மறைமுக மிரட்டல்களுக்கு பணிந்து வரும் நிலையில் நார்வேயின் செயல்பாடு நெஞ்சுரம் மிக்கதாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று.
பாலஸ்தீன விடுதலைக்கு அங்கீ காரம் வழங்க வேண்டும். ஆக்கிர மிப்பு இஸ்ரேலின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற அளவில் நார்வேயின் இளைஞர்கள் குறிப்பாக தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதையும் இஸ்ரேலை கண்டிப்பதையும் ஒரு கொள்கைப் பிரகடனமாக செயல்படுத்தத் தொடங்கியதால் யூத சக்திகளுக்கு மட்டுமின்றி, மேற்குலக ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் வெள்ளைநிற வெறியர்களுக்கும் அது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.

நார்வே தற்போது நேட்டோ கூட்டமைப்பு என்ற வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது. நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதால் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்பப்பட்ட நேட் டோ படைகளில் நார்வேயின் துருப்புகளும் அங்கம் வகித்தன.
லிபியாவை சிதைக்க அனுப்பப் பட்ட நேட்டோ படையணியிலும் நார்வேயின் படைகள் இருந்தன. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும் நேட்டோ படைகள் அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் அமைதி ஆர்வலர் களான நார்வே நாட்டை வேதனையுற செய்தது.

நேட்டோ படைகளின் மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படு கொலைகளுக்கும் எத்தனைகாலம் தான் ரத்தசாட்சியாக இருப்பது என்ற சுய ஆவேசத்தின் விளைவாக இதுவரை லிபியாவின் அப்பாவி மக்களின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய நார்வே போர் விமானங்கள் குண்டுகளை வீசவே வீசாது என அறிவித்துள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நார்வே விமானங்கள் லிபியா மீது குண்டுகளை வீசாது என அறிவித்திருக்கிறது.
நார்வேயின் பாலஸ்தீன ஆதரவு சமாதான முன் முயற்சி கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்றவற்றைக் கண்டு எச்சரிக்கை அடைந்த நேட்டோ கூட்டமைப்பு நார்வே மீது நடத்திய தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

நேட்டோ கூட்டமைப்பு தங்கள் அணியில் இருந்து விலகி சமாதானம் மனித நேயம் எனப் பேசி கூட்டு நாடுகள் எதுவும் உருப்பட்டுவிடக்கூடாது என்ற கொடிய எண்ணத்துடன் நேட்டோ அமைப்பே நிலிகிஞிமிளி என்ற ரகசிய பயங்கரவாத அமைப்பு ஒன்றை உருவாக்கி வைத்துள்ளது. அது பிரிந்து விட நினைக்கும் உறுப்பு நாடுகளை மிரட்டி பணிய வைக்கும் வேலையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முதலாம் வளைகுடாப் போரில் ஈராக்குக்கு எதிராக வான்தாக்குதல் தொடுப்பதில் இருந்து விலகி நியாய உணர்வுடன் நடந்து கொண்ட இத்தாலிக்கு எதிராக அவ்வப்போது இத்தாலியில் குண்டுவெடிப்புகளை நடத்துவது நிலிகிஞிமிளி பயங்கரவாதக் குழுவின் வேலையாகும்.
ஆம் சமாதான ஆர்வலர்களின் நாடான நார்வேக்கு இன்று நிகழ்ந்துள்ள இழப்புக்கு கூட நிலிகிஞிமிளி பின்னணியில் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் அது விரைவில் மறைக்கப்பட்டுவிடும். பாவம் நெதர்லாந்து மக்கள்.

-அபூஸாலிஹ்

கிச்சனுக்குள் காத்திருக்கும் 'குபீர்' ஆபத்து ! கரப்பான் பூச்சி 'ஸ்பிரே' + சமையல் கேஸ்

'மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த அந்த இல்லத்தரசி, மே 13-ம் தேதியன்று வழக்கம்போல கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து சமையலை ஆரம்பித்தார். அப்போது, சமையல் மேடையில் அலைந்த கரப்பான் பூச்சியைக் கண்டவர், அதற்கான 'ஸ்பிரே’வை எடுத்து அழுத்தினார். அடுத்த நொடியே குபீரென தீப்பற்றி, கேஸ் சிலிண்டரும் வெடிக்க... 65 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காப்பாற்றச் சென்ற கணவருக்கும் தீக்காயங்கள்’
- இப்படி ஒரு தகவல், இன்டர்நெட்டில் 'தீ'யாக உலா வருகிறது. ஆனால், நாம் பலமாக 'வலை' வீசி தேடியும் எங்கேயுமே 'செய்தி'யாக அது பதிவாகியிருப்பதைக் காண முடியவில்லை. அதேசமயம், 'கேஸ் ஸ்டவ் எரியும்போது கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே அடித்தால் தீ விபத்துக்கான வாய்ப்பு இருக்கிறதா?' என்கிற கேள்வி நமக்கு எழ, சென்னை, எழும்பூரிலிருக்கும் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஷ் கண்ணனிடம் அதைப் பற்றிக் கேட்டோம்.

''கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே என்றில்லை... சென்ட், பாடி ஸ்பிரே, ரூம் ஸ்பிரே, நக பாலிஷ் என்று ஆல்கஹால் கலந்த பொருட்களை கிச்சனுக்குள் பயன்படுத்தவே கூடாது. அனைத்து ஸ்பிரேக்களுமே 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தி லேயே வெடிக்கக் கூடியவைதான். ஸ்பிரேக்களை சூரிய வெப்பத்தில் வைப்பதும் ஆபத்தானது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் என்று தெரிந்தும் இவற்றை கிச்சனுக்குள் அனுமதிப்பது எமனை வரவழைப்பதற்குச் சமம்!'' என்று எச்சரித்தவர், அடுப்படி ஆபத்து களைப் பற்றி பட்டியலே இட்டார்!

''கிச்சனில் சமையல் செய்யும்போது புடவை, சுடிதார், நைட்டி என்று எந்த உடை யானாலும், அதை காட்டனில் அணிய வேண்டும். ஒருவேளை ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், இந்த வகை துணிகள் உடம்போடு ஒட்டிக் கொள்ளும்; எளிதில் அகற்ற முடியாது. அது காயங்களை இன்னும் தீவிரமாக்கும்.

கிச்சன் பிளாட்ஃபார்ம் மேலாக ஒரு செல்ஃப் வைத்து, சமையல் பொருட்களை வைத்து, எடுப்பது கூடாது. கையை எட்டி மேலே இருக்கும் பொருட்களை எடுக்கும்போது, ஸ்டவ் எரிந்து கொண்டிருந்தால், உடையில் எளிதில் தீ பிடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன'' என்று அறிவுறுத்திய ராஜேஷ் கண்ணன்,

''கேஸ் சிலிண்டரை நூறு சதவிகிதம் பயன்படுத்த எண்ணி, படுக்கை வாட்டில் வைத்தெல்லாம் பயன் படுத்துவார்கள் சிலர். இது ஆபத்தானது. லீக்கேஜ் இருந்தால் வெடித்து விடும். அதேபோல பவர் கட் ஆனதும் மிக்ஸி, கிரைண்டர் ஸ்விட்ச்களை உடனடியாக ஆஃப் செய்துவிட வேண்டும். இல்லையெனில் நீங்கள் வெளியில் சென்றிருக்கும் சமயமாக பார்த்து கரன்ட் வந்தால்... மிக்ஸி, கிரைண்டர் தானாக 'ஆன்’ ஆகி, ஒரு கட்டத்தில் மோட்டாரின் வெப்பம் அதிகமாகி, வெடிக்கும் ஆபத்தும் உள்ளது'' என்று சொன்னார்.

''குழப்பமான மனநிலையும் விபத்துக்கான காரணிகளுள் ஒன்றுதான்'' என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் தாரா, ''குழப்பமான மனநிலையில் கிச்சனுக்குள் நுழைந்து பொங்கும் பாலை பார்த்துக் கொண்டேஇருப்பது, கேஸை 'ஆன்’ செய்துவிட்டு பற்ற வைக்க மறப்பது போன்றவையும் விபத்துக்கான விதைகளே. செல்போனில் மூழ்கியபடி சமைப்பதும் ஆபத்தே! ஒன்று சமைத்துவிட்டுப் பேசலாம். அல்லது, பேசிவிட்டு சமைக்கலாம். தூக்க மாத்திரைகள், அலர்ஜி மாத்திரைகள் சாப்பிட்ட பிறகு அலர்ட்னெஸ் குறைவாக இருக்கும். அது மாதிரியான சமயங்களில் கிச்சனில் நுழைவதைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம்'' என்று அக்கறையோடு டிப்ஸ்களைத் தந்தார் தாரா!

