Tuesday, July 5, 2011

தெலுங்கானா கோரி 2 நாள் பந்த் தொடக்கம்-10 மாவட்டங்கள் முடங்கின

ஹைதராபாத் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் 48 மணி நேர பந்த் தொடங்கியது. இதனால் தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களும் முடங்கி ஸ்தம்பித்துப் போயுள்ளன.

சாலைப் போக்குவரத்து சுத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் நகரமும் பதட்டமாக காணப்படுகிறது. 2 நாள் ரயில் மறியல் போராட்டத்தையும் தெலுங்கானா கூட்டுப் போராட்டக் குழு அறிவித்துள்ளதால் தென் மாநில ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

தெலுங்கானா பகுதி முழுவதும் கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை,. வங்கிகள் செயல்படவில்லை. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ. 20,000 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா முழுவதும் 5000 வங்கிக் கிளைகள் செயல்படவில்லை.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து சுத்தமாக இல்லை.

இதற்கிடையே, ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ரயில் மறியல், சாலை முற்றுகை உள்ளிட்டவற்றில் ஈடுபடப் போவதாக கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகப் பகுதியில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

thatstamil

No comments:

Post a Comment