Tuesday, July 5, 2011

ரயில்வேயில் புதிய இ-டிக்கெட் சேவை

புதுதில்லி, ஜூலை.5: இந்திய ரயில்வே புதிய இ-டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சேவையில் முகவர்களுக்கு இடமில்லை. தனிப்பட்ட நபர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
ஐஆர்சிடிசி இ-டிக்கெட் போல் இல்லாமல், இந்திய ரயில்வேயின் புதிய சேவையில் பயண முகவர்களுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் இடமில்லை. தனிப்பட்ட பயனாளிகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐஆர்சிடிசி சேவையில் பயண முகவர்கள் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
புதிய இ-டிக்கெட் சேவையின்படி, தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் முதல்முறை தாங்களாகவே பதிவுசெய்துகொண்டு இந்த சேவையைப் பெறலாம். பதிவுசெய்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை.
தொடக்கத்தில் ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் 8 பரிமாற்றங்கள் வரை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 5 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு 10 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஐஆர்சிடிசியில் தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 10 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு 20 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த புதிய சேவையை www.indianrailways.gov.in இணையதளத்தின் மூலம் பெறலாம்.
இந்த சேவை தொடங்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
பகல் 12.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.
 
 
 
dinamani

No comments:

Post a Comment