Tuesday, July 26, 2011

தயிரில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?


தயிரில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?




* தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளன.
* கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் பிபி' யும் தயிரில் இருந்தே பெறப்படுகிறது.
* தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட விரைவில் ஜீரணமாகிவிடும்.
* பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.
* பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா, மனிதனின் குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
* தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவையும் உருவாக்குகிறது.
* ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்து குளித்தால் தூக்கம் நன்றாக வரும்.
* சூரிய ஒளியால் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
* மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு தயிர் சிறந்த மருந்தும்கூட!
* அல்சர் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் அழிக்கப்படுகிறது.
* மஞ்சள் காமாலையின்போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது நல்லது.
* சில தோல் நோய்களுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில கட்டி வருவது நல்ல பலன் தரும். இந்த சிகிச்சையை தகுந்த சித்த மருத்துவர் உதவியுடனேயே மேற்கொள்வது நல்ல

ரமழானை வரவேற்போம்

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.
ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183).
ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். ‘பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).
ரமழான் மாதத்தின் சிறப்பு: ‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).
‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி)..
இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்ளவேண்டும்.
இரண்டாவது சிறப்பு: ‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாசல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாசல்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
மூன்றாவது சிறப்பு: ‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
நான்காவது சிறப்பு: ‘ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஐந்தாவது சிறப்பு: ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.
இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:
1-நோன்பு பரிந்து பேசும்: ‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
2-நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை: ‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).
3-கனக்கின்றி கூலி வழங்கப்படும்: ‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
4-நோன்பின் கூலி சுவர்க்கம்: ‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
5-நரகத்தை விட்டு பாதுகாப்பு: ‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
6-’நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).
7-முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்: ‘எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
8-மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்: ‘வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
9-நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: ‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
10-கஸ்தூரியை விட சிறந்த வாடை: ‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி, முஸ்லிம்).
மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்த நிலையில் கணக்கின்றி பல் துலக்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இவர்களுக்கு தெரியாததே இதற்குக் காரணம்.
ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்
நிய்யத்தின் அவசியம்: ‘எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ).
பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர், ‘நவய்து ஸவ்ம அதன் பர்ல ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா’ ரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை, நபிகளார் (ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ இதற்கு எந்த முன்மாதிரியுமில்லை. நிய்யத்தை வாயால் மொழிவது நபி வழிக்கு முரணான பித்அத் வழிகேடாகும். ‘நமது விடயத்தில் எவர்கள் புதிய விடயங்களை ஏற்படுத்திச் செய்வார்களோ அது மறுக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
நிய்யத்தை ஒருவர் மனதால் ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர வாயால் மொழிவது மார்க்கத்துக்கு முரணான ஒரு செயலாகும்.
ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு: ‘நீங்கள் ஸஹர் உணவு உட்கொள்ளுங்கள் நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
‘நமது நோன்புக்கும் வேதக்காhர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்).
‘ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விடயமாகும்.
ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவதும்:
‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).
நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’
பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ இந்த பிரார்த்தனை உறுதியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவாகி இருக்கிறது. அபூதாவுதில் பதிவாகி இருக்கும் இவ் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது, வேறு சில பிரபலமான பிரார்த்தனைகள் ஓதப்பட்டு வந்தாலும் அவைகள் பலவீனமான ஹதீஸ்களாகும்.
ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:
‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).
இரவுக் காலங்களில் நின்று வணங்குவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது’ என கூறினார்கள். (புஹாரி).
‘எவர் ரமழான் காலங்களில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவனாகவும் நின்று வணங்குவாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).
உம்ராச் செய்வது:
‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விடயங்கள்:
அதிகமாக அல் குர்ஆனை ஓதுவது, அதை விளங்குவது, மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்வது, பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, நல்லவற்றையே பேசுவது, நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது, ஸதகாக்கள் கொடுப்பது.
‘நபி (ஸல்) ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை)யை சந்திக்கும் போது வேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்’ (புஹாரி).
ஒரு நோன்பாளி செய்யக்கூடாதவை:
பொய், புறம் பேசுவது, கோள் சொல்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது, நேரத்தை வீணான காரியங்களில் செலவழிப்பது, பார்க்கக்கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்கக்கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்கவேண்டும்.
‘எவன் பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).
‘எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).
நோன்பின் மூலம் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த உயரிய பண்புகளை அடைய முயற்சிப்போமாக!

