Thursday, July 7, 2011

8-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், ஜூலை 6: டிசம்பர் 2008-ம் ஆண்டு 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற ஜூலை 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் சு. லட்சுமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அதை அழித்துவிடலாம் என்று தேர்வு திட்ட விதிமுறைகளில் உள்ளது. எனவே, டிசம்பர் 2008 பருவத்தில் தேர்வெழுதி மதிப்பெண் சான்றிதழ் பெறாதவர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும்.
ஒரு வெள்ளைத்தாளில் மதிப்பெண் சான்றிதழ் கேட்கும் விவரத்தை குறிப்பிட்டு, தேர்வெழுதிய பருவம், பிறந்த தேதி, தேர்வெழுதிய பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விவரங்களை எழுதி ரூ. 20-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட அஞ்சல் உறையையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை மண்டலத் துணை இயக்குநர், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம், எண்- 1 ஏ. அரபிக் கல்லூரித் தெரு, காஜாநகர், திருச்சி- 20 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதேபோல, டிசம்பர் 2009, 2010 பருவங்களில் தேர்வெழுதி மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
dinamani

No comments:

Post a Comment