குற்றாலம் : குற்றாலத்தில் வரும் 23-ம் தேதி முதல் 30 –ம் தேதி வரை சாரல் விழா நடைபெறுகிறது.
மிதமான சாரலும் இதமான காற்றும் வீசும் குற்றாலத்திற்கு ஆண்டு தோறும் ஜூன் 15 முதல் ஆகஸ்ட் வரை சீசன் காலமாகும்.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யத்தொடங்கினால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். இந்த அருவிகளில் குளித்து மகிழ நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுக்கத் தொடங்கிவிடுவர்.
அமைச்சர் துவக்கிவைக்கிறார்
குற்றாலத்திற்கு வருகை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் சாரல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சாரல் விழா வரும் 23-ம் தேதி தொடங்குகிறது.
சுற்றுலாத்துறை அமைச்சர் சாரல் விழாவை துவக்கி வைக்கிறார். நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
விளையாட்டுப் போட்டிகள்
சாரல் விழாவையொட்டி படகு போட்டி, நாய் கண்காட்சி, ஆடை அலங்கார போட்டி, பல்வேறு மாநில கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சாரல் விழா வரும் 30ம் தேதி மாலையில் நிறைவு விழா நடக்கிறது இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
Thatstamil
No comments:
Post a Comment