சவூதி: தீயில் எரிந்தன 17 ,000 பாஸ்போர்ட்டுகள்





 
சவூதி: செங்கடல் நகரமான ஜெத்தாவில் புகழ்பெற்ற வணிகக் குழுமங்களுள் அல் ஈசாயி குழுமமும் ஒன்று. மதீனா நெடுஞ்சாலையிலுள்ள இதன் ஆறு மாடி தலைமையகக் கட்டிடத்தில் கடந்த வாரம் சம்பவித்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ஐந்து பில்லியன் ரியால்களுக்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
சவூதி நாடெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடப் பணிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் தீக்கிரையாகியுள்ளனவாம். குறிப்பாக, இந்தக் குழுமத்தின் தலைமையக மனித வளப் பிரிவகம் செயற்பட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 17 ,000 கடவுச் சீட்டுகள் (Passports) முழுவதும் எரிந்து போய் பல்லாயிரக்கணக்கான அயலக ஊழியர்களின் விடுமுறைக் கனவைப் பொசுக்கி விட்டுள்ளன. இத்தகவலை ஜெத்தாவிலிருந்து வெளியாகும் அரபு நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
முறையான பரிகாரங்களை மேற்கொள்ள நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என்று அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அனைத்தையும் மீளமையச் செய்ய 75 நாள்களாவது ஆகலாம் என்று அவர் கூறினார். நிறுவனம் சார்பாக சட்டத் தரணிகள் குழுவொன்று ஜெத்தாவில் முகாமிட்டு ஆகவேண்டிய முறைமைகளை மேற்கொண்டு வருகிறதாம்.
வெளிநாட்டுப் பணியாளர்கள் அனைவரும் தத்தம் தூதரகங்களை அணுகி புதிய பாஸ்போர்ட் பெற்று கொள்ளும்படி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக 20 மில்லியன் ரியால்களை அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளதாம்

Sunday, July 24, 2011

Vacancies in Sharjah Municipality.


  • Air Condition Mechanic.

    • Architect Engineer
    • Blacksmith
    • Builder
    • Building Painter
    • Butcher
    • Car Mechanic
    • Car Painter
    • Carpenter
    • Chemical Analyst
    • Civil Engieer
    • Cleaner (Filipino)
    • Cooling and Air Conditioning Technician
    • DBA Administrator
    • Electrical Technician
    • General Practitioner Doctor
    • Hygienic Engineer
    • IT Systems Engineer
    • Lab.Technician
    • Machine Mechanic
    • Machine Operator
    • Mason or Builder
    • Materials Engineer
    • network Engineer
    • Oracle analyst and programmer
    • Oracle programmer
    • Painter
    • PETROL ENGINE MECHANIC
    • Plumber
    • Safety Officer
    • Security guard
    • Sewage Systems Designer
    • Structural Engineer
    • Supervisor
    • Technical Support
    • Technicians - Mechanical
    • Tires Repairer
    • Turner
    • Welder
    • Aluminum Works Technician
    • Assist Laboratory Technician for mechanical and physical tests.
    • BUS DRIVER
    For more details check below link.
     

