Monday, July 4, 2011

உபி: மருத்துவமனை அனுமதி மறுத்ததால் தெருவில் பிரசவித்த ஏழைப் பெண்

கன்னௌஜ் (உ.பி.): உத்தர பிரதேசத்தில் ஒரு கர்ப்பிணியை அனுமதிக்க மருத்துவமனை மறுத்து விட்டதால் அவர் தெருவோரம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அவரிடம் போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை பிரசவம் பார்க்க மறுத்துவிட்டதாம்.

கன்னௌஜில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்த மம்தா என்னும் பெண்ணை பணம் இல்லாததால் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அந்தப் பெண் தெருவோரம் பிள்ளையைப் பெற்றெடுத்தார். குழந்தை நலமாக உள்ளது.

இது குறித்து மம்தாவின் கணவர் சுஷில் கூறியதாவது,

அந்த மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் என்னிடம் ரூ. 1500 லஞ்சம் கேட்டனர். ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. உடனே அவர்கள் என் மனைவியை கவனிக்காததோடு, என் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

நான் ஒரு காரை வாடகைக்கு எடுத்து வநதேன். ஆனால் அதற்குள் தெருவோரமாகவே என் மனைவி குழந்தையைப் பெற்றெடுத்துவி்டடார். உடனே நாங்கள் குழந்தை பிறந்துவிட்டது, இப்பொழுதாவது மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவரிடம் சொல்லச் சென்றோம். ஆனால் அந்த மருத்துவர் 1 மணி நேரமாக வெளியே வரவேயில்லை.

எங்களிடம் பணம் கேட்டனர். ரூ. ஆயிரத்து 500 கொடுத்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். நாங்கள் பணம் கட்டும் வரை எனது மனைவிக்கு ஒரு படுக்கை கூட கொடுக்கவில்லை என்றார்.

அந்த மருத்துவமனை இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஆனால் இது குறி்தது எதுவும் கூறவும் மறுத்துவிட்டது. குற்றவாளிகளை நிச்சயம் கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Thatstamil

No comments:

Post a Comment