Friday, July 29, 2011

அழகிரியின் கூட்டாளி அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளியான அட்டாக் பாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.

நில அபகரிப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டோரை தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வளைத்து வளைத்துக் கைது செய்து வருகின்றனர். மதுரையில் மு.க.அழகிரியின் நெருங்கிய கூட்டாளிகளான அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், கோ.தளபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவர்களில் அட்டாக் பாண்டி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுரேஷ், தளபதி உள்ளிட்டோர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமையன்று பொட்டு சுரேஷ் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதனால் அவர் ஒரு ஆண்டுக்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையி்ல் இன்று அட்டாக் பாண்டி மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. மதுரை மாநகர காவல்துறை ஆணையர் கண்ணப்பனின் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம், அட்டாக் பாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகர் திருச்சி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் மூலம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதியுள்ள அழகிரியன் 2வது கூட்டாளி பாண்டி ஆவர்.

அட்டாக் பாண்டி மீது நில அபகரிப்பு, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன. ஏற்கனவே இவர் தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.
thatstamil

No comments:

Post a Comment