    Saturday, July 23, 2011

    இதுதாண் ஜெ. போலீஸ்


    --
    டி உதவுற மாதிரி அண்ணன், தம்பிகூட உதவ மாட்டான்’ என்ற பழமொழிதான் ஜெயலலிதாவின் இன்றைய புது வழி!
     இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க-வை - இன்றும் மத்தியில் ஆளும் கட்சியின் கூட்டணி மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள தி.மு.க-வை - 'லப்டப்... லப்டப்...’ என்று திகைக்கவைக்க லத்தியே போதும் என்று முடிவெடுத்துவிட்டார் முதல்வர்.
    'இன்னும் 30 நாட்களில் போலீஸ் ராஜ்யம்’ ஆரம்பமாகப் போகிறது என்று ரெட் சிக்னல் காட்டுகிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். இதற்கென இட்டுக்கட்டியோ... பொய்யாகப் புனைந்தோ, வழக்குகளை அவர் பாய்ச்சப்போவது இல்லை.
    தி.மு.க-வினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, யார் யாரை எல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சீண்டி னார்களோ... அந்த நபர்களைவைத்தே திருப்பி அடிக்கவிடுவதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.
    சன் டி.வி. முதல் நில மோசடி வரையிலான ஜெ... மு.க... ரிலே ரேஸ் இதோ!
    சன் நோக்கி 'கன்’!
    'சன் டி.வி-க்கும் தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று கருணாநிதி சொன்னால்கூட, அதை ஜெயலலிதா ஏற்கத் தயாராக இல்லை. கருணாநிதிக்கான ஆக்சிஜனாக சன் டி.வி-யைத்தான் ஜெ. நினைக் கிறார். ஆட்சிக்கு வந்ததுமே அவர் அசைத்துப் பார்க்க நினைத்தது இவர்களைத்தான்.
    ''போன தடவை, கருணாநிதி கைதைத் தமிழகம் முழுக்கப் பரப்பி, அனுதாபம் தேடவைத்தது இவர்கள்தான். எனவே, இந்தத் தடவை என்ன நடந்தாலும் தங்கள் மீடியா பலத்தால் இதையே செய்வார்கள். எனவே, அவர்களை முதலில் தட்டிவைக்க அம்மா நினைக்கிறார்'' என்கிறார் அமைச்சர்களில் ஒருவர். அதனால்தான், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனைப் புதுப்பிக்கப் பேசினார். டி.வி. தொழிலுக்கு கேபிள் உயிர் என்பது ஜெ. கணக்கு!
    அடுத்து 'சன் இன் லா' குடும்பத்தின் பக்கமும் ஜெ. முகம் திரும்பியது. சினிமாக்காரர்கள் மொத்தப் பேரையும் சினம்கொள்ளவைத்ததாக சன் பிக்சர்ஸ் மீது புகார் கொடுக்கப் புற்றீசல் மாதிரி எத்த னையோ தயாரிப்பாளர்கள் புறப்பட்டார் கள். சேலம் கந்தன் ஃபிலிம்ஸ் செல்வராஜ் முதல் 'மாப்பிள்ளை’ ஹித்தேஷ் ஜபக் வரையில் சன் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்த பல படங்களுக்கு எஃப்.ஐ.ஆர். போடுகிறார்கள். இன்றைய தின நிலவரப்படி... சக்சேனா சிறையில் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. இது கலாநிதி மாறனையும் குறிவைக்கும் சுழலாகவே சுற்ற ஆரம்பித்து உள்ளது. கடந்த 13-ம் தேதி 'கலைஞர் கருணாநிதி நகர்’ காவல் நிலையத்துக்கு அவர் வந்திருக்க வேண்டும். 26-ம் தேதி வரை அவருடைய வக்கீல்கள் அவகாசம் கேட்டு உள்ளார்கள். '26-ம் தேதி வரை பார்ப்போம்’ என்கிறார் அந்தப் பகுதி டெபுடி கமிஷனர். அதற்குப் பிறகு?
    மதுர... குலுங்கக் குலுங்க!
    'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த அரை நாளில் அழகிரியிடம் இருந்து மதுரை மீட்கப்படும்’ என்று மதுரையில் நின்று சபதம் போட்ட ஜெயலலிதா, அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை டெல்லியில் இருந்து தொடங்கினார். அழகிரி மீதான 59 வழக்குகளுக்கான ஆவணங்கள், தமிழக அரசிடம் இருந்து டெல்லி மேலிடத்துக்குத் தரப்பட்டு உள்ளன. அதில் 17 வழக்குகள் அழகிரி நேரடியாகச் சம்பந்தப்பட்டவை என்கிறார்கள். மற்ற வழக்குகள் அழகிரியின் பெயரைச் சொல்லிக்கொண்டு, அடியாட் கள் நடத்திய அராஜகங்கள். அழகிரி முதலமைச்சர் என்றால், 'பொட்டு’ சுரேஷ் துணை முதல்வர் என்பதில் தொடங்கி, 'அட்டாக்’ பாண்டி வரை அத்தனை பேர் பெயரையும் ஜெயலலிதா மேடையில் வாசித்தார். இந்த நபர்களை வளைக்க கமிஷனர் கண்ணப்பன் தலைமையில் சிறப்புப்  படை போடப்பட்டு உள்ளது. முதல் வழக்கில் 'அட்டாக்’ பாண்டி கைதாகிவிட்டார். மதுரை தினகரன் நாளிதழ் தாக்குதல் தொடங்கி... வெளிச்சத்துக்கு வராத காரியங்கள் வரை எல்லாமே ரத்த சரித்திரம். 'மொத்தத்தையும் மதுரையில் ஸ்பெஷல் கோர்ட் போட்டு விசாரிக் கலாமா?’ என்ற யோசனை யில் இருக்கிறார் ஜெ..
    கொலை கொலையாய்...
    ன்னும் மர்மமாக இருக் கும் சில மரணங்கள்,  தி.மு.க. அமைச்சர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருக்கின்றன. அதில் முக்கியமானது திருச்சி இரட்டைக் கொலை. ரியல் எஸ்டேட் புரோக்கர் சகோ தரர்களில் ஒருவர் விஷம் குடித்தும் இன்னொருவர் உயிரோடு எரிக்கப்பட்டும் கொல்லப்பட்ட விவகாரத் தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவருடைய தம்பி ராம ஜெயம் இருவர் பெயரும் பரவிக்கிடக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவராகச் சொல்லப்படும் திருச்சி மாவட்டத் தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்... கஞ்சா வழக்கில் கைதாகி உள்ளார். இன்னும் பல தி.மு.க-வினரையே சுற்றிச் சுற்றி விசாரிக்கிறது போலீஸ். திருச்சி எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், தனது சொந்தத் தொகுதி என்பதால், இந்தக் கொலையை சீரியஸாகப் பார்க்கிறார் ஜெ.
    சேலம் குப்புராஜ் குடும்பத்தில் ஆறு பேர் கொலையானதில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் பாரப்பட்டி சுரேஷ் கைதானார். அவரை ஜெயிலுக்குச் சென்று சந்தித்து, சர்ச்சையில் சிக்கினார் ஆறுமுகம். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இப்போது துரித விசாரணையில் இறங்கி இருக்கும் நிலையில், ஆறு பேர் கொல்லப்பட்ட வீடு மர்மமான முறையில் எரிக்கப்பட்டுள்ளது எதிர்பாராத திருப்பம். தடயங்களை மறைக்க நடந்ததாகவே இதை சி.பி.சி.ஐ.டி. பார்க்கிறது.
    முன்னாள் அமைச்சர் ஈரோடு என்.கே.கே.பி.ராஜா, சிவபாலன் என்பவரைத் தாக்கிய வழக்கில் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்தாலும், மேலே கொண்டுசெல்ல இன்றைய அரசு முயற்சிக்கிறது. தஞ்சைப் பகுதி தி.மு.க. மாவட்டச் செயலாளர் கொலையிலும் மர்மம் இன்னும் விடுபட வில்லை. இப்படிப் பல முடிச்சுகளை அவிழ்க்க அவசர உத்தரவுகள் போட்டு இருக்கிறார் ஜெ!
    மந்திரி... தந்திரிகள்!
    ருமானத்துக்கு அதிக மாக சொத்துச் சேர்த்த வழக்கு, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அமைச்சர்கள் கே.என். நேரு, துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள் ளிட்ட பலர் மீது போடப்பட்டது. அடுத்து, ஆட்சி மாறியது. விசாரணைகள் முடிந்து தீர்ப்பும் வந்து சிலர் விடுதலை ஆனார் கள். இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டப்போகின்றன. மேலும், 2006-11 ஆண்டு கால ஆட்சியிலும் இதுபோல் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்தவர்கள் பட்டியலைத் தயாரிக்கச் சொல்லி இருக்கிறார் முதல்வர்.
    மெகா கல்லூரிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சாராய ஆலைகள், மணல் குவாரிகள், தொழிற்சாலைகள் எனப் பட்டவர்த்தனமாக உருவாக்கிக்கொண்ட 9 அமைச்சர்கள் மீது முதல் வரிசையில் வழக்குகள் போடப்பட உள்ளன. அதற்கான ரெய்டு நாட்கள் குறிக்கப்பட உள்ளன.
    பினாமிகள் ஜாதகம்...
    ருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பினாமிகள் பெயர்கொண்ட முதல் பட்டியல் தயாராகி உள்ளது. 100 கோடிக்கு மேல் சம்பாதித்தவர்கள் என்ற அடிப்படையில் தயாராகும் இந்தப் பட்டியலில், சென்னை, மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் பெயர்களும் அடக்கம்.
    தி.மு.க. வேஷம் போட ஆரம்பித்த கான்ட்ராக்டர்கள் முதல் இவர்களிடம் பணம் வாங்கி வட்டிக்குவிட்ட கோடீஸ்வர மார்வாடிகள் சிலர் வரை இந்தப் பட்டிய லில் வருகிறார்கள். தேர்தலுக்கு முந்தைய மாதத்திலேயே இவர்களில் சிலர் வெளி நாடுகளுக்குச் சென்று செட்டில் ஆகி விட்டார்கள். அறிவாலயத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்த நபர் ஒருவரும் இந்தப் பட்டியலில் வருகிறார். விரக்தியில் இருக்கும் தி.மு.க. புள்ளிகள் மூலமாகவே இவர்கள் ஜாதகம் திரட்டப்பட்டு வருகிறது!
    பணப் பாதை அடைப்பு!
    திர்க் கட்சியாக இருக்கும்போதே ஜெயலலிதா கண்காணித்தது இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தைத்தான். கருணாநிதி முதல்முறை முதல்வராக இருந்த காலம் முதல் இன்று வரை அவருக்கும் இந்தக் குழுமத்துக்குமான தொடர்புகளை வெளிப்படையாக ஜெ. போட்டு உடைத்து வந்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத் தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியது முதல் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலமாகச் செய்வது வரை அனைத்துமே இந்த குரூப்தான் செய்து வருகிறது. ''அரசுப் பணம் இந்த குரூப் மூலமாக வெளியே போய்... மீண்டும் கருணாநிதி குடும்பத்துக்கு வருகிறது. அதைவைத்துத்தான் இவர்கள் படம் எடுக்கிறார்கள்'' என்றார் முதல்வர்.
    எனவே ஜெ. செய்த முதல் காரியம், புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானத்தை நிறுத்தி விசாரணை கமிஷன் போட்டார். இனி இ.டி.ஏ-வுக்குப் போட்ட பணமும் கிடைக்காது. வர வேண்டியதும் வராது. கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு 750 கோடி வரை இதுவரை தரப்பட்டு வந்த பிரிமியம் இனி கிடைக்காது. இந்த ஒரு திட்டத்துக்காகவே அந்த நிறுவனம் வேலைக்கு எடுத்த 1,200 பேரை ஜூலை 6-ம் தேதி வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இவர்களைப்போலவே 'லம்ப்பாக’ லாபம் அடைந்த நிறுவனங்களைக் கண்டுபிடித்து பணப் பாதையை அடைக்க நினைக்கிறார் ஜெ.
    லோக்கல் மனிதர்களுக்குக் கொக்கி!
    ந்திரிகள் வி.ஐ.பி-க்களைத் தாண்டி குறிப்பிட்ட ஏரியாவில் செல்வாக்காக இருக்கும் தி.மு.க. பிரமுகர்களை அதிக ஆபத்தாக ஜெ. பார்க்கிறார். நிலபுலன்கள், கைவச கரன்சி மூலமாகக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்த இரண்டாம்  கட்ட மாவட்டப் பிரமுகர்கள்... அடுத்து வரும் ஆண்டுகளில் செல்வாக்குப் பெற்று, கட்சிப் பதவிகளைப் பிடிக்கப்போகிறார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில்கூட இவர்கள்தான் முக்கியப் பங்கு வகிப்பார்கள். இவர்கள் மீதான புகார்கள் தூசி தட்டப்படுகின்றன.
    'உங்கள் ஊர் லோக்கல் தி.மு.க. பொறுப்பாளர்கள் செய்யும் முறைகேடுகளை தலைமைக் கழகத்துக்கு எழுதுங்கள்’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஜெ. சொல்லி... மலையளவு கடிதங்கள் குவிந்தன. இந்தக் கடிதங்களை ஆதாரமாக வைத்து இவர்களுக்குக் கொக்கி போடப் போகிறார்கள்.
    குடும்ப டார்கெட்!
    டந்த முறை முதல்வராக வந்ததும்... ஒருநாள் நள்ளிரவில் கருணாநிதியைத் தூக்கியதுபோன்ற சம்பவம் இனி தேவை இல்லை என்று நினைக்கிறாராம் ஜெ. 
    ஆனால், அவருடைய குடும்பப் பிரமுகர்கள் 10 பேருக்கு நிச்சயம் தலைவலி காத்து இருக்கிறதாம். ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கலாநிதி மாறன், அழகிரியின் மருமகன்களான வெங்கடேசன், விவேக், ஸ்டாலின் மகன் உதயநிதி, அழகிரி மகன் துரை தயாநிதி... என்று பெயர்களும் சொல்லப்படுகின்றன. இதில் இடம் பெற்ற கனிமொழி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி, சிறையில் இருக்கிறார். தயாநிதியும் சர்ச்சைச் சுழலில் சிக்கிவிட்டார். மீதியுள்ள எட்டு பேருக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளனவாம்.
    வளைக்கப்பட்ட மண்ணும் மனிதனும்...
    தி.மு.க-வை முடக்க ஜெ. கண்டுபிடித்த அபார வழிதான், நில மோசடி வழக்குகள். போலீஸ், வருவாய் மற்றும் பத்திரப் பதிவு அதிகாரிகள், உள்ளூர் ரவுடிகள் மூவரையும் துணைக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் தட்டிப்பறிக்கப்பட்ட நிலங்கள் ஏராளம். அதிகாரத்தில் இருப்பதால் புகார் சொல்ல முடியாமல் தவித்தவர்கள், ஆளும் கட்சி மாறியதும் துணிச்சலாக வெளியில் வந்தார்கள். மே 13 முதல் ஜூலை 1-ம் தேதி வரை மட்டும் தமிழகம் முழுவதும் 1,449 புகார்கள் வந்தன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் தி.மு.க. பிரமுகர்கள். இந்த நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கவே சிறப்புப் பிரிவைப் போட்டுவிட்டார் ஜெ. 'நிலம் அபகரித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நிலத்தை இழந்தவர்களுக்கு நிலம் கிடைக்கும்’ என்று கொடுத்த வாக்குறுதி, பலருக்கும் பால் வார்த்தது. தி.மு.க-வினருக்கோ வேர்த்தது. கோவை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஆனந்தன், திருச்சி கோ.அபிஷேகபுரம் அறிவுடை நம்பி தொடங்கி, கொடைக்கானல் நகர சபைத் தலைவர் முகமது இப்ராஹிம் என கைதுப் பட்டியல் நீள்கிறது. தி.மு.க-வினர் கதறலை அதிகப்படுத்தி இருப்பதும் இது தான்.
    வதந்திகளை நம்புங்கள்!
    புதருக்குள் கல்லைப் போட்டால், உள்ளே இருக்கும் பூச்சிகள் எல்லாம் வெளியே வரும் என்பார்கள். அது மாதிரியே... இவரைக் கைது பண்ணப் போறோம்... அவரை அமுக்கப்போறோம்... என்பது மாதிரியான வதந்திகளைக் கிளப்பிவிட்டு, அதனால் வெளியே வரும் தகவல்களை ரிக்கார்டு செய்ய ஆரம்பித்து உள்ளது போலீஸ்.
    தி.மு.க. புள்ளிகளைச் சுற்றி வந்த கரும்புள்ளிகள் அத்தனை பேரைப்பற்றியும் இப்படிப்பட்ட வதந்திகள் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதனால் அவர்கள் திகிலடைந்து இருக்கிறார்கள்.
    அறிவாலயத்துக்கும் கருணாநிதிக்கும் 'கைது’ வதந்திகள்தான் அதிகமாக வருகின்றன. இதைக் கேள்விப்பட்டு சூடான கருணாநிதி,  'தி.மு.க. வக்கீல்கள் என்ன ஆனார்கள்?’ 'வழக்கறிஞர் அணி என்ற ஒன்று இருக்கிறதா?’ என்று கொந்தளித்துள்ளார்.
    ஆளும் கட்சியாக இருக்கும்போது கான்ட்ராக்டர்கள் அணியை மட்டும் நம்பினால், எதிர்க் கட்சியாக ஆகும்போது வக்கீல் அணியைத்தான் நாட வேண்டி இருக்கும்!


    sahulDubai
    +971504753730